1148.எங்கள் காவலாம் சூசை தந்தையின்
எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்கலங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம்
செங்கையதிலே தங்கப்புசுபம்
தங்குங்கோலை ஏந்திடும்
1. கன்னித்தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமாய்ப் பேறும் மாட்சி உற்ற பாக்யனே - 2
சென்னி மகுட முடிபுனைந்த
மன்னர் கோத்ர மாதவா - 2
2. சேசுநாதரின் செல்வத்தாதை நீ - 2
நேசபுத்ரர் இன்று துத்யம் பாடவந்தோமே - 2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசை கொண்டு பாடவே - 2
3. தந்தை என்றுன்னை வந்து பாடினோம் - 2
உந்தன் மைந்தர் சொந்தமென்று இன்று காத்திடாய் - 2
அந்தி காலை வந்த வேளை
வந்து உதவி தந்திடாய் - 2

1149.என்றும் நீர்துணை மாவளனே
என்றும் நீர்துணை மாவளனே
உன்னிடம்தான் எந்தன் புகலிடமே - 2
மனத்தில் எல்லாம் உன் நினைவே நன்மைகளின் காவலனே
வளனே வளனே மாவளனே
வேண்டும் வரங்கள் தந்திடுவாய் - 2
1. பேச்சினிலே வாய்மையையும் நெஞ்சினிலே தூய்மையையும்
நீர் தந்தால் வாழ்ந்திடுவேன் - 2
உண்மையின் வழியினில் நான் சென்று
ஒவ்வொரு நொடியிலும் உழைத்திடுவேன்
உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே
2. துன்பத்திலும் நீயிருப்பாய் தந்தையாய் நீ காத்திருப்பாய்
இறையருள் யாவையும் பெற்றருள்வாய் - 2
உன்னருள்தனிலே வாழ்ந்திருப்பேன்
உன்கரம்தனிலே மகிழ்ந்திருப்பேன்

1150.கன்னித்தாயின் காவலனே
கன்னித்தாயின் காவலனே
கனிவுடனே காக்கும் மாவளனே
1. குழந்தை தெய்வம் வளரவேண்டி கடினவாழ்வு வாழ்ந்தவா
இறைவனின் உருவாம் பாலர்மேல் நல்
அருளைப் பொழிந்து அணைப்பவா - 2
2. உவந்து உழைப்போர் காவலனே உந்தன் வழியில் வாழவா
உழைப்பால் உலகம் செழித்து வாழ
உமது வரத்தை அளிக்க வா - 2

1151.குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி
குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தி
காட்சியளித்திடும் சூசை முனியே
கைகளைக் கொட்டி மங்களம் பாடி
புகழ்ந்திட நாங்கள் கூடிவந்தோம் - 2
புனித சூசையை நாடி நின்றோம்
1. தந்தையைப் போல அறிவினைக் கொடுத்து
தாயினைப் போன்று அன்பினைக் காட்டி
உற்ற நண்பனாய் ஊரில் தீபமாய்
இந்த உலகத்தில் வந்திடும் வளனே
மங்கலம் சொல்லி கைகளைக் கொட்டி
மாநிலம் எங்கும் உம் புகழ் சொல்வோம் - புகழ்ந்திட
2. கன்னிமரியாளின் துணைவரும் நீரே
இயேசு குழந்தையை வளர்த்தவர் நீரே
உகந்த பிள்ளைகள் என்றெனச் சொல்லி
ஊரென வந்தோம் உமையே புகழ்ந்தோம்
மன்னர் கோத்திர மணிமுடி மைந்தா
மாண்புடன் எம்மை மகிழ்வுடன் காப்பாய்

1152.தாவீது குலத்தின் மாமணியே
தாவீது குலத்தின் மாமணியே
தாவீது குலத்தின் மாமணியே எங்கள்
தாதை சூசை மாமுனியே
1. பாரினில் திருமகன் திருமறையைப் பரிவுடன் என்றும் காப்பவரே
பாரத மக்களைப் பாங்குடனே பரமனின் பதமதில் சேர்ப்பீரே
2. மரியும் மைந்தனும் உம்முடனே மரண நேரம் இருந்தனரே
மாந்தர்கள் எமக்கும் நீர் ஆறுதலை மரணநேரம் அளிப்பீரே
3. கடவுளின் செல்வத்திருமகனைக் கரங்களில் சுமந்து வளர்த்தவரே
கருணையில் ஆளும் திருமகனைக் கனிவுடன் நேசிக்கச் செய்வீரே

1153.மதுமலர் நிறைகொடி கையில் ஏந்தும்
மதுமலர் நிறைகொடி கையில் ஏந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணைசெய்து எம்மை ஆளுந் தாதையரே - 2
1. வான் உலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலைஅறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாஞ் சூசை உன்தஞ்சம் வந்தோம் - 2
2. ஒளிநிறை கதிரோனை ஆடைஎனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்மொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் - 2
3. தாய் தந்தையிலால் மனம் வாடி
தயங்கிடும் பாலர்போல் முகம்வாடி
வாய்விட்டு அழுதுந்தன் சகாயம் என்றும்
வருந்திக் கேட்டிடவந்தோம் மாதவனே
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணைசெய்து எம்மை ஆளுந் தாதையரே - 2
1. வான் உலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலைஅறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாஞ் சூசை உன்தஞ்சம் வந்தோம் - 2
2. ஒளிநிறை கதிரோனை ஆடைஎனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்மொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் - 2
3. தாய் தந்தையிலால் மனம் வாடி
தயங்கிடும் பாலர்போல் முகம்வாடி
வாய்விட்டு அழுதுந்தன் சகாயம் என்றும்
வருந்திக் கேட்டிடவந்தோம் மாதவனே
1154.மறையோர் புகழும் மாவளனே
மறையோர் புகழும் மாவளனே
மாமலர் மகிமையைக் கொண்டவரே
1. தேவமகன் திருத்தந்தையென்றே
தேனுலகாள் மரித்துணையென்றே
மாதவம் செய்தாய் மகத்துவம் கொண்டாய்
மாநில வாழ்வினில் மேன்மைகொண்டாய்
2. திருச்சபைக்கே பெரும் தந்தையரே
திருஇல்லம் காத்திடும் எந்தையரே
திருமுறை வழுவா நீதியின் கருவாய்த்
திகழ்ந்திடும் எங்கள் காவலரே
மாமலர் மகிமையைக் கொண்டவரே
1. தேவமகன் திருத்தந்தையென்றே
தேனுலகாள் மரித்துணையென்றே
மாதவம் செய்தாய் மகத்துவம் கொண்டாய்
மாநில வாழ்வினில் மேன்மைகொண்டாய்
2. திருச்சபைக்கே பெரும் தந்தையரே
திருஇல்லம் காத்திடும் எந்தையரே
திருமுறை வழுவா நீதியின் கருவாய்த்
திகழ்ந்திடும் எங்கள் காவலரே
1155.மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே
மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே - 2
புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த - 2
முனிவளனே உம் பதம் பணிந்தோம் - 2
1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ
இறைவன் கையில் தவழ்வதனால் - 2
மலை போல் எழும் துயர் வாழ்வினிலே - 2
மறைந்ததுவே தாய்மரி துணையால்
2. இறைவனின் பணிகள் செய்வதற்கு
இரவும் நண்பகலும் உமக்கு
மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு - 2
மனத்திடம் தா உன் அடியவர்க்கு
புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த - 2
முனிவளனே உம் பதம் பணிந்தோம் - 2
1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ
இறைவன் கையில் தவழ்வதனால் - 2
மலை போல் எழும் துயர் வாழ்வினிலே - 2
மறைந்ததுவே தாய்மரி துணையால்
2. இறைவனின் பணிகள் செய்வதற்கு
இரவும் நண்பகலும் உமக்கு
மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு - 2
மனத்திடம் தா உன் அடியவர்க்கு
1156.வாழ்க இயேசு கைத்தாதையே தேவமாதாவின் பத்தாவே
வாழ்க இயேசு கைத்தாதையே தேவமாதாவின் பத்தாவே
தாழ்மை மிகுந்தவரே வாழ்க வாழ்க
1. மானிடர்க்குள்ளே பெரிய வரங்கள் நிறைந்தவரே
வானவர் மகிமையே வாழ்க வாழ்க
2. துன்பப்படுவோர்களுக்கும் துயரத்தால் வாடுவோர்க்கும்
இன்பமான தஞ்சமே வாழ்க வாழ்க
3. மாசில்லாத கன்னிகைக்கு மணவாளன் ஆனவரே
தூய சூசையப்பரே வாழ்க வாழ்க
4. இயேசுசுமரி இருவர் கையில் ஏந்தி அணைக்கப்பட்டு நீர்
நேசமாய் மரித்தீரே வாழ்க வாழ்க
5. இத்தனை பாக்யம் பெற்ற நீர் என் மரணவேளையிலும்
ஒத்தாசையாய் இருப்பீரே வாழ்க வாழ்க

1157.வான் போற்றும் மலரே சூசைமுனியே
வான் போற்றும் மலரே சூசைமுனியே
என் தேவன் தந்தையே - என்றும்
உன் அன்பு நிழலினில் ஓயாத உழைப்பினில்
உன் பாதம் நான் தொடர்வேன்
உந்தன் வாய்மை வழியினிலே என்றும்
தூய்மை நெறியினிலே அன்பின்
சிறகினில் வதிந்து நான் வாழுவேன்
1. அறநெறி வாழ்வினில் அனைவருமே
அன்பினில் அகிலமும் சிறந்திடவே
உழைப்பதன் மேன்மையை உணர்ந்திடவே
உண்மை நன்னெறியினில் உயர்ந்திடவே - இறை
இயேசுவைக் கையில் ஏந்திய
புனிதருள் முதல்வனே வாழியவே
2. இல்லறம் நல்லறம் என விளங்க
இடர்பல ஏற்றிடத் துணிந்தவரே
திருமறை என்ற சுடராய் ஒளிர்ந்தவரே
இறைவனின் திருவுளம் அறிந்தவரே - இறை இயேசுவை

1158.அந்தோனி மாதவா அன்பான போதகா
அந்தோனி மாதவா அன்பான போதகா
வந்தோம் உன் மைந்தர் கூடி உந்தன் பாதம் வாழ்த்தவே
பொன்னான நேரமே உன்னாசீர் வேணுமே
உன் நாமத்தைப் புகழ்ந்து பாடி என்றென்றும் வாழ்த்திடுவோம்
1. விண்ணாளும் வேந்தனைக் கைக்கொண்டு வாழ்கிறார்
மண்ணோர் குறை தீர்க்கும் மாதவா
உல்லாசம் தேடிடும் சல்லாப வாழ்வையும்
எல்லாமே நீ துறந்து வாழ்ந்தாய்
தொல்லை புரிந்திடும் பேய்களில்லாமலே
விரட்டியே முன் எமைக் காப்பாய்
2. தெய்வீகன் உந்தனைக் கைகூப்பி வணங்கினோம்
எங்கள் குறைதீர்ப்பாய் மாதவா
அலைமோதும் உலகிலே வாழ்ந்திடும் யாவரும்
உன்னருளால் காக்க வேண்டும் துணைவா
விந்தை புரிந்திடும் அந்தோனி மாதவா
என்றும் எங்கள் குறை தீர்ப்பாய்

1159.அந்தோனியார் புகழ் பாடுங்களேன்
அந்தோனியார் புகழ் பாடுங்களேன்
அன்போடு யாவரும் கூடுங்களே - 2
கைகூப்பி தொழுவோம் நன்மைகள் பெறுவோம்
துன்பங்கள் யாவும் தீர்ந்திடுமே - 2
1. பாடும் பறவைக் கூட்டம் எல்லாம் பரனைப் புகழ்ந்திடவே
ஆடும் அலைகள் ஓசை எல்லாம் அருளை ஒலிக்கிறதே
நாடும் நகர மாந்தர் எல்லாம் நலனைப் பெற்றிடவே - 2
2. வீசும் புயலும் அமைதியாகும் விந்தைப் புனிதரிலே
தூசும் துயரும் தீர்ந்துபோகும் தூயவன் பார்வையிலே
நேச இதயம் வாசம் செய்யும் நேயத் தலமிதுவே - 2

1160.அன்புத் தந்தையே கருணை தீபமே
அன்புத் தந்தையே கருணை தீபமே
எங்கள் அந்தோனியாரே - 2
புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க
வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க
1. பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்
தணியும்நோய்கள்நகரும்பிணிகள்தலைவன் உன் நினைவால்- 2
தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்
உரிமை வாழ்வை உலகிற்கு உணர்த்த - புனித நகரிலே
2. இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே - 2
எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல
இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டி - புனித நகரிலே

1161.அன்புப் பெருக்கால் இறைவனை - இந்த
அன்புப் பெருக்கால் இறைவனை - இந்த
உலகிற்கு அறிவித்த புனிதரே - 2
பதுவை அந்தோனியாரே
உம்மை வணங்கியே உம்அடி தொழுகின்றோம் - 2
1. தாழ்ச்சியில் உள்ளம் சிறந்திட விளங்கிட
செபமும் தவமும் செய்தவரே
பூவை நகரினில் வலமே வந்து - 2
என்றும் எம்மைக் காப்பவரே
இறைவழியில் நமை நடத்தி என்றும் காத்திடுவார்
2. மனத்தில் நிறைவு அடைந்திட மகிழ்ந்திட
பகிர்ந்து வாழச் சொன்னவரே
விண்ணக வீட்டின் கைம்மாறு பெறவே - 2
அன்புப் பணியில் வளர்ந்திடவே
நான் செல்லும் பாதையெல்லாம் துணையாய் வந்திடுவார்

1162.இறைவனிடம் பரிந்து பேசும்
இறைவனிடம் பரிந்து பேசும்
புனித அந்தோனியாரே
புதுமைகளை புரியும் எங்கள்
புனித அந்தோனியாரே
சரணம் ஐயா சரணம் ஐயா
உந்தன் பாதம் சரணம் ஐயா
-இறைவனிடம் பரிந்து புதுமைகளை
1. துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
துன்பம் பிணி வறுமைகளைக் களைபவரும் நீரே
ஆறுமலை காடுகளை கடந்து வந்தோமே -2
அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே -2
- சரணம் ஐயா -2 இறைவனிடம் -2
2. நற்கருணை மகிமையதை உணர்த்தியவர் நீரே
நற்செய்தி போதித்த போதகரும் நீரே
உயிருள்e இயேசுவுக்காய் வாழ்வைத் தந்தாயே -2
உம்மைப் போல வாழ்ந்துகாட்ட வரம் தருவாய் நீரே -2

1163.இறைவனின் புனிதரே வாழ்க - இன்று
இறைவனின் புனிதரே வாழ்க - இன்று
இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம்
அன்பர் அந்தோனியார் உம் அருளாலே - யாம்
நன்மையின் நாயகனே கோடி நன்றிகள் சாற்றுகின்றோம் - 2
1. வாழ்வினில் துன்பங்கள் வருகையிலே
வந்தோம் உம் திருவடியே
உம் முகம் நோக்கிப் பார்க்கையிலே
உவந்து எம் துயர்களைத் துடைப்பீரையா
சமயம் பலவும் கடந்து உம்மைச்
சந்திக்கும் பக்தர்கள் மனத்தில் -2
கவலை நீங்கிட கலக்கம் அகன்றிட
கருணை மழையை நீர் பொழியுமையா
2. அலகையின் ஆதிக்கம் உயர்கையிலே
அண்ணலே ஒடுக்குகின்றீர்
நோய்களும் பிணிகளும் வாட்டுகையில்
நலம் தரும் புதுமைகள் புரியுமையா
குழந்தை இயேசுவைக் கரத்தில் ஏந்திக்
கொஞ்சிடும் போது நீர் அடைந்தீர் - 2
வாழ்க புனிதரே வந்தோம் பாதமே
வளங்கள் தந்து வழிநடத்துமையா

1164.உம்மைத் தேடி வருகின்றேன் அந்தோனி மாமுனியே
உம்மைத் தேடி வருகின்றேன் அந்தோனி மாமுனியே
உம்மையே பாடிப் புகழுகின்றேன் என் துணை நீதானே
1. புவியினில் புதுமைகள் புரிந்ததனால்
புதுமையில் புனிதராய்ப் புகழைத் தந்தீர் - 2
அனைவரும் கைவிட்டுப் பிரிந்தாலும்
ஆதரவாய் என்னைத் தாங்கிடுவீர் (2)
ஆதாரம் நீயே அன்பினில் எனையே
தோள்களில் தாங்கிக் கொள்வாய் - 2
2. கருணையின் தீபமும் நீயல்லவா
தினம் எமைக் காப்பதுன் கரமல்லவா - 2
துயரங்களாலே சோர்ந்த எங்கள்
சுமைகளைச் சுகமாய் மாற்றுமையா - 2
மலைபோல் இடர்கள் சூழ்ந்துகொண்டாலும்
பனிபோல் மறையச் செய்வாய் - 2

1165.எங்கள் இயேசு பாலனைக் கைகளில் தாங்கிய
எங்கள் இயேசு பாலனைக் கைகளில் தாங்கிய
தூய நெஞ்சம் கொண்ட புனிதரே
தேடிவரும் பக்தருக்குக் கோடி புதுமை செய்திடும்
புனிதரே உன் நாமம் வாழ்க - 2
1. கடலில் மீன்கள் இறைவார்த்தையை
கேட்பதற்குப் புதுமை புரிந்தீர்
சிலுவையினை அன்பு செய்த மாமுனியே - 2
இயேசுவுக்காய் வாழ்ந்திட ஆசை கொண்டு - 2
நற்செய்தி வழியிலே துறவியானீர்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - 2
2. பேய்களும் நடுங்கிப் போகுமே ஐயா
உன் திருநாமம் சொல்லும் போதிலே
ஊமைகளைப் பேசச் செய்யும் புதுமைப் புனிதரே - 2
அடிமைகளை மீட்டிடும் நல்ல மேய்ப்பரே - 2
சோர்ந்து போன மனிதருக்கு ஆறுதல் நீரே

1166.எம்மைக் கண்ணோக்கிடுவீர் அந்தோனி மாமுனியே
எம்மைக் கண்ணோக்கிடுவீர் அந்தோனி மாமுனியே
என்றும் காத்தீடுவீர் எங்களை என்றும் காத்திடுவீர் - 2
1. உம்மை அடைக்கலமாய் எம்முள் தெரிந்துகொண்டோம் - 2
உம்மிடம் எங்களை நேர்ந்து கொண்டோம்
எம் துயர்கள் பிணிகள் நீக்கிடுவாய் - 2
2. தாய்போல் அணைத்துக் காத்து எம் துன்பங்கள் போக்கிடுமே - 2
சேயர்களாக எமைத் தினமும் ஆதரவாய்த் தயவாய் நோக்கும் - 2

1167.கர்த்தரை கரத்தில் ஏந்தி அற்புதம் பல செய்திட
கர்த்தரை கரத்தில் ஏந்தி அற்புதம் பல செய்திட
உற்பவித்த உத்தமரே அந்தோனியார் - 2 நம்மில்
அற்பசுக பாவம் போக்கி அர்த்தமற்ற வாழ்வை மாற்றும்
நற்றவரே நல்லவரே அந்தோனியார்
1. கோவேறு கழுதை கூட கூடி நின்ற கூட்டங் காண
துணிந்து வணங்கச் செய்த அந்தோனியார் - 2
சேட்டை செய்யும் சாத்தானுக்கும் சாட்டையடி கொண்டு - அதன்
கோட்டை தனைத் தகர்த்திட்ட அந்தோனியார் - 2
2. காணாமல் போன பொருளைக் காணும்படி செய்து அதை
கண்டெடுக்கச் செய்யவல்ல அந்தோனியார் - 2
புண்ணியம் பல புரிந்து மண்ணில் இன்றும் நிலைத்திட்ட
என்னில் நிறை விண்ணவரே அந்தோனியார் - 2

1168.செந்தமிழ் சொல்லெடுத்து தேனிசையில் பண்ணெடுத்து
செந்தமிழ் சொல்லெடுத்து தேனிசையில் பண்ணெடுத்து
வல்லவரை நல்லவரை வாழ்த்திப் பாடுவோம்
சிந்தனையில் ஒளிர்பவரை விந்தை பல புரிபவரை
அற்புதரை தூயவரை வாழ்த்தி பாடுவோம்
1. பாவிகளைத் தேடி அன்பு செய்பவர்
பரமன் வழி நம்மை என்றும் காப்பவர்
பேயின் மாய வலைகளை வேரறுத்து விடுபவர் - 2
நேயத்தோடு நம்மை ஆள்பவர் - 2
2. தாழ்ச்சியில் தேவமாட்சி கண்டவர்
அன்னைமரி மைந்தனாகத் திகழ்பவர்
ஏழ்மைக் கோலம் பூண்டவர் எங்கும் நன்மை செய்பவர்
என்றும் வாழும் கோடி அற்புதர் - 2

1169.நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும்
நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும் - 2
1. துன்பங்களோ துயரங்களோ சோதனையோ வேதனையோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்
2. மனச்சுமையோ பாரங்களோ உடற்பிணியோ ஊனங்களோ
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்
3. வறியவரோ சிறியவரோ முதியோரோ இளையோரா
பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்

1170.நல்ல காலம் பிறந்திருக்கு பதுவை புனிதரின் அருள் நமக்கு
நல்ல காலம் பிறந்திருக்கு பதுவை புனிதரின் அருள் நமக்கு
பலகோடி நன்மைகளைப் பரிந்துதவிடவே வருவார்
மன்றாடுவோம் நாம் மன்றாடுவோம்
பாதைகள் தெரிந்திட நடை தொடர்வோம்
1. எளிமையின் கோலத்தில் ஆலய பீடத்தில்
ஆறுதல் சொல்கின்ற அருளாளர்
ஏழைகள் எளியவர் வறியவர் வருகையில்
அருட்கரம் தருகின்ற அன்பாளர்
தயை கடலே தடாகமே தனித்தவரின் தஞ்சமே
திருவடி வந்தோம் அருள் பொழிவாய்
2. எங்கள் தஞ்சமும் எங்கள் மகிழ்ச்சியும்
எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ
தூய்மை துலங்கும் லீலி மலரே
விலை மதிப்பில்லா மாணிக்கமே
வீரம் பொருந்திய மேய்ப்பவரே
மண்ணுலகின் காவலரே
திருவடி வந்தோம் அருள் பொழிவாய்
பலகோடி நன்மைகளைப் பரிந்துதவிடவே வருவார்
மன்றாடுவோம் நாம் மன்றாடுவோம்
பாதைகள் தெரிந்திட நடை தொடர்வோம்
1. எளிமையின் கோலத்தில் ஆலய பீடத்தில்
ஆறுதல் சொல்கின்ற அருளாளர்
ஏழைகள் எளியவர் வறியவர் வருகையில்
அருட்கரம் தருகின்ற அன்பாளர்
தயை கடலே தடாகமே தனித்தவரின் தஞ்சமே
திருவடி வந்தோம் அருள் பொழிவாய்
2. எங்கள் தஞ்சமும் எங்கள் மகிழ்ச்சியும்
எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ
தூய்மை துலங்கும் லீலி மலரே
விலை மதிப்பில்லா மாணிக்கமே
வீரம் பொருந்திய மேய்ப்பவரே
மண்ணுலகின் காவலரே
திருவடி வந்தோம் அருள் பொழிவாய்
1171.பதுவைத் திருமுனியே புதுமைகள் புரிபவரே
பதுவைத் திருமுனியே புதுமைகள் புரிபவரே
புவியினில் எமைக் காரும் பரகதி எமைச் சேரும்
1. கரங்களில் இயேசுவை ஏந்தி நின்றாய் - அவர்
வரங்களை வாரியே வழங்குகின்றாய்
மலையாய் வந்திட்ட துன்பமெல்லாம் - சிறு
அலையாய் அமைந்திடச் செய்கின்றாய்
2. அலகையை அடக்கி ஆள்பவரே - அதன்
அடிமையை மீட்டுக் காப்பவரே
இருளதன் ஆட்சி நீங்கிடவே - எழில்
அருளதன் ஆட்சி ஓங்கிடவே

1172.நன்னாக்கு அழியாத பதுவைப் புனிதரே
நன்னாக்கு அழியாத பதுவைப் புனிதரே - பொய்த்
தப்பறைகளின் சம்மட்டியே அந்தோனியாரே
இறை இயற்கைநேயமும் மனித மாண்பு மேன்மையும் -2
ஏற்று வாழ்ந்த நல்லவரே கோடி அற்புதரே
1. வணங்காத கழுத்துடை மாந்தர் நடுவிலே
நற்கருணையைக் கழுதை வணங்கக் காணச் செய்தவரே
ஆட்டம் காட்டும் பேய்களை சிலுவை காட்டியே
ஓட்டம் காணச் செய்திடும் வழிகாட்டியே
தூய உள்ளம் கொண்டு பேறுபெற்றவரே
குழந்தை இயேசுவையே ஏந்தி நின்றவரே
அன்புக் கட்டளைக் கடைப்பிடித்து இறைத்திட்டம் நிறைவேற்றி
மனம் மாறிட உயர்ந்தோங்கிட கற்றுத் தந்தவரே
2. கட்டடத்திலிருந்து விழுந்த தொழிலாளரை
கேடின்றிப் பாதுகாக்க இரக்கம் கொண்டவரே
இறையாட்சி விரும்பாத மக்கள் அறிந்திட
கடல் மீன்கள் நற்செய்தி கேட்கச் செய்தவரே
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டவரே
கோடி புதுமை செய்ய ஆற்றல் பெற்றவரே - அன்பு........

1173.பதுவை புனிதர் அந்தோனியாரே உம்
பதுவை புனிதர் அந்தோனியாரே உம்
திருத்தலம் தேடிவந்தோம்
கடைக்கண் பாரும் கவலைகள் போக்கும்
குறையில்லா வாழ்வருளும் - 2
வாழ்க - 2 எங்கள் பாதுகாவலர் வாழ்க - 2
1. பாவிகளின் அடைக்கலமே கவலைப்படுவோரின் தேற்றரவே
ஆறுகள் காடுகள் கடந்து வந்தோம்
துன்பங்கள் துயரங்கள் சோர்ந்து வந்தோம்
உம்மை நாடி அருள் தேடி நாங்கள் ஓடி வந்தோம்
2. பாவங்கள் யாம் செய்தாலும் பரமனின் இரக்கம் பெறச் செய்வாய்
உமது உதவி இல்லையென்றால்
எமக்கு இரங்குவார் யாருமில்லை
பரிவோடு எம்மைப் பாரும் ஏக்கம் போக்கிவிடும்

1174.பதுவைப் புனிதரின் புகழ்நாமம் பாடி
பதுவைப் புனிதரின் புகழ்நாமம் பாடி
ஆனந்தம் கொண்டாடுவோம்
புனிதரின் ஆலயம் பாரெல்லாம் புகழ்சாற்ற
அவரின் வாழ்வாகுவோம் - 2
புனிதரே வாழ்க புவியெல்லாம் வாழ்க
நாளுமே வாழ்க நானிலம் வாழ்க - 2
1. போதனை செய்து சாதனை புரிந்த
உனக்கொரு கோயில் எழுப்பி நின்றோம்
விண்ணும் மண்ணுமே புகழ்ந்து பாடுதே
ஈடு இணையில்லா உன் புகழ் நினைத்தே - 2
கோடியற்புதரே நாடி வந்தோமே எம் குறை தீர்ப்பாய்
எமை வாழ வைத்திடுவாய் - 2
2. பதுவைப் பதியரே எம்மைக் காக்கும் முனிவரே
எம் ஊரை உம் தாள் பதம் வைக்கின்றோம்
இரவோ பகலோ வெயிலோ குளிரோ
எந்நாளும் உம் கரம் எம்மை நடத்தும் - 2 கோடியற்புதரே

1175.புதுமைகள் ஆயிரம் நடக்குதிங்கு
புதுமைகள் ஆயிரம் நடக்குதிங்கு
புண்ணியம் பலவும் கிடைக்குதிங்கு
புதுமைப் புனிதரின் கருணை இது
புளியம்பட்டியின் பெருமை இது - 2 ஆமா
திக்கெட்டும் முழங்கட்டும் நம்ம திருத்தலப் பெருமை
தித்திக்கும் மனிதருக்கு நம்ம அந்தோனியார் கருணை - 2
1. கொடிய வாதையும் பறந்து போகுது
கொள்ளை நோயுமே அகன்று போகுது - 2
கொழந்த பாக்கியமும் இங்குக் கிடைக்குது - எம்மா - 2
குழந்தை இயேசுவைக் கையில் ஏந்திய - புதுமைப் புனிதரின்
2. மீன்களுக்கு நற்செய்தி சொன்னவராம்
நன்னாக்கு அழியாத நல்லவராம்
நற்கருணைப் பக்தியிலே உயர்ந்தவராம் - 2
நம் இயேசு பாதையில் சென்றவராம் - புதுமைப் புனிதரின்

1176.புதுமைகளின் நாயகனே பதுவையினை ஆள்பவரே
புதுமைகளின் நாயகனே பதுவையினை ஆள்பவரே
கோடி அற்புதரே அந்தோனியாரே - எம்
புகலிடம் நீரே அந்தோனியாரே - 2
1. மழலை இயேசுவையே கரங்களில் பெற்றவரே
நன்னாக்கு அழியாத நற்பேறு கொண்டவரே - 2
துள்ளி வரும் மீன்களுக்கும் நற்செய்தி தந்தவரே - 2
தவறிடும் பொருள்களையும் கண்டெடுக்கச் செய்தவரே
தவறிடும் பொருள்களையும் பரிசாய்த் தருபவரே
எங்க புனித அந்தோனியாரே உம்மைவாழ்த்திப் பாடவந்தோமே
பாடும் குரலைக் கேட்டு பாசமழை பொழிவாய் - 2
எங்க புனித அந்தோனியாரே
உம்மை வாழ்த்திப் பாட வந்தோமே
2. சாத்தானின் சேட்டைகளை சாட்டையால் ஒழித்தவரே
சாவின் விளிம்பினிலும் வாழ்வு தந்தவரே - 2
நற்கருணை வல்லமையை உலகிற்கு உரைத்தவரே - 2
நம்பி வரும் மக்களுக்கு ஆறுதல் தருபவரே
நம்பி வரும் மக்களுக்கு நல்லாசீர் தருபவரே - எங்க புனித

1177.போற்றிடுவோம் பதுவையின் புனிதரை
போற்றிடுவோம் பதுவையின் புனிதரை
வாழ்த்திடுவோம் வழிகாட்டும் விண்மீனை
பதுவை தந்த நாயகரே புதுமை செய்யும் வல்லவரே
எங்கள் ஊரின் காவலரே புனித அந்தோனியாரே
1. வார்த்தை வழி நின்று வல்லமை பெற்றார் - அவர்
நன்னாக்கு உடையவரே
செபத்தில் மூழ்கியே செயம் கண்டார் - அவர்
நற்கருணை சக்தியால் நலம் தரும் - புனிதரே
பொற்பாதம் நாடி அன்றாடம் வருவோம்
அற்புதங்கள் அடைந்திடுவோம் (அவர்) - பதுவை தந்த
2. தேடும் மாந்தர் குறை தீர்த்திடுவார்
வரம் கோடியாய் அளித்திடுவார்
நோய்கள் பேய்கள் எல்லாம் போக்கிடுவார்
மனநலம் தந்து காத்திடுவார்
கண்கலங்கும் பக்தரைக் கைவிடாத புனிதரின்
உதவியைத் தேடுவோம் உறவினை நாடுவோம்
உவப்புடன் வாழ்ந்திடுவோம் - பதுவை தந்த நாயகரே

1178.வரம் தந்தாளுவாய் தினம் அந்தோனி முனி
வரம் தந்தாளுவாய் தினம் அந்தோனி முனி
வந்தோம் உம் மைந்தர்கள் யாம்
புனிதா நீ இனிதாக இன்றுன்னை போற்றிச் செய்தோம்
1. இயேசுவை கரத்தில் ஏந்திடும் நாதா
மாந்தர்களின் காவலா
மாய உலகில் வாழும் யாம் மாய்ந்திடா தெம்மைக் காப்பாய்
2. பன்னரும் வரங்கள் என்னரும் வகையாய்
உன்னாலடைந்தோ மல்லோ
என்னே உனது தயை யாம் சொன்னால் மிகுவோர் வரை

1179.இறைமணம் பரப்பிய மறைத்தூதரே
இறைமணம் பரப்பிய மறைத்தூதரே
மறைநெறி காத்திட்ட சவேரியாரே
1. வாழ்வெல்லாம் இறைவனைப் புகழ்ந்தவர் நீர்
வழியெல்லாம் அவர் கரம் பிடித்தவர் நீர் - 2
சோதனை வாழ்வினில் வென்றவர் நீர்
சாதனை எங்கும் படைத்தவர் நீர்
எங்கள் நற்போதகரே வந்தோம் உம் பாதம் தன்னில்
2. அன்பாய் உன் புகழ்தனைப் பாடிடுவோம்
முத்துக்குளித்துறையின் முனிவரே நீர்
தத்துவம் பல கற்ற கலைஞனும் நீர் - 2
ஆன்ம தாகத்தால் அலைந்தவர் நீர்
அணையாத சோதியாய் நிலைத்தவர் நீர் - எங்கள்

1180.உலகமெல்லாம்எனக்காதாயம்எனவாழ்ந்தவர்மகிழ்ந்ததில்லை
உலகமெல்லாம்எனக்காதாயம்எனவாழ்ந்தவர்மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை - 2
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா - 2
இந்தக் கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்
1. பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் - 2
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான் - 2
2. அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை - 2
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை

1181.பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே - 2
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு
கோயில்கட்டிக் கும்பிடுவோம் சவேரியாரே - 2
1. இயேசுசாமி வார்த்தைகளைப் பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே - 2
வாழியவே வாழியவே சவேரியாரே எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே - 2
2. தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானசுநானம் வழங்கிய சவேரியாரே - 2 - வாழியவே வாழியவே

1182.பார் புகழ் தூய சவேரியாரே - இன்றுன்
பார் புகழ் தூய சவேரியாரே - இன்றுன்
பாதம் பணிந்தே போற்றிடுவோம்
பாரதத்தின் மறை போதகரே - தமிழ்ப்
பாவிலும் பெருமை சாற்றிடுவோம்
1. ஞான நல்வழியைக் காட்டிடவே - எங்கள்
நாட்டினில் மறையறி வூட்டிடவே
வானக அரசை நாட்டிடவே வஞ்சகப் பேய்களை ஓட்டிடவே
பாதம் பணிந்தே போற்றிடுவோம்
பாரதத்தின் மறை போதகரே - தமிழ்ப்
பாவிலும் பெருமை சாற்றிடுவோம்
1. ஞான நல்வழியைக் காட்டிடவே - எங்கள்
நாட்டினில் மறையறி வூட்டிடவே
வானக அரசை நாட்டிடவே வஞ்சகப் பேய்களை ஓட்டிடவே
1183.பாரீசு நகர் வீரனே மறை வாழ்வின் ஒளி விளக்கே
பாரீசு நகர் வீரனே மறை வாழ்வின் ஒளி விளக்கே
இந்து தேசம் வந்து உண்மை மறையைத் தந்து சென்ற தூயனே
1. எங்கோ தீபம் நின்றது கடல் தாண்டி இவண் வந்தது
நம் வாழ்வில் ஒளி தந்தது விண் சேரும் வழி ஆனது
2. பொங்கும் இறை அன்பினால் உன் உள்ளம் நெருப்பானதே
அயராத உன் சேவையால் எங்கள் நாடு உயிர் பெற்றதே

1184.புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரே
புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரே
எங்கள் நாடு நலம்பெறவே உம் திருவுடல் விட்டுச்சென்றீரே - 2
ஏ ஏ புனித சவேரியாரே லா லா
1. வாழ்வோம் உழைப்பாலே
பல்கலையில் சிறந்தீர் பாரீசையும் துறந்தீர்
பாரத நாட்டுக்கு வந்தீர்
ஒருகையில் சிலுவை மறுகையில் மணியை
ஏந்திச் சொன்னீர் இயேசுவை - 2 ஏ ஏ புனித
2. உலகினில் பிறந்து நாடுகள் ஐந்து பாடுது உலகம் புகழ்ந்து
உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து
தொடர்வோம் இயேசுவில் இணைந்து - 2 ஏ ஏ புனித

1185.குழந்தை இயேசுவின் அன்பு தெரசம்மாளே
குழந்தை இயேசுவின் அன்பு தெரசம்மாளே
குறைகள் அகல தேடி வந்தோம் பாருமம்மா
குறைகள் தீருமம்மா - 2
1. ஆண்டவரின் வழி சாட்சியாக வாழ்ந்தாய் நீ அம்மா - 2
அன்பு மலர்களை எம்மில் பொழிவாய் அம்மா - 2
2. அன்பின் வழி சாட்சியாக வாழ்ந்தாய் நீ அம்மா - 2
அண்டி வந்தோர்க்கு ஆறுதலை அருள்வாய் அம்மா - 2
3. பரமன் இயேசு கரங்களிலே நீ தவழ்ந்தாய் அம்மா - 2
பாவி எமக்காய்ப் பரிந்து பேசி அருள்வாய் அம்மா - 2

1186.சிறுமலரே அருள்மலரே
சிறுமலரே அருள்மலரே
திருமறைக்கோயிலில் பொலிவுற மலர்ந்த
நறுமணமே கமழ்மலரே - 2 இந்த
நானிலம் வியந்து புகழ்மலரே - 2
1. மன்னவன் இயேசுவின் மனமலரே - 2 அவர்
மகிழ்வுற வாழ்ந்த எழில்மலரே
அன்பெனும் தேன் நிறைமலரே - 2 அதை
ஆண்டவர்க்களித்த புதுமலரே - 2
2. வானகம் மேவிய ஒருமலரே - 2 எம்
வாழ்வினில் மேன்மை தருமலரே
மோனத்திலே தவழ்மலரே - 2 வான்
முடிபெற எமக்கும் வரமருளே - 2
திருமறைக்கோயிலில் பொலிவுற மலர்ந்த
நறுமணமே கமழ்மலரே - 2 இந்த
நானிலம் வியந்து புகழ்மலரே - 2
1. மன்னவன் இயேசுவின் மனமலரே - 2 அவர்
மகிழ்வுற வாழ்ந்த எழில்மலரே
அன்பெனும் தேன் நிறைமலரே - 2 அதை
ஆண்டவர்க்களித்த புதுமலரே - 2
2. வானகம் மேவிய ஒருமலரே - 2 எம்
வாழ்வினில் மேன்மை தருமலரே
மோனத்திலே தவழ்மலரே - 2 வான்
முடிபெற எமக்கும் வரமருளே - 2
1187.சிறுமலரே நறுமலரே உன்னைப் புகழ்ந்து பாடுவோம்
சிறுமலரே நறுமலரே உன்னைப் புகழ்ந்து பாடுவோம்
1. அன்பினையே அடிப்படையாய்க் கொண்டவளே சிறுமலரே
தாழ்ச்சியால் மாட்சிமை அடைந்தவளே - 2
எம்மையும் உம்போல் மாற்றிடுவாய்
2. கடவுள் புகழ்பாடிடவே கார்மேல் மடம் நுழைந்தவளே
கற்பினால் கண்ணியம் அடைந்தவளே - 2
கண்மணிபோல் எம்மைக் காத்திடுவாய்

1188.சிறுமலரே சின்ன இராணியே சிறுவழி தந்தவளே
சிறுமலரே சின்ன இராணியே சிறுவழி தந்தவளே
உன் நறுமணம் கமழ்ந்திடும் நானிலமெங்குமே
நல்வழி தந்தவளே குழந்தை தெரசாளே
1. பணிபெற விரும்பவில்லை நீர் பயன்பெற நினைத்ததில்லை - 2
உம் பாசத்திற்களவில்லை
உம் பெருந்தன்மைக்கெல்லையில்லை - 2
பாடும் மனமே தேடும் தினமே
2. பிறர்நலம் பேணும் பேரன்பினையே
சிறு சிறு செயல்களையே நீர் செம்மையாய்ச் செய்தாயே - 2
உம் குழந்தை உள்ளமே பல குறைகளைப் போக்கிடுதே
தூய நெறியைத் துன்பங்கள் வழியில்
துணிவுடன் துலங்கிடச் செய்த நீ வாழி

1189.மலர்மாரிப் பொழியும் சிறுமலரே
மலர்மாரிப் பொழியும் சிறுமலரே
மன்னன் இயேசுவின் தெரசாளே
அன்பின் பலியாய்த் திகழ்ந்திடும் நன்மலரே
சீவிய ஊற்றில் திளைத்திடும் கன்னியே
1. திருமறை நாடெங்கும் பரவவே
திருச்சபை அளித்த எம் காவலியே
பாரினில் நாளும் புகழ்வோம் உம்மையே - 2
பரிவுடன் சேர்ப்பாய் பரனிடம் எம்மையே
2. வானில் நின்று ரோசா மலரைப்
பொழிவேன் என்றாய் மகிழ்வுடனே
வானில் எம்மையும் சேர்த்திடுவீரே
வரமே பொழிந்து காத்திடுவீரே
மன்னன் இயேசுவின் தெரசாளே
அன்பின் பலியாய்த் திகழ்ந்திடும் நன்மலரே
சீவிய ஊற்றில் திளைத்திடும் கன்னியே
1. திருமறை நாடெங்கும் பரவவே
திருச்சபை அளித்த எம் காவலியே
பாரினில் நாளும் புகழ்வோம் உம்மையே - 2
பரிவுடன் சேர்ப்பாய் பரனிடம் எம்மையே
2. வானில் நின்று ரோசா மலரைப்
பொழிவேன் என்றாய் மகிழ்வுடனே
வானில் எம்மையும் சேர்த்திடுவீரே
வரமே பொழிந்து காத்திடுவீரே
1190.அண்ணலே செபத்தியாரே
அண்ணலே செபத்தியாரே
அருள்கனலே எம் காவலே - 2
உம்மைக் கொண்டாடி மகிழும் எம் வாழ்வு தழைக்க
மன்றாடி அருள் புரிவீர் எமக்காய் - 2
1. மெய்மறை வீரரென உலகம் மெச்சும்படி வாழ்ந்தவரே - 2
தொய்வுறும் நெஞ்சங்களைத் தேற்றி
விசுவாசம் பொழிந்தவரே - 2
நோய்நொடி போக்கி நற்செய்தி சொல்லி
இயேசுவுக்காய் உயிர் துறந்தவரே - 2 வாழ்க வாழ்க - 2
2. இயேசுவின் அன்பினின்று உம்மை எதுவும் பிரிக்கவில்லை
அம்புகள் ஈட்டிகளால் உந்தன் ஆன்மா அழியவில்லை - 2
நாங்களும் உம்மைப்போல் விசுவாசம் காத்து
நிறைவாழ்வு அடைய அருள்வீரே - 2 வாழ்க வாழ்க - 2

1191.நோய்நொடி நீக்க வல்லவரே
நோய்நொடி நீக்க வல்லவரே - எம்
பார்புகழ் புனித செபத்தியாரே
வேதத்திற்காய் உயிர் தந்தவரே
யாவர்க்கும் அருள்வரம் தருபவரே - 2
போற்றிப் புகழ்ந்து பாடிடுவோம் நம் புனிதரின் பெருமைகளை - 2
1. இறையாட்சி மண்ணில் மலர தன்னையே தந்தவராம் - நம்
இறை இயேசு உரைத்த நல்வழியில்
என்றுமே வாழ்ந்தவராம் - 2
இறைஞ்சுவோர்க்கிரங்கி இறைவனை வேண்டி
நிறைவரம் தருபவராம்
அவர் புகழினைப் பாடிடுவோம் - 2
2. உயர்ந்த குலத்தில் பிறந்து வளர்ந்த கோமகனாம் - எம்
பாவை நகரில் வீற்றிருக்கும் பாதுகாவலராம் - 2
வைசூரி அம்மை வாந்தி பேதி நீங்கிடச் செய்பவராம் - அவர்

1192.போற்றி நாம் புகழ்ந்திடுவோம்
போற்றி நாம் புகழ்ந்திடுவோம்
புனித செபத்தியார் பாதம் பணிந்து - 2
1. இத்தாலி நாட்டினில் இகபரன் அருளால் - 2
செகம் எங்கும் புகழ்ந்தோங்க சிறந்த நல் வீரராய் - 2
சிறந்து உயர்ந்து சேவை புரிந்தீர்
2. தந்தை சுற்றம் பற்று யாவையும் துறந்தீர் - 2
தேவமாட்சி உயர் பாக்கிய நாமம் - 2
இயேசுவுக்காக உயிரைக் கொடுத்தீர்

1193.பார்போற்றும் தூதரே பாடி நின்றோம் உம்மையே
பார்போற்றும் தூதரே பாடி நின்றோம் உம்மையே
தூய மிக்கேல் அதிதூதரே
இறை துணை வேண்டி உமை வேண்டினோம் - 2 (2)
1. ஆண்டவரின் அருகினில் அணி அணியாய்ப் பணிந்திடும்
ஆனந்த தூதர் தலைவரே
ஆறுதல் தேடிடும் அடியவர் எமக்கென
ஆதரவாய் வேண்டும துணைவரே - 2
எம் அரணாகி அனைத்தும் நடத்துமே
உம் அடைக்கலத்தில் இறையைக் காண்போமே
2. கடவுளின் நிகரெனில் கடவுள் தாம் எனும் பெயரில்
கடமையோடு காக்கும் வல்லவரே
கடனும் நோயும் கண்ணீரும் அலைபோலே எழுந்திடினும்
கலங்கரையாய் விளங்கும் வல்லவரே - 2
எம் கவலை யாவும் துரத்த வாருமே
தினம் கலங்காது வாழச் செய்யுமே - 2

1194.வான்படைத் தளபதி மிக்கேலே
வான்படைத் தளபதி மிக்கேலே
வையகம் காக்க வந்த இளங்கதிரே
1. தோழனுமாய்த் தொண்டனுமாய்த்
தேடும் யாவர்க்கும் நண்பருமாய்
நாடியே வந்தோரை நலமோடு காத்திடுவாய்
என்றும் மறவாது இனிதே நடக்கும்
2. திருத்தல திசை நோக்கி நம்பிக்கையில் பார்த்திடவே
தீராத குறைநீக்க வேண்டும் வரம் கேட்டிடுமே
வான்தூதர் துணைநிற்பார் - 2 வகை வகையாய் வரம் தருவார்
அன்போடு வரமளிப்பார் தவறாமல் துணை நிற்பார்

1195.இயேசுமரி சூசைபோல வாழுவோம்
இயேசுமரி சூசைபோல வாழுவோம்
அந்த மாசில்லாத திருக்குடும்பம் போலவே - 2
குடும்பம் நல்ல குடும்பம் ஒரு கோயிலாகும் அன்பாலே
குடும்பம்நல்லகுடும்பம்கலைக்கழகமாகும்நல்லபண்பாலே-2
1. வார்த்தையின் வழியினிலே குழந்தைகளை வளர்ப்போம்
வாழ்க்கையில் துன்பம் வந்தால் சிலுவைதனை நினைப்போம் - 2
பார்ப்பவர் திருந்தும்படி பண்பினிலே நிலைப்போம்
பாரினில் நம்மைப் பெற்ற தூயவரை மதிப்போம் - குடும்பம்
2. இதயத்தின் எளிமையினால் இறையரசைக் காண்போம்
பிறருக்கு மனமிரங்கிப் பேரிரக்கம் பெறுவோம் - 2
அமைதியை நிலைநாட்டி இறைமக்களாய் வாழ்வோம்
தூயவர் நெஞ்சம் கொண்டு தூயவரைக் காண்போம்

1196.சேசு மரி சூசை பார் போற்றும் திருக்குடும்பம்
சேசு மரி சூசை பார் போற்றும் திருக்குடும்பம்
இறைவனின் திருவுளமே நிறைவேற்றும் திருக்குடும்பம் - 2
நேர்மையின் இலக்கணம் சூசை
தூய்மையின் பிறப்பிடம் மரியாள்
இருவரின் மகனாய் இறைவனின்
சுதனாய் உலகினில் வாழ்ந்தவர் இயேசு
இறை வாழ்வினைத் தந்தவர் இயேசு
1. மண்ணோர் விண்ணோர் புகழ் ஏற்கும்
இந்நாள் எந்நாள் பார் போற்றும் - 2
பாசமும் நேசமும் நிறைந்திருக்கும்
பரிவன்புடனே வாழ்ந்திருக்கும் - 2
2. நன்மையின் இருப்பிடம் இறை குடும்பம்
முன்மாதிரியானது திருக்குடும்பம்
அன்பால் பண்பால் உறவாகும்
அஞ்சா நெஞ்சம் உயர்வேதம் - 2
பக்தியின் மார்க்கம் சிறந்தோங்கும்
பரமனின் அன்பே நிலையாகும் - 2
இல்லறக் கலங்கரை இறை குடும்பம்
நம்மை வாழவைப்பது திருக்குடும்பம்

1197.நாசரேத்தில் ஓர் குடும்பம் வாசமுள்ள திருக்குடும்பம்
நாசரேத்தில் ஓர் குடும்பம் வாசமுள்ள திருக்குடும்பம்
சேசுமரி சூசை என்னும் பாசமுள்ள திருக்குடும்பம்
வாரீர் வாரீர் வந்து பாரீர் பார்த்து வாரீர்
1. அன்பு மகிழ்ச்சி பரிவுடனே பண்பில் வாழும் ஓர் குடும்பம்
உண்மை நீதி நேர்மையுடன் அளவான திருக்குடும்பம்
2. பரிசுத்தமும் பாக்கியமும் நிறைந்து மகிழும் ஒர் குடும்பம்
இறைவனையே தன்னில் கொண்டு
வாழும் வளரும் திருக்குடும்பம் - வாரீர்

1198.இசை என்னும் அமுதை இறைவனுக்கே
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
என்றும் சுவை தந்த செசிலியே காவலியே
இசை என்னும் அமுதே இறைவனுக்கே
பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்
பணித்திட்டோம் அருள் பெறவே
1. தேனினும் இனிய தமிழிசையாலே தினமும்மை புகழ்வோமே
தேவனை நாளும் புகழ்ந்து நாம்பாட தேடும் உம் அருள் தாராய்
2. பாடகர் அனைவரின் காவலும் நீயே பாடிடுவோம் தினமே
பாடலினாலே மறைப் பணி புரிய பரனிடம் வேண்டிடுவாய்

1199.இன்னிசை இராணியே எங்கள் காவலியே
இன்னிசை இராணியே எங்கள் காவலியே
பொன்னரும் பெரிய நாளே உந்தன் நாளுமே
பொன்னரும் பொருளே போலப் - போற்றும் கற்பதை
தன்னகமே காத்து வந்த புண்ணியசீலியே
உன்னொலியே வான் நன்னொலியாமே - 2
மின்னும் மோட்ச செல்வம் கொண்ட கன்னி செசிலி
எங்குமே சங்கீத வாணர் ஏற்றுவார்
மங்கையர்க்கரசி என்று மண்ணில் போற்றுவார்
இன்னிசை சுவையால் இயேசு இன்பம் சூழ்ந்திடப்
பொங்கும் அன்பில் ஆழ்ந்து தேவசிந்தை கொண்டிட
மங்கா ஞானமே எங்கும் பொங்கவே - 2
தன்கதியைத் தேடிச்சென்ற - கன்னி செசிலி

1200.வாழ்க புனித செசிலியே நிதம் வளர்க உந்தன் திருப்புகழே
வாழ்க புனித செசிலியே நிதம் வளர்க உந்தன் திருப்புகழே
வானில் தேவன் புகழ்பாட நீ வழங்கும் இன்னிசை கேட்கின்றது
1. உலகில் வந்த நாளெல்லாம் நீ உன்னதன் புகழைப் பாடி வந்தாய்
உந்தன் பாடலில் அவர் மகிழ்ந்தார் - பின்
தன்னோடிருக்க உனை அழைத்தார்
2. வாழ்வு என்பதுஒருஇராகம் அதில்வளமும்வறுமையும்வரும் பாகம்
அன்பு என்பது அதன் தாளம் இவை செசிலி நமக்குத் தந்த பாடம்

1201.இயேசுவின் அன்புச் சீடரான புனித தோமையே
இயேசுவின் அன்புச் சீடரான புனித தோமையே
எம்மைக் கருணை கொண்டு காத்தருள வேண்டுகின்றோமே
பாடுவோம் இனிதே போற்றுவோம்
நாளுமே உம் புகழைப் பாடுவோம்
1. புதுமைகள் அற்புதங்கள் புரியும் புனிதரே
புவியில் பூத்த மக்கள் எமக்கு ஆசீர் தாருமே
2. ஏழைகள் எளியவரை காக்கும் வள்ளலே
ஏழ்மை நீக்கி மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தாருமே

1202.தேசம் போற்றும் தூயவரே தோமாவே
தேசம் போற்றும் தூயவரே தோமாவே
உம்மைத் தேடினோம் வேண்டினோம் அருள்வீரே - 2 உம்
திருப்பாத மலையில் புகழ்பாடி வந்தோம் - 2
நாள்தோறும் துணையாக வாருமே
தூய தோமாவே வாழ்க தோமாவே வாழ்க
மறைவாழ்வின் சோதியே வாழ்க - 2
1. நற்செய்தி கொண்டு வந்த மாமுனியே
நன்றி துதி பாடுகிறோம் உம் பதமே - 2
பாரத மண்ணிலே மாண்புடன் வந்தவா - 2
உமைப்போல தினம் நாங்கள் வாழ அருளே - தோமாவே
2. இயேசுவின் திருக்காயம் பணிந்தவரே
இறைவிசுவாசம் தனை வளர்த்தவரே - 2
செந்நீரும் சிந்தினீர் சிலுவையின் துணையிலே - 2
ஒருபோதும் மறவோமே உந்தன் தியாகமே - தோமாவே

1203.நெஞ்சம் தன்னில் நிறைந்து நிற்கும் புனித தோமையே
நெஞ்சம் தன்னில் நிறைந்து நிற்கும் புனித தோமையே
ஆண்டவரே என் கடவுளே என்று சொன்னவரே
தூதரே இயேசுவின் சீடரே தாருமே உம் அன்பைத் தாருமே
1. துயரினில் துவண்டிடும் எங்கள் உள்ளமே
ஆறுதல் அளித்திடும் உந்தன் பார்வையே
அன்பின் உருவே உம் தாள் பணிந்தோம்
அன்பாய் ஏற்று எம் கண்ணீரைத் துடைத்திடுவாயே
2. கடலிலும் கரையிலும் தொழில் புரிவோரை
காத்திடவே தினம் தினம் வேண்டுகிறோமே
கருணை புரிவாய் அருளைப் பொழிவாய்
காரிருளை அகற்றி எமைக் காத்திடுவாயே

1204.புனிதராம் தோமையைப் போற்றிடுவோம்
புனிதராம் தோமையைப் போற்றிடுவோம்
புகழ்ந்து பாடி மகிழ்ந்திடுவோம்
1. தேவனாம் இயேசுவின் சீடராய் வந்தார்
இயேசுவின் திருமறை போதனை தந்தார்
இறைவனின் அன்பினை இனிதாய் வளர்த்தார்
என்றும் மேன்மை விளங்கச் செய்தார்
2. அய்யனின் ஐந்திரு காயங்கள் கண்டார்
அன்பும் ஆர்வமும் பெருகியும் நின்றார்
வான்புகழ் கிடைத்த பாக்கியம் தன்னை
பாரத பூமியில் தந்தெம்மை கெணர்ந்தோர்
புகழ்ந்து பாடி மகிழ்ந்திடுவோம்
1. தேவனாம் இயேசுவின் சீடராய் வந்தார்
இயேசுவின் திருமறை போதனை தந்தார்
இறைவனின் அன்பினை இனிதாய் வளர்த்தார்
என்றும் மேன்மை விளங்கச் செய்தார்
2. அய்யனின் ஐந்திரு காயங்கள் கண்டார்
அன்பும் ஆர்வமும் பெருகியும் நின்றார்
வான்புகழ் கிடைத்த பாக்கியம் தன்னை
பாரத பூமியில் தந்தெம்மை கெணர்ந்தோர்
1205.மதுர ஞான சீலனே உமது ஆசீர் தாருமே
மதுர ஞான சீலனே உமது ஆசீர் தாருமே
துதி மிகும் குணாளனே துணையருள் தயாளனே
1. ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் பொருளே
நீ தரவே தூய வழி காட்டிடும் அற்புதனே
2. அங்கமெல்லாம் நோய் பிணியாம் அழிவதும் சரியோ
பங்கமில்லா காவல் தந்து பாதுகாக்கும் போதனே
துதி மிகும் குணாளனே துணையருள் தயாளனே
1. ஆதரவாய் வந்தவரை ஆதரிக்கும் பொருளே
நீ தரவே தூய வழி காட்டிடும் அற்புதனே
2. அங்கமெல்லாம் நோய் பிணியாம் அழிவதும் சரியோ
பங்கமில்லா காவல் தந்து பாதுகாக்கும் போதனே