முகப்பு


1487. கிறித்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் பெருவிழா
கிறித்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் பெருவிழா

1. இரக்கமுள்ள ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவுபடுத்தும்
படியாக தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவூட்டுகிறார்.

2. ஆண்டவர் தம் திருஅவையில் அமைதியை நிலைநாட்டியுள்ளார்.
செழுமையான கோதுமையினால் நம்மை உண்பிக்கிறார்.

3. உண்மையிலும் உண்மையாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்லர்,
வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என்
தந்தையே.

தியான வாக்கியம் : ஆண்டவரே, நீர் எத்துணை நல்லவர், எத்துணை
சா ந் த மு ள் ள வ ர். உ ம் இ னி ய ந ன்மை த் த ன த் தை உ ம து
பிள்ளைகளுக்குக் காட்ட வானின்று அதிமிகச் சுவையான அப்பத்தை
அளிக்கிறீர்; பசித்தோரை நலன்களால் நிரப்புகிறீர்; செருக்குள்ள
செல்வந்தரை வெறுங்கையராய்அனுப்புகிறீர்.
1488. இயேசுவின் இதய விழா
இயேசுவின் இதய விழா

1. என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பினால் இறைவன் நம்மை
நேசித்தார்; ஆகையால் தாம் உலகினின்று உயர்த்தப் பெற்றபோது அவர்
நமக்கு இரக்கம் காட்டி தம் பேரிரக்கத்தில் தம் திரு இதயத்தை அன்பு
செய்ய நம்மைத் தம்பால் ஈர்த்துக் கொண்டார்.

2. நான் கனிவும், மனத்தாழ்ச்சியும் உள்ளவன் என்பதை என்னிடம்
கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி
கிடைக்கும்.

3. என் ஆடுகளைப் பசும் புல்வெளிக்கு அழைத்துச் செல்லும் நல்ல
ஆயன் நானே. என் ஆடுகளுக்காக என் உயிரையே கொடுக்கிறேன்.

தியான வாக்கியம் : மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். அது பற்றி
எரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்.
1489. கிறித்து அரசர் திருவிழா
1489. கிறித்து அரசர் திருவிழா

1. அவர் அமைதியின் அண்ணல் என அழைக்கப்படுவார். அவருயை
அரியணை என்றென்றும் நிலைத்திருக்கும்.

2. அவருடைய அரசு என்றென்றும் நிலைத்திருக்கும், அவனியின்
அரசர்கள் அவருக்குப் பணிந்து கீழ்ப்படிவர்.

3. கிறித்து, அர சருக்குரிய அதி கார த்தையும் மா ட் சியையும்
பெற்றுள்ளார். எல்லா மக்களும், இனத்தவரும், நாட்டினரும்
அவருக்கு என்றென்றும் ஊழியம்புரிவர்.

தியான வாக்கியம் : ஆண்டவராகிய இறைவன் கிறித்துவுக்கு அவருடைய
தந்தையான தாவீதின் அரியணையை அளிப்பார். அவர் யாக்கோபின்
குலத்தில் என்றென்றும் அரசாள்வார். அவரது அரசுக்கு முடிவே இராது.
அல்லேலூயா
1490. தூய ஆவியார் திருவிழா
தூய ஆவியார் திருவிழா

1. பெந்தகோசுதே என்னும்திருநாளின் போது, அவர்கள் எல்லாரும் ஒரே
இடத்தில் கூடியிருந்தார்கள். அல்லேலூயா.

2. நெருப்புப் போன்ற பிளவுண்ட நாவுகள் திருத்தூதர்களுக்குத்
தோன்றின. ஒவ்வொருவர் மேலும் தூய ஆவியானவர் வந்து
தங்கினார். அல்லேலூயா.

3. தந்தையிடமிருந்து பு ற ப் ப ட்டு வரும் தூய ஆவியா ன வர்
மாட்சிப்படுத்துவார். அல்லேலூயா.
தியான வாக்கியம் : தூய ஆவியே வந்தருளும். உம் நம்பிக்கையாளர்
உள்ளங்களை நிரப்பியருளும். உமது அன்பின் தீயை அவர்களில்
மூட்டியருளும். பல்வேறு மொழிகளைப் பேசினாலும் ஒரே நம்பிக்கையை
அறிக்கையிடுவதில் அவர்களை ஒருங்கிணைத்தவர் நீரே. அல்லேலூயா.
1491. அன்னைமரி திருவிழாக்கள்
அன்னைமரி திருவிழாக்கள்

1. கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர். ஏனெனில் அனைத்தையும்
படைத்தவரையே உம் உதரத்தில் தாங்கினீர். அல்லேலூயா.

2. உம்மைப் படைத்தவரை நீர் பெற்றெடுத்தீர்; எனினும், என்றென்றும்
கன்னியாகவே இருக்கின்றீர். அல்லேலூயா.

3. அன்னையே, உம் கடவுளாகிய ஆண்டவரால் நீர் ஆசீர்வதிக்கப்பெற்றீர்;
உம் வழியாக வாழ்வின் முழுமையில் நாங்கள் பங்கெடுக்கின்றோம் .
அல்லேலூயா.

தியான வாக்கியம் : ஆண்டவர் தாழ்நிலை நின்ற தம் அடிமையைக்
கடைக்கண் நோக்கினார். ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு
அரும்பெரும் செயல் பல புரிந்தார். அல்லேலூயா.

குரு : மன்றாடுவோமாக! எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, உம்
அடியார்களாகிய நாங்கள் உள்ளத்திலும் உடலிலும் என்றும் நலம் பெற்று
மகிழ நீர் விரும்புகின்றீர். என்றும் கன்னிகையாகிய மாட்சிமிக்க எங்கள்
அன்நை மரியாளின் வேண்டுதலால், நாங்கள் இ ன் றைய
துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து, நிலையான பேரின்பம் பெற்று
மகிழச் செய்தருளும். உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் ஒரே
இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள்
ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.
1492.திருத்தூதர் திருவிழாக்கள்
திருத்தூதர் திருவிழாக்கள்

1. இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களுள்
பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் திருத்தூதர் எனப்
பெயரிட்டார். அல்லேலூயா.

2. அவர் கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டுத் தங்கள்
ஆண்டவரும் மீட்பருமானவரைப் பின்சென்றனர். அல்லேலூயா.

3. நீங்கள் என் அன்பில் நிலைத்திருப் ப தால், நீங்கள் என்
நண்பர்கள். அல்லேலூயா.

தியான வாக்கியம் : நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை.
நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்; நீங்கள் உலகில் சென்று
பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும் படியாகவும்
உங்களை ஏற்படுத்தினேன் அல்லேலூயா.

குரு : மன்றாடுவோமாக!

(அந்தந்தத் திருத்தூதருக்குரிய அவை மன்றாட்டைத் திருப்பலி
புத்தகத்திலிருந்து பாடவும்)
1493. புனிதர் திருவிழாக்கள்
புனிதர் திருவிழாக்கள்

1. இறைவனுடைய புனிதர்களே அவரை வாழ்த்துங்கள். அவருக்கு
அஞ்சுவோரே அவரது புகழ்பாடுங்கள். அல்லேலூயா.

2. நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நிறைவுபெறுவர். அல்லேலூயா.

3. தூயவரும் மாசற்றவருமாய் இருக்குமாறும் அன்பில் வாழவும்
நம்மைத் தேர்ந்துகொண்ட இறைவன்போற்றப் படுவாராக.
அல்லேலூயா.

புனிதர் ஒருவர் : தன் வீட்டைக் கற்பாறையின் மேல் கட்டிய அறிவாளிக்கு
அவர் ஒப்பானார். அல்லேலூயா.

புனிதர் பலர் : தமக்கு அஞ்சுபவர்களையும், தமது அன்பிரக்கத்தில்
நம்பிக்கை வைத்தவர்களையும் ஆண்டவர் கண்ணோக்கினார்.
அல்லேலூயா.

குரு : மன்றாடுவோமாக! இரக்கம் நிறைந்த இறைவா, வலுவற்ற நாங்கள்
மீட்பின் வழி நடக்க எங்களுக்கு இப்புனிதர்தம் வாழ்வின் தூண்டுதலையும்
ஆதரவையும் அளித்துள்ளீரே. புனித .............. உடைய வானகப்
பிறப்புநாளைக் கொண்டாடும் நாங்கள், அவருடைய வாழ்க்கையைக்
கண்டுபாவித்து, உம்மிடம் விரைந்து வரக் கனிவாய் அருள்புரியும்.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனாய்
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம்
திருமகனுமாகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.
1494. முதன்மைத் தூதர் திருவிழா
முதன்மைத் தூதர் திருவிழா

1. தூதர்களின் அரசரே, உமது மாண்பு வானிற்கு மேலாக உயர்வு
பெற்றுள்ளது. அல்லேலூயா.

2. வானதூதர் முன்னிலையில், இறைவா நான் உமக்குப் புகழ்
பாடுவேன். அல்லேலூயா.

3. பலியிப்பட்ட செம்மறி அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன்;
அவரைச் சூழ்ந்திருந்த தூதரணிகள் இசை முழங்கின. அல்லேலூயா.
1495. புனித சூசையப்பர் திருவிழா
புனித சூசையப்பர் திருவிழா

1. யாக்கோபு மரியாவின் கணவரான யோசப்பின் தந்தை ஆவார்.
மரியாவிடம் கிறித்து என்னும்இயேசு பிறந்தார். அல்லேலூயா.

2. கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவில் உள்ள நாசரேத்து
என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார் அவர்
யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆனவர். அல்லேலூயா.

3. இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் மண ஒப்பந்தம்
ஆகியிருக்க, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழுமுன், தூய ஆவியினால்
அவர் கருத்தாங்கி இருந்ததாகத் தெரிந்தது. அல்லேலூயா.
1496. புனித தோமையார் திருவிழா
புனித தோமையார் திருவிழா

1. ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே
போகும் வழி எப்படித் தெரியும் என்றார் தோமா. அதற்கு இயேசு, நானே
வழியும், உண்மையும் உயிரும்’ என்றார். அல்லேலூயா.

2. திதிம் என்ற தோமா இயேசு வந்த போது அவர்களுடன் இல்லை. மற்ற
திருத்தூதர்கள் அவரிடம் நாங்கள் ஆண்டவரைக் கண்டோம் என்றனர்.
அல்லேலூயா.

3. இங்கே உன் விரலை இடு, இதோ என் கைகள்; நம்பிக்கை
அற்றவனாய்இராதே; நம்பிக்கை கொள். அல்லேலூயா.
1497. புனித பிரான்சிசு சவேரியார் திருவிழா
புனித பிரான்சிசு சவேரியார் திருவிழா

1. கடவுளுடைய அளப்பரிய அருட்கொடைகளுக்கேற்ப நான்
நற்செய்தியின் பணியாளன் ஆனேன். அல்லேலூயா.

2. நம்பிக்கையும் விவேகமும் உள்ள ஊழியர் இவரே; தலைவர்
இவரையே தன் இல்லத்துக்குப் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.
அல்லேலூயா.

3. என் ஆடுகள் என் குரலுக்குச் செவிகொடுக்கும்; ஒரே ஆயனும் ஒரே
மந்தையும் உண்டாகும். அல்லேலூயா.