முகப்பு


922. அழகான பா ஒன்று நான் பாடவா
அழகான பா ஒன்று நான் பாடவா
அன்பே என் அரசே உன் அருள் வேண்டவா
எந்நாளும் என் சீவன் நீயல்லவா
என் தேவன் நீ தந்தப்பொருளல்லவா

1. கார்கால மேகம் ஆ... பனித் தூறல் தூவ ஆ...
கானத்துக் குயில்கள் ஆ... கீதங்கள் பாட ஆ...
என் சீவனே என் உயிர் நேசனே - 2
எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே

2. மணம் வீசும் மலர்கள் ஆ... மன்னன் புகழ் பாட ஆ...
மரகத வீணை ஆ... மனத்தினை உருக்க ஆ... - என்
923. அழகிய கவிதையில் பாடிடுவேன்
அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் - 2

1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே எனக்களித்தார் - 2
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே

2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
துயரக் கறைகள் படர்கையிலே - 2
அன்பின் கரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே

3. யாழில் நான் ஓர் இசைமீட்டி
யாகமென ஒரு பாடலிலே - 2
இருளிலிருந்தும் மீட்டதற்கு
என்றும் நன்றி பாடிடுவேன்
924. ஆண்டவர் பெருமை பாடிடுவோம் - அவர்
ஆண்டவர் பெருமை பாடிடுவோம் - அவர்
ஆற்றலைப் புகழ்ந்து போற்றிடுவோம்

1. வேந்தரின் வேந்தனாம் ஆண்டவரைக்
கைத்தாளங்கள் அதிர ஆர்ப்பரிப்போம்
நாடுகள் அவரைப் பணிகின்றன
அவர் ஆட்சியில் நமக்குக் குறையினியேன்

2. யாக்கோபின் கோத்திரம் பெருக வைத்தார்
அவர் சந்ததி நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவர் தமது மாட்சியோடு
இவண் ஆனந்தம் பெருக எழுந்திடுவார்
925. ஆண்டவரில் அக்களித்துப் பாடுவோம்
ஆண்டவரில் அக்களித்துப் பாடுவோம்
அவர் பெயரை ஆர்ப்பரித்து அவனியெங்கும் வாழ்த்துவோம் - 2

1. மகிழ்ச்சி நிறை பாடலோடு ஆடுவோம்
புகழ்ச்சிப் பலி வாழ்வாலே செலுத்துவோம் - 2
இரக்கமிகு அவரன்பைச் சுவைத்தால் - 2
இதய நிறை வாழ்வுதான் அடைந்ததால்
நன்றி நன்றி நன்றி சொல்லிப் பாடுவோம்
நன்றி நன்றி நன்றி சொல்லி வாழ்த்துவோம்

2. நன்மைகளின் ஆண்டவரை உணருவோம்
நாம் அவரில் மக்களென வாழுவோம் (2)
நன் மனத்தாய் நம்மையவர் படைத்ததால் (2)
நன்றி நிறை நெஞ்சாலே பாடுவோம் - நன்றி நன்றி
926. ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்
ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்
ஆனந்தம் ஆனந்தம் என் மனத்தில் ஆண்டவா உனைப்பாட - 3
ஆனந்தம் ஆனந்தம் என்மனத்தில் ஆண்டவா உனைப்பாட

1. வான்முகிலும் உயர்மலையும் உந்தன் புகழ்பாட ஆ
தேன்பொழியும் நறுமலர்கள் உன் பெயர் சுவைபாட
வான்பொழியும் நீர்த் துளிகள் உந்தன் அருள்பாட
யான் உனது திருப்புகழைக் கவியால் நிதம்பாட - ஆண்டவா

2. பகல்ஒளியும் பால்நிலவும் ஒளியாம் உனைப்பாட ஆ
அலைகடலும் அதன் சிறப்பும் கருணையின் விதம்பாட
மழலைகளின் தேன்மொழிகள் தூய்மையின் நிறம்பாட
யான் உனது திருப்புகழைக் கவியால் நிதம்பாட - ஆண்டவா
927. ஆயிரம் நாவு வேண்டும் ஆண்டவா உனைப் புகழ
ஆயிரம் நாவு வேண்டும் ஆண்டவா உனைப் புகழ
ஆயினும் இயேசுவே உன்புகழ் பெரியதே - 4

1. தாயின் உதரம் தரிக்கும் முன்னே தேவா எனை நினைத்தாய்
தேடி வந்து ஆண்டு கொண்டு தாசன் எனை அழைத்தாய் - 2
தேவா எனை நினைத்தாய் உன் தாசன் எனை அழைத்தாய்

2. உன்னிடமிருந்து நான் பெற்ற வரங்கள் உரைக்க முடியுமோ
கண்மணி என நீ காத்திட்ட அருமை கருத இயலுமோ - 2
அதை உரைக்க முடியுமோ முற்றும் கருத இயலுமோ
928.ஆயிரம் பாடல் பாடுவேன்
ஆயிரம் பாடல் பாடுவேன்
ஆனந்தம் வாழ்வில் காணுவேன் - 2
அன்புக்கு அர்த்தங்கள் சொல்லுவேன்
அன்பர் அன்பைப் பாடுவேன் - 2

1. தேவையில் தேடினேன் தேற்ற என்னில் வருகிறார்
வாழ்க்கையில் வாடினேன் வாழ்த்த என்னில் வருகிறார் - 2
நான் செல்லும் பாதையில் தடைபடும் வேளையில்
வழிகாட்டி ஒளிகாட்ட வருகிறார் என்னில் வருகிறார்

2. கலங்கிடும் வேளையில் காத்து என்னை ஆள்கிறார்
காரிருள் நீங்கவே கருணை தேவன் வருகிறார் - 2
வறுமையில் துணைவனாய் வெறுமையில் தலைவனாய்
உறவாக நிறைவாக வருகிறார் என்னில் வருகிறார்
929. ஆயிரம் மலர் தூவி இறையுன்னை வாழ்த்த வந்தேன்
ஆயிரம் மலர் தூவி இறையுன்னை வாழ்த்த வந்தேன்
ஆனந்த கவிதையிலே நன்றிப்பண் பாடிடுவேன்
இயேசுவே நன்றி - 4

1. உலகினிலே கவலைகளே என்னை வாட்டுதையா - 2
உன்னிடமே ஓடிவந்தேன் என்னை ஏற்றுக் கொள்வாய் - 2

2. உன் வரவால் உலகமெல்லாம் உவகை கொண்டதையா - 2
ஊமைகளும் பேசிடவே குருடரும் பார்க்கின்றனர்
உன் புகழ் பரப்புகின்றனர் - 2
930. இணையில்லா இறைவனின் திருப்புகழை
இணையில்லா இறைவனின் திருப்புகழை
அனைவரும் இணைந்தே பாடுவோம்

1. அருள்நிறை ஆயன் அக்களித்து
ஆனந்தத்தில் நம்மை மூழ்கடித்து
பரம்பொருள் அவர் பதம்தனையே - நாம்
பணிவுடன் போற்றிப் பாடிடுவோம்

2. வானுற உயர்ந்த மலைகளுமே
வண்ண எழில் நிறை மலர்களுமே
உனைத் தேடும் சின்ன உயிர்களுமே - நிதம்
உன்னத இறைவனை வாழ்த்திடுமே

3. உலகத்தின் ஒளியாய் நாமிருப்போம்
உடல் உயிர் அனைத்தையும் சேர்ந்தளிப்போம்
மகிழ்வுடன் இந்த உறுதி கொள்வோம்
அதை மங்காது வாழ்வில் பகிர்ந்தளிப்போம்
931. இதய யாழில் சுரம் இசைத்து
இதய யாழில் சுரம் இசைத்து
புகழ்ந்து பாடுங்கள் - தேவன்
இணையில்லாத செயலுக்காக நன்றி கூறுங்கள் - 2

1. வாழ்வு முழுவதும் வழியைக் காட்டி தோழனாகினார் - என்
தாழ்வை நீக்கி ஏழ்மை போக்கி பக்தனாக்கினார் - 2
உருகும் மெழுகாய் என்னை மாற்றி தீபம் ஏற்றினார் - 2
உன் வேதம் சொல்ல பேதை என்னைக் கருவியாக்கினார்

2. மனிதர்களைப் புனிதராக்க மனிதனாகினார் - இந்த
அடிமைக்கும் உரிமை பெற குரல் கொடுக்கின்றார் - 2
இருள் சூழ்ந்த மனித வாழ்வில் ஒளியை ஏற்றினார் - 2
இந்த உலகம் எங்கும் பொதுமை வளர புதுமை செய்கின்றார்
932. இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ
இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ
இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ - 2

1. வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி
மனத்தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி - 2

2. உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து
தன்னைப் பலியாக்கித் தந்திடும் இறைவனுக்கு - 2
933. இதுவரை செய்த செயல்களுக்காக
இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி - 2

1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை - 2
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் - 2
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - 2

2. தனிமரமாக வளர்ந்த என்னை
பழமரமாகச் சிறப்பித்த உன்னை - 2
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் - 2
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி - 2
934. இந்தநாள் வரையிலும் காத்துக் கொண்டாரே
இந்தநாள் வரையிலும் காத்துக் கொண்டாரே
இனி வருகின்ற நாளும் கைவிடமாட்டார்

1. கடந்த காலம் எண்ணி நான் கலங்கிட மாட்டேன்
கசந்த வாழ்வை எண்ணி நான் சோர்ந்திட மாட்டேன்
நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவரே
இருக்கிறவர் அவரன்றோ புதியன செய்தார்

2. வறுமையிலும் வளமையிலும் வாழத் தெரியுமே
எந்நிலையிலும் போதுமென்று வாழ்ந்திடுவேனே
குறைவு எல்லாம் நிறைவுபெறச் செய்பவர் அவரே
ஆண்டவருக்குள் அகமகிழ்வேன் ஆற்றல் பெற்றிடுவேன்
935. இந்நாள் வரை என்னைக் காத்த அன்பின் தெய்வமே
இந்நாள் வரை என்னைக் காத்த அன்பின் தெய்வமே
உன் உயிரான அருட்துணையை வியந்து பாடுவேன் - 2
நன்றி - 3நெஞ்சம்சொல்லும்நன்றி - 2 நன்றி - 3என்றும்நன்றி - 2

1. உள்ளம் சோர்ந்துபோன போது அருகில் இருந்து நடந்தாய்
உடல் சோர்ந்து தவித்தபோது வார்த்தை தந்து வளர்த்தாய் - 2
புனிதன் பாதையில் நான் தினமும் நடப்பேன்
புரட்சிப் பாதையில் நான் நல்வழி காண்பேன்- 2
அன்னையானவா நல் தந்தையானவா நன்றி
வாழ்வுக்கும் நன்றி வளங்களுக்கும் நன்றி

2. உறவைத் தேடி தவித்த போது நண்பனாக வந்தாய்
அமைதி தேடி அலைந்த போது இறை அமைதி தந்தாய் - 2
இயேசு பாதையில் நான் வலிமை பெறுவேன்
இறையாட்சி தேடலில் நான் புதுயுகம் படைப்பேன் - 2 - அன்னை
936. இயேசுவே உமக்கு நன்றி நன்றி
இயேசுவே உமக்கு நன்றி நன்றி
நாளுமே உமக்கு நன்றி நன்றி

1. நோயினாலே வந்தேன் நெஞ்சம் வாடி நின்றேன்
குணமளித்த வல்ல இயேசுவே
அருமருந்தினாலே அகம் குளிர வைத்தாய்
ஆற்றல் உள்ள அன்பு இயேசுவே

2. செல்லக் குழந்தையில்லை சொல்ல முடியவில்லை
உம்மை வேண்டிக் கெஞ்சி நின்றேனே
குழந்தை ஒன்றே எனக்கு மகவாய்த் தந்துவிட்டாய்
எல்லையில்லா நன்றி இயேசுவே இயேசுவே

3. துன்பம் ஏற்ற போதும் தனிமை வருத்தும் போதும்
உன்னை மட்டும் தேடி வந்தேனே
துன்பம் எதுவும் என்னை அணுகிடாமல் காத்து
வழிநடத்திய வல்ல இயேசுவே
937. இறைவன் படைத்த நாளிதே
இறைவன் படைத்த நாளிதே
நன்றி நன்றி பாடுவோம் - நன்றி இறைவா - 4

1. வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்
வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் - 2
இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் - 2
இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால் - நன்றி

2. கவலை யாவும் மறைந்தது கலக்கமில்லையே
காலமெல்லாம் கர்த்தர் இயேசு நம்மோடு உள்ளார்
புதிய வானம் புதிய பூமி பூத்திட - 2
புதிய பயணம் புவியில் இன்று தொடருவோம் - நன்றி
938. இறைவா உம்மை வாழ்த்துகின்றோம்
இறைவா உம்மை வாழ்த்துகின்றோம்
ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்

1. நித்திய தந்தாய் உமை என்றும்
இத்தரை எல்லாம் வணங்கிடுமே
விண்ணும் விண்ணகத் தூதர்களும்
விண்ணின் மாண்புறு ஆற்றல்களும்

2. செராபீம் கெராபீம் யாவருமே
சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்
தூயவர் தூயவர் தூயவராம்
நாயகன் மூவுலகாள் இறைவன்

3. மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால்
வானமும் வையமும் நிறைந்துள்ளன
திருத்தூதர்களின் அருள் அணியும்
இறைவாக்கினரின் புகழ் அணியும்

4. மறைசாட்சியரின் வெண்குழுவும்
நிறைவாய் உம்மைப் போற்றிடுமே
இத்தரை எங்கும் திருஅவையும்
பக்தியாய் உம்மை ஏற்றிடுமே

5. பகருதற்குரிய மாண்புடையோய்
தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்
உம் ஒரே திருமகன் இயேசுவையும்
எம் இறையெனப் புகழ்ந்தேற்றுகிறோம்

6. தேற்றரவெமக்குத் தருபவராம்
தூய உம் ஆவியைத் துதிக்கின்றோம்
வேந்தே மாண்புயர் கிறித்துவே நீர்
தந்தையின் நித்திய மகனாவீர்

7. மண்ணுயிர் மீட்க மனங்கொண்டு
கன்னியின் வயிற்றில் கருவானீர்
சாவின் கொடுக்கை முறித்தழித்து
பாவிகள் எமக்கு வான் திறந்தீர்

8. இறுதி நாளில் நடுத்தீர்க்க
வருவீர் என யாம் ஏற்கின்றோம்
உம் திருஇரத்தம் மீட்ட எம்மை
அன்பாய்க் காத்திட வேண்டுகின்றோம்

9. முடியா மாட்சியில் புனிதருடன்
அடியார் எம்மையும் சேர்த்திடுவீர்
உம்மவர் நாங்கள் எமை மீட்பீர்
உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்

10. எம்மை ஆண்டு இறைமக்களாய்
என்றும் சிறப்புறச் செய்திடுவீர்
எந்நாளும் உம்மை வாழ்த்துகிறோம்
என்றும் உம் பெயர் போற்றுகிறோம்

11. இறைவா இந்நாள் எம்பாவக்
கறைகள் போக்கிக் காத்திடுவீர்
கனிவாய் இரங்கும் ஆண்டவரே
கனிவாய் இரங்கும் எம்மீதே

12. உம்மையே நம்பினோம் ஆண்டவரே
எம்மீதிரக்கம் கொள்வீரே
உம்துணை நம்பினோம் ஆண்டவரே
என்றும் கலக்கம் அடையோமே
939. இறைவா உம்மை யாம் போற்றிப் புகழ்கின்றோம்
இறைவா உம்மை யாம் போற்றிப் புகழ்கின்றோம்
ஆண்டவர் நீரே என்று ஏற்றுக்கொள்கின்றோம்
என்றும் வாழும் தந்தாய் உம்மை எல்லா உலகும் பணிகின்றது
விண்ணும் மண்ணும் வாழும் எல்லா தூதரணிகளுடன்
பலவத்தர் பக்தி சுவாலகருடன் ஞானாதிக்கரும்
தூயவர் தூயவர் தூயவராம் மூவுலகின் தேவன்

1. தாவியே வழியுது விண்மண் மீது உம் பெருமையின் மாட்சி
இன்னிசை ஒன்றே இடையறா தெழுப்பி
இறைவா உம் புகழ் பாடுவரே

2. எல்லையில் மாட்சியின் தந்தை நீர் என்று
சொல்லுவர் புகழ்மிகு அப்போசுதலர்
போற்றுவர் வியத்தகு இறைவாக்கினர்
வாழ்த்துவர் வெண்ணாடை வேதசாட்சிகள்
எங்குமே நிறைந்திடும் தூய திருச்சபை
என்றும் நின் மாட்சியை வெளிப்படுத்தும்

3. உமதுண்மை ஏக மகனான கிறித்துவையும்
தேற்றிடும் தூய ஆவியையும் ஆராதிக்கின்றோம்
கிறிஸ்துவே நீரே மாட்சிமிக்க வேந்தன்
நீரே தந்தையின் என்றும் வாழும் இணையில்லா மைந்தன்
மனிதரை மீட்க கன்னியின் உதரத்தில்
கருவாக நீர் தயங்கிவில்லை
மரணத்தின் கொடுக்கை வென்றே நீர்
விண்ணரசை விசுவாசிகளுக்குத் திறந்துவிட்டீர்
தந்தையின் மாட்சியில் இறைவனின்
வலப்பக்கம் வீற்றிருப்பவர் நீரே
எங்களைத் தீர்ப்பிட வருபவர் நீரென விசுவசிக்கின்றோம்

4. ஆகவே விலையிலாக் குருதியைக் கொண்டு
மீட்ட உம் அடியார்க்கு அருள்புரியும்
முடியா மாட்சியில் புனிதர்களோடு என்றுமே
இவர்களை இணைத்தருளும்
ஆண்டவரே உம் மக்களைக் காத்து உமதுடைமையை ஆசீர்வதியும்

5. அவர்களை ஆட்சிசெய் தென்றென்றும்
பெருங்குலமாக மேன்மைப் படுத்தியருளும்
ஒவ்வொரு நாளும் உம்மைப் புகழ்கின்றோம்
என்றென்றும் உமது புகழைப் பாடுகின்றோம்

6. இன்று நாங்கள் பாவத்தை விட்டு விலகி வாழத் துணைபுரியும்
எங்கள் மீது இரக்கமாயிரும் இரக்கமாயிரும் ஆண்டவரே

7. ஆண்டவரே உம் கருணையின் பார்வை எம்மீது நிலைக்கட்டும்
ஏனெனில் உம்மையே நம்பினோம்
உம்மையே நம்பினோம் ஆண்டவரே என்றுமே கலங்க மாட்டோம்
940. இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி
இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி - 2

1. அன்பைப் பொழிவதற்காக அருளை நிறைப்பதற்காக - 2

2. உணவாய் எழுந்ததற்காக உறவை வளர்ப்பதற்காக - 2

3. தந்தையாய் இருப்பதற்காக தாயாய் அணைப்பதற்காக - 2

4. உறவினர் நண்பருக்காக உதவிடும் தோழருக்காக - 2

5. துணையாய்த் தொடர்வதற்காக துன்பங்கள் துடைப்பதற்காக - 2

6. வியத்தகு செயல்களுக்காக விண்ணக மாட்சிமைக்காக - 2
941. இறைவா உமக்கே நன்றி என் இதயம் கனிந்த நன்றி
இறைவா உமக்கே நன்றி என் இதயம் கனிந்த நன்றி
இறைவா உமக்கே நன்றி

1. எண்ணில்லா நன்மைகள் எனக்கே செய்தீர்
என் தேவை யாவையும் நீர் நிறைவு செய்தீர்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி - 2

2. வாழ்வின் தந்தை வாழ்வு தந்து வழிகாட்டினீர்
வல்லமையின் வார்த்தையினால் வலிமை தந்தீர் - 2

3. என் பெயரைச் சொல்லி என்னை அழைத்தீரையா
கண்மணியாய்க் காலமெல்லாம் காத்தீரையா

4. வீண்பழியின் விரக்தியிலே வெளிச்சம் தந்தீர்
வேதனையின் வேள்வித்தீயில் ஆறுதல் தந்தீர்
942. உம்மைப் போற்றுகின்றோம்
உம்மைப் போற்றுகின்றோம்
உம்மைப் புகழுகின்றோம் நன்றி கூறுகின்றோம்

1. இறைவா உம் மாட்சிமை மேலானது
இறைவா உம் மகத்துவம் மேலானது - 2

2. இறைவா உம் வல்லமை மேலானது
இறைவா உம் வார்த்தை மேலானது - 2

3. இறைவா உம் அன்புள்ளம் மேலானது
இறைவா உம் அருட்கரம் மேலானது - 2
943. உயிரோடு கலந்து உறவான உனக்கு நன்றி
உயிரோடு கலந்து உறவான உனக்கு நன்றி - 2
உலகினில் உறவுகள் அளித்திட நிலைக்கு நன்றி - 2
மனிதமும் புனிதமும் உறவென்ற மொழிக்கு நன்றி - 2
உறவாலே வாழ்விக்கும் அமுதான கொடைக்கு நன்றி - 2
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மையைக் கூறல் வாழ்வின் தேடல் - 4

1. கவிபாடும் உலகைப் படைத்திட்ட இறைக்கு நன்றி - 2
கட்டவும் நடவும் நீ தந்த பணிக்கு நன்றி - 2
கருத்தையும் செயலையும் புதுப்பிக்கும் நெறிக்கு நன்றி - 2
காலமும் உடன் வந்து உயிரூட்டும் தயைக்கு நன்றி - 2

2. வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற பணிக்கு நன்றி - 2
வளங்களும் நலன்களும் நீ தானே எமக்கு நன்றி - 2
அம்மையும் அப்பனும் ஆனாயே புவிக்கு நன்றி - 2
அன்பினில் அர்ப்பணம் வளர்த்தாயே அதற்கு நன்றி - 2
944. உலகமே ஒரு குடும்பமாகும் உறவில் நாம் வளர்ந்தாலே
உலகமே ஒரு குடும்பமாகும் உறவில் நாம் வளர்ந்தாலே
நானிலங்கள் நிறைவைக் காணும்
வளங்கள் கூடும் உறவு சேரும்
இணைந்து நாம் மகிழ்ந்தாலே - 2

1. மண்ணும் வளமும் பொருளும் திறனும்
மனித வாழ்வின் கொடைகளே
தன்னலங்கள் வளர்ந்ததாலே
பிரிவும் பகையும் மலிந்ததே - 2
ஒன்றாகும் எண்ணங்கள் ஓங்கி இன்று
உண்மைகள் உயிர் பெற்று உயரட்டும் - 2
உதிக்கும் உறவில் பிறக்கும் புதுயுகம்
அனைத்தும் சமமென ஆகட்டும் - 2

2. கலையில் கல்லும் கனிதல் போலே
கருணை ஒன்றே போதுமே
கடின மனமும் கரைவதாலே
மனித மாண்பும் உயருமே - 2
பரந்த உள்ளங்கள் அதிகமாக
அமைதி ஆற்றலும் செழிக்கட்டும் - 2 - உதிக்கும்
945. உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
துலங்கிடும் உமக்கே இறைவா
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் - 2

1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு
இணையில்லா பலியில் இறைவனை உண்டு - 2
சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ... - 2
நின்றிட அழைத்தாய் நிலைப்போம் தினமும்

2. உண்மை வழியை உலகுக்குக் காட்ட
உலகத்தை அன்பால் ஒன்றாய்த் திரட்ட - 2
அகயிருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ... - 2
அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு
946. உன் அருள்தானே துணை எனக்கு இறைவா
உன் அருள்தானே துணை எனக்கு இறைவா - என்
கரம்பிடித்து வழி தொடர்ந்தாய்த் தலைவா - 2
வல்லவர் நீயே நல்லவர் நீயே காப்பவர் நீதானே
அன்னையும் நீயே தந்தையும் நீயே வாழ்வே நீதானே - 2
உள்ளம் பொங்குதே நன்றி சொல்லுதே நன்றி நன்றி இறைவா
இதயம் நிறையுதே மகிழ்ந்து பாடுதே நன்றி நன்றி தலைவா - 2

1. வாழும் வாழ்வு நீர்தானே நன்றி நன்றி இறைவா
எல்லாம் எமக்குத் தந்தாயே நன்றிகளின் தலைவா
உடலாய் வந்ததும் நீர்தானே நன்றி நன்றி இறைவா
உயிரை எமக்குத் தந்தாயே நன்றிகளின் தலைவா
வானும் நிலவும் காண்பவையெல்லாம்
வந்தது இங்கு உம்மாலே உந்தன் அன்பில் என்றும் வாழும்
வரமே வந்தது உம்மாலே - 2 உள்ளம்

2. பாசம் காட்டும் தெய்வம் நீ நன்றி நன்றி இறைவா
நேசம் தந்து பொழிபவரே நன்றிகளின் தலைவா
ஆவியைக் கொடையாய்த் தந்தவரே நன்றி நன்றி இறைவா
ஆக்கும் சக்தியும் நீர்தானே நன்றிகளின் தலைவா
மண்ணில் எம்மை மாண்புறச் செய்யும்
மன்னவன் இங்கு நீதானே உந்தன் அன்பில் என்றும் வாழும்
வரமே தந்தது நீ தானே - 2
947. உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா
உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதையா - 2

1. மாணிக்கத் தேரோடு காணிக்கை வந்தாலும்
உனக்கது ஈடாகுமா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உனக்கது ஈடாகுமா - 2

2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன் நாமம் என்னென்பேன்
நிறை என்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உன் நாமம் என்னென்பேன் - 2

3. ஊரெல்லாம் உலகெல்லாம் உயிர் கொண்ட பேரெல்லாம்
உன் நாமம் சொல்லாதோ
பாரெல்லாம் வாழ்கின்ற படைப்புகளெல்லாமே
உன் நாமம் புகழாதோ - 2
948. உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன்னருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமையா - 2

1. துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயராக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் - 2
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2

2. பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் - 2
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன்னன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2
949. உன்னைப் பாடாத நாளில்லையே
உன்னைப் பாடாத நாளில்லையே
உன்னைப் புகழாத பொழுதில்லையே - 2
உனதாக எனை மாற்றி உன்னாசி தினம் தந்தாய்
உயிராய் உணவாய் என்னில் கலந்தாய்

1. தாயின் கருவிலே என்னைத் தேர்ந்தவா நன்றி என்றும் நன்றி
எந்தன் பெயரையே சொல்லி அழைத்தவா நன்றி என்றும் நன்றி
எங்கெங்குச் சென்றாலும் துணையாகி நின்றவா
என்னென்ன செய்தாலும் உன்னாசீர் தந்தவா
நன்றி என்றும் நன்றி - 2

2. பாசம் தந்திடும் உறவுகள் தந்தவா நன்றி என்றும் நன்றி
பரிவும் ஆற்றலும் நிறைவாய்த் தந்தவா நன்றி என்றும் நன்றி
உன் அன்புச் சேயாக எந்நாளும் காப்பவா
என் பாதை விளக்காக என்முன்னே செல்பவா
நன்றி என்றும் நன்றி - 2
950. எந்தன் உள்ளம் வந்த தேவனே
எந்தன் உள்ளம் வந்த தேவனே
நன்றியோடு என்றும் பாடுவேன் - 2 இறைவா - 5
உன்னையன்றி யாரைப் பாடுவேன்
நன்றி மலர் உனக்குச் சூடுவேன்

1. உன் பாதை நான் செல்லும் பயணங்களில்
தடைகோடி வரும்போது எனைத் தாங்கினாய் - 2
உனைப்போல் நான் வாழத் துடிக்கின்ற வேளை - 2
கரம் நீட்டி ஒளிகாட்டித் துணையாகிறாய்
அஞ்சாத நெஞ்சோடு உனில் வாழவே - உன்னையன்றி

2. எனைச் சூழ்ந்த இருளெல்லாம் ஒளியாக்கினாய்
அருள் தந்து என் வாழ்வின் வழியாகினாய் - 2
கரைந்தோடும் படகாகத் தவிக்கின்றபோது - 2
கலங்கரை விளக்காகச் சுடர்வீசினாய்
உயிராக உணவாக உறவாகவே - உன்னையன்றி
951. எந்தன் நாவில் புதுப்பாடல் எந்தன் இயேசு தருகிறார்
எந்தன் நாவில் புதுப்பாடல் எந்தன் இயேசு தருகிறார் - 2
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா - 2

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவன் அவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - ஆனந்தம்
952. எல்லாக் காலத்திலும் எல்லா வேளையிலும்
எல்லாக் காலத்திலும் எல்லா வேளையிலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் - 2
எந்த வேeயிலும் துதிப்பேன்

1. தந்தையும் நீயே தாயும் நீயே சொந்தமும் நீயே
எந்தன் பாக்யமும் நீயே

2. ஆதியும் நீயே அந்தமும் நீயே சோதியும் நீயே
எந்தன் பாக்யமும் நீயே

3. அன்பனும் நீயே நண்பனும் நீயே அனைத்தும் நீயே
எந்தன் பாக்யமும் நீயே

4. வளமும் நீயே நலமும் நீயே வாழ்வும் நீயே
எந்தன் பாக்யமும் நீயே
953. என் வாழ்வில் என் இயேசுவே
என் வாழ்வில் என் இயேசுவே
எல்லாரும் நீயாகவே
துன்பத்தின் போதும் இன்பத்தின் போதும்
எல்லாமும் நீயாக வேண்டும்

1. ஆனந்தம் வழிந்தோடும் போது
ஆணவம் ஆளாது காத்து
உள்ளத்தின் வேந்தனாய் நின்று
வாழ்வாக வழியாக வாராய்

2. மண்ணாசை எனைச் சூழும் போதும்
என்னாயுள் முடிகின்ற போதும்
என் நாவு உன் நாமம் பாட
அன்பாக அரணாக வாராய்
954. என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
என்ன சொல்லி தேவன் அன்பைப் பாடி
நன்றியுடன் மகிழுவேன்
இன்னல் யாவும் அகன்ற புதுமை மன்னர் அவர் மகிமையே - 2
பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் மனத்தில் உதித்தார் - 2

1. மனிதன் வாழ உலகில் தேவன் மகிமை யாவும் துறந்தார் - 2
இனிதாய் நாமும் புதிதாய் வாழ்வு பெறவே இயேசு பிறந்தார்
கனிவாய் நமது இதயம் தேடி இதமாய் வந்து அமர்ந்தார்

2. கவலைஎன்னை அணுகும்போதுதுணையாய்த் தாமும்வருவார்- 2
புயலாய்த் துயரம் வாழ்வில் வீசும் அருகில் நின்று காப்பார்
இமைகள் கண்ணைக் காக்கும் தேவன் அதுபோல் என்னைக் காப்பார்
955. என்ன சொல்லிப் பாடுவேன் என்ன சொல்லிப் போற்றுவேன்
என்ன சொல்லிப் பாடுவேன் என்ன சொல்லிப் போற்றுவேன்
எனக்குச் செய்த நன்மை எண்ணியே - 2
என்ன சொல்லிப் பாடியும் என்ன சொல்லிப் போற்றியும்
ஈடு இணை உனக்கு இல்லையே (ஐயா) - 2
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே - 2

1. கண்ணீர் துடைத்ததைச் சொல்லிப் பாடவா
கவலையில் அணைத்ததைச் சொல்லிப் பாடவா
வீழ்ந்தேன் தூக்கியதைச் சொல்லிப் பாடவா
சாய்ந்தேன் தாங்கியதைச் சொல்லிப் பாடவா
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே - 2

2. வாழ்வு தந்ததைச் சொல்லிப் பாடவா
வளமை நிறைந்ததைச் சொல்லிப் பாடவா
ஊக்கம் தந்ததைச் சொல்லிப் பாடவா
உறுதி செய்ததைச் சொல்லிப் பாடவா
நன்றி தந்தையே நன்றி இயேசுவே வழிநடத்தும் தூய ஆவியே - 2
956. என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
அன்பு ஆராதனை நன்றியுமென்றும்

1. பரலோக வாசிகள் அருமையாய் உம்மைப்
புகழ்ந்துக் கொண்டாடிட புவியிலே இந்த - 2
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமும் அதிசய இரக்கமுமன்றோ

2. மாசில்லா அப்ப குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

3. சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
வீரிய திருவுள்ளம் பிறழாது வளர
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே
957. என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு
என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு
நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன்
வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு
வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன்
நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன்

1. பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன்
பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன்
பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன்
பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன்
உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை
உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் - 2 - நன்றி

2. எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன்
ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன்
அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன்
அழைப்பவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன்
உள்ளம் தேடும் அமைதியை உணரச் செய்த இயேசுவை
ஊரெங்கும் பாடியே நன்றி சொல்வேன் - 2 - நன்றி
958. எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் இருக்கும் இயேசுவே
எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் இருக்கும் இயேசுவே
என்னைச் சார்ந்தும் என்னைச் சூழ்ந்தும் காக்கும் இயேசுவே - 2
விந்தை மிகுந்த செயல்கள் புரியும் தங்க இயேசுவே
தந்த உமது செயல்களுக்காய் நன்றி இயேசுவே - 5

1. தாயின் கருவில் அறிந்து வைத்து உருவம் தந்தவரே
உடலில் அதையும் பொதிந்து வைத்து அபயம் தந்தவரே
அமர்வதையும் எழுவதையும் அறிந்து வைத்தவரே - 2
பாவி என்னைத் தேர்ந்து மீட்டாய் நன்றி இயேசுவே - 4

2. வார்த்தை வடிவில் ஆற்றல் தந்து வாழ்க்கையானவரே
அழியா உணவாய் இதயம் இறங்கி உயிரில் கலந்தவரே
எந்த நிலையில் இருந்த போதும் சிறகில் அணைப்பவரே - 2
என்னை மீட்க உயிரை ஈந்தாய் நன்றி இயேசுவே - 4
959. ஒப்பில்லா உம் கண்மணியாய்க் காத்திடும் இறைவா நன்றி
ஒப்பில்லா உம் கண்மணியாய்க் காத்திடும் இறைவா நன்றி
தாயாய் இருந்து மார்போடணைத்துத் தாங்கிடும் தலைவா நன்றி
அன்பால் என்னை நினைத்தீரே அருளால் என்னை நனைத்தீரே
கருவில் அறிந்தீர் கரத்தில் பொறித்தீர் போற்றி இறைவா பேற்றி

1. கருவாய் இருந்து கருவாக உயிராய் என்னில் வந்தீரே
பத்துத் திங்கள் பக்குவமாய் உதரம் கொடுத்து வளர்த்தீரே
- அன்பால் என்னை நினைத்தீரே

2. அன்னை தந்தையாய் உமை ஏற்க
அனைத்தும் நீயாய் இணைந்தீரே
சேயாய் உன்னடி தொடர்ந்திடவே காக்கும் தெய்வமாய் நடந்தீரே
- அன்பால் என்னை நினைத்தீரே
960 ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் - அதை
ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் - அதை
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ்பாடி புகழ்பாடி நான் வாழுவேன் - 2

1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
மலர்ப் பாக்கள் பல கோடி உருவாக்கினாய் - 2
என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே - அதில்
எழும் இராகம் எல்லாமுன் புகழ்பாடுதே - 2
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. இளங்காலைப் பொழுதுந்தன் புகழ்பாடுதே - அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே - 2
அலை ஓயாக்கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச்சரம் - 2 ஆதியும் நீயே
961. ஒரு பாடல் நான் பாடுவேன்
ஒரு பாடல் நான் பாடுவேன்
மன்னன் உந்தன் கருணையை
எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து
நன்றிப் பாடல் நான் பாடுவேன்

1. ஒரு நாளில் நீ செய்த நன்மைகளைச்
சொல்ல நினைத்தால் வாழ்நாளே போதாதய்யா
சொல்லியும் தீராதையா
நன்றி சொல்வேன் நாளெல்லாம்
உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்

2. என் அன்புத் தாயாக தந்தையாக
எந்தன் இறைவா எந்நாளும் எனைப் பார்க்கின்றாய்
கண்ணாகக் காத்தாள்கின்றாய்
நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்
நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்
962. ஒன்றாகக்கூடி வந்து பாடும் நேரம் - இது
ஒன்றாகக்கூடி வந்து பாடும் நேரம் - இது
நன்றியை மாலைகட்டிச் சூடும் நேரம் - 2
ஆண்டவர் படைத்த நாள் இது இன்று - 2
அன்போடு உறவாடிச் சேரும் நேரம்
கூடிவருவோம் நன்றி கூறிவருவோம் - இன்று
உள்ளத்தின் உறவுப் பூவைத் தூவி மகிழ்வோம் - 2

1. இறையன்பு இணைக்கின்ற குலமாகினோம்
பிறரன்பில் வாழுகின்ற பிறப்பாகினோம் - 2
அன்பென்னும் புதுவாழ்வின் ஆடையணிவோம் - 2
ஆனந்த பண்பாடிக் கொண்டாடுவோம் - கூடிவருவோம்

2. குரல் வேறு ஆனாலும் பா ஒன்றுதான்
உடல் வேறு ஆனாலும் மனம் ஒன்றுதான் - 2
இனம் வேறு குலம் வேறு என்பவையெல்லாம் - 2
இயேசுவுக்குள் வந்த நம்மில் இல்லை என்போம் - கூடிவருவோம்
963. ஓயாத கருணையின் இறைவனே
ஓயாத கருணையின் இறைவனே
உளமார்ந்த நன்றி நன்றி - 2
பாயாத இடமெல்லாம் பாய்ந்து ஓடிடும்
காயாமல் அவை என்றும் பயன்கள் நல்கிடும்

1. காலங்கள் மாறலாம் கடல் வற்றிப் போகலாம்
ஆனால் உன் கருணையோ மாறாதது
மலை சாய்ந்து போகலாம் மணல் கல்லாய்ப் போகலாம்
ஆனால் உன் கருணையோ தீராது
மாறாத இறைவா தீரா உன் கருணையை
இறவாத வரையில் மறவாது புகழ்வேன் - 2

2. சொந்தங்கள் மாறலாம் சுவையற்றுப் போகலாம்
ஆனால் உன் கருணையோ மாறாதது
எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம்
ஆனால் உன் கருணையோ மாறாதது - மாறாத
964. கருணை நினைந்து மொழிகள் மறந்து
கருணை நினைந்து மொழிகள் மறந்து
பாடினோம் நன்றி நன்றியே
தனிமை களைந்து உறவில் மகிழ்ந்து
கூடினோம் நன்றி நன்றியே
நெஞ்சம் சொல்லும் நன்றியே
என்றும் சொல்லும் நன்றியே

1. பசும்புல் வெளியில் பசியைத் தீர்த்த
ஆயன் ஆனதால் நன்றி -5 இயேசுவே
பாலை வழியில் தாகம் தீர்த்த
நேயன் ஆனதால் நன்றி - 5 இயேசுவே
நீதி நெறியில் நடத்திச் செல்லும் தோழன் ஆனதால் - 2
குறையில்லை துயரில்லை எந்தன் வாழ்விலே - 2
சாவின் இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேரினும்
துன்பச் சூழலில் வாழ்க்கைக் கடலைக் கடக்க நேரினும்
அச்சமில்லையே ஆயன் நீ இருப்பதால் - நெஞ்சம்

2. எந்தன் தலையில் நறுமணத்தின் தைலம் தந்ததால்
நன்றி - 5 இயேசுவே
எந்தன் கிண்ணம் மகிழ்ச்சியினால் நிரம்பச் செய்ததால்
நன்றி - 5 இயேசுவே
உன் அருளும் பேரன்பும் என்னைச் சூழ்வதால் - 2
நெடுநாள் உம் இல்லத்தில் வாழ்ந்திருப்பேன் நான் - 2 சாவின்
965. காற்றே கடலே மேகங்களே கடவுளின் புகழ் பாடுங்கள்
காற்றே கடலே மேகங்களே கடவுளின் புகழ் பாடுங்கள்
கார்கால மேகம் கருக்கொண்ட மழையே
கடவுளின் புகழ் பாடுங்கள்

1. வெம்மையின் சூரியனே தண்மையின் நிலவே
கடவுளின் புகழ் பாடுங்கள்
வானத்து மேலுள்ள விண்மீனே முகிலே
கடவுளின் புகழ் பாடுங்கள்
நெருப்பே கல்மழையே திகிலூட்டும் புயலே
கடவுளின் புகழ் பாடுங்கள்
பனியே அனலே புகழ் பாடுங்கள்

2. உயர்வான மலையே தாழ்வான குன்றே
இறைவனின் புகழ் பாடுங்கள்
ஓடிவரும் நதியே வளமாக்கும் நிலமே
இறைவனின் புகழ் பாடுங்கள்
வயலோர மரமே வரப்போர செடியே
இறைவனின் புகழ் பாடுங்கள்
கடலில் மீனே புகழ் பாடுங்கள்
966. குழந்தை இயேசுவே நன்றி பாடுவேன்
குழந்தை இயேசுவே நன்றி பாடுவேன்
எந்தன் நாவிலே புகழ்ந்து பாடுவேன் - 2
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2
நன்றி நன்றி நல்ல இயேசுவே - 2

1. பாவப் பிடியில் வாழ்ந்த எனக்குப்
பாதை காட்டினாய் உமக்கு நன்றி - 2
அமைதி இழந்த எந்தன் வாழ்வில்
அமைதி தந்தாயே உமக்கு நன்றி - 2
கேட்கும் போது அனைத்தும் தந்து
தட்டும் போது கதவைத் திறந்து
தேடும் போது உன்னைக் கண்டேனே
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நல்ல இயேசுவே - 2

2. தேடிவந்த தாழ்ந்த மனத்தை
இமயமாக்கினாய் உமக்கு நன்றி - 2
மீதி நாளும் எம்மில் வளர
தேவனாகினாய் உமக்கு நன்றி - 2 கேட்கும் போது
967. கோடி கோடி நன்றிகள் பாட்டுப் பாடுவேன்
கோடி கோடி நன்றிகள் பாட்டுப் பாடுவேன்
இராசாதி இராசனுக்கு இசை மீட்டுவேன் - 2

1. நல்லவர் நல்லவர் என்று பாடுவேன்
தீமைகளை நன்மையாக மாற்றிடுவாரே - 2
வல்லவர் வல்லவர் என்று பாடுவேன்
அரிய பெரிய செயல்களைச் செய்திடுவாரே - 2

2. மருத்துவர் மருத்துவர் என்று பாடுவேன்
நோய்களையெல்லாம் அவர் குணமாக்குவார் - 2
துணையாளர் துணையாளர் என்று பாடுவேன்
வழிகளிலெல்லாம் அவர் காத்திடுவாரே - 2
968. கோடி கோடி நன்றி நன்றி இயேசப்பா
கோடி கோடி நன்றி நன்றி இயேசப்பா
நீங்க செஞ்ச நன்மைகளுக்கு நன்றி இயேசப்பா - 2
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
நீ என்னோடு இருந்தால் போதும்
உன் ஆவியின் அருளில் வாழ அருள்தருவாய் அனுதினமுமே

1. கூப்பிட்ட போது மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரே - 2
குறைகளெல்லாம் போக்கி எந்தன் கூடவே வந்தீரே - 2

2. உணவும் உடையும் கொடுத்து என்னைக் காத்து வந்தீரே - 2
ஒரு குறையும் இல்லாமல் வாழவைத்தீரே - 2

3. ஆடிப்பாடி உன் புகழைப் போற்றிப் பாடவே - 2
புதிய பாடல் பாடும் வரம் இன்று தந்தீரே - 2
969. கோடி கோடியாய் நன்மைகளை
கோடி கோடியாய் நன்மைகளை
வாழ்வில் பொழிந்த இறைவா
பாடி பாடி நான் நன்றி சொல்வேன்
அன்பில் நனைந்து தலைவா
செந்தமிழின் கவிதையில் நன்றிகள் மலர
விழிகள் இரண்டிலும் ஆனந்தம் ஒளிர - 2 ஓ ஓ...
அன்பே அன்பே இறைவா நன்றி நன்றி தலைவா

1. தாயினும் மேலாய்த் தேற்றிடும் அன்பே
சேய் எந்தன் பசியைப் போக்கிடும் அமுதே - 2
கைகளில் என் பெயர் எழதிய கலையே - 2
கண்களில் மாண்புடன் பார்த்திடும் நிலையே - 2
பார்த்திடும் நிலையே

2. தேனென இனிக்கும் திருவுடல் கடலே
திருமகன் இயேசுவை அருளிய கொடையே - 2
வான் மழை சாரலாய் ஆவியின் பொழிவே - 2
எண்ணில்லா நலன்களை ஈந்த நல் இறையே - 2
ஈந்த நல் இறையே
970. கோடி நன்றி சொல்லிட நான் ஆசைப்படுகின்றேன்
கோடி நன்றி சொல்லிட நான் ஆசைப்படுகின்றேன் - உம்
கோயில் முற்றம் அமர்ந்து நான் புகழ்ந்து பாடுவேன் - 2
நன்றி நன்றி இயேசு தேவா நன்றி
நன்றி நன்றி இயேசு தேவா நன்றி நன்றி - 2

1. உடல்வாதை போக்கிவிட்டாய் உன்னத தேவா நன்றி
உயிர்நாள்கள் கூட்டித்தந்தாய் உள்ளம் சொல்லும் நன்றி - 2
இருள் சூழ திகிலானேன் ஒளியாய் வந்தாய் நன்றி
வழி கேட்டு கரம் தந்தேன் அருளாய் வந்தாய் நன்றி

2. சுமையாலே தரை வீழ்ந்தேன் தாங்கிக் கொண்டாய் நன்றி
மனபாரம் கொண்டழுதேனே ஆறுதல் சொன்னாய் நன்றி - 2
குறையோடு நான் வந்தேன் நிறைவாய்த் தந்தாய் நன்றி
ஒருபோதும் மறவாமல் என்னைக் காத்தாய் நன்றி
971. கோடி நன்றிப் பாடல் பாடும் எந்தன் இதயமே
கோடி நன்றிப் பாடல் பாடும் எந்தன் இதயமே
காக்கும் நல்ல தேவன் அன்பு என்னைத் தாங்குமே - 2
அவரின் கரங்கள் எனது வாழ்வில் என்றும் இணையுமே - 2
அகமகிழ்ந்து அவரைப் போற்றி நிதமும் பாடுவேன்
நன்றி இறைவா - 2 நன்றி தலைவா - 2

1. எனது ஆற்றல் அரணுமான உம்மை வாழ்த்துவேன்
எனது மீட்பும் மகிழ்வுமான உம்மைப் புகழுவேன் - 2
எனது வளமை வாழ்வுமான உம்மைப் போற்றுவேன் - 2
எனது வலிமை துணிவுமான உம்மைப் பாடுவேன் - 2 நன்றி

2. கண்ணின் இமைகள் போல என்னைக் காத்து மகிழ்கின்றீர்
கருணை கொண்ட விழிகளாலே இரக்கம் பொழிகின்றீர் - 2
அள்ள அள்ளக் குறையாத அன்பைத் தருகின்றீர் - 2
அன்னைக்கும் மேலான பாசம் பொழிகின்றீர் - 2 நன்றி
972. சொல்லில் சொல்லி வடிக்க முடியா
சொல்லில் சொல்லி வடிக்க முடியா
நன்மைகளை நீர் செய்தீர்
குறை என்று என் வாழ்வில் ஏதும் இல்லை - 2

1. வளர்த்த ஆசைகள் வசமாகவில்லை
நினைத்த காரியம் நிறைவேறவில்லை - 2
ஆனாலுமே அன்பானவா - 2
குறை என்று என் வாழ்வில் ஏதும் இல்லை

2. கடந்து போகும் என் வாழ்க்கைப் பயணம்
நடந்தவை யாவிற்கும் அர்த்தங்கள் உண்டு - 2
இன்பங்களிலும் துன்பங்களிலும் - 2
சமநிலை காணும் ஞானம் தந்தாய்
973. தந்த உந்தன் அருளுக்காக நன்றி கூறுவேன்
தந்த உந்தன் அருளுக்காக நன்றி கூறுவேன்
தரப்போகும் ஆசிக்காக நன்றி பாடுவேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே நன்றி இயேசுவே

1. கவலை என்னைச் சூழ்ந்தபோது
கரம் பிடித்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
சோர்ந்த வேளை ஓடிவந்து
பாதுகாத்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
நன்றி இயேசு தேவா நன்றி இயேசு இராசா
காலமெல்லாம் காக்க வேணுமே

2. யாருமில்லை என்ற வேளை
நீர் இருந்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - 2
அஞ்சாதே என்று சொல்லி
அரவணைத்தீரே நன்றி இயேசு சாமி ஐயா - நன்றி
974. தேவ நற்கருணையில் என்றும் வாழும்
தேவ நற்கருணையில் என்றும் வாழும்
அன்பு இயேசுவே நன்றியோடு நாங்கள்
உம்மை ஆராதிக்கின்றோம் - 3

1. சுமையைச் சுமப்போர் என்னிடம்வாருங்கள் என்று அழைத்தவரே- 2
எங்கள் பாவம் பிணிகள் அகற்றும் நல்ல மருத்துவரே
துன்பம் துயரம் அனைத்தும் நீக்கி ஆறுதல் அளிப்பாரே - 2

2. இரவு உணவின் புதிய பாசுகா பலியைக் கொடுத்தீரே
இந்த பாசுகாவில் உமது உடலை இரத்தத்தை அளித்தீரே
நாங்கள் பிறர்க்காய் எமது வாழ்வைத் தந்திட உணர்த்தினீரே - 2


975. நன்றி என்ற வார்த்தைக்குப் பொருள் என்னவோ இறைவா
நன்றி என்ற வார்த்தைக்குப் பொருள் என்னவோ இறைவா
பொங்கும் உந்தன் கருணைக்கு அளவில்லையோ தலைவா -2
நன்றி பாடும் நாள் வந்ததே - இனி
நன்றி மட்டும் எந்தன் நெஞ்சிலே - 2

1. நீயில்லா சிறுபொழுதும் வீணானதே
நீ வந்ததால் என்னுள்ளம் மகிழ்வானதே - 2
நீயின்றி என் வாழ்வில் பொருளில்லையே
நீ மட்டும் என் சொந்தம் எப்போதுமே - 2 நன்றி பாடும்

2. நீரில்லா புவி முழுதும் வீணாகுமே
நீயின்றி ஓ என் நெஞ்சம் பாழாகுமே - 2
நீ வந்து என் வாழ்வில் அருள் தந்ததால்
வான் முட்டும் என் பாடல் எப்போதுமே - 2 நன்றி பாடும்
976. நன்றி என்று சொல்ல வந்தோம்
நன்றி என்று சொல்ல வந்தோம்
எதுவோ நன்றி என்று கேட்டாய் - 2
நாளும்வாழும் பாசவாழ்வைஎடுத்துச் சொல்வோம் நன்றிஎன்று- 2
நன்றி மனநன்றி மகிழ்நன்றி நன்றி நிறை நன்றி இறையே-2

1. ஒருவர் ஒருவரில் ஒன்றி வாழ்வது
உன்னில் இணைந்த நன்றி வாழ்வு
இருவர் மூவராய்க் குழுமி உழைப்பது
உனது கனவின் அழகு வாழ்வு - 2
ஊரெல்லாம் அன்பில் நிலைத்து நீதி காப்பது
உயிரெல்லாம் பண்பில் வளர்ந்து மாண்பில் மகிழ்வது
உயர்ந்த நன்றி சிறந்த நன்றி
நீ விரும்பும் வாழ்வின் நன்றி - 2 நன்றி

2. காலம் போற்றிக் கடமை உணர்வினில்
கருத்தாய் உழைத்தால் நன்றி வாழ்வு
உண்மை உணர்ந்து நன்மை காத்திட
துணிந்து எழுதல் தூய்மை வாழ்வு - 2
வாழ்வெல்லாம் பகிர்வு தீபம் ஏற்றி வாழ்வது
வாழ்வு தரும் வானம் பூமி பாதுகாப்பது
வாழும் நன்றி வழுவா நன்றி
நீ விரும்பும் வாழ்வின் நன்றி - 2 நன்றி
977. நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே - 2
கோடி நன்றிப் பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் - 2

1. உயிர்கள் யாவும் வாழ நல்உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல்உள்ளம் உறைந்ததால்
நிசங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனத்தைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால் - 2

2. பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
செபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் - 2
978. நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்
நன்றிகள் பல கூறி நாம் பாடுவோம்
நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை - 2
அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் - 2
அன்னையாய்த் தந்தையாய்
அருகில் இருந்து அணைக்கும் தேவனை

1. கோடி துன்பம் வந்த போதும் கொடிய நோயில் வீழ்ந்த போதும்
தேடிவந்து நம்மைக் காத்திட்டார்
வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் - அன்னையாய்

2. உலகம் நம்மை வெறுத்த போதும் கலகம் நம்மைச் சூழ்ந்த போதும்
விலகவில்லை அன்பர் இயேசுவே
நிலைகள் குலைந்தும் அலையாய் எழுகின்றார் - அன்னையாய்
979. நன்றி கீதம் பாடி உந்தன் புகழைப் பாடுவோம்
நன்றி கீதம் பாடி உந்தன் புகழைப் பாடுவோம்
நாவாலே இறைவன் உந்தன் பெருமை சாற்றுவோம் - 2
ஆர்ப்பரித்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
அகிலமெங்கும் ஆண்டவன் உன் அருளைப் பாடுவோம் - 2

1. எளியோர் வாழ்வு பெற இறைவனைத் தொழுவோம்
வறியவர் நிலை உயர இயேசுவைத் தொழுவோம் - 2
கோடி செல்வம் நன்மை தந்த இறைவனைப் புகழ்வோம் - 2
இன்றும் என்றும் இயேசு காட்டும் வழியில் நடப்போம்
- ஆர்ப்பரித்திடுவோம்

2. துயரில் மகிழ்வு தந்த இறைவனைப் புகழ்வோம்
இதயத்தில் அமைதி தந்த இயேசுவைப் புகழ்வோம் - 2
இன்பம் துன்பம் எது வந்தாலும் தேவனைத் தொழுவோம் - 2
அன்னை தந்தை அன்பைக் காட்டும் இயேசுவைத் தொழுவோம்
- ஆர்ப்பரித்திடுவோம்
980.நன்றி கீதம் பாடுவோம் வல்ல தேவன் இயேசுவை
நன்றி கீதம் பாடுவோம் வல்ல தேவன் இயேசுவை
நன்றி நன்றி என்று பாடி நாளும் வாழ்த்துவோம்
நன்மை கோடி செய்திடும் நம்மில் வாழும் இயேசுவை
நன்றி நன்றி என்று பாடி நாளும் வாழ்த்துவோம்

1. எந்தன் நெஞ்சில் வந்த தெய்வமே
உந்தன் அன்பை என்றும் பாடியே நன்றி கூறுவோம் - 2
காலம் மாறும் உன் அன்பு மாறுமோ - 2
காலமெல்லாம் உம்மைப் பாடி நன்றி கூறுவோம்
துன்ப துயரங்கள் இனி மறைந்து போகுமே
எந்தன் வாழ்விலே புதுவசந்தம் வீசுமே

2. துன்பத்திலே தேற்றும் தெய்வமே
உந்தன் கருணையிலே என்றும் பாடி நன்றி கூறுவோம் - 2
தாய் மறந்தாலும் உந்தன் அன்பு மாறுமோ - 2
உந்தன் பாசம் நினைத்து நன்றி கூறுவோம் - துன்ப துயரங்கள்
981. நன்றி கூறி ஆண்டவரை நாளும் போற்றுவோம்
நன்றி கூறி ஆண்டவரை நாளும் போற்றுவோம்
நாளும் நம்மைக் காத்து வரும் அவரின் அன்புக்காய் - 2
நன்றி இறைவா இறைவா நன்றி நன்றி - 4

1. உயிரையும் தந்தாய் நல்ல உடல்நலம் தந்தாய்
உண்ண உணவும் உடுத்த உடையும் உறைவிடம் தந்தாய் - 2
பாசம் தந்து பரிவு கொண்டு கண்ணைப் போலக் காத்து வந்தாய் - 2

2. தந்தையைத் தந்தாய் அன்புத் தாயைத் தந்தாய்
உற்ற நண்பன் உண்மை சொந்தம் உறவுமே தந்தாய் - 2
உன்னைத் தந்து அன்பைப் பொழிந்து
என்னை என்றும் காத்து நின்றாய் - 2
982. நன்றி கூறுவோம் நாளும் பாடுவோம்
நன்றி கூறுவோம் நாளும் பாடுவோம்
அன்பர் இயேசு எந்தன் வாழ்வின் மையமென்று
வாழ்த்திப் பாடுவோம் - 2
வளங்கள் யாவுமே தந்து நம்மையே
வாழ வைக்கும் வள்ளல் என்று வாழ்த்திப் பாடுவோம்

1. வழிகாட்டி வாழ வைத்த இறைவன் அவரே
வானரசு மண்ணில் மலர அழைத்தார் நம்மையே - 2
வாழும் போது மனிதம் மலர ஒன்று கூடுவோம்
இறைவன் இயேசு வாழ்ந்த வழியில் நாமும் செல்லுவோம்
- வளங்கள் யாவுமே

2. மனித நேயம் நம்மில் நாளும் மலரச் செய்யவே
நெறிகள் தந்து நமது வாழ்வை ஒளிரச் செய்தாரே
உயர்வு தாழ்வு என்றும் தீமை நம்மில் மறையவே - 2
உரிமை வாழ்வு நம்மில் என்றும் நிலைத்திடச் செய்வோம்
- வளங்கள் யாவுமே
983. நன்றி சொல்லி நாளும் பாடுவோம் - கோடி
நன்றி சொல்லி நாளும் பாடுவோம் - கோடி
நன்மை செய்த இயேசு இராசனை - 2
நமது வாழ்க்கையே உயர்ந்த நன்றியாம் - 2
நன்மை நெறியில் நாளும் வளர்ந்து
நலன்கள் யாவும் நட்பில் பகிர்ந்து

1. விண்ணும் மண்ணுமே காணும் யாவுமே
கடவுள் தந்த கொடைகள் அல்லவா
வலிமை இழந்தவர் வாழ்வில் வசந்தம் பெறுவதும்
வள்ளல் இயேசு தயவில் அல்லவா - 2
அமைதி வரும் அருள் நிறையும்
அவர் வரவில் புது உறவில்
அன்னை போல அன்பு காட்டி நம்மைக்
காக்கும் தேவன் பெயரை

2. கவலை யாவுமே கலைந்து போனதே
கண்ணைப் போல என்னை இயேசு காப்பதால்
சோகம் இல்லையே இனி சுகமே எல்லையே
தேற்றும் தெய்வம் தேடிவந்ததால் - 2
சுமை சுமந்த தோள்களுக்கு
சுகம் தருவார் துணை வருவார்
அச்சம் நீக்கி அன்பு தந்து
அருளைப் பொழியும் தேவன் அருளை
984. நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம்
நன்றி சொல்லிப் பாடுவோம் நல்லவரை வாழ்த்துவோம்
வல்லவராகுவோம் வளமை காணுவோம் - 2
காலங்கள் நம் கையில் காயங்கள் கரைகையில் - 2

1. மண்ணிலே விண்ணகத்தை மலரச் செய்யும் மனிதராய்க்
கண்ணிலே தீப்பிழம்பைக் கொண்டவர் தாம் கிறித்துவே - 2
ஆணவத்தை அடக்கவே அலையலையாய்ச் செல்லுவோம் - 2
- காலங்கள் நம் கையில்

2. சாதிகள் பேதங்கள் சந்தி தோறும் மோதல்கள்
சரித்திர நாயகனின் சாட்சியத்தால் சரியுமே - 2
செல்லரிக்கும் சூழலைச் செயல்வழியில் மாற்றுவோம் - 2
- காலங்கள் நம் கையில்
985. நன்றி சொல்லிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
நன்றி சொல்லிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் - 2
மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனதாய் உறவுடனே பாடிடுவோமே

1. இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே - 2
அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
இறையரசில் நாம் காண்போமே - 2

2. மனித மாண்பு எல்லாருக்கும் மலரும் நல்ல நாள் வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே - 2
உழைப்பினிலே உயர்வையும் பகிர்வினிலே உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
இறையரசில் நாம் காண்போமே - 2
986. நன்றி சொல்வேன்
நன்றி சொல்வேன் - 2
என்னை மண்ணில் படைத்த இறைவனுக்கே
விண்ணும் மண்ணும் எனக்கென கொடுத்தவர்க்கே
இன்றும் என்றும் நன்றி சொல்வேன் - 2 நான்

1. என்னை விட உலகில் எத்தனை பேர் இருந்தும்
என்னைஅன்பர் கொண்டாரே - 2 இயேசு
வறுமையும் நோயும் வாட்டிடும் உலகில்
வளமையால் நிறைத்தாரே
மகிழ்வுடன் வாழ்ந்திடச் சொன்னாரே

2. இன்னலுற்ற நிலையில் அன்பர் இயேசுவின் அருகில்
வந்து நின்று செபித்தாரே - 2 நம்பி
வல்ல எந்தன் தேவன் எளியேனின் செபத்தை
கனிவுடன் கேட்டாரே
வேண்டுதல் கிடைத்திடச் செய்தாரே
987. நன்றி சொல்வேன் - நான்
நன்றி சொல்வேன் - நான்
நன்றி சொல்வேன் - என்
முழுமனத்துடனே நன்றி சொல்வேன்

1. மன்றாடும் நாளில் என் குரல் கேட்டீர்
மனத்திற்கு வலிமையும் நீரே தந்தீர்
நலிந்த போதெல்லாம் நலம் தந்து காத்தீர்
துன்பப் புயலில் துணை தந்து காத்தீர்

2. சொல்லியபடியே செய்து முடித்தீர்
என்சுக வாழ்வின் மருந்தாய் வந்தீர்
இயற்கையில் உம்மைக் காணச் செய்தீர்
என்னோடு என்றும் இருப்பேன் என்றீர்
988. நன்றி நன்றி ஆண்டவரே
நன்றி நன்றி ஆண்டவரே
நன்மை நன்மை நிறைந்தவரே - 2
என்றுமே உள்ளது பேரன்பு எல்லா நாவிலும் உன்னன்பு

1. பசியின் பிடியில் தாகத்தின் தாக்கத்தில்
சோர்வுற்றுக் களைத்து சோகம் கண்டோர் - 2
நெருக்கடி நினைந்து நெஞ்சினில் கனத்து
சாவின் பிடியில் கிடந்திருந்தோர் - 2
பெற்ற பெருவாழ்வை நினைந்து நினைந்து - 2
நன்றி சொல்லிப் பாட வந்தோம் - 2

2. வெண்கலக் கதவும் இரும்புத் தாழ்களும்
மண்மீது மனிதரை அழுத்துகையில் - 2
வீசும் புயலினைப் பூந்தென்றலாக்கி
ஆசி வழங்கிய ஆண்டவரால் - 2 - பெற்ற
989. நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவோம்
நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவோம்
நன்மை கோடி செய்யும் நல்ல தேவனை - 2
உண்மையின் உறவில் நாளுமே வளர
தமது அருளை நமக்குத் தருகின்றார் எந்நாளுமே

1. வறண்ட பூமி வான்மழையைக் காணச் செய்பவர்
வரமளித்து வாழ்வினிலே இனிமை சேர்ப்பவர் - 2
நீதியோடு யாவருக்கும் தீர்ப்பளிப்பவர் - 2
பாவி கூட வருந்தும் போது மன்னித்தருள்பவர்
இரக்கமுள்ளவர் இனிமையானவர்
இன்றும் என்றும் மாறாமல் அன்பு செய்பவர்
நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2

2. காடு கழனி வயலையெல்லாம் விளையச் செய்பவர்
நாடு வீடு போற்ற நம்மை மகிழச் செய்பவர் - 2
ஏழை சனம் காக்க இந்த பூமி வந்தவர் - 2
வாழையடி வாழையாக வாழவைப்பவர் - இரக்கமுள்ளவர்
990. நன்றி நன்றி என்று சொல்லும் போது நெஞ்சம்
நன்றி நன்றி என்று சொல்லும் போது நெஞ்சம் - குன்றில்
துள்ளி விழும் அருவிபோல் மகிழும் - 2
இறையே நான் உந்தன் அன்பு அணைப்பினில்
குழந்தைபோல் மகிழ்ந்தேன்
சிறையாய் எனைச் சூழும் கொடும் சுயநலம்
பகைமையை வென்றேன்
இசுரயேல் செங்கடலைக் கடந்ததைப் போன்ற நிகழ்வை
இதயத்தில் உணர்ந்தேன் அன்பே
மகிழ்ந்து சொல்வேன் நன்றி மகனா(ளா)ய் வாழ்வேன் நன்றி

1. வாழ்வின் முடிவை உம்மிடம் அளித்தேன் நம்பிக்கை வைத்து
வாழும் போது துன்பம் கண்டேன் விழுந்தேன் திகைத்து - 2
வீழ்ந்த போது கரத்தில் ஏந்தி காத்தவர் நீரே
சாவை வென்ற சக்தியே உந்தன்
ஆற்றலை அளித்தாய் போற்றி - 3

2. உடைந்த யாழாய் நொறுங்கிக் கிடந்தேன் தன்னலம் கொண்டு
உயர்ந்த இலக்கை மறந்து வாழ்ந்தேன் இருளின் முன்பு - 2
உடைந்த என்னை இணைத்து ஒன்றாய்ச் சேர்த்தவர் நீரே
உந்தன் வாழ்வே இயேசுவே எந்தன்
நோக்கம் என்றாய் போற்றி - 3
991. நன்றி நன்றி என்றும் நன்றி இயேசுவே
நன்றி நன்றி என்றும் நன்றி இயேசுவே - நிதம்
நன்றி கூறி நாளும் உம்மைப் போற்றுவேன் - 2
என் வாழ்வின் ஒளியாக என்னில் வந்தவரே
என் உயிரின் உயிராக என்னில் கலந்தவரே - தினம்
நன்றி கூறி எந்தன் உள்ளம் பாடுதே

1. வார்த்தையானவரே வல்லமை தந்தவரே
உறவாய் வந்தவரே திரு உணவாய் வந்தவரே

2. அன்பைத் தந்தவரே அருளைப் பொழிபவரே
நோய்கள் தீர்ப்பவரே மன நிம்மதி தருபவரே

3. ஒளியாய் வந்தவரே வழியாய் நின்றவரே
வரங்கள் பொழிபவரே நிறை வாழ்வைத் தருபவரே
992. நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடி
நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடி
மீட்பரே உம்மைப் புகழ்வேன்
இதுவரை செய்த நலன்களுக்காக
எந்நாளும் நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி தேவா நன்றி நன்றி இறைவா

1. காக்கும் தெய்வம் என்னோடிருந்தீர்
கவலை துன்பங்கள் மாறச் செய்தீர் - 2
அஞ்சாதே என்று அருகிலிருந்தீர் - 2
தடைகளைத் தாண்டிடச் செய்திடுவீர்

2. நெருக்கடி வேளையில் மன்றாடினேன்
தேவா என் மன்றாட்டை நீர் கேட்டீர்
தீமைகள் என்னைச் சூழ்ந்த போதும் - 2
விடுதலை எனக்குத் தந்தீர் ஐயா
993.நன்றிநிறை நெஞ்சமுடன் உன்னைப் புகழ்ந்தேன்
நன்றிநிறை நெஞ்சமுடன் உன்னைப் புகழ்ந்தேன்
நன்றி இறைவா நன்றி இறைவா
நன்மைகளை உன்னிடமே கண்டு உவந்தேன்
நன்றி இறைவா என் அன்புத் தலைவா - 2

1. என்ன தவம் என்னிடத்தில் கண்டு மகிழ்ந்தாய்
உன் இன்னருளே என் எளிய நெஞ்சில் பொழிந்தாய் - 2
மன்னவனே உன் இனிமை நான் சுவைத்தேன் - 2 - இன்று
என்னகத்தில் விண்ணகத்தை நான் உணர்ந்தேன்

2. வண்ண வண்ணப் பூக்கள் உன்னை நம்பி மலரும்
விண்ணில் வட்டமிடும் கோள்கள் உன்னைப் பற்றி ஒளிரும்-2
உன்னை நம்பி வாழுகின்ற யாவருமே - 2 கொள்ளும்
எல்லையில்லா இன்பம் கண்டு நான் தெளிந்தேன்
994.நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம்
நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம்
நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப்பண் பாடிடுவோம்-2
நன்றி நன்றி எம் இயேசுவே உமக்கு நன்றி
நன்றி நன்றி எம் தேவனே உமக்கு நன்றி - 2

1. அன்னை தந்தை அன்பினைத் தந்தாய்
அளவில்லாத ஆற்றல் தந்தாய் - 2
இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2
இதயத்தில் அமைதி தந்தாய் - நன்றி நன்றி

2. இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய்
இனிய நண்பனாய்த் துணையாய் நின்றாய் - 2
புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2
புதிய மனிதனாய் மாறச் செய்தாய் - நன்றி நன்றி
995.நன்றி பாடுவேன் இனிய இயேசுவே
நன்றி பாடுவேன் இனிய இயேசுவே
வாழும் நாளெல்லாம் போற்றிப் பாடுவேன்
என்னைத் தேடியே வந்த தெய்வமே
என்றும் உன்னையே வாழ்த்திப் பாடுவேன் - 2
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4

1. உயிரைத் தந்ததால் உருவம் தந்ததால்
உறவைத் தருவதால் நன்றி இயேசுவே
வாழ்வைத் தந்ததால் வளமும் தந்ததால்
வாழ வைப்பதால் நன்றி இயேசுவே
உந்தன் அன்பை என்றும் பெறுவதால்
உன்னில் என்னை இணையச் செய்வதால் - 2
உந்தன் பாதையில் எந்தன் பாதங்கள்
வழிநடக்க ஆசி தந்ததால் நன்றி நன்றி நன்றி இயேசுவே

2. தாயும் ஆனதால் தந்தை ஆனதால்
நண்பன் ஆனதால் நன்றி இயேசுவே
எந்த நாளிலும் என்னில் வாழ்ந்திடும்
சொந்தமானதால் நன்றி இயேசுவே
மன்னிக்கின்ற மனத்தைத் தந்ததால்
மனிதநேய சிந்தை தந்ததால் - 2
விடியல் நோக்கியே எந்தன் வாழ்வையே
அர்ப்பணிக்க ஆசி தந்ததால் நன்றி நன்றி நன்றி இயேசுவே
996.நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
இறைவனே உமைப்புகழ்ந்து நன்றி பாடுவோம்

1. தந்தையாக தாயுமாக எம்மைத் தாங்கினாய் - நல்ல
தோழனாக சோகம் போக்கும் சொந்தமாக்கினாய்
உறவு தந்து உறுதிதந்து எம்மைத் தாங்கினாய் - எங்கள்
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய் - 2

2. பாலையாகக் காய்ந்த வாழ்வைச் சோலையாக்கினாய்
நாளும் பாதை தந்து பயணம் செய்ய தீபமாகினாய்
வளமைதந்து வளமை சேர்க்க வாழச் செய்கிறாய் - இங்கு
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்

997.நன்றி பொங்கும் விழிகள் நனைந்தேன்
நன்றி பொங்கும் விழிகள் நனைந்தேன் - பெற்ற
நன்மைகளை நெஞ்சம் நினைத்தே
ஒன்றிரண்டாய் எண்ணி முடிக்க - மொழி
ஒன்றுமில்லை சொல்லில் வடிக்க

1. உந்தன் ஆவி என்னில் பதித்தாய் - இந்தப்
பூமியிலோர் வாழ்க்கை கொடுத்தாய்
எந்தன் பெயரைச் சொல்லி அழைத்தாய் - 2
பெரும் மேன்மையுள்ள பேற்றை அளித்தாய்

2. அன்னை தந்தை அன்பைக் கொடுத்தாய்
நட்பு சுற்றம் என்றும் உறவுகள் தந்தாய்
நன்மைகளால் நாளும் வளர - 2
மறை உண்மைகளை என்னில் விதைத்தாய்
998. நன்றியால் துதி பாடு நம் இயேசுவை
நன்றியால் துதி பாடு நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு - 2
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மை உள்ளவர் - 2

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார் - 2
கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்துவிழும் - 2

2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு - 2
பாடிடுவோம் துதித்திடுவோம் பாதைகள் கிடைத்துவிடும் - 2
999.நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே
நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே
நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே

1. ஆழ்கடலில் அலைநடுவில் என் துணை நீரே
ஆதரவாய் வந்து கரை சேர்ப்பதும் நீரே
என்னை என்றும் வழிநடத்தும் ஆயனும் நீரே
புல்வெளிக்குக் கூட்டிச் சேர்க்கும் மேய்ப்பனும் நீரே
உன்னை விட்டுப் பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேளையில்
தேடிவந்து தேவன் என்னைச் சொந்தமாக்கினாய்
நன்மை யாவும் தந்த எந்தன் அன்பு தெய்வமே
நன்றி நன்றி என்று கோடி சிந்து பாடுவேன்

2. துன்பம் என்னைச் சூழ்ந்தபோது துணையென நின்றாய்
அன்னை போல அருகிருந்து அடைக்கலம் தந்தாய்
அன்பு செய்து வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
பண்பில் என்றும் வாழ எனக்கு அறிவுரை தந்தாய்
அன்பினாலே உண்ண எனக்கு உணவினைத் தந்தாய்
என்றும் உந்தன் கண்மணி போல் காத்திருக்கின்றாய்
வான்கொடை ஏழு தந்த இயேசு தேவனே
வாழி உந்தன் நாமம் என்று நன்றி சொல்லுவேன்
1000.நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்
நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்
நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்
இயேசுவே உன் நௌவாக எந்நாளும் வாழுவேன்

1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்ல
பொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல - 2
உன் மனசா என் மனசு ஆகணும்
உன் வாழ்வா என் வாழ்வு மாறணும்
இயேசுவே இயேசுவே அதனால உன் கனவு பலிக்கணும்

2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்ன
பசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன - 2
உன்னப் போல நானும் இங்கு ஆகணும்
அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும் - இயேசுவே
1001.நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4

1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் - 2 - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2

2. மலருக்குப் பதிலாய்க் களையெங்கும் தோன்றி
மனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - 2 உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2
1002. நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள்
நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள்
நானிலமெங்கும் நான் பாட
நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண் போல
விண்ணில் முளைத்திடும் மின்மினியாய்
மண்ணில் முளைத்திடும் நல்விதைகள்
மின்னித் தெறித்திடும் மின்னல்களாய்
கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள்
நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன்
நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்

1. தோள் அழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க
தோழமையில் பூமியிலே புது உலகம் படைக்க - 2
நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் விதைத்தது
கண்ணுக்குள்ளே நெருப்புத் தணலை யார் வைத்தது - 2
அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும்
எல்லாமே நீ தந்தது - 2

2. எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர் தந்தாய்
எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் - 2
ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது
இறையரசின் நினைவுகளும் யார் தந்தது - 2
புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள்
எல்லாமே நீ தந்தது - 2
1003.பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
பாட்டுப்பாடி ஆண்டவர்க்கு நன்றி கூறுங்கள்
காக்கும் நல்ல தேவன் அவர் இரக்கமுள்ளவர்
நல்லவரும் வல்லவருமாய் என்றும் அவர் இருப்பதினாலே

1. செடியைப் பிரிந்த கொடியைப் போல நாமெல்லாம்
மடிந்து அழிந்து போயிடாமல் காத்திடுவாரே - 2
கடலில் தவித்த பேதுருவைப் போல நாமும் - 2
துன்பம் வந்தால் துயரம் வந்தால் இயேசுவை அழைப்போம்
நிரந்தரமாய் சந்தோசம் தந்திடுவாரே

2. வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் தானே
என்று சொல்லி அவர் பாதம் பணிந்திடுவோம் நாம் - 2
சுமை சுமந்து சோர்ந்திருப்போர் விரைந்து வாருங்கள் - 2
என்று சொன்ன இயேசுவை நாம் அணுகிச் செல்வோம்
சுகம் தந்து சமாதானம் தந்திடுவாரே
1004.பாடிடுவேன் போற்றிடுவேன்
பாடிடுவேன் போற்றிடுவேன்
பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்
பாவி எந்தன் பெயர் சொல்லி அன்புடனே எனை அழைத்து
ஆதரவாய் என்னை நடத்திடும் உன் புகழ்

1. நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம் நீங்காத உன் நினைவே
ஆண்டவரே என்இயேசுவே ஆளுகின்றாய் என்இதயத்தையே - 2
அச்சமில்லை ஆ அதிர்ச்சி இல்லை ஆ - 2
அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான்

2. இலையுதிர்ந்த மரத்தைப் போல் நான் தனியே வாடினாலும்
நிலைகுலைய விடமாட்டீர் எனதருகில் இருக்கின்றீர் - அச்சமில்லை
1005.பாடுங்கள் ஆண்டவர்க்குப்
பாடுங்கள் ஆண்டவர்க்குப்
புதியதோர் பாடல் பாடுங்கள் அல்லேலூயா - 3

1. ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
மாண்புயர் வான் மண்டலத்தில் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

2. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
வீணையுடன் யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

3. முரசொலித்து நடனம் செய்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
நரம்பிசைத்து குழலூதி அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

4. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
கைத்தாள ஒலி முழங்க அவரைப் புகழ்ந்து பாடுங்கள்
1006.போற்றிப் புகழ்ந்திடுவேன் காத்திடும் இறைவனையே
போற்றிப் புகழ்ந்திடுவேன் காத்திடும் இறைவனையே
வாழ்த்தி மகிழ்ந்திடுவேன் வரங்களின் தேவனையே
நன்றி நன்றி நன்றி நன்றி

1. உலகைப் படைத்தாய் உயிரைத் தந்தாய்
உறவின் வழியாய் உனதருள் பொழிந்தாய்
அறிவைத் தந்தாய் ஆற்றல் தந்தாய்
உண்மை வழியில் வாழச் செய்தாய்
சுமைகள் ஏற்றாய் ஆறுதல் தந்தாய்
வீழ்ந்த போதும் தோளில் சுமந்தாய்
துன்பமோ துயரமோ என்ன செய்யும்
உனதருள் இருந்தால் நன்றி நன்றி

2. உந்தன் சிறகில் மறைத்துக் கொண்டீர்
உரிமை மகனாய் மேன்மை தந்தீர்
உண்மை அன்பில் மகிழச் செய்தீர்
எந்தன் மனத்தில் மாற்றம் தந்தீர்
பாதை மாறும் பொழுதினில் எல்லாம்
பரமன் உந்தன் ஒளியினைத் தந்தீர்
வாழ்ந்திடும் நாளெல்லாம் வல்ல தேவன்
உமதடி பணிவேன் நன்றி நன்றி
1007.போற்றிப் போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
போற்றிப் போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப் பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே - என்னைக்
கண் நோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் - 2
அந்த மீட்பரிலே மகிழ்ந்துப் பாடுதே பாடுதே

1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய்க் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் - 2
தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே - 2
தலைவனவர் திருநாமம் புனிதமாமே - 2

2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் - 2
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் - 2
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் - 2
1008.மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராசன் நம் சொந்தமாகினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - 2

1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
தூரம் போயினும் கண்டுகொண்டார் - 2
தமது சீவனை எனக்கும் அளித்து
சீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - ஆ ஆனந்தமே

2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் - 2
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும்வரை காத்துக்கொள்வேன் - ஆ ஆனந்தமே
1009.மலர் சொல்லும் நன்றி தேனாகுமே
மலர் சொல்லும் நன்றி தேனாகுமே
வான் சொல்லும் நன்றி மழையாகுமே
நிலம் சொல்லும் நன்றி பயிராகுமே
நீர் சொல்லும் நன்றி வளமாகுமே
நீ சொல்லும் நன்றி என்ன - நெஞ்சே
நீ சொல்லும் நன்றி என்ன

1. ஆண்டவர் வாழும் ஆலயமானேன்
அன்பென்னும் தீபம் ஏற்றி வைப்பேன்
யான் என்னதென்னும் ஆணவம் வெல்வேன்
யாவர்க்கும் நற்செய்தி சொல்லிடுவேன் - நீ சொல்லும்

2. மரம் சொல்லும் நன்றி நிழலாகுமே
மணி சொல்லும் நன்றி ஒலியாகுமே
சுரம் சொல்லும் நன்றி உழைப்பாகுமே
கடல் சொல்லும் நன்றி அலையாகும் - நீ சொல்லும்
1010.மீட்புக்காக நன்றி கூறிடுவேன்
மீட்புக்காக நன்றி கூறிடுவேன்
ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன் - 2

1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நான் என்ன கைம்மாறு செய்வேனோ - 2
நான் போற்றிடுவேன் ஆ... பாடிடுவேன் ஆ...
புகழ்ந்திடுவேன் ஆ... - 2

2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது
புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன் - 2 நான்

3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார்
அவரே எனக்கு மீட்பானார் - 2 நான்
1011.வானம் போன்று நன்மை செய்த இறைவா
வானம் போன்று நன்மை செய்த இறைவா
வாழ்வை நாளும் நடத்தி எம்மைக் காத்தாய் - 2
அருவி நீரைப் போல உள்ளம் துள்ளிப்பாடும் - 2
இதய நன்றி கோடி கோடி இறைவா
நீ ஆட்கொண்டு உன் விருப்பம் நிறைவேற்று - 2
வானம் போன்று நன்மை செய்த இறைவா

1. ஒவ்வொரு நாளும் நான் வாழ்ந்த வாழ்வு
உன் உன்னதமான வல்ல செயலின் கரங்கள்
சந்தித்த நண்பரெல்லாம் சாதித்த செயல்களெல்லாம்
அன்பே உன் இரக்கத்தின் வரங்கள்
இதை எண்ணும் போது இதயம் நன்றியினால் மின்னும் - 2
எப்படித்தான் உனக்கு நன்றி சொல்வேன்
என்னை முழுவதும் தந்து உனக்காய் வாழ்வேன் - 2

2. இப்புவிதன்னில் வாழும் மாந்தர் வாழ
எத்துணை அன்பை என்னுள் நீயும் பொழிந்தாய்
நம்பிக்கை இழந்தவர்க்கு வெம்பிச் சோர்ந்த இளைஞர்கட்கு
நம்பிக்கை விளக்காக வாழ்வேன் - 2
உனை ஏற்று வாழும் மனிதர் ஏற்றம் காணச் செய்வேன் - 2
எப்படித்தான் உனக்கு நன்றி சொல்வேன்
என்னை முழுவதும் தந்து உனக்காய் வாழ்வேன் - 2
1012.வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே
வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே
துள்ளி வருகின்ற சந்தங்களே
உள்ளங்கனிந்த என் நன்றியினைச் சொல்லிப் பாடுங்களே - 2
எந்தன் தேவனுக்கே

1. கருவினில் என்னை அறிந்தவன்
கண்மணி போல வளர்த்தவன் - 2
அறுவடை மிகுந்த பணியிலே
அடியேன் என்னை அழைத்தவன் - 2
அருகில் இருந்து ஆற்றல் பொழிந்து
நிறையானந்தம் தருபவன் - 2
அந்த நல்ல தேவனுக்கே என் நன்றியைக் கூறுங்களே - 2

2. கொடுப்பதில் இன்பம் வைத்தவன்
தன்னையே உண்ணக் கொடுத்தவன் - 2
படிப்பினைகள் சொல்லியவன் சொன்னபடியே வாழ்ந்தவன் - 2
இடுக்கண்ணுற்று வீழும் போது
எனக்காய் உயிர் கொடுத்தவன் - 2 அந்த நல்ல