503. அகிலம்படைத்தஆண்டவனே அனைத்தையும்தருகின்றோம்
அகிலம்படைத்தஆண்டவனே அனைத்தையும்தருகின்றோம்
ஆற்றல் நிறைந்த அகிலவனே அனைத்தையும் தருகின்றோம் - 2
தருவோம் தருவோம் தந்து கொண்டிருப்போம்
இதயத்தின் துடிப்பு இருக்கும் வரை - 2
1. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் விளைச்சலைத் தருகின்றோம்
பாலைநிலம்போல்எங்கள்மனத்தின் வறட்சியைத் தருகின்றோம்- 2
நிறைவாய்க் கொடுத்தால் நிறைவாய்க் கிடைக்கும்
என்பதை நம்புகிறோம் - 2
2. கதிரவன் ஒளிபோல் கடலின் வளம்போல்
நிறைகளைத் தருகின்றோம்
இருள்போல் எங்கள் இதயத்தில் இருக்கும்
குறைகளைத் தருகின்றோம் - 2
நல்லது கொடுத்தால் நல்லது கிடைக்கும் என்பதை நம்புகிறோம் - 2

504. அடியோர் யாம் தரும் காணிக்கையை
அடியோர் யாம் தரும் காணிக்கையை
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே - 2
1. பாவியென்றெம்மைப் பாராமல் - எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் - 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
2. மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் - 2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே - 2
1. பாவியென்றெம்மைப் பாராமல் - எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் - 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
2. மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் - 2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்
505. அப்பம் தந்தோம் அன்பைத் தந்தோம்
அப்பம் தந்தோம் அன்பைத் தந்தோம்
போதாதென்று இன்று எம்மைத் தந்தோம்
தேவன் மகன் காணிக்கையாய்
எம்மைத் தந்தோம் அவர் தன்னைத் தந்தார் - 2
1. காலமெல்லாம் ஈட்டியதைக் காணிக்கை யாம் தந்தோம் - 2
பொன்னுலகம் கேட்கவில்லை மண்ணுலகம் கேட்கவில்லை
நீ நெஞ்சில் அமர்ந்தால் துன்பமில்லை
2. இறைமகனின் புன்சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் - 2
தீபங்களின் வெளிச்சத்திலே கீர்த்தி தந்தார் புவனத்திலே
வாழ்வின் ஒளியாய் வந்தார் இங்கே

506. அர்ப்பணப்பூ நானாக உன்னிடம் வந்தேன் - என்னை
அர்ப்பணப்பூ நானாக உன்னிடம் வந்தேன் - என்னை
அர்ச்சனையாய்க் கையளிக்க உன் கரம் தந்தேன் - 2
வாழ்க்கையெனும் நெடியதொரு பயணம் யாவுமே - உந்தன்
வாழ்வு தரும் வார்த்தைகளால் வழிநடத்தவே பலி தருகின்றேன்
1. கவலைகளால் உருக்குலைந்த உலகம் யாவுமே - உந்தன்
கருணையினால் உருக்கொடுக்கும் கருவியாக்குமே
காரிருளின் நடுவிலும் கலங்கரை விளக்காய் - 2 உந்தன்
பேரருளின் பெருந்துணையில் கையளிக்க நான் பலி தருகின்றேன்
2. நாயகனே உன்னை நம்பி நானிலத்தில் நான் - இன்று
அடியெடுத்து வைக்கின்றேன் வழிநடத்துமே
இலட்சியத்தின் பாதைகளில் இடர்கள் தாண்டி நான் - உந்தன்
இறையரசைப் பரப்புகின்ற உறுதி வேண்டி நான் பலி தருகின்றேன்

507. அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை - 2
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் - 2
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த
சோதியில் நிறைவு கொள்வேன் - 2 ஆ
1. கோதுமை மணியாய் மடிந்து - என்னை
வெண்ணிற அப்பமாய்த் தந்தேன் - 2
என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னைக் கனிவுடன் ஏற்பாயே ஆ
2. விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் - 2
மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும்
கதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன் ஆ

508.அர்ப்பணமாக்கிடுவேன் என்னை அர்ப்பணமாக்கிடுவேன்
அர்ப்பணமாக்கிடுவேன் என்னை அர்ப்பணமாக்கிடுவேன்
என் முழுமை இதயத்தோடு என் உணர்வைத் தருகின்றேன்
என் வறுமை வாழ்க்கையோடு - என்
வெறுமை தருகின்றேன்
இதை ஏற்று எனது வாழ்வை மாற்றுவாய் - இறைவா
1. ஒரு துளி காணிக்கையை ஒரு கடலாய்
உன் இரு கைகளிலே எற்கின்றாய்
மனிதனின் கவலைகளைப் பனித்துளியாய்
உன் இரு கண்களிலே துடைக்கின்றாய்
ஆபேலின் காணிக்கையை விரும்பினாய்
எனதுடம்பின் ஒரு துளியை
இங்கு ஏற்றுக்கொள்eவேண்டியே -அர்ப்பணமாகி....
2. நடக்கின்ற காலங்களின் பூங்கொடியாய்
உன் திருமேனியிலே வளர்க்கின்றாய்
வருகின்ற காலங்களை வளர் நிலமாய்
இரு கரம் உயர்த்தி நீ படைக்கின்றாய்
கைம்பெண்ணின் காணிக்கையில் உருகினாய் - உன்
புது மழைபோல் மனம் திறந்து
இந்தப் பாவி என்னை ஏற்கவே -அர்ப்பணமாகி....

509. அர்ப்பணமாகிடும் நேரமிது
அர்ப்பணமாகிடும் நேரமிது
அர்ப்பணிக்கின்றோம் இறைவா - 3
1. இறையாய்க் குருவாய் பலிப்பொருளாய்
இயங்கிடும் திருப்பலித் தனிமுதலே - 2
அரும்பலி தனைத்தரும் எங்களையும் - 2
அர்ப்பணம் தந்தோம் ஏற்றிடுவாய்
2. திருப்பலிச் சுடராய் ஒளிர்பவனே
திரித்துவ இணைப்பாய்க் கலந்தவனே - 2
திருமறைப் பயிர் வளர் பலிப்பொருளாய் - 2
திகழ்ந்திடும் தியாகப் பலி ஏற்பாய்
அர்ப்பணிக்கின்றோம் இறைவா - 3
1. இறையாய்க் குருவாய் பலிப்பொருளாய்
இயங்கிடும் திருப்பலித் தனிமுதலே - 2
அரும்பலி தனைத்தரும் எங்களையும் - 2
அர்ப்பணம் தந்தோம் ஏற்றிடுவாய்
2. திருப்பலிச் சுடராய் ஒளிர்பவனே
திரித்துவ இணைப்பாய்க் கலந்தவனே - 2
திருமறைப் பயிர் வளர் பலிப்பொருளாய் - 2
திகழ்ந்திடும் தியாகப் பலி ஏற்பாய்
510. அர்ப்பணமாகினேன் உன் அன்பிலே
அர்ப்பணமாகினேன் உன் அன்பிலே
அர்ப்பணித்தேன் என்னை அருளினிலே - 2
ஏற்றிடுவாய் என் இயல்பினிலே மாற்றிடுவாய் உன் உறவினிலே
1. தாய் தந்தை அன்பு உயர்வானது - உந்தன்
பேரன்பு அதனிலும் மேலானது - 2
பொறிகளில் வார்த்திட இயலாது - எந்தன்
விழிகளில் கவலை ஏன் துளிர்க்கின்றது - 2
2. எத்தனை ஆயிரம் நன்மைகளால் - ஐயா
ஏழை என் வாழ்வினை அலங்கரித்தாய் - 2
என்னுடல் பொருள் ஆவி உவந்தளித்தே - எந்தன்
இன்னுயிர் உள்ளவரை உமைப் புகழ்வேன் - 2

511. அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே - உன்
அர்ப்பணித்தேன் என்னையே இயேசுவே - உன்
அன்புப் பலிபீடத்திலே தியாகமாகுவேன் - 2
உன் பாதையிலே பயணமாகுவேன் - 2
உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்
1. உள்ளங்கள் உயிர்த்து எழ உம்மோடு பாடுபட
என்னை எந்நாளும் அளிக்கின்றேன் - 2
இதய உணர்வுகள் இன்ப இராகங்கள் - 2
எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன்
2. வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில்
வளர்ந்தே வலுவூட்ட விழைகின்றேன் - 2
வாழ்க்கைப் பலியிலே என்னையே தந்து - 2
தளர்ச்சி நீக்கி வளர்ச்சிக்கான வழியுமாகுவேன்

512. அள்ளித் தருகின்றேன் அன்பு தெய்வமே
அள்ளித் தருகின்றேன் அன்பு தெய்வமே
பிள்ளை உனக்கு நான் உரிமையாகவே - 2
என்னில் வாழ்ந்திடும் இயேசு நாதனே - 2
உன்னில் கலந்து நான் என்னையே அளிக்கின்றேன்
1. அழைப்பின் குரலைக் கேட்டு வந்தேன்
பணியை வாழ்வாய் மாற்றியே தந்தேன் - 2
போராடிடும் ஏழைகளின் - 2
குரலாகவே நானாகுவேன்
2. உன்னை நம்பியே நோக்கும் விழிகள்
உதயம் காணத் துடித்திடும் மனங்கள் - 2
ஏக்கங்களே நனவாகிட - 2
பலியாகுவேன் உனில் வாழுவேன்

513. அன்பிற்கே எம்மை அர்ப்பணித்தோம்
அன்பிற்கே எம்மை அர்ப்பணித்தோம்
அனைத்தும் பகிர்ந்தே வாழுவோம் - 2
இதுவே எம் காணிக்கை - 2
1. எமது காணிக்கை உமது ஆவியால் புனிதம் ஆகவேண்டும்
இதனால் அகிலமே மீட்பின் பாதையைஇன்றே காணவேண்டும் - 2
எங்கள் உழைப்பின் பயன்களும் நிலத்தின் கொடைகளும்
உமக்குப் புகழ் தர உலகம் உயர்ந்திட எம்மையே பலி தந்தோம்
2. அன்புப் புரட்சியே வாழ்வு மலர்ச்சியாய்
மாற்றும் பலியில் இணைந்தோம்
நீதி அமைதியும் மனிதநேயமும்
பலியின் பொருளாய் ஏற்றோம் - 2
இந்த ஆழ்ந்த உணர்வினில் நாளும் இணைந்திட
தாழ்வு நீங்கிட வாழ்வு ஓங்கிட எம்மையே பலி தந்தோம்

514. அன்பின் இறைவா எந்தன் தலைவா
அன்பின் இறைவா எந்தன் தலைவா
என்னை அளிக்கின்றேன் என்றும் உந்தன் அன்பில் வாழ
பாதம் பணிகின்றேன் நான் பாதம் பணிகின்றேன்
1. மலரில் வண்டு மயங்கி நின்று
தேனை உண்டு மகிழந்ததோ - 2 அந்த
மலரும் மயங்கும் மன்னன் உந்தன்
தியாகம் கண்டு வியந்ததோ - 2
நானும் இன்று நாளும்உந்தன் பலியாய் மாற விழைகின்றேன்
2. உலகம் யாவும் இறைவன் உந்தன்
இல்லமாக விளங்குமோ - 2 எம்
உள்ளமே உம் இல்லமாயின் கள்ளம் அதிலே கலக்குமோ - 2
நாளும் என்னை இறைவா உந்தன் இல்லமாய் நீ எழுப்புவாய்

515. அன்பின் இறைவா படைப்பின் தலைவா
அன்பின் இறைவா படைப்பின் தலைவா
அடியோர் போற்ற வந்தோம்
இயேசுவோடு எம்மையும் இணைத்து
பலியாய்த் தரவந்தோம்
1. அனைத்துப் பொருளும் அடியோர் எமக்காய்
அளித்த அருட்பெருக்கே
நிலத்தின் விளைவும் மனித உழைப்பும் நிறைந்த அப்பமிதோ
வாழ்வை அளிக்கும் அப்பமாய் மாற
வரத்தை வேண்டி நின்றோம்
2. அனைத்துப் பொருளும் அடியோர் எமக்காய்
அளித்த அருட்பெருக்கே
திராட்சைக் கொடியும் மனித உழைப்பும் திரண்ட இரசம் இதோ
ஆன்ம வாழ்வின் பானமாய் மாற
அருளை வேண்டி நின்றோம்

516. அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்
புண்படும் மனத்தின் துயர் தணிப்பாய் - 2 எமைப்
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்
1. வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள்
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 எமைத்
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்
2. படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப்
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - 2 உனில்
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க

517. அன்பு எங்கள் காணிக்கை அப்ப ரச வடிவிலே
அன்பு எங்கள் காணிக்கை அப்ப ரச வடிவிலே - 2
அகநிறை மனதுடன் தருகின்றோம்
அன்புறு தந்தையே ஏற்றிடுவாய் -2
என்னென்ன தந்தாலும் நிறைவில்லையே
எம் தேவன் நீ தந்த கொடைகளிலே
எம் வாழ்வில் உயர் செல்வம்
எம் அன்புதான் -அதை
எம் பாச உணர்வோடு பலியாக்கினோம்
1. அன்பெனும் ஒரு சின்ன வார்த்தையிலே
அகிலத்தின் உறவெல்லாம் அசைவாகுது
அன்புக்குச் சான்றாகும் பலிதன்னிலே -எம்
அன்றாட நிகழ்வெல்லாம் பலியாக்கினோம்
அகநிறை மனதுடன் தருகின்றோம்
அன்புறு தந்தையே ஏற்றிடுவாய் -2
என்னென்ன தந்தாலும் நிறைவில்லையே
எம் தேவன் நீ தந்த கொடைகளிலே
எம் வாழ்வில் உயர் செல்வம்
எம் அன்புதான் -அதை
எம் பாச உணர்வோடு பலியாக்கினோம்
1. அன்பெனும் ஒரு சின்ன வார்த்தையிலே
அகிலத்தின் உறவெல்லாம் அசைவாகுது
அன்புக்குச் சான்றாகும் பலிதன்னிலே -எம்
அன்றாட நிகழ்வெல்லாம் பலியாக்கினோம்
518. அன்புக்கு ஈடாகும் ஏழையின் காணிக்கை எதுவோ
அன்புக்கு ஈடாகும் ஏழையின் காணிக்கை எதுவோ
இங்கே பலர்வாழ பலியான தேவனுக்கு ஏற்றப் பொருள் எதுவோ
பிறர்க்கென தம்மைத் தரும் இதயங்களே
வளர்பிறை என எழும் மனிதர்களே
நிசமான காணிக்கை இதுதானே திருவடிதனில்
1. ஆபேலின்காணிக்கைபெரிதுஅல்லஉயர்ந்திட்டஉள்ளம்தான்சிறப்பாகும்
ஆயனின் காணிக்கை சிறிது அல்ல தாழ்ந்திட்ட சிறுமனமே இழிவாகும்
விளைந்திட்ட நிறைபலனை எடுத்து வந்தோம் இறைவா - 3 - 2
தளர்ந்திட்ட வாழ்வினையே தழைத்தோங்க வரம் அருள்வாய்
2. உடைந்திட்ட உறவுகளை உருப்பெறச் செய்ய
உவப்புடனே தருகின்றோம் எம் சிறுவாழ்வை
சாய்ந்திட்ட மனிதத்தை நிமிர்ந்திடச் செய்ய
சரிநிகர் உலகிற்காய் எமைப் பயன்படுத்தும்
காண்கின்ற சமுதாயம் வாழ்வை வழங்க இறைவா - 3 - 2
அர்ப்பணிக்கும் உள்ளமதை அன்போடு ஏற்றருள்வாய்

519. அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே - 2
1. பொன்னான வாழ்வைப் புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ - 2
புதிரான வாழ்வே எதிரானதாலே - 2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் - 2
திரியாகக் கருகி மெழுகாக உருகி - 2
பலியாக வைத்தோம் ஆண்டவனே - புது
ஒளியாக மாற்றும் தூயவனே
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே - 2
1. பொன்னான வாழ்வைப் புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ - 2
புதிரான வாழ்வே எதிரானதாலே - 2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே
2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் - 2
திரியாகக் கருகி மெழுகாக உருகி - 2
பலியாக வைத்தோம் ஆண்டவனே - புது
ஒளியாக மாற்றும் தூயவனே
520. ஆகட்டும் இறைவா ஆகட்டுமே
ஆகட்டும் இறைவா ஆகட்டுமே
உம் சித்தம் என் வாழ்வில் ஆகட்டுமே - 2
தருகின்றேன் தருகின்றேன்
என்னையே பலியாய்த் தருகின்றேன் - 2
1. கருவில் என்னை அறிந்தவா - உம்
கையில் என்னை உம் சாயலிலே உண்டாக்கிய என் இறைவா
அறிவும் திறனும் நிறைந்தவா - உம்மைப்
பணிந்த வாழ்வில் நிறைந்தவா - உம்மைப்
பணிந்த வாழ்வில் தாழ்வுண்டா
2. உரிமை வாழ்வை நான் பெற அருமை மகனைப் பலி தந்தீர்
உவமை இல்லா உன் பேரன்பை அப்பா அடியேன் பணிகின்றேன்
கருணையே என் இறைவனே - உனைச்
சரணடைந்தேன் ஆட்கொள்ளும்

521. இசையிலே நாதம் கேட்டோம் அதிலே
இசையிலே நாதம் கேட்டோம் அதிலே
இன்னருள் வடிவம் கண்டோமே
எழுந்தோம் இறைகுல உரிமையிலே இறைவா ஆ
எழுந்தோம் இறைகுல உரிமையிலே
தொழுதோம் அவரைப் பலியாக
1. படைத்தாய்ப் படைப்பை எமக்காக
படைத்தோம் அதனை உமக்காக
கொடுத்தாய் மகனை எமக்காக தேவா - 2 ஆ
கொடுத்தோம் அவரைப் பலியாக
2. உள்ளம் உள்ளது எம்மிடமே
உரிமையே உண்டு உம்மிடமே
நாங்கள் போவது எவ்விடமே நாதா - 2 ஆ
நாளுமே பணிவோம் உம்மிடமே
இன்னருள் வடிவம் கண்டோமே
எழுந்தோம் இறைகுல உரிமையிலே இறைவா ஆ
எழுந்தோம் இறைகுல உரிமையிலே
தொழுதோம் அவரைப் பலியாக
1. படைத்தாய்ப் படைப்பை எமக்காக
படைத்தோம் அதனை உமக்காக
கொடுத்தாய் மகனை எமக்காக தேவா - 2 ஆ
கொடுத்தோம் அவரைப் பலியாக
2. உள்ளம் உள்ளது எம்மிடமே
உரிமையே உண்டு உம்மிடமே
நாங்கள் போவது எவ்விடமே நாதா - 2 ஆ
நாளுமே பணிவோம் உம்மிடமே
522. இணையில்லாத தியாகப்பலி இணைந்திட வருகின்றேன்
இணையில்லாத தியாகப்பலி இணைந்திட வருகின்றேன் - 2
அதை நினைந்து நினைந்து நன்றியினால்
கனிந்திட வருகின்றேன்
இறைவா காணிக்கை தருகின்றேன்
இதய காணிக்கை தருகின்றேன்
1. குன்றினிலே ஏற்றி வைத்த
குன்றா விளக்கின் பலியினிலே - எந்தன்
தன்னலம் கொண்டு வந்தேன்
ஏற்றென்னை மாற்றாயோ இறைவா இறைவா
இதுவே நல்ல தருணம் என்று ஏங்கும் இதயம் ஏற்பாயோ
2. சிலுவைப் பலியில் உணர்வடைந்தேன்
சிகரம் நோக்கிச் செயல் துணிந்தேன்
இயேசு என்னுடன் வருவதனால்
பயமினி எனக்கில்லை இறைவா இறைவா
தந்தை கேட்கும் நன்றிப் பலி தந்து வாழ்வின் பரிசடைவேன்

523. இதய காணிக்கை இறவாத காணிக்கை
இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை - 2
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய்-2
1. மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே - 2
இறைவா உனைப் போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா - 2
2. எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோவிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே - 2
கருணா உனைப் போல் மாறாத அன்பினால்
அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா - 2

524. இதயத்தை எடுத்து வந்தேன் - இதை
இதயத்தை எடுத்து வந்தேன் - இதை
ஏற்றிடுவாய் இறைவா
உள்eதெல்லாம் உமக்காக
உன்னிடம் அர்ப்பணித்தேன் இறைவா
ஸரிகமா பாதம கரிஸா ஸத தஸரிக ரிஸ ஸத ஸா
உயிருள்ள தியாகப் பலியாக - என்
உள்eத்தை உமக்கு உவந்தளித்தேன்
உன் மனம் நின்றவை அடைந்திடவே
புதிய மனிதனாய் மாறிட இறைவா
1. அனைத்தையும் துறந்தார் ஆபிரகாம்
ஆகட்டும் என்றார் அன்னை மரியாள்
அதுபோல் என்னை அர்ப்பணிக்க
ஆவியின் அருளால் நிரப்பிட இறைவா
ஏற்றிடுவாய் இறைவா
உள்eதெல்லாம் உமக்காக
உன்னிடம் அர்ப்பணித்தேன் இறைவா
ஸரிகமா பாதம கரிஸா ஸத தஸரிக ரிஸ ஸத ஸா
உயிருள்ள தியாகப் பலியாக - என்
உள்eத்தை உமக்கு உவந்தளித்தேன்
உன் மனம் நின்றவை அடைந்திடவே
புதிய மனிதனாய் மாறிட இறைவா
1. அனைத்தையும் துறந்தார் ஆபிரகாம்
ஆகட்டும் என்றார் அன்னை மரியாள்
அதுபோல் என்னை அர்ப்பணிக்க
ஆவியின் அருளால் நிரப்பிட இறைவா
525. இதயம் இணைந்து நாங்கள் தந்தோம் இதய காணிக்கை
இதயம் இணைந்து நாங்கள் தந்தோம் இதய காணிக்கை
இதனை ஏற்று உனதாய் மாற்று உந்தன் பலியிலே
1. நான் வாழ உன்னைத் தந்தாய் நலன்களால் நீ நிறைத்தாய்
இன்று என்னை அளிக்கின்றேன் என்றுமே ஏற்றிடுவாய்
2. படைப்பில் உம்மை நீ நிறைத்தாய் பகிரவே என்னை அழைத்தாய்
உன் அன்பில் வாழத் துடிக்கின்றேன் உவப்புடன் ஏற்றிடுவாய்

526. இதயம் தர வந்தேன் அன்பை நீ தந்தாய்
இதயம் தர வந்தேன் அன்பை நீ தந்தாய் - 2
மனிதம் வாழவே மண்ணில் நீ வந்தாய் - 2
என் வாழ்வின் விடியலே வசந்தமே எனைத் தந்தேன்
1. அப்பமும் இரசமும் நான் தந்தேன்
அருளின் உருவாய் நீ வந்தாய் - 2
மண்ணின் கனிகள் நான் தந்தேன்
விண்ணின் கனியாய் நீ வந்தாய் - என் வாழ்வின்
2. உழைப்பின் பயனை நான் தந்தேன்
வலிமை எனக்கு நீ தந்தாய் - 2
எளியோர் வாழ எனைத் தந்தேன்
என்னில் தியாகம் நீ தந்தாய் - என் வாழ்வின்

527. இதயம் நிறைந்த காணிக்கை நான் என்ன தருவதோ
இதயம் நிறைந்த காணிக்கை நான் என்ன தருவதோ
இதய வேந்தன் உமக்கு ஈடாய் என்ன தருவதோ
பலிப்பொருளாய் நான் வந்தேன் பரம்பொருளே ஏற்பாய்
பாவத்தோடு நான் வந்தேன் பரிவு காட்டுவாய்
1. மணமில்லா மலரெனவே உன்பாதம் சூடினேன்
மணமுள்ள மலராக என்னை நீ மாற்றினாய்
மன்னவனின் மனங்குளிர ஏற்றது என்னவோ
மாசற்ற உள்ளமே உமக்கு என்றும் ஏற்றது
2. பயனில்லா காணிக்கைப் பொருளாக நான் வந்தேன்
பயனுள்ள காணிக்கைப் பொருளாக மாற்றினாய்
கடல் வற்றிப் போனாலும் உன் அன்பு குறையுமோ
கார் மேகம் சூழ்ந்தாலும் உன் கண்கள் மூடுமோ

528. இதயம் நிறைந்த காணிக்கை உம்பாத மலரிலே
இதயம் நிறைந்த காணிக்கை உம்பாத மலரிலே
மகிழ்வுடனே தருகின்றோம் ஏற்றிடுவாய்
1. எந்தன் வாழ்விலே வெறுமை உண்டு நிறைவு வேண்டுமே
இறைவா இதை அறிவாய் இன்று நிறைவு தாருமே - 2
உம்மிடமே என்னை முழுவதும் தந்திடுவேன் நான் - 2
எனை ஏற்று அருள் புரிவாய் எந்தன் இயேசுவே
2. எந்தன் வாழ்வில் அமைதியில்லை அமைதி வேண்டுமே
அருளே இறை ஒளியே இன்று அமைதி தாருமே - உம்மிடமே

529. இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை - 2 என்
1. பூத்துக் குலுங்கும் மலர்களும் - இங்குக்
காய்த்துக் கனிந்த கனிகளும்
ஓங்கி உயர்ந்த மரங்களும் - அதைச்
சூழ்ந்து வளர்ந்த செடிகளும்
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும்
இறைவன் தந்த கொடைகளே - 2 நினைத்தேன்
2. பறந்து திரியும் பறவைகள் - அலை
பாயும் கடல்வாழ் விலங்குகள்
காற்றும் கடலும் கார்முகில் - வான
வில்லும் நிலவும் விண்மீன்களும் - இயற்கை

530. இதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய்
இதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய்
நான் பலியின் பொருளை உணர்ந்து வாழ எனையே மாற்றிடுவாய்
1. பொன்னையோ பொருளையோ இறைவா நீ கேட்கவில்லை
தினம் என்னையே பிறர்க்கென அளிக்க வேண்டுகிறாய்
என்னலம் தவிர்த்து நான் பணிகள் செய்திடுவேன்
என்னை ஏற்றுப் பலியாக மாற்று
2. ஏழைகள் வாழ்விலே தினம் தினம் துயரமே
என்றும் அழுதிடும் விழிகளில் நிறைந்த சோகமே
துயரம் போக்க என்னைப் பலியாய்த் தந்திடுவேன்

531. இதுவரைக்கும் தந்ததுபோல் அல்லாமலே
இதுவரைக்கும் தந்ததுபோல் அல்லாமலே
புதியதாக்கி என்னையே உமக்குத் தருகின்றேன்
பொன்னைத் தருவதால் பொருளைத் தருவதால்
எதையும் தருவதால் பயனும் இல்லையே
1. ஏழை விதவை தந்த செப்புக்காசுதான்
உமது பார்வையில் உயர்ந்ததானதே
இதயம் விரியணும் கரங்கள் கொடுக்கணும்
உம்மைப் போல தன்னைத் தந்த
காணிக்கையாக நல்ல காணிக்கையாக
உயிருள்ள காணிக்கையாக
2. சின்னஞ்சிறியவர்க்குச் செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள் என்ற தெய்வமே
பகைமை மறக்கணும் பகிர்ந்து கொடுக்கணும் - உம்மைப்போல

532. இதுவே நேரம் இதுவே காலம்
இதுவே நேரம் இதுவே காலம்
ஏற்றிடுவீர் எம் காணிக்கையை - 2
இறைஞ்சியே குருவின் கரங்களில் தந்தோம்
ஏகபிதாவே ஏற்றிடுவீர் - 2
1. உருவினில் அப்பமாய் இருந்தாலும் - இதை
இறைமகன் உடலாய் மாற்றிடுவீர்
பருக இரசமாய் இருந்தாலும் - உந்தன்
திருமகன் இரத்தமாய் மாற்றிடுவீர்
பலி இதனோடு பரம்பொருளே - என்
உள்ளம்நிறை யாவும் உரிமை தந்தோம் - 2
2. அனைத்தையும் படைத்த ஆண்டவரே - நின்
அருள்நிறை கருணையை வேண்டுகிறோம்
நினைவையும் சொல்லையும் செயலையும் உமக்கே
நேர்த்தியாய்த் தந்தோம் ஏற்றிடுவீர்
நலிந்தவை யாவும் நலம் பெறுமாறு
களிப்புடன் உமக்கே காணிக்கையாக்க - 2
ஏற்றிடுவீர் எம் காணிக்கையை - 2
இறைஞ்சியே குருவின் கரங்களில் தந்தோம்
ஏகபிதாவே ஏற்றிடுவீர் - 2
1. உருவினில் அப்பமாய் இருந்தாலும் - இதை
இறைமகன் உடலாய் மாற்றிடுவீர்
பருக இரசமாய் இருந்தாலும் - உந்தன்
திருமகன் இரத்தமாய் மாற்றிடுவீர்
பலி இதனோடு பரம்பொருளே - என்
உள்ளம்நிறை யாவும் உரிமை தந்தோம் - 2
2. அனைத்தையும் படைத்த ஆண்டவரே - நின்
அருள்நிறை கருணையை வேண்டுகிறோம்
நினைவையும் சொல்லையும் செயலையும் உமக்கே
நேர்த்தியாய்த் தந்தோம் ஏற்றிடுவீர்
நலிந்தவை யாவும் நலம் பெறுமாறு
களிப்புடன் உமக்கே காணிக்கையாக்க - 2
533. இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை
இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை
1. எரியா விளக்கு எனை நான் உனக்குத்
தந்தேன் ஏற்றிடுவாய் - 2
உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்
சுடராய் மாற்றிடுவாய்
2. மலராக் கொய்து வாழ்வினைக் கொய்து
தாள்களில் படைக்கின்றேன்
புனிதம் சிந்தும் பூவாய் என்றும் வாழ்ந்திட
வரம் கேட்பேன்
3. உலகை மறந்து உனை நான் நினைத்து
நெஞ்சம் நிறைந்திருப்பேன் - 2
காலடி அமர்ந்து கண்ணீர் உலர்ந்து
கவலை மறந்திருப்பேன்

534. இரக்கம் மிகுந்த கரத்திலே
இரக்கம் மிகுந்த கரத்திலே
என்னை முழுதும் அர்ப்பணமே - 2
வாழ்வது என்னில் நீயாக வாழ்க்கை எல்லாம் உமக்காக
எல்லாம் தந்தேன் என்னைத் தந்தேன் - 2
1. குயவன் கையில் களிமண்ணாய்க்
கொடுத்தேன் என்னை உன்னிடத்தில்
எடுத்து உமது விருப்பம் போல் வடிவம் கொடுத்து வனையுமே - 2
உனக்காய் வாழும் ஒரு கணம் அதுவே வாழ்வின் பேரின்பம்
நீயில்லாத வேறிடம் அனைத்தும் இருந்தும் ஏதின்பம்
என்னிறைவா அர்ப்பணமே
என்னை முழுதும் ஆட்கொள்ளுமே
2. உமது அன்பு தீபமாய் எரிய என்னை எரித்திடும்
உமது உண்மை நாதமாய் ஒலிக்கக் குரலை வளர்த்திடும் - 2
எனது சிறிய விளக்கிலே எரியும் தீபம் நீயன்றோ
எனது சொல்லும் செயல்களும் உமது தீப ஒளியன்றோ
என்னிறைவா எரித்திடும் உமது ஒளியைப் பரப்பிடும்

535. இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ
இரந்து படும் ஏழையின் பலி உமக்கு ஆகுமோ - என்றும்
இணையில்லாத தேவனே இது தகுதியாகுமோ
1. கலைந்த வாழ்வும் கவலை நெஞ்சும் கருத்தில் வறிய செயலுமே - 2
நிறைந்த வாழ்விலே படும் துயரின் நிலையிலே - உமை
உணர்ந்து புகழ்கின்றேன் என்னை உவந்து அளிக்கின்றேன்
இனி என் வாழ்வில் இறைவனருளின்
இனிமை காணத் துடிக்கின்றேன்
2. மாசில்லாமை நிறைந்த உமது புனித பெருமை காண்கிறேன் - 2 மாசில் வாழ்கையில் மனம் வளைவதில்லையே - எமை
ஆளும் தேவனில் மனம் இணைவதில்லையே
குறைகள் தீர எனது கருத்தைக்
காணிக்கையென அளிக்கின்றேன்

536. இரு கரம் ஏந்தி வருகின்றேன்
இரு கரம் ஏந்தி வருகின்றேன்
இறைவா காணிக்கைத் தருகின்றேன் - 2
பரம்பொருளே நான் பலிப்பொருளாய்
உம் திருப்பலியில் இணைகின்றேன்
1. நீரின்றி உலகம் அமைவது ஏது நீயின்றி நானும் அதுபோல்
நீர் தந்த உயிரும் தாய் தந்த உடலும் நீயென மாறிட உமக்கே
கனிரசம் கலந்திடும் நீராய்
இந்தப் பூமிக்குள் மறைந்திடும் வேராய் - 2
இறைவா உனில் நான் கலந்திடுவேன்
2. உலகிற்கு ஒளியாய் உதவிடும் வழியாய்
ஊரெல்லாம் உன்புகழ் பாட
உப்பாய்க் கரைந்து சுவைதரும் பணியில் எப்போதும் நானும் வாழ
நறுமணம் வீசும் பலியாய் இந்த நானிலம் எங்கும் கமழ்வேன் - 2
இறைவா நானோ உன் சொந்தம்

537. இருகரம் குவித்து இறைவா தொழுதோம்
இருகரம் குவித்து இறைவா தொழுதோம்
இதயத்தைப் பதத்தில் பலியாய் அளித்தோம்
1. நிலத்தில் விளைந்த மணிகள் குவித்து
கொடியில் குலுங்கும் கனிகள் உதிர்த்து - 2
படைப்புகளனைத்தும் பரம் புகழ் இசைத்து - 2
பகலவன் ஒளியில் பலியாய் உயரும்
2. பசித்திடும் மனத்தில் உதித்திடும் கனவும்
புசித்தவர் உள்ளத்தில் எழுந்திடும் மகிழ்வும் - 2
மணியென உழைப்போர் உதிர்க்கும் துளியும் - 2
பிணியில் மடிவோர் துயரும் படைத்தோம்

538. இருப்பதெல்லாம் உமதன்றோ இறைவா
இருப்பதெல்லாம் உமதன்றோ இறைவா - 2
இதயம் தந்தேன் புனிதமாக ஏற்பாய் - 2
பதமலர் சரணடைந்தேன் ஏற்றருள்வாய் - 2
1. என் உடல் மனம் அறிவுடன் சிந்தனை
ஆற்றல் யாவும் அர்ப்பணம் தந்தேன் - 2
காலமும் திறமைகளும் பாச உறவுகளும்
பணிகளின் மனநிறைவும் ஆன்மீகத் தாகமும் - 2
எல்லாம் நீ தந்தது உம் அருளின்றி நிறைவில்லை - 2
நீ இருந்தால் குறைவில்லை நீ இருந்தால் எதிலும் குறைவில்லை - 2
2. எல்லாம் இருந்தாலும் ஆன்மாவை இழந்தால்
பயனேது வாழ்வில் தேவை நீயன்றோ - 2
உழைப்பின் கனிகளும் உன்னத பயன்களும்
நான் தேடும் அமைதியும் நீதானே தலைவா - 2 எல்லாம் நீ தந்தது

539. இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக
இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக
1. ஆண்டவரே அனைத்துலகின் இறைவா
உம்மைப் போற்றுகிறோம்
ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து
அப்பத்தைப் பெற்றுக் கொண்டோம்
நிலத்தில் விளைவும் மனித உழைப்பான
அப்பத்தை உமக்குப் படைக்கின்றோம்
இது எங்களுக்கு வாழ்வை அளிக்கும் அப்பமாக மாறும்
2. ஆண்டவரே அனைத்துலகின் இறைவா
உம்மைப் போற்றுகிறோம்
ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து
இரசத்தைப் பெற்று கொண்டோம்
திராட்சைக் கொடியும் மனித உழைப்பான
இரசத்தை உமக்குப் படைக்கின்றோம்
இதை எங்களுக்கு ஆன்ம பானமாக மாற்றும் தேவனே

540. இறைவன் திருத்தலத்தில் அவர் அன்பில் வளரவே
இறைவன் திருத்தலத்தில் அவர் அன்பில் வளரவே
அளித்தேன் என்னை முழுதும் புதுவாழ்வு மலரவே
1. மலராய் இன்று மலர்ந்தேன் உந்தன் பாதத்தில் துலங்கவே
மெழுகாய் இன்று எரிந்தேன் உந்தன் உறவில் உருகவே
இணைவேன் உன்னில்உறைவேன் என்னைப் பலியாய்ஏற்றிடுவாய்
2. கனியாய் இன்று கனிந்தேன் பலி இரசமாய் வழங்கவே
மணியாய் இன்று விளைந்தேன் உந்தன் விருந்தாய் விளங்கவே
படைத்தேன் பதம் பணிந்தேன் என்னைப் பலியாய் ஏற்றிடுவாய்

541. இறைவனின் பாதம் பலிதரும் நேரம்
இறைவனின் பாதம் பலிதரும் நேரம்
இணைவோம்நாமும்காணிக்கை - சுமைகளின்பாரம்சுமந்திடும்பாவம்
களைந்திட விழைவோம் காணிக்கை - 2
காணிக்கை இதய காணிக்கை காணிக்கை எளிய காணிக்கை - 2
1. பகையுள்ளநெஞ்சம்பகிர்ந்திடும்காணிக்கைஇறைவன் ஏற்பதில்லை
எளியவர் உள்ளம் தரும் நல்காணிக்கை இறைவன் மறுப்பதில்லை - 2
இதை உணர்ந்தே உள்ளம் இணைந்தே தருகின்ற காணிக்கை
ஏற்றருள்வாய் காத்தருள்வாய் காலமும் துணை நிற்பாய்
2. பட்டம் பதவி பொன்னோ பொருளோ இறைவன் ஏற்பதில்லை
உள்ளதைஉவந்தேஅளித்திடும்காணிக்கைஇறைவன்மறுப்பதில்லை - 2
அன்பின் இறைவா எந்தன் தலைவா இருப்பதை உமக்களித்தோம்
அர்ப்பணமாய் ஏந்தி வந்தோம் எம்மையே ஏற்றிடுவாய்

542. இறைவா இறைவா உம் பீடம் வந்தோம்
இறைவா இறைவா உம் பீடம் வந்தோம்
இணைந்த கரத்தில் பலிதர வந்தோம்
உருக்கொடுத்து என்னைத் தந்திடவும்
குழந்தை கண்டிட நிறைவு காணவும்
1. பெற்றுக் கொண்ட நன்மைக்காக நன்றி பாடவும்
நடக்கும் செயல் நலம் பயக்க ஆசிர் வேண்டியும்
காத்திருக்கும் என் கண்கள் விடிவு காணவும்
உம்மோடு நானும் மகிமை செலுத்தவும்
2. விண்ணகம் வாழ் வல்லவரைப் புகழ்ந்து போற்றவும்
உம்மைப் பெறும் திருவிருந்தில் பங்குக் கொள்ளவும்
யாம் இருக்கும் உலகம் இன்று அமைதி காணவும்
வலுவுடனே மக்களும் செழித்து வாழவும்

543. இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்
இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்
ஏழை எளியோர் ஏற்றம் காண என்னைத் தருகின்றேன்
இதயம் மகிழ்ந்து ஏழை என்னை
பலியாய் ஏற்றிடுவாய் கனிவாய் மாற்றிடுவாய்
1. உலகம் யாவும் வெறுமை என்று
உன்னைப் பணிந்தேன் தஞ்சம் என்று
குயவன் கையில் களிமண் போல
உனது பணிக்காய் என்னைத் தந்தேன்
உனக்காய்த் தானே வாழுகின்றேன்
எந்தன் உயிரும் உந்தன் சொந்தம்
தடைகள் மலையாய்ச் சூழ்ந்து கொண்டால்
தயக்கமின்றி எழுந்து நடப்பேன்
ஆபேல் தந்த உயர்ந்த பலி போல்
அன்பே உனக்காய்க் காணிக்கையாகிறேன்
2. துடுப்பை இழந்த படகைப் போல
தனித்து தவித்துக் கலங்கும் நேரம்
விழியைக் காக்கும் இமையைப் போல
அன்பின் கரத்தால் அணைத்துக் காப்பாய்
முடவன் போல என்னை மாற்ற
தினமும் உழைக்கும் மனிதருண்டு
மண்ணில் விழுந்து மடிந்த பின்னும்
முளைக்கும் விதைபோல் உயிர்த்து எழுவேன்
மழையைத் தேடும் பயிரைப் போல
அன்பே உனையே தேடி வந்தேன்

544. இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னை உனக்காக தருகின்றேன்
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு கனிந்து
1. பசியுள்ளோர்க்கு உணவாகும் நானிருப்பேன்
உடையில்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்
விழுந்தவரை தூக்கிடுவேன் -இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில் இருப்பதை கொடுப்பதை இன்பமென்றாய்
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உனைப்போல் நானும் உருவாகிட

545. இறைவா உன் திருமுன்னே எம் இதயம் தந்தோம் ஏற்பாயே - 2
இறைவா உன் திருமுன்னே எம் இதயம் தந்தோம் ஏற்பாயே - 2
தாமரை மலராகத் தாள்களில் வைத்து மகிழ்வோமே
1. இயேசுவின் உருவிலே யாம் இணைந்தே எம்மைத் தருகின்றோம்
பலியாகும் எம் வாழ்வினைப் பணியாய் மாற்றிடக் கோருகின்றோம்
2. உணவிதன் உருவிலே எம் உயிரைத் தந்தோம் இறைவனே
உம்மை எங்கள் உருவிலே உவந்து அளிப்பீர் உலகிலே

546. உடல் பொருள் ஆவி எல்லாம் உன் பாதம் நான் படைத்தேன்
உடல் பொருள் ஆவி எல்லாம் உன் பாதம் நான் படைத்தேன் - 2
1. நான் பார்க்கும் உலகெல்லாம் உன் சொல்லின் விரிவுரையே
அதில் வாழும் உயிர்களெல்லாம் உன் அன்பின் தொடர்கதையே
அதைத் தந்தேன் பலிப்பொருளாய் ஏற்பாய்
எனைத் தந்தேன் ஒரு பொருளாய்ச் சேர்ப்பாய்
திரு அப்பம் போல அதைப் பகிர்ந்து
அனைவர்க்கும் வாழ்வருள்வாய் - 2
2. நிறைவாழ்வு உனதாகும் நான் கண்டேன் பலிவாழ்வில்
பொருள் வடிவில் பலி தந்தேன் உன் வாழ்வைத் தர வருவாய்
புது உரு என என்னை மாற்றிடுவாய்
புது உலகிது என நான் வாழ்வேன்
திருமகன் சாயலில் வளரவிடும் நிறையருள் நான் பெறுவேன்

547. உண்மை பலியை உணர்ந்து தருகின்றோம்
உண்மை பலியை உணர்ந்து தருகின்றோம்
உலகம் வாழ எம்மைத் தருகின்றோம் - 2
1. குடிசையில் எரியும் விளக்கினை அணைத்து - உன்
கோபுர தீபம் ஏற்றி வைத்தோம்
ஏழையின் பசியினை மறந்து உனக்கு
காய்களும் கனிகளும் படைத்து நின்றோம் - 2
சா தச நீ நீ பநி தா கப தா பத பா தநி தா
சா சா நிதப நீ நீ தபக பநிதா
மனநிலை மாறி புதப்பலி தந்தோம்
மனிதனுக்காக எம்மையே தந்தோம் - 2
மனிதன் வாழ எம்மைத் தந்தோம் ஏற்பாயே
2. பாலுக்கும் கூழுக்கும் பஞ்சமென்றாலும் - உன்
பல்லாக்கு தூக்க ஓடி வந்தோம்
பாமரன் கண்ணீர் துடைக்க மறந்து உனக்கு
ஆறுதல் சொல்ல வந்தோம் - 2 சா தச
மனிதனின் கவலை தீர்த்திட வந்தோம்
மனிதனுக்காக எம்மையே தந்தோம் - 2 மனிதன்

548. உந்தன் பாதம் பணிந்து நான் வாழ வேண்டும் இயேசுவே
உந்தன் பாதம் பணிந்து நான் வாழ வேண்டும் இயேசுவே
பலியிலே கலந்திட வேண்டி நின்றேன் தெய்வமே - 2
1. அன்பில் நிலைக்கும் இதயமே ஆற்றல் மிகுந்ததே
பண்பில் உயர்ந்து வாழுமே புதிய உறவிலே
பிறரின் நலனில் மகிழ்ந்திட - 2
தந்தேன் என்னை உந்தன் பாதம் என்னை நீ ஏற்றிடுவாய் - 2
2. மனிதநேயம் மலரவே என்னைத் தருகின்றேன்
உண்மை அன்பு உயர்ந்திட உறுதி கொடுக்கின்றேன்
உந்தன் ஆட்சி மலர்ந்திட - 2

549. உலகினைப் படைத்த ஆண்டவரே
உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை ஏற்றிட வேண்டுகிறேன் - 2
கருணையின்இறைவாஏற்பாயேகாலமெல்லாம்நலம்சேர்ப்பாயே - 2
1. விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுவதும் தந்தேன் - 2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் - 2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என்பிழை யாவும் பொறுத்தருள் செய்வாய் - கருணையின்
2. கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ - 2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம்பெற கையளித்தேன் - 2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய் - கருணையின்

550. உலகோர் பாவம் போக்க இப்பொருளை
உலகோர் பாவம் போக்க இப்பொருளை
உவந்தே ஏற்பீர் இறைவா இனிதாய்
உவந்து ஏற்பீர் இறைவா - 2
1. இறைவன் இரக்கம் எளியோர் பெறவே
எளிய பொருளை அளித்தோம் - 2
இறைவன் முன்னே இனிய பொருளாய்
இலங்க இவற்றை ஏற்பீர்
2. மனிதன் இயல்பை வியக்கப் படைத்தாய்
அதனை இணைத்தார் இயேசு
நீவிர் இரசத்தின் வழியே எமக்கு
இறைமை இன்று அளிப்பாய்
உவந்தே ஏற்பீர் இறைவா இனிதாய்
உவந்து ஏற்பீர் இறைவா - 2
1. இறைவன் இரக்கம் எளியோர் பெறவே
எளிய பொருளை அளித்தோம் - 2
இறைவன் முன்னே இனிய பொருளாய்
இலங்க இவற்றை ஏற்பீர்
2. மனிதன் இயல்பை வியக்கப் படைத்தாய்
அதனை இணைத்தார் இயேசு
நீவிர் இரசத்தின் வழியே எமக்கு
இறைமை இன்று அளிப்பாய்
551. உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு உள்ளவரே
உள்ளதெல்லாம் தந்தவரே உயிரோடு உள்ளவரே
உள்ளமெல்லாம் அள்ளி வந்தேன் போதுமா
நீர் தந்ததெல்லாம் தருவது தான் நியாயமா - 2
1. மலர்களையே கொய்து வந்தேன் மனதுருக்கம் உள்ளவரே
கனிகளையே கொண்டு வந்தேன் கனிவிரக்கம் கொண்டவரே
மணக்கும் வார்த்தை யாவும் கனிகள் கொடுக்கும் வாழ்வும்
தந்துவிட்டேன் ஏற்றிடுவீர் என்னவரே
2. அப்ப இரசம் கொண்டுவந்தேன் அன்புருவே காணிக்கையாய்
அடியவரை ஊட்டிடுவாய் உமதுடலாய் மாற்றியதை
அனுதின உணவாகும் கோதுமை மணிபோல
மாற்றிடுமே என்னையுமே என்னவரே

552. உறவுப் பூக்கள் என்னில் மலர
உறவுப் பூக்கள் என்னில் மலர
உகந்த பலியாய் என்னையே ஏற்பாய் - 2
இயேசுவின் பலியே என் வாழ்வின் வழியே - 2
என்னையே தருவேன் காணிக்கையாக
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன்
1. அப்பமும் இரசமும் கொண்டு வந்தேன் - இது
அன்பின் பலியெனக் கண்டு கொண்டேன்
தந்து வாழும் தியாக பலியாய் எந்தன் வாழ்வு உம்மில் மலர
என்னையே தருவேன் காணிக்கையாக - 2
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
2. உடலும் உயிரும் உமது பரிசு
உம் பலியில் இணைந்தால் புதிய படைப்பு
துயரம் துடைக்கும் தூய பணியில்
பலியின் பலனாய் என் வாழ்வு மலர

553. உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் ஒன்றும் இல்லை
உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் ஒன்றும் இல்லை
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொத்தும் இல்லை - 2
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை - 2
1. கண்களை நான் தந்திருப்பேன் கண்களுக்கோ பார்வையில்லை- 2
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன்
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணில் இல்லை - 2
2. நெஞ்சுக்குள்ளே வந்துவிடு நிம்மதியைத் தந்துவிடு - 2
நேசித்து வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னைக் காணிக்கைப் பெற்றுக் கொடு

554. உன்னிலே என்னைக் கரைத்து
உன்னிலே என்னைக் கரைத்து
வாழ்வின் சுவையைத் தரவந்தேன்
வாழ்விக்கும் வல்ல தேவா ஏற்றுக்கொள்ளுமே - 2
என்னிலே உன்னைக் கண்டு உம்மைப் போல வாழ்ந்திட
உம் திருப்பீடம் வந்தேன் ஏற்றக்கொள்ளுமே - 2
1. இதயத்தில் உந்தன்ஈரம் விழியினில் உந்தன் பாசம்
அவனியில் காட்டிட வந்தேன்
காற்றினில் உந்தன் வேதம் ஆனந்த கானமாக்கி
மாந்தர்க்கு இசைத்திட வந்தேன்
நான் என்றும் வாழத்தானே தன்னையே தந்த தேவா - 2
உன்னையே வாழ வந்தேன் ஏற்றுக்கொள்ளுமே
2. எண்ணத்தில் உன்னைத் தாங்கி உன் பணி கரத்தில் ஏந்தி
வாழ்வெல்லாம் உழைத்திட வந்தேன்
புன்னகை முகத்தில் ஏந்தி பூமொழி உலகில் தூவி
உன் அன்பைப் பொழிந்திட வந்தேன்
என்னையே நினைத்து நாளும் தன்னையே தந்த தேவா - 2
உன்னையே நினைத்து வாழ என்னைத் தருகின்றேன்

555. உனக்கென நான் தரும் காணிக்கையை
உனக்கென நான் தரும் காணிக்கையை
உவப்புடன் ஏற்பாய் என் இறைவா - 2
பலியென எனை நான் தருகின்றேன் - 2 உன்
பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2
1. உழைப்பின் கனி இது உனக்காக
உன்னருள் கொடைகளின் பலனாக - 2
படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 உன்
படைப்பினில் சிறந்ததைத் தருகின்றேன் - 2
2. உடல் பொருள் ஆவி உனக்காக
உன் பணி புவிதனில் நிறைவாக - 2
மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2 நான்
மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் - 2

556. எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே
எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே
உடல் பொருள் ஆவியையும் - 2
1. சிந்தனை சொல் செயல் அனைத்தையுமே தந்தோம்
நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம்
2. அனைத்தும் உம் அதிமிக மகிமைக்கே என்று
ஆர்வமாய் வாழ்ந்திடத் துணைபுரிவாயே
உடல் பொருள் ஆவியையும் - 2
1. சிந்தனை சொல் செயல் அனைத்தையுமே தந்தோம்
நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம்
2. அனைத்தும் உம் அதிமிக மகிமைக்கே என்று
ஆர்வமாய் வாழ்ந்திடத் துணைபுரிவாயே
557. எடுத்து வந்தோம் காணிக்கையை
எடுத்து வந்தோம் காணிக்கையை
இறையமுதே உம்மைச் சூழவந்தோம்
இனிதாகவே எம்மை ஆளவே
இதை ஏற்பாய் என்றே வேண்டுகின்றோம்
1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே
வையத்தில் படைத்ததெல்லாம் உமதே - 2
எம் சிறு வாழ்வில் நிகழ்வதெல்லாம்
உம் திருப்பலியாய் மாற்றிடுமே
2. கடைநிலை வாழ்வோர் கடமையை மறந்தோர்
கடவுளை உணர்ந்தே வருகின்றார் - 2
கருணையின் இறைவா கண் பாரும்
திருப்பலி வாழ்வை எமக்கருளும்
இறையமுதே உம்மைச் சூழவந்தோம்
இனிதாகவே எம்மை ஆளவே
இதை ஏற்பாய் என்றே வேண்டுகின்றோம்
1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே
வையத்தில் படைத்ததெல்லாம் உமதே - 2
எம் சிறு வாழ்வில் நிகழ்வதெல்லாம்
உம் திருப்பலியாய் மாற்றிடுமே
2. கடைநிலை வாழ்வோர் கடமையை மறந்தோர்
கடவுளை உணர்ந்தே வருகின்றார் - 2
கருணையின் இறைவா கண் பாரும்
திருப்பலி வாழ்வை எமக்கருளும்
558. எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
ஏற்றிடு என் இறைவா
உன் திருப்பலிப் பீடம் அர்ச்சனை மலராய்
மலர்ந்திட அருள்புரிவாய்
1. உழைப்பின் கனியிது உமக்கெனத் தந்தேன்
ஏற்றிடு என் இறைவா
உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய்த்
தினம் தருவேன் ஏற்றிடுவாய்
எனைத் தருவேன் ஏற்றிடுவாய் தருவேன் ஏற்றிடுவாய்
தருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய்
2. ஏழை எளியோர் வறியோர் வாழந்திட ஏற்றிடு என் இறைவா
துயர் துடைத்திடும் கரமாய்ப் பணிவிடை புரிய
வருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய்

559. எது வேண்டும் உனக்கு இறைவா
எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா - 2
எது வேண்டும் எது வேண்டும் - 2
1 . மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன் - 2
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா
2. பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையோ
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன் - 2
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா

560. எதை நான் தருவேன் இறைவா - உம்
எதை நான் தருவேன் இறைவா - உம்
இதயத்தின் அன்பிற் கீடாக எதை நான் தருவேன் இறைவா
1. குறைநான் செய்தேன் இறைவா - பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா - 2
கறையாம் பாவத்தை நீக்கிடவே - 2
நீ கல்வாரி மலையில் இறந்தாயோ
2. பாவம் என்றொரு விசயத்தால் நான்
பாதகம் செய்தேன் இறைவா - 2
தேவனே உன் திருப்பாடுகளால் - 2
எனைத் தேற்றிடவே நீ இறந்தாயோ

561. எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை
எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை
எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே - 2
1. இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல
ஆசையுடன் மன்றாட தோசமெல்லாம் தீர்ந்திடவே - 2
2. கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே
பலியாகத் தரவந்தாம் ஏற்றருள்வீர் ஆண்டவரே - 2

562. என் அன்பு தெய்வமே இயேசுவே முதல்வா
என் அன்பு தெய்வமே இயேசுவே முதல்வா
என்ன நான் தரவேண்டும் சொல் தலைவா
இதயம் உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்காக இயேசுவே அளிக்கின்றேன்
1. உன் திருத் தாயுன்னைக் காணிக்கையாக - அன்று
கொடுத்தாளே குழந்தையாய் இறைவனுக்குத்
தன் திருவாழ்வையும் தியாகத்தின் பொருளாய்த்
தன்னலமில்லாமல் தந்தாளே தாய் - 2
2. என்னையும் உனக்குக் காணிக்கையாக - உன்
எழில்பதம் தனிலே படைக்கின்றேன்
கறைகள் போக்க உன் வார்த்தை கேட்டு
மீட்பராய் உனை ஏற்ற எனை ஏற்பாய் - 2

563. என் ஆன்மாவின் சுரங்களை - இறைவா
என் ஆன்மாவின் சுரங்களை - இறைவா
உன் பாதம் படைக்கின்றேன் - அவை
விண்ணில் தவழும் சங்கீதமல்ல - என்
வாழ்க்கை சோக இராகங்களே
1. காலையில் பூபாளம் இசைத்தேனே
மாலையில் முகாரி தவழ்கின்றதே - 2
அலையில் தவழும் இராகமாய் ஆ - 2
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன்
2. என் வாழ்க்கைப் பயணத்தில் இசைக்கும் சிந்து ராகங்களை - 2
இதயம் பாடும் சங்கீதமாய் ஆ - 2 என்னையே

564. என் நெஞ்ச நாயகா இறைவா - என்றும்
என் நெஞ்ச நாயகா இறைவா - என்றும்
என் அன்பைப் பலியாக ஏற்பாய்
ஏழையென் பலிதன்னை நீ ஏற்கும் வேளை
என் வாழ்வு அருளன்பில் நிலை பெறுமே
1. காற்றினில் ஆடுகின்ற தீபம் நான்
உந்தன் கோயிலில் ஏற்றி வைத்தாய்
சேற்றினில் வாழுகின்ற சிறுமலர் நான்
உந்தன் பூசையில் சேர்த்து விட்டாய்
என்னை உன் நெஞ்சோடு இணைக்கின்ற போது
என் இயேசுவே என்னைத் தருகின்றேன்
2. பலிப்பொருள் உன்னிடம் தருமுன்னே
எந்தன் பகைவரை ஏற்கச் சொன்னாய்
விழியினை இழந்திட்ட மானிடற்கு
என்னை ஒளியாய் மாறச் சொன்னாய்
தினந்தோறும் நான் உந்தன் திருமுகம் காண
எளியோருக்கே என்னை அளிக்கின்றேன்
என் அன்பைப் பலியாக ஏற்பாய்
ஏழையென் பலிதன்னை நீ ஏற்கும் வேளை
என் வாழ்வு அருளன்பில் நிலை பெறுமே
1. காற்றினில் ஆடுகின்ற தீபம் நான்
உந்தன் கோயிலில் ஏற்றி வைத்தாய்
சேற்றினில் வாழுகின்ற சிறுமலர் நான்
உந்தன் பூசையில் சேர்த்து விட்டாய்
என்னை உன் நெஞ்சோடு இணைக்கின்ற போது
என் இயேசுவே என்னைத் தருகின்றேன்
2. பலிப்பொருள் உன்னிடம் தருமுன்னே
எந்தன் பகைவரை ஏற்கச் சொன்னாய்
விழியினை இழந்திட்ட மானிடற்கு
என்னை ஒளியாய் மாறச் சொன்னாய்
தினந்தோறும் நான் உந்தன் திருமுகம் காண
எளியோருக்கே என்னை அளிக்கின்றேன்
565. என் வாழ்வின் பொருள்தனை
என் வாழ்வின் பொருள்தனை
என் இயேசு கரங்களில் தந்தேன் நற்பலி எனவே
கல்வாரிப்பொருளெனக்கொள்வாய்நீஇவைகளைஉன்நாமம்போற்றிடுவேன்
தந்தாய் நீ ஏற்றிடுவாய் என் வாழ்வை மாற்றிடுவாய் - 2
1. பொன்னோடு பூவும் என் வாழ்வு யாவும் எல்லாமும் உமதருளே - 2
மண்மீது யான் தர வேறு பொருளேது என் பாவச் சுமையதுவே - 2
தேவன் பத மலர்களில் ஏழை இரு விழிகளின் நீரே உமக்களித்திடுவேன்
2. என் ஆன்மராகம் உம் நாமம் பாடும் பொன் தூய நறுமணமே - 2
என் பாதம்வேர்வையில்நீந்தும்நிலையிலும்உன் பாதை நடந்திடுமே - 2
தேவன் தரும் இன்பங்களை வாழ்வில் வரும் துன்பங்களை
நாளும் உமக்களித்திடுவேன்

566. என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
என்னை உனக்குக் கொடுப்பதில் தானே ஆனந்தம்
உன்னில் உனக்காய் வாழ்வது என்னில் ஆனந்தம் - 2
1. கனிகளை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர்
மலர்கள் ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
எனக்காய் மலர வேண்டும் என்று நீர் கேட்டீர்
உன்னில் என்னைத் தந்துவிட்டேன்
உம்பணி செய்யத் துணிந்துவிட்டேன்
என்னை ஏற்று மகிழ்வாயா என்றும் உம்மில் வாழ்ந்திடுவேன்
2. கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன்
எனக்காய் வாழவேண்டும் என்று நீர் கேட்டீர்
தீபம் ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
எனக்காய் ஒளிரவேண்டும் என்று நீர் கேட்டீர்
உம்மில் வாழ முடிவெடுத்தேன்

567. என்ன காணிக்கை தருவேன் உம் மனம் கவர் பலியாக
என்ன காணிக்கை தருவேன் உம் மனம் கவர் பலியாக - 2
என்னையே தருவதன்றி மேலான பலியுண்டோ
உம் உள்ளம் ஏற்பதுண்டோ
1. காலைப் பனித்துளிகள் காணிக்கையாகுமே சூரியனுக்கு
மாலை மலர்ச்சரங்கள் காணிக்கையாகுமே சூடும் அவருக்கு
என் வாழ்வும் அப்படியே உந்தன் நல் சொற்படியே - 2
அர்ப்பணமாகவே அர்ப்பணமாகவே
2. விழிகளில் கண்ணீரும் காணிக்கையாகுமே மனம் திரும்ப
விழுந்திடும் இலைகளுமே காணிக்கையாகுமே மரம் வளர

568. என்னை உமக்களித்தேன்
என்னை உமக்களித்தேன்
உந்தன் அன்பைச் சுவைத்தேன்
என்னையே இழந்துவிட்டேன் இயேசுவே ஏற்றிட வேண்டுகிறேன் - 2
1. கோதுமை அப்பத்தில்திராட்சைஇரசத்தில் உம்மையே எமக்களித்தாய் - 2
மனிதவதாரம் உம்மையே தந்ததேன் - 2
என்னை நிறைவாக்கிடவே உம்மோடு வாழ்ந்திடவே
2. உழைப்பின் விளைவையும் விளைந்த பொருளையும்
உமக்கே உவந்தளித்தேன் - 2
கல்வாரி பலியில் உம்மையே தந்ததால் - 2
என் வாழ்வு மலர்கின்றதே உம் உறவில் கலந்திடவே

569. என்னை முழுதும் உந்தன் கரத்தில்
என்னை முழுதும் உந்தன் கரத்தில்
தந்து விட்டேன் தந்து விட்டேன்
இணையில்லா அன்பைத் தந்து விட்டேன்
குறையில்லா வாழ்வைத் தந்து விட்டேன்
முழுதாய்த் தந்துவிட்டேன்
1. மலர்களும் கனிகளும் தந்துவிட்டேன்
மறுவில்லா மனத்தினை தந்துவிட்டேன்
அப்பரச காணிக்கை தந்துவிட்டேன்
ஆனந்த இதயத்தைத் தந்துவிட்டேன்
நிலையான மகிழ்வினைத் தந்துவிட்டேன்
நிறைவான உறவைத் தந்துவிட்டேன்
நிறைவாய்த் தந்துவிட்டேன்
2. வருங்கால வாழ்வினைத் தந்துவிட்டேன்
வரங்களும் வளங்களும் தந்துவிட்டேன்
உயர்வான நிலைகளைத் தந்துவிட்டேன்
உறவுகள் அனைத்தும் தந்துவிட்டேன்
உரிமைகள் உணர்வுகள் தந்துவிட்டேன்
உன்னத நிலைகளைத் தந்துவிட்டேன் உனக்காய்த் தந்துவிட்டேன்

570. என்னையே எரிபலியாக என்றும் உள்ள ஆவியினாலே
என்னையே எரிபலியாக என்றும் உள்ள ஆவியினாலே
அன்புடன் படைக்க வந்தேனே தந்தையே ஏற்றருள்வீரே
1. அன்பு மகன் ஈசாக்கைப் பலியிடக் கேட்டதுமே
எந்தவித தயக்கம் இன்றி ஆபிரகாம் சென்றாரே
சொந்தபந்த உறவுகளை விறகெனச் சுமந்து வந்தேன்
எந்தன் நெஞ்ச ஆசைகளைப் பலியெனக் கொடுக்க வந்தேன்
துன்ப துயர் நிலைகளிலும் உம்மைப் புகழ்ந்தேத்திடவே - 2
2. முதன்மையான முதல் கட்டளையை அறிந்து கொண்டேன்
முழுமையான உம்மை அன்பு செய்ய எனையளித்தேன்
கடினமானதொரு கட்டளையைப் புரிந்து கொண்டேன்
காணும் பிற மனிதர்களைக் கனிவுடன் ஏற்கத் தந்தேன்
இரக்கத்தை விரும்பும் உந்தன் விருப்பத்தை நிறைவேற்றிடவே

571. என்னையே தந்தேன் இறைவா என் எளிய காணிக்கையாக
என்னையே தந்தேன் இறைவா என் எளிய காணிக்கையாக
என்னையே படைத்தேன் தலைவா
என் அன்பினை அர்ப்பணமாக்க
ஏற்றிடுவாய் இறைவா என்னை மாற்றிடுவாய்த் தலைவா
1. கோதுமை மணியோடு நான் சேர்ந்து களிப்புடன் உடைபடுவேன்
திராட்சை இரசத்தோடு நான் இணைந்து தியாகத்தின் சுடராவேன்
இறையன்பு பிறரன்புப் பாடத்தையே என்றென்றும் நான் பயில்வேன்
உமதன்பின் சாட்சியாய் திகழ்ந்திடுவேன்
அன்றாடம் அடியெடுப்பேன்
2. இன்பங்கள் துன்பங்கள் யாவையுமே இறைவா நான் தருகின்றேன்
உள்ளத்தின் ஏக்கங்கள் எல்லாமுமே உம் பதம் படைக்கின்றேன்
உந்தன் திரு வார்த்தையில் பலம் கண்டு
இன்றே நான் வாழ்ந்திடுவேன்
ஆறுதல் அளித்திடும் நலம் கொண்டு
அதிசயங்கள் அனுதினம் காண்பேன்

572. என்னையேதரவந்தேன் இறைவா உந்தன்காணிக்கையாகவே
என்னையேதரவந்தேன் இறைவா உந்தன்காணிக்கையாகவே
தன்னையே தந்தவனே என்னை
உன் பலியினில் கலந்திடுவாய் கலந்திடுவாய்
1. கோதுமை அப்பம் பிடுகையிலே உந்தன் பலியன்பு விளங்கிடவே
உன்னையே பிறருக்காய் இறைவா
முழுமையாய்ப் பகிர்ந்திடச் செய்திடவே
2. தண்ணீர் இரசத்தினில் சேர்க்கையிலே - உந்தன்
ஒன்றிப்பு தெரிந்திடவே
நானும் உமதன்பில் இறைவா - 2 என்றும்
இணைந்திட வரமருள்வாய்

573. என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன்
என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன்
என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய் - 2
1. உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு
உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று - 2
என் நெஞ்சில் வாழ்பவன் நீதானே
இனி அச்சம் கொள்வதும் வீண்தானே
எந்தன் பணியில் ஆயிரம் தடைகள்
வந்திடும் ஆயினும் இயேசுவே உனது வழியில் பயணம் தொடரும்
2. எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன்
சுயநலத்தின் திரைகளைக் களைந்து என்னைக் கண்டேன் - 2
ஒரு சீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால்
அதுதானே உன் முன்னால் பெரிதாகும் - 2
மகிழ்வைத் தேடும் மானிடர் மகிழ்ந்திட
தந்திடும் என்னை இயேசுவே உனது கரத்தில் ஏற்க வேண்டி

574. எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி
உனக்காக நான் தந்தேன் இறைவா
இதை ஏற்று உனதாக மாற்றி அருட்பலியில்
எனை நீ இணைப்பாய் இறைவா
1. அணையாத தீபம் உன் திரு இதயம்
ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை - 2
உலகின் ஒளியாய் இருப்பவனே
உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் - 2
2. ஏங்கும் வழியில் தேங்கிய நீரும்
அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் - 2
எதையும் தாங்கும் இறையவனே
உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய்
உனக்காக நான் தந்தேன் இறைவா
இதை ஏற்று உனதாக மாற்றி அருட்பலியில்
எனை நீ இணைப்பாய் இறைவா
1. அணையாத தீபம் உன் திரு இதயம்
ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை - 2
உலகின் ஒளியாய் இருப்பவனே
உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் - 2
2. ஏங்கும் வழியில் தேங்கிய நீரும்
அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் - 2
எதையும் தாங்கும் இறையவனே
உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய்
575. எனக்காகப் பலியாகும் அன்பின் தெய்வமே
எனக்காகப் பலியாகும் அன்பின் தெய்வமே
என் வாழ்வைப் பலியாக்க உன் பாதம் வருகின்றேன்
இறைவா ஏற்று பலியாய் மாற்றி உன் பணி செய்ய அருள் தாரும்
1. தாலாட்டுப் பாடும் அருவியிலே ஊஞ்சலாடி வரும் மலரெடுத்து - 2
மனத்தைத் தொடுத்து உன் பாதம்
மணம் வீசப் படைக்கின்றேன் இறைவா ஏற்று
2. அலைந்தோடும் வாழ்வினிலே கரைந்து ஓடிடும் நீரெடுத்து - 2
என் பாவம் கழுவி உன் நினைவில்
வாழ்ந்திட விழைகின்றேன் இறைவா ஏற்று

576. எனில் உள்ளத்தைக் கொடுத்தேன் இறைவா
எனில் உள்ளத்தைக் கொடுத்தேன் இறைவா
என் மனம் மகிழ்ந்தே அதை ஏற்பாய்
உன்னிலே வாழ உனதன்பில் வளர
என்னையும் உன்னில் இணைப்பாய்
1. படைப்பின் பயனாகக் கிடைத்திட்ட விளைபொருள்கள்
தந்தையே உமக்காகக் கொடுத்தது என் கரங்கள்
தந்தாய் ஏற்பாயே என் மனம் மகிழ்ந்திடவே - 2
2. வாழ்வும் உமதன்றோ தாழ்வும் உமதன்றோ
வையத்தில் படைத்ததெல்லாம் உமக்கே சொந்தமன்றோ
கருணையின் இறைவனே கடைக்கண் பாருமையா - 2

577. எல்லாம் கொணர்ந்தேன் இறைவா
எல்லாம் கொணர்ந்தேன் இறைவா
என்னையும் கொணர்ந்தேன் இறைவா
நீ கொடுத்த கொடைகளை நிறைவுள்ளதாக்கிக்
கொண்டு வந்தேன் உந்தன் பாதத்திலே
1. உழைப்பும் உயிரும் நீ தந்தாய்
உவகையும் உண்மையும் நீ தந்தாய்
எல்லாம் உமது அருள் கரத்தால் புனிதமாய் என்றும் வாழட்டுமே
இறைவா ஏற்பாய் ஏழை எனது காணிக்கையை
2. அறிவும் திறனும் நீ தந்தாய் வரங்களும் வளங்களும் நீ தந்தாய்
வந்தேன் மகிழ்ந்து உன் பீடம் தந்தேன் எனது உள்ளம் தனை

578. எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய்த் தலைவா
1. அன்பும் அருளும் பண்பும் பாசமும் எல்லாம் நீ தந்தது
வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும் மகிழ்வுடன் நீ தந்தது - 2
2. சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள் எல்லாம் நீ தந்தது
உடல்பொருள்ஆவி உணர்வுகள் எல்லாம் உவப்புடன் நீ தந்தது- 2

579. எல்லாம் தருகின்றேன் தந்தாய்
எல்லாம் தருகின்றேன் தந்தாய்
என்னையும் தருகின்றேன் - 2
1. இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்குக் காணிக்கை - 2
உழைப்பின் பயனாய்க் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2
2. பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் - 2
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் - 2
என்னையும் தருகின்றேன் - 2
1. இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே
தருவேன் உனக்குக் காணிக்கை - 2
உழைப்பின் பயனாய்க் கிடைத்த பொருளை
என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2
2. பிறருக்காக வாழ்வதில் நானும்
என்னையே உம்மிடம் தருகின்றேன் - 2
பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க
என்னையும் தகுதி ஆக்குவாய் - 2
580.எல்லையில்லாத அன்பாலே உம்
எல்லையில்லாத அன்பாலே உம்
ஏக மகனை எமக்களித்த பிதாவே
ஏற்றருள்வீர் எம் பலிப்பொருள் இதனை
கல்மனம் வெயில் முன் பனிமலை போல
கசிந்துருகிடுமே உன் நினைவாலே
1. புலன்களை அடக்கி உணவினைக் குறைத்து
புரிந்திடும் ஒறுத்தல் முயற்சிகள் அனைத்தும்
நலன்களின் சுனையே உமக்களிக்கின்றோம்
நலிந்திடும் எளியோர் வலிபெறச் செய்வீர்
2. உடலினை ஒடுக்கிப் புன்செய் அகற்றி
உளத்தை எப்பொழுதும் மேலே உயர்த்தி
இடர்களைப் பொறுத்து உம் சுதனோடு
இனிதுமைப் புகழும் வரமருள்வீரே

581. எல்லோரும் நலம் வாழ ஒரு காணிக்கை
எல்லோரும் நலம் வாழ ஒரு காணிக்கை
என் இதயம் தரும் காணிக்கை - 2
கனிவோடு இதை ஏற்று அருள் தாருமே - 2
1. நல்ல விளைநிலமாக எனை மாற்றுமே - உம்
வார்த்தை எனும் உரம் ஊற்றுமே - 2
ஒன்றுக்கு நூறாய் நான் கனி தந்திட - 2
எல்லோரும் பகிர்ந்துண்டு பசியாறவே - 2
2. எந்தன் அயலார்க்கு என்றும் இரங்கும் மனம்
தந்தை நீர் விரும்பும் பலி - 2
உன் அன்பு வீட்டில் நான் இரக்கம் பெற - 2
என் அன்பைப் பிறர் வாழப் பலியாக்கினேன் - 2

582. எளிய என் இதயம் உன் கரங்களில் கொணர்ந்தேன்
எளிய என் இதயம் உன் கரங்களில் கொணர்ந்தேன்
கனிவாய் ஏற்பாய் என் இறைவா - 2
இதயம் என் இதயம் அமைதிக்கான என் காணிக்கை
மாற்றும் உருமாற்றும் அமைதியின் கருவியாய் - 2
1. மலரென்றால் சிறுபொழுதில் வதங்கிவிடும் - என்
மனம் என்றால் உன் பாதம் அலங்கரிக்கும்
விளக்கென்றால் ஒரு நேரம் அணைந்துவிடும் - என்
வாழ்வென்றும் உன் முன்னே எரிந்து நிற்கும்
உம் கருணைக் களவில்லை என் காணிக்கை நிகரில்லை - 2
காரீச / ரீசாநி / சாநீத / நீதாப
கா மா பா / கரி சா
குறையோடு ஏற்று உன் ஆற்றலால் எனை நிரப்பு - 2 இதயம்
2. பொன்னும் பொருளும் நாள்பட மங்கும்
என்செயல் என்றென்றும் உன் முன் மின்னும்
வழிகள் பலவும் இருளில் முடியும்
உன் வழி ஒவ்வொன்றும் ஒளியில் முடியும்
அன்பின் நல்சுரங்கம் நீ அர்ப்பணம் இயேசுவே - 2
காரீச / ரீசாநி / சாநீத / நீதாப
கா மா பா / கரி சா
அன்பின் நல் ஆசானாய் உன்னடி நான் தொடர்வேன் - 2 இதயம்

583. எளியோர் எங்கள் காணிக்கை ஏற்றருள்வாயே
எளியோர் எங்கள் காணிக்கை ஏற்றருள்வாயே
இறைவனே நல்வாழ்வினை எமக்கருள்வாயே
1. அரியதொன்றும் இல்லை நெஞ்சில் அன்பு ஒன்றே உண்டு
நெறியில் வாழ்ந்த நேர்மை என்னும் நலனும் சிறிதே உண்டு
2. இறைவன் வகுத்த வாழ்வு என்னும் இனிய வரமும் வேண்டும்
இருளின் உறக்கம் தீர உள்ளம் அருளில் மலர வேண்டும்

584. ஏந்திய தட்டினிலே இறைவா எம்மையே எடுத்து வந்தோம்
ஏந்திய தட்டினிலே இறைவா எம்மையே எடுத்து வந்தோம்
எளியோர் எம் காணிக்கையை ஏற்றிட வேண்டுகின்றோம் - 2
1. தண்ணீர் இரசத்துடனே எமது கண்ணீர் மகிழ்ச்சிகளை - 2
கலந்தே அளிக்கின்றோம் கனிந்தே ஏற்றருள்வாய்
2. ஏற்ற பலிப்பொருளை மகனாய் மாற்றும் இறைவா நீர் - 2
உம் மகன் உருவினிலே எம்மையும் மாற்றிடுவீர்

585. ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே
ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே
வாழ்வும் செயலும் சிந்தனையும் வாஞ்சையோடு
அளிக்கின்றேன் ஏற்றருள்வீர் எம் பிதாவே - 2
1. நீளக் கிண்ண இரசமதிலே நீர்த்துளி போலே கலந்து
நேச இயேசுவின் பாதத்திலே நிரந்தரமாய் நான் நிலைத்திடவே
ஆசை கொண்டேன் அருள்புரிவீர் - 2
2. இன்றும் என்றும் உம்மிடமே இயேசுவே நான் வாழ்ந்திடுவேன்
இனிமேல் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்ந்திடுவார்
என்ற வரத்தை எனக்களிப்பீர் - 2

586. ஏற்றிடுவீர் பிதாவே மரு ஏதுமில்லா அப்பமிதை நீர்
ஏற்றிடுவீர் பிதாவே மரு ஏதுமில்லா அப்பமிதை நீர்
மாற்றிடுவீர் உம் சுதனுடலாக மாசுகள் நீங்க அருள் நிறைந்தோங்க
1. தகுதியில்லாத அடியோர் சேர்ந்து
திருஅவை பெயரால் குருவின் கையால் - 2
மிகுந்த அன்போடு உடலுயிர் யாவும்
மனமுவந்தளித்தோம் மிகத் தயைகூர்ந்து
2. புனித நல்வாழ்வில் வளர்ந்தே நாளும்
புகழந்தும்மைப் போற்றிப் பணிகள் ஆற்றி - 2
மனிதர் எல்லோரும் முடிவில்லாத
மகிமையின் முடிவை அடைந்திடச் செய்வீர்

587. ஏற்றுக்கொண்டாய் இறைவா - நான்
ஏற்றுக்கொண்டாய் இறைவா - நான்
இருப்பது போல் என்னை ஏற்றுக் கொண்டாய்
ஏற்றுக்கொண்டாய் இறைவா - 2
1. பறவையாக நான் இருந்திருந்தால் பறந்து பறந்து பாடிடுவேன்
வானம்பாடியாய் இருந்திருந்தால் கானம் பாடி மகிழ்ந்திருப்பேன்
ஆனால் நான் நானாவேன் - 2
அதற்கு நான் நன்றி சொல்கின்றேன்
2. மீனினமாக நான் இருந்திருந்தால் நீந்தி நீந்தி வாழ்ந்திருப்பேன்
தேனீயாக நான் இருந்திருந்தால் தேனை உண்டு மகிழ்ந்திருப்பேன்

588. ஏற்றுக்கொள்ளும் எம் இறைவா பலியை எம் பலியை
ஏற்றுக்கொள்ளும் எம் இறைவா பலியை எம் பலியை
மாற்றிடுவாய் இதை உனதாய் இறைவா எம் தலைவா
இது உந்தன் அருட்கொடையே
1. எம் வாழ்வைத் தருகின்றோம் பலியாக
இதை ஏற்று உனதாய் மாற்றிடுவாய் ஆ
ஆனந்தமுடனே எம்மை அளிக்கின்றோம் ஆயனே எம் ஆயனே
2. நிலையில்லா உலகினில் நிலையானவா
எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்காகவே
கரம் விரித்தோம் மனம் திறந்தோம்
நாங்கள் மன்னவா எம் மன்னவா

589. கருணையே இறைவா உம் கரங்களில் தவழ்ந்தேன்
கருணையே இறைவா உம் கரங்களில் தவழ்ந்தேன்
பரமனே முதல்வா உம் பதமலர் பணிந்தேன் - 2
ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் உமதாக மாற்றிடுவாய் - 2
1. கோதுமை அப்பத்தினையே உம்
தாள்களில் படைத்து நின்றேன் - உம்
உடலாக இவை மாறவே நான்
அருள்தனை வேண்டி வந்தேன் - 2
உடல் பொருள் அனைத்தையும்
உவப்புடன் அளிக்கின்றேன் இதை ஏற்றிடுவாய்
2. திராட்சை இரசத்தினையே உம் திருவடி படைத்து நின்றேன்
உம் இரத்தமாய் இவை மாறவே நான்
இரக்கத்தை வேண்டி நின்றேன் - 2
அமைதியின் மன்னனே நீதியின் கதிரோனே எனை ஏற்றிடுவாய்

590. காணிக்கை இதய காணிக்கை வானகத் தந்தைக்கு
காணிக்கை இதய காணிக்கை வானகத் தந்தைக்கு
மகனின் காணிக்கை ஒரு ஆன்ம காணிக்கை
1. கூடி நினைந்து நாளும் வாழும் எங்கள் உள்ளங்கள்
பாடி உன்னைத் தேடிவந்த எங்கள் உணர்வுகள்
அப்ப இரசத்தோடு இணைந்து தருகின்றோம் - 2
விண்ணகத் தந்தையே மண்ணக மைந்தர் யாம்
எம்மையே தருகின்றோம்
ஏற்க வேண்டும் மாற்ற வேண்டும் அருளைத் தரவேண்டும்
2. வாழ்வுப் பாதை மாறிப்போன எங்கள் குற்றங்கள்
வீழ்வு நோக்கி ஓடிப்போகும் உலகப் பாவிகள் - 2
இயேசு கிறிஸ்துவில் இணைந்து தருகின்றோம் - 2
உலகத்தின் பாவங்கள் அனைத்திற்கும்
ஈடாக அன்பைத் தருகின்றோம் - ஏற்க வேண்டும்

591. காணிக்கை இன்று தர வந்தோம் இறைவா
காணிக்கை இன்று தர வந்தோம் இறைவா
வாழ்வைப் பலியாக்க வந்தோம் நாதா
எமைப் பலியாக்கவே உம் பதம் வருகின்றோம்
கனிவுடன் ஏற்றிடுவாயே கருணை தேவா
1. புழுதி படிந்த கரங்களில் என் பொன்னான வேர்வைத்துளி
உம் பாதம் எடுத்து வந்தோம் - 2
நீலக்கடலில் கரையும் எம் முத்தான குருதித்துளி
பொற்பாதம் கொண்டு வந்தோம் - 2
உழைப்பின் உயர் பலன் யாவும் பீடம் வைத்தோம் - 2
உம் உடலாய் இரத்தமாய் மாறச் செய்வாயே
2. விடியற்காலை ஏங்கும் எங்களின் விழிகளில் கண்ணீர்த்துளி
உம் பாதம் எடுத்து வந்தோம் - 2
இருள் அகலும் ஒளி ஏற்ற யாம் சிந்தும் ஈரத்துளி
பொற்பாதம் கொண்டு வந்தோம் - உழைப்பின் உயர்

592. காணிக்கை ஏந்தி உன் பீடம் வந்தேன்
காணிக்கை ஏந்தி உன் பீடம் வந்தேன்
ஒவ்வொரு நிகழ்வையும் உம் பாதம் தந்தேன்
உள்ளார்ந்த நன்றியால் உம் இல்லம் வந்தேன்
நீரென்னை ஆட்கொள்ள வேண்டும்
1. இறைவா என்னைக் கைகளில் பொறித்துள்ளீர்
அஞ்சாதே என்றும் உன்னோடு நான் என்றீர்
நித்தமும் வருகின்ற துன்பத்தில் ஆறுதல் தந்தீர்
எப்போதும் என்னை உம் அன்பில் வளரச் செய்தீர் - 2
மகிழ்ந்து தருகின்றேன் உள்மனத்தை
காணிக்கையாய் ஏற்றிடுவாய்
2. அருளில் வாழ நித்தமும் துணைபுரிந்தீர்
புதிய வாழ்வில் வளர உறவும் தந்தீர்
தூய்மையில் வளர்ந்திட அழைப்பை நீர் தந்தீர்
ஒப்புயர்வில்லா பேரருள் பொழிந்துள்ளீர் - 2
நன்றியால் தருகின்றேன்
என் வாழ்வைக் காணிக்கையாய் ஏற்றிடுவாய்

593. காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம்
காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம்
காலத்தின் தலைவா நீர் கரம் நீட்ட வேண்டும்
காரணத்தோடு எனைப் படைத்தவரே
காணிக்கையாய் எனை ஏற்றுக் கொள்வீரே
1. உள்ளத்தை உமக்கே தர வந்தேன்
உகந்தது அதுவே என நினைத்தேன் - 2
உலகத்தை அன்பால் மீட்டவரே - 2
உமக்கென எனை நான் தருகின்றேன்
2. என்னகம் படைத்து எனைக் காத்தீர்
என்னை நான் தருவேன் உமக்கெனவே - 2
எனக்கென்று ஒன்றில்லை இவ்வுலகில் - 2
என்னையே அளிக்கின்றேன் உவப்புடனே

594. காணிக்கை கொண்டு வந்தேன்
காணிக்கை கொண்டு வந்தேன்
ஏழை என் காணிக்கை கொண்டு வந்தேன்
என்னிடம் இருப்பதை உன்னிடம் கொண்டு வந்தேன்
1. உடலும் உயிரும் உமதே
எந்தன் வாழ்வின் வடிவம் உமதே
உள்ளமும் மனமும் உமதே
எந்தன் வாழ்வின் வளமும் உமதே
படைப்பின் சிகரம் நானன்றோ-2
என்னைப் படைத்த தேவனே உம்மிடமே
தருகின்றேன் என்னையே காணிக்கையாக
2. அப்பமும் இரசமும் உமதே
எந்தன் வாழ்வின் வலிமை உமதே
வலியும் பொருளும் நீயே
எந்தன் வாழ்வின் பொருளும் நீயே
கரங்கள் விரித்து அழைக்கின்றாய்-2
என்னை அணைக்கும் தேவனே உம்மிடமே

595. காணிக்கை தந்தேன் இறைவா - என்னை
காணிக்கை தந்தேன் இறைவா - என்னைக்
காணிக்கை தந்தேன் இறைவா - 2
1. உடலாக வந்தாய் உயிராக வந்தாய்
ஒளியாக வழியாக உண்மையிலும் வந்தாய்- 2
உடலோடு இணைந்து உயிரோடு கலந்து - 2
ஒளியாக வழியாக உம்மில் என்றும் மலர
2. என் வாழ்வு என்றும் குன்றாது போக
உன் வாழ்வில் என்றும் நான் வாழ வேண்டும் - 2
எந்நாளும் என்னில் உன் அன்பு கொள்ள - 2
இந்நாளும் என்னில் உன் பாதம் வைத்து

596. காணிக்கை தந்தேன் தேவா
காணிக்கை தந்தேன் தேவா - என்னைக்
காவலாய் வைத்தேன் நெஞ்சில் உன்னை
காலமும் நீ துணை எந்தக் காலமும் நீ துணை
1. எளிமை மென்மை பணிவென்னும் எனது புனித மலர்களை
ஒளிமிகும் உன் தாளில் வைத்து
என்றுமே ஒன்றியே உம்மிலே வாழவே - 2
2. சிலுவை தொடரும் வாழ்வில் என் சிரம் நிமிர்ந்து
பூவில் உன் அலுவலாற்றி அலகை ஆட்சி வீழ
நின் அரசிலே ஊழியம் புரியவே - 2

597. காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காலத்தைக் கடந்தவா இறைவா
எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா - 2
1. கண்ணீரிலும் செந்நீரிலும் மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா - 2 காயமும் குருதியும் நிதம் காணும் - 2
எம் உறவுகளைத் தருகின்றோம் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்
2. துன்பங்களில் வாடுகின்ற
நொறுங்குண்ட உள்ளங்களைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா - 2
நியாயமும் நீதியும் இனி நிலவ - 2
எம் நிலைகளையே ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்

598. காணிக்கை தந்தோம் கர்த்தாவே
காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர் தானே - 2
1. நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது - 2
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் - 2
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
ஆனாலும் உன் அன்பு மாறாது
2. ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே - 2
கண்ணீரைப் போலக் காணிக்கை இல்லை - 2
கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

599. காணிக்கை தர நான் வருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன்
உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்
1. என்ன கொடுத்தாலும் பயனில்லை - நான் என்னைக்
கொடுக்காமல் பொருள் கொடுத்தால்
என்னையே தான் நீ கேட்கின்றாய் - நான்
என்னையே முழுவதும் தருகின்றேன்
2. சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும்
மனம் உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும்
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் - அதை
பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய்

600. காணிக்கை தர நான் வருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன்
கனிவுடன் என்னையும் ஏற்றிடுவாய்
இறைவா இறைவா ஏற்றிடுவாய் - 2
பலிப்பொருளாய் எனை மாற்றிடுவாய்
1. உள்ளதெல்லாம் ம் தர வந்தோம் ம்
உவப்புடன் ஏற்றிடுவாய் ஆ
உணவையெல்லாம் ம் உடைமையெல்லாம் ம்
உம் பலிப்பொருளாய் ஆக்கிடுவாய் இறைவா
2. உழைப்பையெல்லாம் ம் உயர்வையெல்லாம் ம்
உணர்ந்து தருகின்றோம் ஆ
உலகையெல்லாம் ம் உறவையெல்லாம் ம்
உருவாக்க வேண்டி படைக்கின்றோம் இறைவா
கனிவுடன் என்னையும் ஏற்றிடுவாய்
இறைவா இறைவா ஏற்றிடுவாய் - 2
பலிப்பொருளாய் எனை மாற்றிடுவாய்
1. உள்ளதெல்லாம் ம் தர வந்தோம் ம்
உவப்புடன் ஏற்றிடுவாய் ஆ
உணவையெல்லாம் ம் உடைமையெல்லாம் ம்
உம் பலிப்பொருளாய் ஆக்கிடுவாய் இறைவா
2. உழைப்பையெல்லாம் ம் உயர்வையெல்லாம் ம்
உணர்ந்து தருகின்றோம் ஆ
உலகையெல்லாம் ம் உறவையெல்லாம் ம்
உருவாக்க வேண்டி படைக்கின்றோம் இறைவா
601. காணிக்கை தர வந்தோம் - உன்
காணிக்கை தர வந்தோம் - உன்
மலரடி பாதங்கள் வணங்க வந்தோம் - 2
வரங்களைப் பொழியும் நாயகனே - எம்
கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம்
உன் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம்
1. இயற்கையின் எழிலினிலே உனக்கு எம்
சந்தன மலர்களை எடுத்து வந்தோம்
தீபங்கள் ஏந்தித் திருமுன் ஏற்றக் கூடி வருகின்றோம் - 2
உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம்
2. கோதுமை கதிர்மணி போல் இணைந்து எம்
வாழ்வினைக் காணிக்கை ஆக்க வந்தோம்
நாவினால் உந்தன் புகழினைப் பாட மேடை வருகின்றோம் - 2
வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற
எம்மையே தருகின்றோம் ஆ

602. காணிக்கை தர வந்தோம்கலங்கியஎங்களின் நெஞ்சங்களை
காணிக்கை தர வந்தோம்கலங்கியஎங்களின் நெஞ்சங்களை
காணிக்கை தரவந்தோம் கருணைமிகும் உந்தன் பாதங்களில் - 2
1. உண்மை உறங்கிடலாம் உள்ளம் இருளினில் மூழ்கிடலாம் - 2
உன்னதன் உன்னை உணர்ந்துவிட்டால் - அந்த
இருளிலும் அருள் ஒளி தென்படுமே - 2
துன்பம் மறைந்திடவும் துயரங்கள் களைந்திடவும் - 2
தேவனுன் பாதத்தில் சரணடைந்தோம் - 2
2. இரசத்துடன் நீர் கலந்து உந்தன் திரு விலாக் குருதி கண்டோம்
சிந்திடும் உந்தன் அன்பின் துளிகள் - ஏந்தி
இதயத்தை மலரெனப் படைத்துவிட்டோம் - 2
பன்மை மறந்திடவும் பகைமை அழிந்திடவும் - 2
பரமனுன் பாதத்தைப் பணிந்திடுவோம் - 2

603.காணிக்கை தரும் நேரம் கடவுளே உன் திருமுன்னே
காணிக்கை தரும் நேரம் கடவுளே உன் திருமுன்னே
அன்பென்னும் பலியாக அள்ளித் தரும் நேரம்
என்னைப் படைத்தேன் என்னைப் படைத்தேன்
இன்றும் என்றும் உந்தன் உகந்த காணிக்கையாய் - 2
1. வாழும் வாழ்வை பலியாய்த் தந்தேன் வரமே தருவாய் நீ - 2
போதும் என்ற மனமே தந்து பொறுத்துக் கொள்வாய் நீ - 2
என் அன்பு தேவனும் நீ என் வாழ்வின் சீவனும் நீ - 2
என் வாழ்வின் சீவனும் நீ
2. உள்ளம் விரும்பும் இறைவன் நீரே உவந்து தரவந்தேன் - 2
நீதி வாழ்வைத் திருமுன் தந்த நிம்மதி பெறுகின்றேன் - 2
என் அன்பு தேவனும் நீ

604. காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன்
காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன் - 2
ஏற்றருளும் தெய்வமே எளியவர் தருகின்ற காணிக்கையை - 2
1. படைப்புகள் பலவாகினும் பரமன் உமக்கே சொந்தம் - 2
அதில் மலராகும் என் மனம் உன்னிடத்திலே - 2
மனம் காண ஏற்றிடுமே - 2
2. பிறரன்புப் பணிகளெல்லாம் தலைவன் உமதன்றோ - 2
என்றும் உமதன்புப் பணியில் என் வாழ்வினை - 2
பலியாக ஏற்றிடுமே - 2

605. காணிக்கை தனையே சுமந்து வந்தோம்
காணிக்கை தனையே சுமந்து வந்தோம்
கனிவாய் எம்மை ஏற்றிடுவீர்
காலங்கள் அனைத்தும் உம்மோடு - 2
வாழ எம்மை அர்ப்பணித்தோம்
1. இரசத்தில் கலந்திடும் நீர்த்துளி போல
உம்மில் நாங்கள் கலந்திட வேண்டும்
எங்கள் வியர்வையின் மனங்களைத் தந்தோம் - 2
ஏற்றருள்வீர் என வேண்டுகிறோம்
2. குறைகள் நிறைந்த வாழ்வை உமக்கு
காணிக்கையாக்கக் கூடி வந்துள்ளோம்
அன்பின் வழியே அருள் தரும் சுனையோ - 2
புனிதத்தில் எம்மை வழிநடத்தும்

606. காணிக்கைப் பொருட்களைக் கரங்களில் ஏந்தி
காணிக்கைப் பொருட்களைக் கரங்களில் ஏந்தி
உம் பீடம் வந்தோம் இறைவா ஏற்றுக்கொள்வாய் இறைவா - 4
1. மலர்களில் பல வகை அதில் மணமில்லாச் சிலவகைகள்
அவை அழகுற உன் பீடம் அலங்கரிக்க
நாங்களும் கூடிவந்தாம் எம்மையும் ஏற்றுக்கொள்வாய்
2. பிறர்பகை மறந்தன்புடன் என் பீடம் நீ வாவென்றாய்
பகைமறந்தே மலர் கனிப்பொருள் ஏந்தி
உன் பீடம் வந்தோம் இறைவா எம் பலி ஏற்றுக்கொள்வாய்

607.காணிக்கையாக எம்மைத் தருகின்றோம்
காணிக்கையாக எம்மைத் தருகின்றோம் - உன்
கரத்தில் வாழ நாளும் இணைகின்றோம் - 2
பலியை அல்ல இரக்கம் விரும்பும்
பரமனே எம்மை அளிக்கின்றோம்
1. எம்மை மீட்க உம்மைத் தந்தீர் கல்வாரி சிகரத்தில் - 2
அல்லும் பகலும் உன் கரத்தில்
ஆழ்ந்து கிடப்பேன் உன் நினைவில் - என்
சிந்தனை சொல் செயல் யாவுமே
உமக்கே அளிக்கின்றோம்
2. பாவத்தைப் போக்கி சாபத்தை ஏற்றி மனித உருவிலே - 2
நிலத்தில் விளைந்த பொருள்களை
இறைவா நிறைவாய்த் தருகின்றோம்
படைப்பின் இறைவன் நீர் தானே
மகிழ்ந்தே கொடுக்கின்றோம்

608. காணிக்கையாக நான் வந்தேன்
காணிக்கையாக நான் வந்தேன்
உந்தன் கமலபாதம் சரணடைந்தேன்
ஏற்றருள்வீர் என்னை ஆண்டவரே - 2
1. வானும் மண்ணும் உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
வாழ்வில் வழியும் உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
உம் அன்பெனக்கென்றுமே இனிமையானது
உன் அருளெனக்கென்றுமே போதுமானது
சரணம் இயேசுவே - 3 சொந்தம் ஆனேன் - 2
2. உடல் பொருள் ஆவி உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
உழைப்பின் பயனும் உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
உம் வாக்கெனக்கென்றுமே நிலைவாழ்வு தருவது
உம் இரக்கம் எனக்கென்றுமே தேவையானது - சரணம்

609. காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்
காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்
படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்
குயவன் நீயே களிமண் நானல்லவா
குன்றாத உனது மகிமை நான் சொல்லவா
இறைவனே ஆகட்டும் உன் உளமே
1. அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்
அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து
அமைத்திட நீ பணித்தாய் - 2
எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்
வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்
உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக
2. சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன
காய்க்காத மரமும் கனியில்லாக்
கொடியும் காய்ந்தும் இழப்பென்ன
எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக
உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம் - உம்

610. காலைப் பனியில் நனைந்த மலர்களைக்
காலைப் பனியில் நனைந்த மலர்களைக்
காணிக்கையாகத் தருகின்றேன்
கனிவுடன் ஏற்றுஎந்தன் மனத்தைக் கனிதரும் மலராய் மாற்றிடுவாய்
1. படைப்புகள் முழுமையும் படைத்தவரே
உம் மனம் குளிர எதைக் கொடுப்பேன்
தேடித் தேடி அலைந்தபோதும்
புதிதாய் எதுவும் கிடைக்கவில்லை
இயற்கை எல்லாம் காணிக்கை தந்திட - 2
ஏழை நான் எதைத் தருவேன்
ஏழை என் இதயம் ஒன்றைத் தவிர
2. சேற்றில் வாழும் மலர்களில் நானும்
பாவ சகதியில் வாழ்கின்றேன்
ஒளிர்ந்து மடிந்திடும் மெழுகினைப்போல
உன்னிலே என்னை மாற்றிடுவாய்
வியர்வையில் விளைந்த உழைப்பின் பயனை - 2
வேந்தனே நீயும் ஏற்றிடுவாய்
ஏழைக் கைம்பெண் காணிக்கை போல

611. கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் இராகம்
கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் இராகம்
அர்ப்பணித்தேன் என் ஆருயிரை
வாழ்வை உன் கரங்களில் கையளித்தேன்
1. உன்மடி அமர்ந்து உன்னையே பழித்தல் உறவென்றாகுமா
உன்மொழி கேட்டும் என் வழி வாழ்தல் உன்னிடம் சேர்க்குமா
உன்பலி தொடர வருகின்றேன்
உள்ளத்தைத் தருகின்றேன் - எந்தன்
2. உழைக்கும் மாந்தர் உயரும் நிலையும் உலகில் மலரணும்
உழைப்பின் மாண்பை வளர்க்கும் செயல்கள்
உண்மையில் நிலைக்கணும் உரிமைகள் உணர்ந்து வருகின்றேன்
உன்னிடம் தருகின்றேன் - என்னை

612. கையளிக்கின்றேன் இறைவா
கையளிக்கின்றேன் இறைவா - எந்தன்
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு - 2
1. வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன்
அருள்நிலை ஒன்றே மேலானது - 2
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - 2 எல்லா
வரங்களையும் விட மேலானது
2. செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன்
இதயமும் உமது முன் நிறைவு பெறும் - 2
முழுமை என் உள்ளத்தை நிரப்பிடவே - 2 நாவில்
மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும்

613. கையால் இதை ஏற்றருளே - எந்தன்
கையால் இதை ஏற்றருளே - எந்தன்
காணிக்கையை அருள்செய் இறையே
மெய்யாய் ஏழையின் காணிக்கை தனையே
மேன்மையாய் ஏற்றருள் செய்வாய் உன் துணையே
1. பூவிலென் செபங்கள் காணிக்கைப் பொருட்கள்
யாவையும் செலுத்தி உன் நாமத்தைப் புகழ்வேன்
பாவி உன் அடிமை ஊழியன் மைந்தன்
பாரிலென் தளைகளை நீரவிழ்த்தீரே
2. உமக்கெந்தன் தோத்திரமாம் பலியினையே
இமைப்பினில் ஈந்தனன் இது எந்தன் பணியே
அமலாயுன் இரட்சிப்பின் பாத்திரந்தனையே
சுமந்துந்தன் நாமத்தைத் தொழுவேன் நான் இனியே

614. கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை
தந்தேன் என்னையே அன்புடனே
சரணடைந்தேனே சரணடைந்தேனே
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன்
1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வைத்
தந்தேன் என்னையே அன்புடனே - 2 சரணடைந்தேனே
2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை

615. கொடைகளின் தந்தையே கொடுக்கின்றோம் காணிக்கை
கொடைகளின் தந்தையே கொடுக்கின்றோம் காணிக்கை
உடைமையாய் அளித்ததை உமக்கே படைக்கின்றோம் - 2
1. உலகினை இந்த இயற்கையை உருவாக்கினீர் நீரன்றோ - 2
பலவகை உயிரினங்களைப் படைத்தவர் நீரன்றோ
அனைத்தையும் தந்தவர் நீர்தானே அன்புடன் அர்ப்பணித்தோம்
2. உழைத்திட வாழ்வில் உயர்ந்திட எம்மை அழைப்பவர் நீர்தானே-2
புதுயுகம் மண்ணில் படைத்திட விதை விதைப்பவர் நீர்தானே
புதுமை நாயகன் நீர்தானே புனிதனே பணிகின்றோம்

616. சமர்ப்பணம் செய்தேன் இறைவா
சமர்ப்பணம் செய்தேன் இறைவா
உறவினை வளர்க்கும் தூதனாக
என்னையே தந்தேன் தலைவா - 2
1. ஒளியினைத் தேடும் விழிகளுக்கு
நம்பிக்கை ஒளியைக் கொணர்ந்திட சமர்ப்பணம் - 3
புன்னகை மறந்த இதழ்களுக்கு
குறையாத மகிழ்வைக் கொணர்ந்திட சமர்ப்பணம் - 3
என்னை ஓர் கருவியாய் ஏற்றிடுவாய்
புதுப்படைப்பாய் மாற்றிடுவாய் - 2
2. உறவுகள் பிரிந்து தவிப்பவர்க்கு
அன்பின் தோழமை கொணர்ந்திட சமர்ப்பணம் - 3
உரிமைகள் இழந்து உடைந்தவர்க்கு
உரிமை வாழ்வைக் கொணர்ந்திட சமர்ப்பணம் - 3 என்னை

617. சொல்லால் எல்லாம் செய்தவனே எல்லாம் தந்தோமே
சொல்லால் எல்லாம் செய்தவனே எல்லாம் தந்தோமே
வாழ்வால் எல்லாம் சொன்னவனே தாழ்வாய்த் தந்தோமே
போற்றுவோம் இறைவா வாழ்த்துவோம் தலைவா
1. முன்னால் சோதனை பின்னால் வேதனை
இந்நாள் கொண்டு வந்தோம்
உன்னால் சாதனை உன்மொழி போதனை
பொன்னாற் பாதம் வைத்தோம்
கலக்கம் தயக்கம் கண்டோமே களிப்பு செழிப்பு தந்தோமே
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் மலர வைப்பாய் கனி கொடுப்பாய்
2. செய்வினை பாவங்கள் சொல்வினை காயங்கள்
சேர்த்துக் கொண்டு வந்தோம்
காய்ந்திட்ட உள்ளங்கள் தேய்ந்திட்ட உறவுகள்
கனிவாயுன் பாதம் வைத்தோம் தாழ்வும் உயர்வும் கண்டோமே
தலைவன் உன் கரம் தந்தோமே - ஏற்றிடுவாய்

618. தந்தாய்நாங்கள் வந்தோம் உம்பாதம்காணிக்கை தந்தோம்
தந்தாய்நாங்கள் வந்தோம் உம்பாதம்காணிக்கை தந்தோம்
ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் வாழ்வுகள் மலர அருள்புரிவீர்
1. கல்வாரி மலைமீது சிலுவை நம் பாவப் பரிகார முழுமை
எவ்வாறு சுமப்போம் பளுவை என்பவன் சுயநலத்தின் அடிமை
ஓ இயேசுவே எம் அன்பினைக் காணிக்கையாகத் தந்தோம்
ஓ இயேசுவே எம் வாழ்வினை அர்ப்பணம் செய்திட வந்தோம்
2. ஏழ்மையில் வாழ்ந்திடும் சிலுவை ஏளனப் பொருளாகும் நிலைமை
எவ்வாறு மாற்றுவது இதனை என்பதே வாழ்க்கையின் கடமை
ஓ இயேசுவே பணி வாழ்வினைக் காணிக்கையாகத் தந்தோம்
ஓ தேவனே உன் தோள்களின் சிலுவை சுமந்திட வந்தோம்

619. தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் - 2
1. வழங்கிடக் கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா - 2
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் இல்லா நிலை இறைவா
2. உனக்கென எம்மை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் - 2
எங்கள் மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம்
மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம்

620. தந்தேன் இறைவா உன் தாளினைப் பணிந்து தந்தேன்
தந்தேன் இறைவா உன் தாளினைப் பணிந்து தந்தேன்
என் வாழ்வை முழுவதும் உன்னிடம் தந்தேன்
ஏற்றருள்வாய் என் இறைவா ஏற்றருள்வாய் - 2
1. உலகினை எனக்களித்தாய் அதில்
உயர்வாம் பொருளையும் சேர்த்தளித்தாய் - 2
மனத்தினை உனக்களித்தேன் - 2 என்
மண்ணிலே மகிழ்ந்திட்ட மனமளித்தேன்
புனிதமாக்கும் என் மனத்தை புனிதமாக்கும் புனிதமாக்கும்
2. வலிமையை எனக்களித்தாய் உடன்
வளம் சேர் அறிவையும் சேர்த்தளித்தாய் - 2
வலிமையைப் பயன்படுத்தி - 2 நான்
நலனோடு நலிவும் அனுபவித்தேன்
புனிதமாக்கும் என் உழைப்பை புனிதமாக்கும் புனிதமாக்கும்

621. தந்தேன் தந்தேன் இறைவா - என்னைத்
தந்தேன் தந்தேன் இறைவா - என்னைத்
தந்தேன் தந்தேன் தலைவா - 2
உள்ளதை எல்லாம் உமக்காக
உயிர் பலியானாய் எமக்காக - அதில்
என்னையும் இணைத்திட வா ஆ
1. இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம் - அங்கு
இருக்கும் வளங்கள் உந்தன் அருள்கோலம் - 2
கண்டேன் கண்டேன் உந்தன் கருணையுள்ளம் - தினம்
வந்தேன் வந்தேன் உந்தன் மலர்ப்பாதம்
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் - உன்
பலியாய் என்னையும் மாற்றிடுவாய் - 2
2. இதழ்கள் விரிக்கும் நல் மலர்க்கூட்டம் - எங்கும்
இறைவன் இருப்பதைப் பறைசாற்றும் - 2
என்றும் என்றும் என் இயேசு தேவா - நீ
தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கைப் பொருளாய் நான் மாறி - உன்
காலடி வந்தே சரணடைந்தேன் - 2

622. தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்
தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்
தலைவனுன் பீடத்தில் காணிக்கையாய்த்
தகுதியில்லா என்னை உம் அன்பினால்
தயவுடன் ஏற்பாய் பலிப்பொருளாய்
1. உழைப்பின் பலனைப் படைத்திட வந்தேன்
உம் திருப்பதத்தில் எனை ஏற்க வேண்டும் - 2
உம் அருள் துணை நம்பி வாழ்வினைத் தொடர்ந்திட - 2
உவந்து நீர் ஏற்பீர் ஏழை என் காணிக்கை
இறைவா ஏற்பாய் நிலைக்கும் உறவாய்
இறைவா இணைப்பாய் என் வாழ்வை இனிதாய்
2. ஆறுதல் இன்றி வாழ்ந்திடும் வறியோர்
ஆனந்தம் அடைந்திட அடியேனைத் தேர்ந்தீர் - 2
அன்பதன் கொடைகளை அவனிக்கு அளித்திட - 2
அர்ப்பணப் பலி என்னை அன்பாய் ஏற்பீர் - இறைவா

623. தரணியர் இணைந்து தரும் பலிப்பொருளை
தரணியர் இணைந்து தரும் பலிப்பொருளை
தந்தாய் நீ ஏற்பாய் - 2
1. நிதமும் உழைத்த பயனாக நிலத்தில் விளைந்த பலன் யாவும் 2
நிறைவுடன் திருமுன் படைக்கையிலே
அனுதின உழைப்பையும் அளிக்கின்றோம்
2. உறவை உணர்த்தும் பலியினிலே
ஒருங்கே உன்னில் இணைந்திடவே - 2
வேற்றுமை தவிர்த்தோம் வாழ்வினிலே
ஒற்றுமை வளர்த்திட அருள்புரிவாய்

624. தருவதெல்லாம் உனதன்றோ இறைவா
தருவதெல்லாம் உனதன்றோ இறைவா
தரணியெல்லாம் உம்முடையதே தலைவா
ஏழை எந்தன் வாழ்வினையே ஏற்று புனிதமாக்குவாய்
ஏற்றிடுவாய்ப் புதிதாய் மாற்றிடுவாய்
1. நிறைந்த வாழ்வினைக் கொடுத்தாய் இறைவா
மறந்து உந்தன் அன்பிலிருந்து பிரிந்து சென்றேனே
அன்பனே நண்பனே என்னையே தந்தேனே - 2
அருள்வளத்தால் கொடுத்த கொடைக்கு
நன்றியாக எனைத் தந்தேன்
ஏற்றிடுவாய்ப் புதிதாய் மாற்றிடுவாய் - 2
2. இளைஞர் உலகை நீ படைத்தாய் இறைவா - உந்தன்
இதய உணர்வுகளை அவர்களுக்களித்தாய்
புனிதனே இறைவனே பணிந்தேனே உன் பாதமே
திருவுளத்தை வியந்து புகழ்ந்து
உந்தன் பணியில் எனைத் தந்தேன்

625. தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே
தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே - மனம்
இங்கு மலராய் மலர்ந்து உன்னில் உயிராய்க் கலந்து
வருவேன் உன் அன்பில் இணைந்து
1. குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குமே
இறைவா வருவாய் என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தேன்
உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய்த் தினம் கொடுப்பேன்
2. இரசத்துடன் நீர்த்துளி போல் எனைச் சேர்த்து உன் இரத்தமாக்கும்
அப்பத்தில் எழுவாய் மாற்றிடு நல்திரு உணவாய்
என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளிப்பேன்

626. தன்னையே தந்தவரே உள்ளங்கள் எடுத்து வந்தோம்
தன்னையே தந்தவரே உள்ளங்கள் எடுத்து வந்தோம்
உம்மாலே தான் உயிர் வாழ்கிறோம் உம் பாதம் சரணாகிறோம்
எம் ஆயுட்காலங்கள் உம் அன்புக்கோலங்கள்
எல்லாம் உமக்காக -2
1. ஆகாயம் தருகின்ற துளிகளாக
எண்ணற்ற நன்மைகள் எமக்குத் தந்தாய்
உடன் உயிர் உழைப்பையும் திறமைகள் பொருளையும்
உமக்கென மகிழ்ந்து கொண்டு வந்தோம்
வளம் கூட்டுவாய் வாழ்வாகுவாய் - 2
உன் நிழலில் உயிர் வாழவே
2. மண்ணிலே வாழும் மனிதரிடம்
கதிரவன் பேதங்கள் காண்பதில்லை
கதிரவன் போல் உந்தன் அன்பினில் இணைந்து
காணிக்கை தருகின்றோம் குடும்பமாக
ஒன்றாகுவோம் உமதாகுவோம் உறவுகள் புதிதாகவே

627. திருமுன் வந்தோம் திருப்பலிப் பொருளுடன்
திருமுன் வந்தோம் திருப்பலிப் பொருளுடன்
அருளுடன் ஏற்பாய் திருவே - 2
1. தளிர்பாதம் வைத்தே படைத்தோம் பொருளை
ஒளிர்கரம் கொண்டு ஆசீர்வதிப்பாய் - 2
களிப்புடன் எம்மையும் ஒன்றாக இணைந்து ஆ - 2
அளித்தோம் பலியாய் இறைவா ஏற்பாய் - 2
2. அளிக்கும் பொருளோ அருகதை உண்டோ
அளிப்பவர் தாமோ தகுதியும் உண்டோ - 2
இருப்பினும் பொருளை எம்மோடு கொணர்ந்து
விரும்பி இறைவா ஏற்றிடு என்றோம் - 2

628. திருவே திருப்பலிப் பொருள் தனையே - உன்
திருவே திருப்பலிப் பொருள் தனையே - உன்
திருக்கழல் வணங்கித் தருகின்றோம் - 2
1. ஒளிரும் தணலில் உனதெழில் வடிவை
உணர்ந்திடப் புகுவோம் அன்பாகப்
புரிந்திடும் வேள்வி விளைந்திடும் ஒளியில்
புனிதனைப் படைத்தோம் பலியாக - 2
2. ஏழையர் வழங்கும் உளமெனும் தீபம்
எரிந்திட உன் அருள் கனல் வேண்டும்
உலகின் இருளே விடுபட என்றும்
உன்னிடம் சரணம் பெறவேண்டும் - 2

629. தீப ஒளியும் தூபப் புகையும் உந்தன் நினைவாகும்
தீப ஒளியும் தூபப் புகையும் உந்தன் நினைவாகும்
மலரின் மணமும் கனியின் சுவையும் உந்தன் புகழ்பாடும்
மனித மாண்பு மலரும் வாழ்வே நீ விரும்பும் பலியாகும்
மனிதம் எங்கும் மலர வேண்டி பலியாய்வருகின்றோம் - தீப ஒளியும்
1. ஏழை எங்கள் வாழ்விலும் விடியல் உண்டு என்றவா - 2
புதிய வானம் புதிய பூமி புலரும் நாளைக் காணவே - 2
வருகின்றோம் யாம் தருகின்றோம்வாழ்வைப் பலியாய் தருகின்றோம்
புனிதம் உந்தன் மலர்ப்பதம்
2. நீதி வாழ்வின் உரிமையே இறைவன் அரசு என்றவா - 2
நீதி நேர்மை தளைத்து ஓங்கும்
வாழ்வு உலகில் அமையவே - 2 வருகின்றோம்

630. தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே
தெய்வீகப் பலியில் உறவாடும் தெய்வமே - 2
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் - 2
1. வானம் காணும் ஒளி எல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
மேகம் சிந்தும் துளி எல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்
2. வேதம் சொன்ன வழியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
பாதம் படைத்த கனியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2 இந்த
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் - 2
1. வானம் காணும் ஒளி எல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
மேகம் சிந்தும் துளி எல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்
2. வேதம் சொன்ன வழியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2
பாதம் படைத்த கனியெல்லாம் - என்
தேவன் தந்த காணிக்கை - 2 இந்த
631. தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன் - என்றும்
தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன் - என்றும்
எந்தன் பணி வாழ்வை ஏற்றிடுவாய் - 2
1. அன்பொன்றே தினம் தேடி அலைகின்ற
நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன்
காத்திருக்கும் மனிதர்கள் கூட்டமிங்கே - 2
அன்போடு நான் வாழுவேன்
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன் - 2
நல் அன்பைத் தேடும் புவிமாந்தர் வாழ
என் வாழ்வை பலியாக்குவேன் - 2
2. விடியாதா பொழுதென்று வீங்கிடும் விழியோடு
ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும்
பரிதாப வாழ்க்கை இங்கே - 2
தேவா நான் சுடராகுவேன்
எங்கும் நம்பிக்கை ஒளியேற்றுவேன் - 2
போராடும் நெஞ்சில் போராட்டம் நீக்க
என் வாழ்வைப் பலியாக்குவேன் - 2

632. நாங்கள் தருகின்ற காணிக்கை
நாங்கள் தருகின்ற காணிக்கை
இதை ஏற்றருள் தெய்வமே - 2
1. நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் - 2
கண்ணீர்ப் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
2. வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
இதை ஏற்றருள் தெய்வமே - 2
1. நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் - 2
கண்ணீர்ப் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
2. வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்
633. நானே ஒரு காணிக்கைப் பொருளாக
நானே ஒரு காணிக்கைப் பொருளாக
உம் பீடத்தின் முன் வந்தேன் பணிவாக
தந்தையே ஏற்பாயோ பலியாக
1. சிந்தித்தேன் சிந்தித்தேன் வெகுவாக
சிந்தையில் படவில்லை உயர்வாக - 2
தந்திட்டேன் என்னையே முடிவாக - 2
தந்தையே ஏற்பாயோ பலியாக
2. படைத்திட்டாய் படைத்திட்டாய் பலவாக
படைப்பு அனைத்தும் எமக்காக - 2
உன் அன்புக் கொடைக்கென்னைப் பரிசாக - 2
தந்தையே ஏற்பாயோ பலியாக
உம் பீடத்தின் முன் வந்தேன் பணிவாக
தந்தையே ஏற்பாயோ பலியாக
1. சிந்தித்தேன் சிந்தித்தேன் வெகுவாக
சிந்தையில் படவில்லை உயர்வாக - 2
தந்திட்டேன் என்னையே முடிவாக - 2
தந்தையே ஏற்பாயோ பலியாக
2. படைத்திட்டாய் படைத்திட்டாய் பலவாக
படைப்பு அனைத்தும் எமக்காக - 2
உன் அன்புக் கொடைக்கென்னைப் பரிசாக - 2
தந்தையே ஏற்பாயோ பலியாக
634. நிலையில்லா எம் வாழ்விலே
நிலையில்லா எம் வாழ்விலே
நிலைப்பதே உன் அருளொன்றே
அளவில்லா உன் கருணையால்
அனைத்தும் பலியாய் அளிக்கின்றோம்
1. அமைதியான உலகம் தேடி
அலைந்து நாளும் வேண்டினோம் - 2
அன்பு பொழியும் இறைவனென்று
அருளின் தாளைப் பணிகின்றோம் - 2
2. உழைப்பதெங்கள் கரமென்றாலும்
உறுதி உம்மால் வேண்டுமே - 2
விளைக்கும் எண்ணம் இனிது வளர
உமது தூய்மை வேண்டுமே - 2
நிலைப்பதே உன் அருளொன்றே
அளவில்லா உன் கருணையால்
அனைத்தும் பலியாய் அளிக்கின்றோம்
1. அமைதியான உலகம் தேடி
அலைந்து நாளும் வேண்டினோம் - 2
அன்பு பொழியும் இறைவனென்று
அருளின் தாளைப் பணிகின்றோம் - 2
2. உழைப்பதெங்கள் கரமென்றாலும்
உறுதி உம்மால் வேண்டுமே - 2
விளைக்கும் எண்ணம் இனிது வளர
உமது தூய்மை வேண்டுமே - 2
635. படியேறி வருகின்றேன் தேவா - என்னைப்
படியேறி வருகின்றேன் தேவா - என்னைப்
பலியாக்க வருகின்றேன் தேவா - நான்
படியேறி வருகின்றேன் தேவா
1. மகனையே பலியாகக் கேட்டாய் - அபிரகாம்
மனமார பலியாகத் தந்தார் - 2
மனத்தினை மாசின்றிக் கேட்டாய் - நான்
மகிழ்வோடு தருகின்றேன் உனக்கே
2. ஏழை நான் என்றேங்கி நின்றேன் - எனக்கு
நீ வேண்டும் வாவென்றுச் சொன்னாய் - 2
பிழை செய்து நான் வாழ்ந்த போதும் - நீ
தயைசெய்து எனை ஏற்றுக் கொண்டாய்
பலியாக்க வருகின்றேன் தேவா - நான்
படியேறி வருகின்றேன் தேவா
1. மகனையே பலியாகக் கேட்டாய் - அபிரகாம்
மனமார பலியாகத் தந்தார் - 2
மனத்தினை மாசின்றிக் கேட்டாய் - நான்
மகிழ்வோடு தருகின்றேன் உனக்கே
2. ஏழை நான் என்றேங்கி நின்றேன் - எனக்கு
நீ வேண்டும் வாவென்றுச் சொன்னாய் - 2
பிழை செய்து நான் வாழ்ந்த போதும் - நீ
தயைசெய்து எனை ஏற்றுக் கொண்டாய்
636. படைத்ததெல்லாம் தரவந்தோம்
படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் - 2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் என் வாழ்வினிலே ஒளி வீசும்
1. உழைப்பினிலே கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே - 2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் - 2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் - 2 தருகின்றோம் - 2
2. வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே - 2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் - 2
கனிவாய் உவந்து தருகின்றோம் - 2 தருகின்றோம் - 2

637. படைத்தளித்தாய் எந்தன் பரம்பொருளே - இன்று
படைத்தளித்தாய் எந்தன் பரம்பொருளே - இன்று
எடுத்தருளே ஏழை கொடுப்பதனை - 2
1. நறுமணம் வீசும் மலர் கொணர்ந்தேன்
நாவினிற்கினிய கனி கொணர்ந்தேன் - 2
கரங்களை விரித்தே எனையளித்தேன்
கனிவுடன் ஏற்பீர் பரம்பொருளே
2. வெண்ணிறப் பொருளாம் அப்பமிதோ
செந்நிறப் பழரச பானமிதோ - 2
அண்ணலே உன் அடி அர்ப்பணமே
அன்புடனே இதை ஏற்றிடுமே
எடுத்தருளே ஏழை கொடுப்பதனை - 2
1. நறுமணம் வீசும் மலர் கொணர்ந்தேன்
நாவினிற்கினிய கனி கொணர்ந்தேன் - 2
கரங்களை விரித்தே எனையளித்தேன்
கனிவுடன் ஏற்பீர் பரம்பொருளே
2. வெண்ணிறப் பொருளாம் அப்பமிதோ
செந்நிறப் பழரச பானமிதோ - 2
அண்ணலே உன் அடி அர்ப்பணமே
அன்புடனே இதை ஏற்றிடுமே
638. படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் இராகமே - 2
1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் - 2
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் - 2
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே - 2
2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் - 2
வசந்த இராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே - 2
தந்தேன் என்னைத் தந்தேன்
என்றும் என் வாழ்வு உன்னோடு தான் - 2

639. பரலோகத் தந்தைக்கு பலியை அளிப்போம்
பரலோகத் தந்தைக்கு பலியை அளிப்போம்
குருவுடன் சேர்ந்து நம்மையே அளிப்போம் - 2
1. உடல் உயிர் அனைத்தையும் உமக்களிக்கின்றோம்
உரிமைகள் யாவையும் உடனளிக்கின்றோம் - 2
உலகினில் வாழும் உயிர் பொருள் யாவும்
உம் திருமகனோடு சேர்ந்தளிக்கின்றோம்
2. கிறிஸ்துவில் நாமும் என்றென்றும் வாழ்வோம்
கிறிஸ்துவில் நாமும் என்றென்றும் மகிழ்வோம் - 2
கிறிஸ்துவில் வாழ்வை நாமும் பின்தொடர்ந்து
கிறிஸ்தவனாய் இவ்வுலகினில் வாழ்வோம்

640. பலிசெய்ய நானும் வந்தேன் இறைவா
பலிசெய்ய நானும் வந்தேன் இறைவா
பலியாக்க என்னைத் தந்தேன் தலைவா - 2
1. நன்மையை நினைந்துநலம் பலசெய்து உம்மை பலியாக்கினீர்- 2
உண்மையில் நடந்து உயிரையும் தந்து உம்மைப் பலியாக்கினீர்
எந்நலம் மறந்து பிறர்நலம் காண என்னைப் பலியாக்குவேன்
உன்னிலே இணைந்து உன் பணி தொடர இன்று பலியாகினேன்
2. நிறைவினைஅடையக்குறைகளும்மறையஉம்மைபலியாக்கினீர்-2
இறைமொழி சொல்லி நிறைவழி செல்ல உம்மை பலியாக்கினீர்
வறியவர் எளியவர் சுமைகளில் உதவிட என்னை பலியாக்குவேன்
பகிர்வினில் உறவினில் பாலங்கள் அமைத்திட இன்று பலியாகினேன்

641. பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2
1. நிலையில்லா இந்தப் பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2
2. பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் சீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கி விடும் - 2
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2
1. நிலையில்லா இந்தப் பூவுலகில்
நித்தம் உன் பாதையிலே - 2
நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2
நித்தம் வழிநடத்தும் - 2
2. பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் சீவிக்க - 2
பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2
பரிசுத்தமாக்கி விடும் - 2
642. பலியாக எனை உனக்கு தருவேன் இன்று - இந்தப்
பலியாக எனை உனக்கு தருவேன் இன்று - இந்தப்
படைப்பெல்லாம் நீதானே படைத்தாய் என்று
எனையே நான் உமக்களித்தேன் இறைவா இன்று - 2
உருமாற்றி உனதாக்குத் தலைவா நன்று
தந்தேன் தந்தேன் தந்தேன் எனையே இறைவா
தருவாய் தருவாய் தருவாய் உம் அருளே இறைவா - 2
1. கோதுமை மணியும் திராட்சை கனியும்
புதிதாக மாற்றம் பெறுவது போல் - 2
நொறுங்குண்ட உள்ளத்தை நான் தருகின்றேன் - 2
நலமாக்கிப் புதிதாக்கத் தாள்பணிகின்றேன் - தந்தேன்
2. கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை
குறையின்றிக் கொடுத்து நான் வாழ்ந்திடவே - 2
மனமுவந்து எனையே நான் உமக்களிக்கின்றேன் - 2
தினம் தினம் நான் உள்ளதையே பகிர்ந்தளிக்கின்றேன்

643. பலியாக என்னைத் தந்தேன் நீ பரிசாக உன்னைத் தந்தாய்
பலியாக என்னைத் தந்தேன் நீ பரிசாக உன்னைத் தந்தாய்
உள்ளதெல்லாம் கொடுத்தேன் நீ உன்னையே அள்ளித் தந்தாய்
கண்மணி போலக் காக்கும் உந்தன்
கரத்தில் என்னை முழுதும் தந்தேன்
என்னோடு ஒன்றாகினாய் எல்லாமே உனதாக்கினாய்
1. வாழ்வென்பதோ வெள்ளத்திரை - அதில்
நிகழ்வென்பதோ நிழலோவியம் - 2
நிலையான உறவாக யாரும் இல்லை
குலையாத நம்பிக்கை எதிலும் இல்லை - 2
நீ இன்றி என் வாழ்வில் நிறைவே இல்லை
நீ என்னில் வந்தாலோ குறைவே இல்லை
2. இருள் நீக்கிடும் ஒளிவெள்ளம் நீ - என்
இதயம் தேடும் அருள்வள்ளல் நீ - 2
உன் வார்த்தை ஒளிதீபம் எரிகின்றதே
என் வாழ்வின் கீழ்வானம் சிவக்கின்றதே - 2
இருள் நேர அய்யங்கள் தடுமாறல்கள்
எனை நீங்கிப் புதுவாழ்வின் ஒளி தோன்றுதே

644. பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்
பலியிட வருகின்றேன் என்னை பலியென தருகின்றேன்
சிந்தனை சொல் செயல் உனக்காக
சிந்தும் நல்வியர்வையும் உனக்காக மகிழ்வுடன் தருகின்றேன்
1. இயற்கை தந்த நலன்கள் இறைவன் தந்த வளங்கள் - 2
மண்ணில் விளைந்த மணிகள் - 2 மனிதம் நாடும் மனங்கள்
மகிழ்வுடன் உன்பதம் படைக்கின்றேன்
மனம்நிறை பலியென ஏற்றிடுவாய்
2. வாழ்வில் மகிழும் கணங்கள் தாழ்ந்து வருந்தும் தருணம் - 2
உழைப்பில் உயரும் உணர்வும் - 2
உலகை உயர்த்தும் பணியும் - மகிழ்வுடன்

645. பலியிடும் நேரம் பரிசுத்த நேரம்
பலியிடும் நேரம் பரிசுத்த நேரம் - 2
பரமனே பலியாக பணிந்திடும் நேரம்
1. உள்ளதைக் கொடுத்து நல்லதைக் கேட்கும் நம்மவரின் நேரம்
உன்னதர் உறவில் உன்னையும்
என்னையும் இணைக்கின்ற நேரம்
இறைவனே என் தலைவனே
பலிப்பொருளாய் உன்னோடு என்னையும் இணைத்தேன் தேவா
2. கவலைகள் சொல்ல கஷ்டங்கள் நீக்கிடும் கர்த்தரின் நேரம்
கல்லான மனிதரும் கரையுள்ள மனமும் கசிந்துருகும் நேரம்
இறைவனே என் தலைவனே
பிறர் வாழ என்னையும் உன் பலி இணைத்தேன் தேவா

646. பலியென வருகின்றோம் பகிர்ந்திடத் தருகின்றோம்
பலியென வருகின்றோம் பகிர்ந்திடத் தருகின்றோம்
பலியென வருகின்றோம்
பாரினில் வழங்கிய பரிசெனும் வாழ்வைப்
படைத்த உமக்கு இன்று பகைமை உணர்வை வென்று
படைத்தோம் காணிக்கையாய்
1. வான் பொழியும் ஒவ்வொரு துளியும்
வளம் தரும் வசந்தத்தின் புது விதையே
தேன் தூவும் ஒவ்வொரு பூவும்
தேவனுன் தாய் அன்பின் தரிசனமே
தனக்காய்வாழாஇயற்கை போன்றுதன்னலம்தேடாஇதயம்வேண்டி
உயிரும் உணர்வுகளும் உழைப்பும் உணர்வுகளும்
உறவினில் தருகின்றோம்
2. நாள்தோறும் விடியும்ஆதவன் நம்பிக்கைச் சுடரேற்றும் புதுக்கனவே
ஏன்கேள்வியில்வாழ்வைத்தேடிடும்ஏக்கங்கள்எல்லாம்இறைகனவே
நல்லவை நினைத்தால் நன்மையே நிகழும்
நன்மைகள் ஒன்றித்தால் மாற்றங்கள் மலரும்
வாழ்வுக் கனவுகளை அப்பமும் இரசமுமாக்கி
வாழ்த்தியே வருகின்றோம்

647. பிரியாத உறவே என் இயேசுவே - உன்
பிரியாத உறவே என் இயேசுவே - உன்
பீடத்தில் பலியாக என்னைத் தந்தேன் - 2
1. எனக்காக உம்மை பலியாகத் தந்தீர்
அதற்காக என்னைப் பரிசாகத் தந்தேன் - 2
உணவாக உம்மை விருந்தாகத் தந்தீர் - 2
உணர்வோடு என்னை உமக்காகத் தந்தேன் - 2
2. நிலையான அன்பை நீர் தாமே தந்தீர்
நிழலாக என்னைத் தொடர்ந்தே வந்தீர் - 2
நீயின்றி என்னில் மகிழ்வேதும் இல்லை - 2
நின்பாதம் என்னை முழுதாகத் தந்தேன் - 2
பீடத்தில் பலியாக என்னைத் தந்தேன் - 2
1. எனக்காக உம்மை பலியாகத் தந்தீர்
அதற்காக என்னைப் பரிசாகத் தந்தேன் - 2
உணவாக உம்மை விருந்தாகத் தந்தீர் - 2
உணர்வோடு என்னை உமக்காகத் தந்தேன் - 2
2. நிலையான அன்பை நீர் தாமே தந்தீர்
நிழலாக என்னைத் தொடர்ந்தே வந்தீர் - 2
நீயின்றி என்னில் மகிழ்வேதும் இல்லை - 2
நின்பாதம் என்னை முழுதாகத் தந்தேன் - 2
648. புதியதோர் உலகைப் படைத்திட வந்தேன் - உமக்கு
புதியதோர் உலகைப் படைத்திட வந்தேன் - உமக்கு
புதியதோர் மனத்தைக் கொடுத்திட வந்தேன்
இறைவா இறைவா சரணம் தலைவா
1. இன்று நீதி நியாயம் நேர்மை நிலவிடும் உலகம்
என்றும் அன்பு அமைதி அறங்கள் தழைத்திடும் உலகம்
சமத்துவ சமுதாயம் வழங்கிடும் உலகம் - எந்த
சாதிப் பிரிவு அனைத்தும் தவிர்த்திடும் உலகம்
2. இன்று வாழ்வில் எளிமை தூய்மை துலங்கிடும் உலகம்
மக்கள் சொல்லில் செயலில் வாய்மை விளங்கிடும் உலகம்
ஏழ்மையின் சிரிப்பில் உம்மைக் கண்டிடும் உலகம்
எங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியமும் தந்திடும் உலகம்

649. பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - 2
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
என்னையாளும் மன்னவனன்றோ
1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ - என்
நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி - நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன் - இன்று
உனக்கு நான் எனையளித்தேன்
2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உனதருட் கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
உன்னிலே வாழ்ந்திடுவேன்

650. பொன்னும் மணியுமில்ல பூவும் பொருளும் இல்ல
பொன்னும் மணியுமில்ல பூவும் பொருளும் இல்ல
மல்லிப்பூவா எந்தன் மனம் இருக்கு - உன்
மலர்ப்பாதம் படைத்தால் போதும் எனக்கு
வந்தேன் வந்தேன் இறைவா என்னைத்
தந்தேன் தந்தேன் தலைவா
1. உள்ளம் எல்லாம் அன்பிருக்கு - உன்
சொல்படி நடக்கிற தெம்பிருக்கு
இதயத்தில் நிறைவிருக்கு ஆ
இறைவா இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு
2. இருப்பதெல்லாம் கொடுத்தேன் - என்னை
இறையருள் நிறைத்திட வரம் கேட்டேன்
வாழ்ந்திடும் நாளெல்லாம் ஆ
மனிதம் மலர்ந்திட உழைத்திட திறம் கேட்டேன்

651. மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
என் மனம் ஏற்க தயக்கமோ - நான்
காகிதப்பூ என்ற வருத்தமோ
1. வசந்தம் மறுத்தால் காற்றிலும் வாழ்வேன்
வான்மழை நின்றால் ஊற்றிலும் உய்வேன்
செல்வங்கள் மறுத்தால் ஏழ்மையில் வாழ்வேன்
இயேசுவே நீயின்றி நான் எங்குச் செல்வேன்
2. கனிகளைக் கொடுக்கும் கொடிகளின் முதல்வா
கனிவுடன் படைத்திடும் காணிக்கை ஏற்பீர்
ஒலிவ மலைக்கு உம்முடன் வருவேன்
உயிராய் உடலாய் உம்முடன் வாழ்வேன்

652. மல்லிகைப் பூக்களை மெல்லிய பாதத்தில் நான் படைத்தேன்
மல்லிகைப் பூக்களை மெல்லிய பாதத்தில் நான் படைத்தேன்
வானமும் பூமியும் படைத்த என் தேவனை அடி தொழுதேன் ஆ
1. கோதுமை அப்ப இரசத்துடனே என்னையும் தந்தேன் ஏற்பாயே
என்னுடன் நீயும் தங்கிடுமோர் ஆலயமாகச் செய்வாயே - 2
தன்னலம் மறந்திட பிறர் நலம் வளர்த்திட - 2
உண்மைகள் மண்ணில் மலர்ந்திட - என்
உள்ளத்தைத் தருவேன் அருள்வாயே - 2 மகிழ்வோடு அருள்வாயே
2. உழைப்பின் கனிகள் உவந்தளித்தேன்
உன்னத வாழ்வில் நிலைத்திடவே
படைப்பின் இறைவா பதம் பணிந்தேன்
பலிதனில் நாளும் இணைந்திடவே - 2
நறுமணத் தூபம்போல் இதயத்தை உயர்த்தினேன் - 2
இனி வரும் எந்நாளுமே இயேசுவின் அருளால்
வளர்ந்திடுவேன் - 2 நலமோடு வாழ்ந்திடுவேன்

653. மலர்களில் எந்தன் மனத்தினைத் தருகின்றேன்
மலர்களில் எந்தன் மனத்தினைத் தருகின்றேன்
பழங்களில் எந்தன் பண்பினைத் தருகின்றேன்
அப்பத்தின் வடிவில் அன்பினைச் சேர்த்து
திராட்சை இரசத்தில் தியாகத்தைக் கலந்து
என்னையே தருகின்றேன் இறைவா காணிக்கை ஏற்றிடுவாய்
1. உழைப்பினால் வாழும் உள்ளங்களில் என்னையே தருகின்றேன்
உடைந்துபோன எளியவர் வாழ்வில் ஏற்றத்தைக் கேட்கின்றேன் - 2
நானிலம் மகிழ நலமுடன் வாழ
வாழ்வையே படைக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்
2. எளியோர் வாழ்ந்திட உரிமைகள் அடைந்திட
உவந்து அளிக்கின்றேன்
ஏனையோர் வாழ்வில் வளமை கண்டிட இனிதே வேண்டுகிறேன் - 2
நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும்
நல்மனம் இறைஞ்சுகின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்

654. மலர் பறித்தேன் மணம் எடுத்தேன் இயேசு தெய்வமே
மலர் பறித்தேன் மணம் எடுத்தேன் இயேசு தெய்வமே
கனி பறித்தேன் சுவை இனித்தேன் இயேசு தெய்வமே
சுரம் எடுத்தேன் குரல் இசைத்தேன் இயேசு தெய்வமே
உனை நினைத்தேன் எனை அளித்தேன் இயேசு தெய்வமே
ஏற்றிடும் ஏற்றிடும் எந்தன் இயேசுவே
மாற்றிடும் மாற்றிடும் உந்தன் பலியிலே - 2
1. காற்றும் கடலும் பனியும் மழையும் வாழ்த்திடக் கண்டேன்
குளிரும் வெயிலும் இரவும் பகலும் மகிழ்ந்திடக் கண்டேன் - 2
படைத்து அளித்துக் காக்கும் உந்தன் பண்பினைக் கண்டேன் - 2
பரமனே உன் அன்பிலே என் மனம் தந்தேன் - 2
2. பறவைகளும் விலங்குகளும் மகிழ்ந்திடக் கண்டேன்
மரம் செடிகள் மலர் வகைகள் புகழ்ந்திடக் கண்டேன் - 2 படைத்து

655. முகம் நோக்கினேன் சிரம் தாழ்த்தினேன்
முகம் நோக்கினேன் சிரம் தாழ்த்தினேன்
கரம் நீட்டி காணிக்கை தனை ஏந்தினேன் இறைவா - 2
1. இறைவாக்கு வழிநின்று இனிதாகவே
இறைவா என் வாழ்வெல்லாம் பணியாகவே - 2
அனைத்தும் உன் மகிமைக்கு அணியாகவே - 2
அடைந்தேன் உன் திருப்பாதம் சரணாகவே
2. உமதாசி தினம் வேண்டும் நிறைவாகவே
சமநீதி சமுதாயம் உருவாகவே - 2
வறியோர்தம் வாழ்விங்கு வளமாகவே - 2
விடியட்டும் புதுவாழ்வு விரைவாகவே

656. வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா
உள்ளதை எல்லாம் எடுத்து வந்தேன் - அதில்
நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்
எனை ஏற்றிடுவாய் இறைவா உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்
1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே
எரியும் மெழுகென உருகி ஒளி தரவே - 2
என்னையே முழுவதும் தருகின்றேன் - எனை
2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே
நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே - 2

657. வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
எம் வாழ்வை உமக்கே பலியாய்த் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய்
1. இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன - 2
இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால் எனக்கு இழப்பென்ன
இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் - 3
2. இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னைத் தேடுதே - 2
உன்னில் இணைந்து உயிர் பெறவே விரைந்து நாடுதே
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து

658. வந்தோம் தேவா வந்தோம் தேவா
வந்தோம் தேவா வந்தோம் தேவா
காணிக்கை தர வந்தோம் தேவா
ஏற்றருள்வாயே இதனை ஏற்றுக்கொள்வாயே
பொன்னும் பொருளும் எடுத்து வந்தோம்
பொற்பாதமே படைக்க வந்தோம்
ஏற்றருள்வாயே இதனை ஏற்றுக்கொள்வாயே
1. கோதுமை மணிகளையே காணிக்கை கொண்டு வந்தோம்
உன் திரு உடலாக அதனை மாற்றிவிடு
திராட்சைப் பழங்களையே காணிக்கை கொண்டு வந்தோம்
உன்திரு இரத்தமாக அதனை மாற்றிவிடு
அன்பே என் ஆண்டவரே மாசில்லா மாபரனே
தன்னையே தந்தவரே என்னையே ஏற்றிடுவாய்
2. மெழுகுத் திரிகளையே காணிக்கை கொண்டு வந்தோம்
உலகிற்கு ஒளியாக அதனை மாற்றிவிடு
அப்பரச கிண்ணங்களை காணிக்கை கொண்டு வந்தோம்
உடலின் மருந்தாக அதனை மாற்றிவிடு
அன்பே என் இறைமகனே இணையில்லா இறையரசே

659. வருகின்றோம் இந்நாளில் நன்றி காணிக்கை தருகின்றோம்
வருகின்றோம் இந்நாளில் நன்றி காணிக்கை தருகின்றோம்
கரம் பற்றி நடந்திடும் என் தலைவா
என் கிண்ணம் நிரம்பிடச் செய்திடுவாய்
1. உழைப்பினை எடுத்து வந்தோம் உமக்கு அதன்
பலன்தனை அர்ப்பணித்தோம்
மனிதத்தைவளர்த்திடவேநாங்கள்உந்தன்தியாகத்தைவாழ்ந்திடுவோம்
இறைவா என் இறைவா உன் மலரடி பாதம் பணிந்திடுவோம் - 2
குறைகளை நீக்கி ஏற்றிடுவாய் ஒளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய்
2. ஏழைகள்உயர்ந்திடவேஎன்றும்எங்கள்வாழ்வினைப்பகிர்ந்தளித்தோம்
சமநிலை தோன்றிடவே எங்கும் பாவப்பிரிவினை மீட்டிடுவோம்
உயிரே என் உறவே புது வசந்தம் விரைவில் மலர்ந்திடவே - 2
ஏழையின் துயரம் போக்கிடவே ஏற்றிடு எங்களின் காணிக்கையை

660. வாழ்வின் தோட்டத்தில் வகை வகையான
வாழ்வின் தோட்டத்தில் வகை வகையான
வண்ணமலர்களைக் கண்டேன் - அதில்
சிறந்த மலர்களை மகிழ்வுடன் பறித்து மாலை ஒன்று தொடுத்தேன்
மாலையை உமது பீடத்தில் சாற்றினேன் ஏற்றிடுவாய் இறைவா- 2
1. உறவுகள் என்றும் உன்னதப் பூக்கள்
வாழ்வினில் மலரச் செய்தாய் - 2 அது
நறுமணம் கமழ்ந்து நாளெல்லாம் இன்பம்
பெருகிடவே செய்தாய் - 2
2. உண்மையும் அன்பும் உதவிடும் பண்பும்
உள்ளத்தில் வளரச் செய்தாய் - 2
அவை நீதியும் அமைதியும் நிறைந்த வாழ்வாய்
நீதியில் ஒளிரச் செய்தாய் - 2

661. வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன்
வாழ்வின் நாயகனே நான் வாழ்ந்ததைத் தரவந்தேன்
காலடி பணிந்து முன்னே காணிக்கை தருகின்றேன்
கருணை பொழிந்து எம்மை ஏற்பாய் - 2
1. திறந்த மனத்துடன் பரந்த அன்புடன்
பகைவரை ஏற்றுக்கொண்டேன் - 2
நிறைந்த மகிழ்ச்சி கண்டேன்
அது மன்னிப்பில் எழக் கண்டேன்
சிறந்த மனிதனாய் வாழ்ந்திட நினைத்தேன்
முயற்சியைத் தருகின்றேன் - 2
பிறந்தேன் எனக்குள் தன்னலம் அழித்து
அதனைக் கொண்டு வந்தேன் - நான் - 2
2. மரமாய் வளர விதையும் தன்னை
அழிக்கும் நிலை கண்டேன் - 2
உரமாய் ஆகிவிட்டேன் பிறர் வாழ்ந்திட எனைக் கொடுத்தேன்
பரமே உந்தன் கரமாய் இணைந்து பலியினைத் தருகின்றேன் -2
சிரமே பணிந்தேன் அன்பில் மனிதனாய்
என்னை மாற்றிடுவாய் நீ என்னை மாற்றிடுவாய்

662. வாழ்வைப் பலியாய் மாற்றிட வந்தேன்
வாழ்வைப் பலியாய் மாற்றிட வந்தேன்
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனத்துடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்
1. கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
புது உரு பெறுவது போல் - 2
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம் - 2
2. நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன் - 2
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே - 2

663. வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது
வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது
தரும் பலிப்பொருளை ஏற்பீர் இறைவா - 2
1. இதயம் ஒன்றே அதை உமக்களித்தேன்
ஏழையின் உடைமை அதுவன்றோ - 2
இனிமேல் வாழ்வது நானல்ல - என்னில்
இயேசு நீர் வாழ்ந்திடுவீர் எந்நாளும்
2. உலகின் மாயை அனைத்தையும் துறந்தோம்
உடைமை என்றே உமைத் தெரிந்தேன் - 2
இதயத்தின் நிறைவால் வாய் பேசும் - உந்தன்
உறவினால் நான் வாழ்வேன் எந்நாளும்
தரும் பலிப்பொருளை ஏற்பீர் இறைவா - 2
1. இதயம் ஒன்றே அதை உமக்களித்தேன்
ஏழையின் உடைமை அதுவன்றோ - 2
இனிமேல் வாழ்வது நானல்ல - என்னில்
இயேசு நீர் வாழ்ந்திடுவீர் எந்நாளும்
2. உலகின் மாயை அனைத்தையும் துறந்தோம்
உடைமை என்றே உமைத் தெரிந்தேன் - 2
இதயத்தின் நிறைவால் வாய் பேசும் - உந்தன்
உறவினால் நான் வாழ்வேன் எந்நாளும்