1206.அப்பா பிதாவே அன்பான தேவா
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே - 2
1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர் - 2 நன்றி உமக்கு நன்றி - ஐயா - 2
2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் - 2 நன்றி உமக்கு நன்றி - ஐயா - 2
3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னைத் தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காகச் சிந்தி கழுவி அணைத்தீரே - 2
நன்றி உமக்கு நன்றி - ஐயா - 2

1207.அப்பா பிதாவே அனைத்தையும் நான்
அப்பா பிதாவே அனைத்தையும் நான்
உம்மிடம் ஒப்படைக்கின்றேன் - 2
1. என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே
என் குடும்பம் குழந்தைகள் உறவினரை
2. என் படிப்பு பட்டங்கள் பதவிகளை
என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே
3. என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே
என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன் - 2
1. என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே
என் குடும்பம் குழந்தைகள் உறவினரை
2. என் படிப்பு பட்டங்கள் பதவிகளை
என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே
3. என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே
என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே
1208.ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் - 2
புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைத்
தாங்கிடும் நங்கூரமே - 2 தாங்கிடும் நங்கூரமே - தினம் - 2
1. எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே
2. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராசா
என் வாழ்வின் ஆனந்தமே
மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோசமே

1209.ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை
ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை - 2
ஆராதனை - 2 எங்கள் இயேசு இராசா உமக்கே - 2
1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை
கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை
காலங்களைக் கடந்து வாழ்பவரே
கண்கள் மூடி கரம் குவித்து ஆராதனை
ஆராதனை - 2 எங்கள் இயேசு இராசா உமக்கே - 2
2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை
அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை
ஆயிரமாய் அற்புதம் செய்பவரே
சிரம் தாழ்த்தி தாள்ப்பணிந்து ஆராதனை
ஆராதனை - 2 எங்கள் இயேசு இராசா உமக்கே - 2
3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை
எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை
உயிரின் உயிராய் இருப்பவரே
புத்தம் புது கீதங்களால் ஆராதனை

1210.ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலுமல்ல அல்ல
ஆற்றலாலும் அல்ல அல்ல சக்தியாலுமல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே ஆகுமே - 2
1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே
2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கம்மா நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே
ஆண்டவரின் ஆவியாலே ஆகுமே ஆகுமே - 2
1. மண்குடம் பொற்குடம் ஆகுமா? ஆகுமே
குறைகுடம் நிறைகுடம் ஆகுமா? ஆகுமே
தண்ணீரும் திராட்சை இரசம் ஆகுமா? ஆகுமே
திராட்சைரசம் திருரத்தம் ஆகுமா? ஆகுமே
2. செங்கடல் பாதையாய் ஆகுமா? ஆகுமே
செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா? ஆகுமே
சிங்கம்மா நட்புறவு ஆகுமா? ஆகுமே
சிறை வாழ்வு திருவாழ்வு ஆகுமா? ஆகுமே
1211.இயேசு எனக்குப் போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி
இயேசு எனக்குப் போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி - 2
1. பாவத்தோடு வந்தேன் என்னைப் பாசத்தோடு ஏற்றார் - 2
கண்ணிழந்து நின்றேன் என்னைக்
கைகொடுத்துக் காத்தார் - 2 அந்த
2. கவலையோடு நின்றேன் என்னைக்
கருணையோடு பார்த்தார் - 2
வழி இழந்து நின்றேன் என்னை
வழியில் வந்து ஏற்றார் - 2 அந்த
3. உலகில் யாரும் வெறுப்பார்
அவர் உருக்கத்தோடு அணைப்பார் - 2
பாவி என்றும் பாரார் என்னைத்
தாவி வந்து காப்பார் - 2 அந்த

1212. இயேசு என்னை அன்பு செய்கின்றார்
இயேசு என்னை அன்பு செய்கின்றார் - 2
அளவில்லாமல் ஆசீர் அருள்கின்றார் - 2
இனித் துன்பம் ஏதும் இல்லை
ஒரு துயரம் வாழ்வில் இல்லை - 2
1. தனிமை என்னும் பாழ்வெளி என்னைத் தவிக்க வைத்ததுவே
தவறு செய்த நேரத்தில் மனம் பதறித் துடித்ததுவே - 2
இனியும் வாழ்வு கிடைக்குமா என்று கலங்கித் தவித்து நின்றேன்
இதயம் தேடும் தலைவனை நான் காணத் துடித்து நின்றேன்
தாயைப் போலத் தேடி வந்து
என்னை அணைத்தாரே தழுவி அணைத்தாரே
2. உறவுகள் என்னை வெறுத்தபோது உள்ளம் கலங்கி நின்றேன்
உண்மைக்காக உழைத்த நேரம் உதவித் தேடி வந்தேன் - 2
என்றும் மாறா இறைவனை நான் காண வேண்டி நின்றேன்
ஏழை வாழ்வில் ஏற்றம் காண ஏங்கிக் காத்து நின்றேன்
இரக்கம் பொழியும் இறைவன் என்னைத்
தேடி வந்தாரே அன்பைப் பொழிந்தாரே

1213.இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர்
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர்
இன்னல் நீக்கி என்னை என்றும் காப்பவர் - 2
ஆனந்தம் அல்லேலூயா - 2
இறைவன் இயேசு என்றும் என்னில் இருப்பதால் - 2
1. பாவக் கறைகள் நிறைந்த எந்தன் உள்ளத்தை
பரமன் இயேசு குருதி சிந்திக் கழுவினார் - 2
அமைதியின்றி அலைந்த எந்தன் மனத்தினை - 2
ஆவி அனுப்பி அன்பு பொழிந்து மாற்றினார்
2. இரவும் பகலும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்
இயேசு அருளால் இனி எனக்குக் குறையில்லை - 2
இன்பம் துன்பம் எது வந்தாலும் பயமில்லை - 2
இயேசு எனது இறைவனாக இருப்பதால்

1214.இயேசு நம்மோடு இருக்கின்றார்
இயேசு நம்மோடு இருக்கின்றார்
எப்போதும் அதிசயம் செய்திடுவார்
அன்போடும் பண்போடும் நாம் வாழ்ந்திட
ஆவியின் வரங்கள் பொழிந்திடுவார்
1. மரியாவின் வேண்டுதலால் இலாசரை உயிர்ப்பித்தாரே - 2
நமது ஏக்கங்கள் இப்போதும் எப்போதும் நிறைவு செய்வார்
வாழ்க இயேசுவின் நாமம் வாழ்க
தேனினும் இனிய நாமம் வாழ்க
2. பெத்சாய்தா குருடனைப் போல் இயேசுவை அழைத்திடுவோம் - 2
நம்பிக்கை நாயகனாய் நம் நோய்கள் யாவையும் போக்கிடுவார்
- வாழ்க இயேசுவின் நாமம்
3. எல்லாமே இழந்தாலும் குறை ஒன்றுமில்லையே - 2
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நமக்கு எல்லாமே நம் இயேசுதான்

1215.இயேசு நல்லவர் அவர் வல்லவர்
இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் தயையோ என்றும் உள்ளது - 2
பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போல
துதித்திடுவோம் அவர் நாமம் - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே - 2
1. யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்
என் குறையெல்லாம் அவர் கேட்டார் - 2
பாவக் குழியில் வீழ்ந்த என்னை
பாசமுடனே தூக்கி விட்டார் - 2 அல்லேலூயா அல்லேலூயா - 2
2. எந்தன் கால்களை வலுப்படுத்தி
எந்தன் மனதை சுத்திகரித்தார் - 2
புதுப்பாடல் எனக்குத் தந்தார்
அன்பர் அவரை புகழ்ந்திடவே - 2 அல்லேலூயா அல்லேலூயா- 2

1216.இயேசு நீங்க இருக்கையிலே
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லே - 2
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க - 2
1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்க தானே - 2 இயேசு நீங்க
2. அதிசய தேவன் நீங்கதானே
ஆலோசனை கர்த்தர் நீங்கதானே - 2 இயேசு நீங்க
3. தாயும் தகப்பனும் நீங்கதானே
தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே - 2 இயேசு நீங்க
4. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே
இரட்சிப்பின் தேவன் நீங்கதானே - 2 இயேசு நீங்க
5. எனக்கு அழகெல்லாம் நீங்கதானே
எனது ஆசையெல்லாம் நீங்கதானே - 2 இயேசு நீங்க

1217. இயேசு இராசா முன்னே செல்கிறார்
இயேசு இராசா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா செயமே - 2
ஓசன்னா செயம் நமக்கே - 2
1. அல்லேலுயா துதி மகிமை - என்றும்
அல்லேலுயா துதி மகிமை
இயேசு இராசா எங்கள் இராசா
என்றென்றும் போற்றிடுவோம் - ஓசன்னா
2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கசுடங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
கர்த்தர் நம்முடனே - ஓசன்னா
3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை முன்னே வந்தாலும்

1218.இயேசு இராசா வந்திருக்கிறார்
இயேசு இராசா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைத்தட்டி நாம் பாடுவோம் - 2
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம் - 2
1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார் - 2
உண்மையாகத் தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் - 2
2. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார் - 2
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார் - 2
3. நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் - 2
பேய்களெல்லாம் நடுநடுங்கும் பெரியவர் திருமுன்னே - 2

1219.இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம் - 2
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோசம் பக்தருக் களிக்கும் - 2
2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம் - 2
3. வானிலும் புவியிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
4. நேற்றும் இன்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக சொலிப்பவர் நாமம்
6. சாத்தானின் சேனையை செயித்திட்ட நாமம்
சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம் - 2
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோசம் பக்தருக் களிக்கும் - 2
2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம் - 2
3. வானிலும் புவியிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
4. நேற்றும் இன்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக சொலிப்பவர் நாமம்
6. சாத்தானின் சேனையை செயித்திட்ட நாமம்
சாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்
1220.இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பிப் பார்க்க மாட்டேன் - 2
சிலுவையே முன்னால் உலகமே பின்னால் - 2
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே - 2
1. அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை
அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கலம் அன்றோ
ஆதலின் குறையில்லை - 2
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் - 2
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே
விடுதலை அடைந்தேனே - 2
2. தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்
சேயர்கள் நம்மைச் செவ்வழி நடத்தும் ஆயன் அவரன்றோ - 2
ஆயனே முன்னால் அலகையே பின்னால் - 2
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே
ஆறுதல் அடைந்தேனே - 2

1221.இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி
என்றே சொல்லிடுவோம் என்றே பாடிடுவோம் - 2
1. அச்சம் என்பது நீங்கி விடும்
ஆண்டவர் இயேசு துணையிருப்பார் - 2
2. பகைமை எல்லாம் பறந்து விடும்
பரமன் அன்பு பெருகி விடும் - 2
3. தீய சக்திகள் பறந்து விடும்
தூய ஆவி குடி கொள்வார் - 2
4. கவலைகள் எல்லாம் கலைந்து விடும்
கடவுள் நம்மைக் காத்திடுவார் - 2
5. ஆவியின் கனிகளைப் பெற்றிடுவோம்
அன்பு மகிழ்ச்சியில் வாழ்ந்திடுவோம் - 2
என்றே சொல்லிடுவோம் என்றே பாடிடுவோம் - 2
1. அச்சம் என்பது நீங்கி விடும்
ஆண்டவர் இயேசு துணையிருப்பார் - 2
2. பகைமை எல்லாம் பறந்து விடும்
பரமன் அன்பு பெருகி விடும் - 2
3. தீய சக்திகள் பறந்து விடும்
தூய ஆவி குடி கொள்வார் - 2
4. கவலைகள் எல்லாம் கலைந்து விடும்
கடவுள் நம்மைக் காத்திடுவார் - 2
5. ஆவியின் கனிகளைப் பெற்றிடுவோம்
அன்பு மகிழ்ச்சியில் வாழ்ந்திடுவோம் - 2
1222.இயேசுவே இறைவா தொழுகின்றேன்
இயேசுவே இறைவா தொழுகின்றேன் - உன்
திருவடி தொட நான் விழைகின்றேன்
இயேசுவே இறைவா மகிழ்கின்றேன் - உன்
தோழனாய் என்னை ஏற்றுக்கொண்டாய்
1. கருவினிலே எனைத் தெரிந்து கொண்டாய் - என்
உருவினிலே உந்தன் உருப் பதித்தாய்
கடந்திட்ட பாதையை நோக்குகின்றேன் - உன்
காலடிச் சுவடுகள் காண்கின்றேன்
என் கரம் பிடித்து நடத்திச் சென்றாய்
உன் வழியில் எனை நடத்திச் சென்றாய்
நன்மையின் நாயகன் நீயன்றோ
நன்றியால் உன் புகழ் பாடிடுவேன்
2. உறவுகள் என்னைப் பிரிந்திட்ட வேளை
உணர்ந்தேன் இருள் எனைச் சூழ்ந்தது போல்
சிலுவையின் நீரால் எனைத் தீண்டியவேளை
தென்றலின் இனிமை நான் சுவைத்தேன் - என் கரம்

1223.உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் - 2
1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே - 2
2. தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே - 2
3. ஒன்றுமில்லாத என்னைக் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே - 2

1224.உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு - 4
என் இயேசையா அல்லேலூயா - 2
1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே - 2
எவ்வேளையும் ஐயா நீர்தானே - 2
2. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே - 2
எக்காலமும் ஐயா நீர்தானே - 2
3. ஆறுதலும் நீரே தேறுதலும் நீரே - 2
எல்லாமே எனக்கு நீர்தானே - 2

1225.உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே
உன் தேவன் உன்னோடு இருக்கின்றார் அஞ்சாதே கலங்காதே
ஊரெல்லாம் உன்னை ஒதுக்கினாலும் உன் தேவன் விலகமாட்டார்
உன் துக்கங்கள் எல்லாம் மாறும் சந்தோசம் வாழ்வில் கூடும்
துயரங்கள் எல்லாம் மறையும் நெஞ்சினில் நிம்மதி நிறையும்
1. பாலை நிலத்தில் மன்னாவைப் பொழிந்த
ஆண்டவர் உனக்கு நன்மை செய்வார்
அவரின் சமூகம் முன்பாகச் செல்லும்
தீமைகள் உன்னை அணுகாது
இமயம் போல் சூழ்ந்திடும் துயரங்களைப்
பனிபோல் மறைந்திடச் செய்திடுவார்
உலகம் முடியும்வரை உயிருள்ள தேவன் உடனிருப்பார்
2. துணையாக வந்து தோள் மீது சுமந்து
தினந்தோறும் உன்னைப் பாதுகாப்பார்
காரிருள் சூழ்ந்து தடுமாறும் நேரம்
கரிசனையோடு ஒளியாவார்
தனிமையில் தவிக்கும் போதினிலே
நம்பிக்கை ஊட்டி நலம் தருவார்
வாழ்விக்கும் நல்லாயனாய் வல்லமையோடு நடத்திடுவார்

1226.எதைச் செய்யவும் எனக்கு ஆற்றல் உண்டு
எதைச் செய்யவும் எனக்கு ஆற்றல் உண்டு
என் இயேசு தருகின்ற பெலத்தினால்
எத்தனை இடர்கள் எனைச் சூழ்ந்தாலும்
என் இயேசு கொடுக்கின்ற அருள் போதுமே
1. பாவத்தை சாபத்தை வென்றார் என் இயேசு - 2
சாத்தானின் தலையை மிதித்தார் என் இயேசு
எந்நாளும் என்னோடு வாழ்கின்றார் இயேசு
அல்லேலூயா - 2 ஆலே அல்லேலூயா அல்லேலூயா
2. ஆனந்தத் தைலத்தால் அபிசேகம் செய்கிறார் - 2
அதிகாரம் எனக்களித்து என் முன்னே செல்கிறார்
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார்

1227.எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன் - 2
1. ஆதியும் நீரே அந்தமும் நீரே
சோதியும் நீரே என் சொந்தமும் நீரே - 2
2. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் - 2
3. தேவனும் நீரே என் சீவனும் நீரே
இராசராசனும் என் சர்வமும் நீரே - 2

1228.எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார்
எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார் - 2
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா - 2
1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவன் அவர் தீபமாய் என்னைத் தேற்றினார்- ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதைகாட்டித் துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னை அவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் சீவரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பன் உற்றார் யாவுமாகினார்
நிந்தைதாங்கி எங்கும் அவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்

1229.என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு - 2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்து
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் - 2
என் உயிரான உயிரான உயிரான இயேசு - 2
1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா
உன்நாமம்துதிக்கையிலேஇயேசையாஉன்அன்பைருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலும் ஐயா உந்தன் வசனம் தியானிக்கிறேன்

1230.என்னைத் தேடி இயேசு வந்தார்
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் - 2
அல்லேலூயா நான் பாடுவேன் - 2
ஆடிப்பாடி துதித்திடுவேன் நான் - 2
1. மகனானேன் நான் மகளானேன் - 2
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார் - 2
2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார் - 2
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார் - 2
3. சுகமானேன் நான் சுகமானேன் - 2
இயேசு கிறித்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன் - 2
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் - 2
அல்லேலூயா நான் பாடுவேன் - 2
ஆடிப்பாடி துதித்திடுவேன் நான் - 2
1. மகனானேன் நான் மகளானேன் - 2
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார் - 2
2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார் - 2
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார் - 2
3. சுகமானேன் நான் சுகமானேன் - 2
இயேசு கிறித்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன் - 2
1231.என்னை வாழ வைக்கும் இயேசு என்னோடு இருக்க
என்னை வாழ வைக்கும் இயேசு என்னோடு இருக்க
என்ன குறை வரும் எனக்கு - 2 இயேசு நாமம் வாழ்கவே - 4
1. எளியவர் எல்லாம் வாருங்கள் என்றே என் இயேசு அழைத்தாரே
ஆறுதல்தேடிஅலைந்திட்டஎன்னைக் கரம்தொட்டுஅணைத்தாரே - 2
எல்லையில்லா அன்பு கொண்டார் தொல்லையெல்லாம்
தீர்த்து வைக்க எந்தன் உள்ளம் வந்த தெய்வமே
2. முடவர்கள் எல்லாம் நடந்தனர் எந்தன் இயேசுவின் வல்லமையால்
ஒளிதனைஇழந்தோர்விழிதனைஅடைந்தார்கர்த்தரின்கருணையினால் - 2
நம்பி வந்தேன் நல்லவரே நன்மையெல்லாம்
தந்து எம்மை என்றும் காக்க வந்த தெய்வமே

1232.ஒரு தாய் தேற்றுவது போல்
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - 2 அல்லேலூயா - 4
1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே - 2
2. கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் - 2
3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே - 2
4. ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார் - 2

1233.கலங்காதே மகனே கலங்காதே மகளே
கலங்காதே மகனே கலங்காதே மகளே - 2
விசுவாசத்தினால் நீ பிழைத்துக் கொள்வாய்
மகனே மகளே நீ கலங்காதே
வரும் விடுதலையால் உன் சுமைகள் எல்லாம்
சுகமாகும் சுகமாகும்
நம்பிடுவாய் நடத்திடுவேன் நம்பிடுவாய்
நடத்துகிறேன் - 2 விசுவாசத்தினால்
1. உன் உறவுகள் உடைமைகள் உண்மைகள் நிதம் அழிந்தாலும்
உன் உள்ளமதை நான் கண்டேன் - 2
கலங்காதே மகனே கலங்காதே மகளே - உன் உறவுகள்
அனுப்புகிறேன் என் ஆவியை - 2
அழிந்தொழியட்டும் அநீதிகள் நம்பிடுவாய் நடத்திடுவேன்
2. உன் தேசத்தில் உரிமைகள் மறுத்தாலும் உனை வதைத்தாலும்
என் அன்பினிலே காத்துக் கொள்வேன் உனை - 2
- கலங்காதே மகனே

1234.கவலைகள் இனி வேண்டாம் கடவுளை நம்பியிரு
கவலைகள் இனி வேண்டாம் கடவுளை நம்பியிரு
தாழ்ந்து போகமாட்டாய் உயர்வு பெறச் செய்வார் - 2
1. பாம்புகள் மீது நடந்து செல்ல
பறவை நாகத்தை மிதித்துப்போட - 2
வல்லமை பெறச் செய்வார் வெற்றியும் தந்திடுவார்
கலங்கியோர் கவலைப் போக்கிடும் தேவன்
உன்னை மறப்பாரோ உன்னைக் காத்திடுவார்
2. செங்கடல் போலத் துன்பங்களும்
எரிக்கோ மதில்போல் தோல்விகளும் - 2
எதிர்கொண்டு வந்தாலும் தோல்விகள் உனக்கில்லை
பாலையில் மன்னா பொழிந்திட்ட தேவன்
பாரங்கள் போக்கிடுவார் சுமைகளைத் தாங்கிடுவார்

1235.கவலைப்படாதே கலங்கி நிற்காதே
கவலைப்படாதே கலங்கி நிற்காதே
கண்ணீர் சிந்தாதே என் மகனே
உன்னோடு இயேசு இருக்கின்றார்
உன்னோடு நெஞ்சில் வாசம் செய்கின்றார் - 2
1. நடந்தவையெல்லாம் நன்மைக்கே
கடந்ததை மறந்துவிடு - 2
புதியன ஆண்டவர் செய்திடுவார் - 2
இதயத்தில் உறுதி கொள்ளு - 2
2. அவமானச் சின்னம் சிலுவையினை
வெற்றியாய் மாற்றிடுவார் - 2
கேவலம் தந்திட்ட நிகழ்ச்சிகளை - 2
மாட்சியாய் ஆக்கிடுவார் - 2
கண்ணீர் சிந்தாதே என் மகனே
உன்னோடு இயேசு இருக்கின்றார்
உன்னோடு நெஞ்சில் வாசம் செய்கின்றார் - 2
1. நடந்தவையெல்லாம் நன்மைக்கே
கடந்ததை மறந்துவிடு - 2
புதியன ஆண்டவர் செய்திடுவார் - 2
இதயத்தில் உறுதி கொள்ளு - 2
2. அவமானச் சின்னம் சிலுவையினை
வெற்றியாய் மாற்றிடுவார் - 2
கேவலம் தந்திட்ட நிகழ்ச்சிகளை - 2
மாட்சியாய் ஆக்கிடுவார் - 2
1236.கிறித்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு
கிறித்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி -2 அல்லேலூயா-2
1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் - 2
யார் என்ன சொன்னாலும் - 2
நான் சோர்ந்து போகமாட்டேன் - 2
2. சாத்தானின் அதிகாரமெல்லாம் என்நேசர் பறித்துக்கொண்டார் - 2
சிலுவையில் அறைந்து விட்டார் - 2
காலாலே மிதித்துவிட்டார் - 2
3. பாவங்கள் போக்கி விட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் - 2
இயேசுவின் தழும்புகளால் - 2

1237.சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
சந்தோசம் என்னில் பொங்குதே அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே - 2
1. வழி தப்பி நான் திரிந்தேன்
பாவப்பழி அதை சுமந்தலைந்தேன் - 2
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே - 2
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே - 2
2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான் - 2
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் - 2
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே - 2

1238.சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் சீவனானார் - 2
ஆ இது அதிசயம் தானே ஓ இது உண்மைதானே - 2
1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிசம் - 2
இயேசு தான் என் இரட்சகர்
இயேசுதான் என் இராசா - 2
2. சந்தோசமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா - 2
பாவமெல்லாம் போக்கி விட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் - 2
சாவை வென்றவர் என் சீவனானார் - 2
ஆ இது அதிசயம் தானே ஓ இது உண்மைதானே - 2
1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிசம் - 2
இயேசு தான் என் இரட்சகர்
இயேசுதான் என் இராசா - 2
2. சந்தோசமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா - 2
பாவமெல்லாம் போக்கி விட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் - 2
1239.சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்குக் குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்குக் குறையில்லையே
1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் - 2
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் - 2
2. எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப் படுத்துகின்றார் - 2
என் தலையை எண்ணெயினால் அபிசேகம் செய்கின்றார் - 2

1240.தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ
தன் பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
1. குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம் - 2
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே - 2
2. தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலைத் தான் கடந்தாலும் - 2
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான் - 2
தன் பிள்ளை அவள் மறப்பாளோ
தாய் மறந்தாலும் நான் மறவேனே
தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே
1. குன்று கூட அசைந்து போகலாம்
குகைகள் கூட பெயர்ந்து போகலாம் - 2
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே
அசைவதில்லை பெயர்வதில்லையே - 2
2. தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலைத் தான் கடந்தாலும் - 2
தீமை ஏதும் நிகழ்வதில்லையே
தீதின்றியே காத்திடுவேன் நான் - 2
1241.தாய் போலத் தேற்றி தந்தை போல ஆற்றி
தாய் போலத் தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா - 2
உம்மைப் போலப் புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மைப் போல அரவணைக்க யாருமில்லையே - 2
நீர் போதும் என் வாழ்விலே இயேசையா - 2
1. மலைபோல துன்பம் எனைச் சூழும் போது அதைப்
பனிபோல உருகிடச் செய்பவரே - 2
கண்மணி போல என்னைக் காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே - 2
நீர் போதும் என் வாழ்விலே இயேசையா - 2
2. பெலவீன நேரம் என் கிருபை உனக்குப் போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீர் - 2
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே - 2
நீர் போதும் என் வாழ்விலே இயேசையா - 2
3. தாய்போலப் பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போலப் புரிந்து கொண்ட என் இயேசையா
உம்மைப் போலப் புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மைப் போல அரவணைக்க யாருமில்லையே

1242.தொடும் என் கண்களையே
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே - 2
1. தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலைக் கேட்க வேண்டுமே
2. தொடும் என் நாவினையே உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே
3. தொடும் என் கைகளையே உம் பணி செய்ய வேண்டுமே
இயேசுவே உம் பணி நான் செய்ய வேண்டுமே
4. தொடும் என் மனத்தினையே மனப் புண்கள் ஆற்ற வேண்டுமே
இயேசுவே மனப்புண்கள் ஆற்ற வேண்டுமே
5. தொடும் என் உடலினையே நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே
6. தொடும் என் ஆன்மாவையே என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே
7. தொடும் என் இதயத்தையே உம் அன்பு பெருக வேண்டுமே
இயேசுவே உம் அன்பு பெருக வேண்டுமே

1243.நல்லதொரு செய்தியினை நான் உனக்குச் சொல்லுகிறேன்
நல்லதொரு செய்தியினை நான் உனக்குச் சொல்லுகிறேன்
இயேசு உன்னை அன்பு செய்கிறார்
நலமுடனே வாழ்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன் - 2
1. நம்பிக்கையில் வாழ்வதற்கு காரணத்çத் சொல்லுகிறேன்
வாழ்வை மாற்றிக் கொண்டதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்
2. வாழ்வின் நிறைவைக் கண்டதற்குக் காரணத்தைச் சொல்லுகிறேன்
நன்மை யாவும் செய்வதற்கு காரணத்தைச் சொல்லுகிறேன்

1244. நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள்
நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள்
நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா - 4
1. அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர்
அருள்திரு ஆவியைப் பெற்றிடுவீர் - 2
நானிலம் சென்று பலன் தருவீர் - 2
நன்மைகள் உண்டாகும் நற்செய்தி தந்திட
2. தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும் - 2
தேடுங்கள் கிடைக்குமென்று - 2
நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட

1245.யார் என்னைக் கைவிட்டாலும்
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார் - 2
கைவிடமாட்டார் - 2 கைவிடவே மாட்டார் இயேசு - 2
தாயும் அவரே தந்தையும் அவரே - 2
தாலாட்டுவார் சீராட்டுவார் - 2
1. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் - 2
வேண்டிடுவேனே காத்திடுவாரே - 2
2. இரத்தத்தாலே கழுவி விட்டாரே - 2
இரட்சிப்பின் சந்தோசம் எனக்குத் தந்தாரே - 2
3. ஆவியினாலே அபிசேகம் செய்து - 2
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே - 2

1246.விண்ணப்பத்தைக் கேட்பவரே
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே தோத்திரம் இயேசையா என் - 2
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் - 2 ஐயா
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே - 2
சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் - 2