முகப்பு


664. அகவிருந்தாக என் இறைவா வா - மனம்
அகவிருந்தாக என் இறைவா வா - மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா - 2

1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு
ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே - 2
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2
உமதுடலென எமை நீ மாறவைப்பாய்

2. நேரிய மனத்தவர் குறைதணிப்பாய் - எமை
நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் - 2
நலமிகு உணவாய் நிறைந்திருப்பாய் - 2 இனி
உலகினில் உனிலே வாழ வைப்பாய்
665. அடைக்கலம் தருகின்ற நாயகனே
அடைக்கலம் தருகின்ற நாயகனே
அருள்மழை பொழிகின்ற தூயவனே
அடைக்கலம் எனக்கு நீயல்லவோ
அன்புக்கு நீயொரு தாயல்லவோ - 2

1. தெய்வீக நீதியின் கதிரவனே
தீமைகள் போக்கும் காவலனே - 2
ஏழையின் கண்களைப் பாராயோ
என்னென்ன கவலைகள் தீராயோ

2. அருள் ஒளி உண்டு உன் விழியினிலே
ஆறுதல் உண்டு உன் மொழியினிலே - 2
பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ
பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ
666. அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே
அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே - 2

1. மண்ணோர்க்கு மீட்பு ஈந்தவா பீடம் தன்னில் வந்தாய் -2
விண்ணகம் நின்று மண்ணகம் வந்த இராச இராசனே - 2

2. எம்மோடு ஒன்றி வாழவே உண்ணும் உணவானாய் - 2
அருளின் வாழ்வில் நிலைத்து வாழும் பாதை காட்டினாய் - 2

3. பாவிக்கு மோட்சம் நல்கவே தேவா உருவானாய் - 2
பாவத்தில் வாழும் மாந்தரின் உள்ளம் புனிதமாக்குவாய் - 2
667. அப்பம் இரசமாய் நமக்குள்ளே
அப்பம் இரசமாய் நமக்குள்ளே
இறைவன் இயேசு வருகின்றார்
குருதியாய் உடலாய் வருகின்றார்
இதயத்தில் அமைதியாய் எழுகின்றார்

1. உறவின் பாலம் உடையாமல் அன்பால் உயிரில் இணைகின்றார்
நடக்கும் பாதை இடறாமல் நடந்திட துணையாய் வருகின்றார்

2. துன்பச் சுமைகளால்தளர்ந்தோரைத் தழுவிடஇறைவன் வருகின்றார்
இன்பத் துணையாய் அவர் வருவார்
ஏழ்மையின் இதயத்தில் அவர் இருப்பார் - 2
668. அப்பமிது அப்பமிது அப்பாவில் இணைக்குது
அப்பமிது அப்பமிது அப்பாவில் இணைக்குது
ஆனந்தம் தந்து ஆசையைத் தகர்க்கும்
சின்னஞ்சிறு அப்பமிது சிந்திக்க வைக்குது
வெள்ளைநிற அப்பமிது விண்ணகத்தைத் தருவது

1. சுமைகளை வருந்தி சுமந்திடும்போது
தாங்கிடும் மனம் தரும் அப்பமிது
வலுவினை இழந்து விழுந்திடும்போது
இளைப்பாற்றி தருகின்ற அப்பமிது
என் சுமை எளிது என் நுகம் இனிதென
தேறுதல் தருகின்ற அப்பமிது - 2

2. நோய்களில் நானும் நொடிந்திடும் போது
பாயினின்றெழுப்பிடும் அப்பமிது
அலகையின் சோதனை அனைத்தையும் தனியே
வென்றிடும் பலம்தரும் அப்பமிது
கண்ணீரில் நானும் மூழ்கிடும் போது
ஆறுதல் தருகின்ற அப்பமிது - 2
669. அருகே வருவாயா இறைவா அருகே வருவாயா
அருகே வருவாயா இறைவா அருகே வருவாயா - என்
தாயினைப்போல உன்மடி தந்து - 2
தேற்றிட வருவாயா என்னைத் தேற்றிட வருவாயா

1. ஆயிரம் வார்த்தைகள் பேசிய பொழுதும்
யாருக்கும் புரியவில்லை - என் மொழி - 2
நொறுங்கிய உள்ளம் தவித்திட்ட நிலையை
யாரும் அறியவில்லை - என் வலி -2
வழிந்திடும் கூட்டத்தில் தனிமையில் அலைந்தேன்
யாரும் தேற்றவில்லை - என்னை - 2
மரணத்தின் வலியில் கண்விழி அயர்ந்தேன்
கனவுக்குப் பஞ்சமில்லை - பெரும் - 2

2. பகலிலும் இரவிலும் நான் படும்பாட்டை
பகலவன் அறிவானோ - அந்தப் - 2
யாருக்கு யாருண்டு எனும் நிலை வருகையில்
இரு கை தருவாயோ - இறைவா - 2
பகைமையும் பழிகளும் எனைச் சூழ்கையிலே
வலிமையைத் தருவாயோ - மன - 2
விடிவுகள் இல்லாப் பொழுதுகள் வருகையில்
என்கதி ஆவாயோ - நீ - 2
670. அருட்கனியே என் அகநிலவே - என்
அருட்கனியே என் அகநிலவே - என்
இருளினை நீக்கிட வா
அருள்மழையே என் உளமதில் மருட்சியை நீக்கிட வா

1. ஆயிரம் வாழ்த்தொலிகள் - உன்னை
ஆராதனை செய்யும் தீபங்களோ
ஆனந்தம் பொழிந்திட வா - இன்ப
ஆறுதல் மொழிந்திட வா - இறைவா

2. நல்லறம் காப்பவனே நீ இல்லாமல்
என் வாழ்வு நன்றாகுமோ
ஆலயம் வாழ்பவனே உள்ள
ஆறுதல் அளித்திட வா - இறைவா
671. அரும் நண்பன் என் நண்பன் உளம் ஒன்றி சமபந்தி
அரும் நண்பன் என் நண்பன் உளம் ஒன்றி சமபந்தி
விருந்தொன்று வைத்தானம்மா வறியோரை எளியோரை
வாழ்வெல்லாம் நலிந்தோரை - 2
வருவீரென் றழைத்தானம்மா - 2

1. ஓர் நண்பன் நலம் வாழ உயிர் நல்கும் பிறரன்பே - 2
பேரன்பு என்றானம்மா பெரும் பாவி எனை மீட்க
திரு ஆவி தந்தானே
உயர் நண்பன் அவன் தானம்மா - என்
உயிர் நண்பன் அவன் தானம்மா

2. அரசாள வரவில்லை அதிகாரம் பெறவில்லை
வறியோர் போல் வாழ்ந்தானம்மா
பகையாளர் பாதத்தைப் பரிவோடு கரம் தாங்கும்
பண்பாளன் ஆனானம்மா - ஓர்
பணியாளன் ஆனானம்மா
672. அருள்மொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா
அருள்மொழி அண்ணலே வா இன்பம் தரும் அன்பனே வா
என்னுள்ளத்தின் அன்பைக் கவர்ந்த இராசனே - 2

1. தென்றல் இன்பம் திளைத்திடும்
விண்ணிலவின் தண்ணொளிபோல்
இன்பம் தரும் இயேசுநாதா என்னுள்ளத்தில் இறங்கி வா
இன்பம் தரும் இயேசு நாதா
என் உள்ளத்தின் அன்பைக் கவர்ந்த இராசனே - 2

2. இன்றலர்ந்த மல்லிகைபோல் நறுமணம் வீசிடவே
அள்ளி எனை அணைத்திட வந்திடுவாய் - இன்பம்
673. அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா
அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா
திருவிருந்தே அருமருந்தே அருகினில் வருவாயா
ஒருகணம் உனையழைத்தேன் நீ என் மனம் அமர்வாயா
என்னகம் நீ அமர்ந்து நீ ஒளிதனைப் பொழிவாயா
வழியாக வாழ்வாக வா

1. ஆகாயம் போன்ற உள்ளம் உன்னிடம் பார்க்கிறேன்
மடைதிறந்த வெள்ளம் போல உன் முகமே பார்க்கிறேன்
மலைபோன்ற உந்தன் உள்ளம் மன்னிக்க கேட்கிறேன்
தாய்மைக்கும் மேலாம் உந்தன் அன்பிதயம் கேட்கிறேன்
எனக்கினி ஏதும் இல்லை நீதானே என் எல்லை - 2
அடைவேனே உன்னை

2. ஊதாரி மைந்தன் என்னை மன்னித்து ஏற்கிறாய்
வழிமாறிப் போன என்னைக் கரம் ஏந்தி காக்கிறாய்
புகைவந்த சுடராய் என்னை மலைமீது ஏற்றினாய்
புறந்தள்ளி ஒதுக்கிய என்னை மூலைக்கல் ஆக்கினாய்
இனி உனக்காக வாழ்வேன் இகமதை நானும் வெல்வேன் - 2
உயிர்ப்பேனே உன்னில்
674. அருளே எம்மில் வாழ்வுதந்த அருளே
அருளே எம்மில் வாழ்வுதந்த அருளே
மகிழ்வே எங்கள் வாழ்வில் என்றும் மகிழ்வே
வாழும் ஒரு தெய்வம் எமைத் தேடி வந்தது
பாதை அது காட்டி நின்று முன் நடந்தது
உள்நிறைந்து உலகளந்து உயிர் கொடுத்தது

1. ஞாலம் கண் காணுகின்ற வடிவெடுத்தது
எங்களோடு தெய்வம் வாழ்தல் உண்மையானது
வாழும் வழி தந்து உடன் துணையளித்தது
வழியமைத்தது உண்மை உயிர் கொடுத்தது
நிலமெனும் வீட்டில் நிலைØயாளி வந்தது
மனமென்னும் தோட்டம் அமைதியைக் கொண்டது
நீதியின் ஆதவன் மகிழ்வோடு உதித்தது

2. ஏழ்மை ஒரு சாபம் என்ற எண்ணம் போனது
தாழ்ந்தவரை உயர்த்தி தெய்வம் கருணை செய்தது
பெண்மை சமம் இல்லை என்ற நிலையும் ஓய்ந்தது
விடிவு வந்தது அடிமை நிலை முடிந்தது
விடுதலை வேட்கை எங்கும் எழுந்தது
துயர்களைத் தாங்கும் துணிவு பிறந்தது
தடைகளைத் தகர்த்திடும் நம் காலம் விடிந்தது
675. அன்பில் விளைந்த அமுதமே
அன்பில் விளைந்த அமுதமே
என்னில் மலர்ந்த தெய்வமே
உயிரில் கலந்த இராகமே உறவில் எரியும் தீபமே - 2
தேவனே இறைவனே தேடி வந்த தெய்வமே - 2

1. தனித்துச் செல்லும் வழிகள் எல்லாம்
தலைவன் உனையே தேடவே - 2
தவித்து ஏங்கும் விழிகள் எல்லாம்
தாகம் கொண்டு நாடவே
அணைத்துச் செல்லும் அன்னையாகி
அழைத்துச் சென்றாய் தெய்வமே
அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே - 2

2. கல்லும் முள்ளும் காடும் மலையும்
கடந்து செல்லும் வேளையில் - 2
பொழுதும் சாய்ந்து புயலும் ஓய்ந்து
வாழ்க்கைப் படகும் மூழ்கவே
சின்ன எனது இதயம் தனை நீ
சிறகில் அமர்த்தி விரைகிறாய் - அன்பனே
676. அன்பின் இறைவா வருக விண்
அன்பின் இறைவா வருக விண்
அமுதாய் நெஞ்சில் நிறைக - 2

1. உள்ளம் ஒன்றே வைத்திருந்தேன்
உமக்கே அதையும் திறக்கின்றேன்
வாழ்வது என்னில் நீராக வளர்வீர் நெஞ்சில் நினைவாக

2. உலகம் என்னில் உம்மைக் காண உவந்து வருவீர் நீரெம்மில்
விண்ணின் நினைவுச் சின்னங்களாய் விளங்க எம்மில் வாருமே

3. பிறப்பில் வந்தீர் உறவாக உம் பிரிவில் ஆனீர் உணவாக
மலையில் நின்றீர் பலியாக மறுமை நீரே பரிசாக
677. அன்பின் ஊற்றே அருளின் சுனையே
அன்பின் ஊற்றே அருளின் சுனையே
உன்னை நான் பாடுவேன்
வாழ்வாகும் உந்தன் வார்த்தையைக் கேட்க
மகிழ்வுடன் தினம் நாடுவேன் - 2
கண்ணின் மணிபோல என்னைத் தினம்
காக்கும் அன்புத் தாயாகினாய்
கடலும் மலையும் நான் கடந்து சென்றாலும்
எந்தன் துணையாகினாய்

1. அதிகாலை உதயம் அழகான வானம்
எல்லாம் உன் புகழ்பாடுதே
இதமாக வீசும் இளங்காலைத் தென்றலும்
எல்லாம் உன் அருள்பாடுதே அருட்கடலே ஆண்டவனே - 2
எங்கு நோக்கினும் உந்தன் தரிசனம் அழகின் தரிசனம் தான் சலங்கை ஒலிகளால் இனிய சதிகளால்
உன்னைப்பாடுவேன் நான்

2. இசைப்பாடும் குயிலும் அசைந்தாடும் மயிலும்
எல்லாம் உன் புகழ்பாடுதே
உயர்ந்தோங்கும் மலையும் பாய்ந்தோடும் நதியும்
எல்லாம் உன் அருள்பாடுதே படைப்புகளில் பரம்பொருளே - 2
மனிதம் என்பதும் புனிதம் என்பதும் உந்தன் தரிசனம் தான்
பாக்கள் பாடுவேன் நடனமாடுவேன்
உந்தன் அருளிலே தான்
678. அன்பில் கனிந்து வந்த அமுதே
அன்பில் கனிந்து வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கித் தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

1. விருந்தாக வரும் தேவன் உனைக் காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

2. என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என்மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேறுது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே மண்ணில் உருவாகுமே
679. அன்பின் விருந்திலே என் இதயம் மகிழுதே
அன்பின் விருந்திலே என் இதயம் மகிழுதே
அதை எண்ணி எண்ணியே எனில் இன்பம் பொங்குதே
எந்தன் தெய்வம் என்னில் தங்க
என்னைத் தேடி வருகிறார்

1. இறைவார்த்தை வழியிலே உருவாகும் என் வாழ்வு
அவர் வாழ்வின் ஒளியிலே விடிவாகும் புது உறவு
உறவாகக் கரம் சேர பலியானார் விருந்திலே
திரளாகப் பகிர்ந்துண்ண தினந்தோறும் அழைக்கிறார்

2. கல்வாரிப் பலியிலே கரைந்தோடும் இருள்வாழ்வு
கனிவான பகிர்விலே உருவாகும் புது உறவு
உளமெங்கும் மகிழ்வுதான் இறையாட்சிப் பணியிலே
உலகெங்கும் சாட்சியாக தினந்தோறும் அழைக்கிறார்
680. அன்பனே விரைவில் வா - உன்
அன்பனே விரைவில் வா - உன்
அடியேனைத் தேற்ற வா

1. பாவச் சுமையால் பதறுகிறேன் பாதை அறியாது வருந்துகிறேன் 2
பாதை காட்டிடும் உன்னையே நான் - 2
பாதம் பணிந்து வேண்டுகிறேன்

2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன் - 2
வாழ்வின் உணவே உன்னையே நான் - 2
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்

3. இருளே வாழ்வில் பார்க்கிறேன் இதயம் நொந்து அழுகிறேன் - 2
ஒளியாய் விளங்கும் உன்னையே நான் - 2
வழியாய் ஏற்றுக் கொள்ளுகிறேன்
681. அன்பெனும் அருளே நீ வாழ்க
அன்பெனும் அருளே நீ வாழ்க
உயிர்ப்பொருளே உறைவிடமே நீ வாழ்க
அன்பெனும் அருட்சுடராய் அமைந்தாயே இறைவா - 2
ஆதியந்தம் இல்லாது ஆட்சி செய்யும் தலைவா

1. இன்பமெல்லாம் ஓர் உருவாய் இயங்கி வரும் இறைவா
ஈயாதார் உள்ளத்திலும் வீற்றிருக்கும் இறைவா - 2
உண்மைக்கே உறைவிடமாய் உத்தமனே இறைவா - 2
ஊன் உயிர் நிலையாக வந்து உணவளிக்கும் இறைவா - 2

2. எல்லார்க்கும் எல்லாமே அளித்து வரும் இறைவா
ஏகபரன் ஏகமகன் என்றுணர்த்தும் இறைவா - 2
ஐயமின்றி வாழ்ந்திடவே வழிவகுத்தாய் இறைவா - 2
குறைவில்லா மனிதம் என்றென்றும்
வாழவேண்டும் இறைவா-2
682. அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே
அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன் - 2

1. அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் - 2
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்

2. வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் - 2
தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்

3. தென்றலே கமழ்ந்திடுமே என் தெய்வமே நீயிருக்க - 2
இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க
683. அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே
அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே - 2
அன்பே இயேசு தெய்வமே என் உள்ளம் வாருமே - 2
அருள்பார்வை ஒன்றே போதுமே எந்தன் வாழ்வு வளம் பெறுமே

1. மண்மீது பகை வளர்க்க வேர்கள்தான் விரும்புமோ
மனிதரை வெறுத்துவிட்டு உன் வழி நடப்பதோ - 2
உன்னிலே நானும் வாழ்ந்திட வேண்டும்
உறவின் இராகங்கள் இசைத்திட வேண்டும் - 2
என்றும் மண்ணில் உந்தன் அன்பில் நிலைத்திட வேண்டும்
எந்தன் உள்ளம் நீயே வந்து உறைந்திட வேண்டும்

2. வாதங்கள் பேதங்களால் வளர்ந்திடும் சுயநலம்
வன்முறை பேரிடரால் வாடிடும் மானிடம் - 2
அனைத்துயிர் காக்கும் அருள்மழையே வா
அகத்தினில் அமைதியும் ஆற்றலும் நீ தா - 2
இருளினைப் போக்கும் ஒளியென வாழ்வேன்
இறைவனின் திருவுளம் நடந்திட உழைப்பேன்
684. அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா
அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா
உன் மேன்மை வானம் என்றாகினாலும்
என் ஏழ்மைக் குறை தீர்க்கவா - 2

1. வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்
வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்
பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்
எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்
மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் - 2
என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் - 2

2. உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்
உன் நெஞ்சமலராலே எனை மூடினாய்
கண் பார்வை அருள் போதும் என நாடினேன்
என் பாதை வழி செல்லும் துணையாகினாய்
மண்மீது காலூன்றும் தொடுவானமாய் - 2
என்மீது நீ வந்து நானாகிறாய் - 2
685. அனுதின உணவாய் எனதுள்ளம் வருவாய்
அனுதின உணவாய் எனதுள்ளம் வருவாய் - 2
அன்பின் நற்கருணையே இயேசுவே
ஆன்மாவின் உயிருணவே - 2

1. உயிருள்ள உந்தன் இரத்தமும் தசையும்
என்னுயிர் உடலினில் கலந்திட - 2
என்னை இயக்கிட வாழ்வேன் சிறந்து
உந்தன் அருளால் நாளும் நிறைந்து - 2

2. உண்ணும் உணவாய் மாறுவதனால்
உன்னையே உண்பேன் உவந்து நான் - 2
உன்னைப்போல ஒளிர்வேன் உயர்ந்து
உருகும் மெழுகாய் என்னை அளித்து - 2
686.ஆண்டவரே என்னில் நீர் எழுந்திடத் தகுதி எனக்கில்லை
ஆண்டவரே என்னில் நீர் எழுந்திடத் தகுதி எனக்கில்லை
என்மீது இரங்கி ஒரு வார்த்தை பேசும்
நலம் பெறுவேன் நான் குணம் பெறுவேன் - 2

1. ஆண்டவரே உம்மைப் பிரிந்து எங்குச் சென்றிடுவேன் - 2
உயிருள்ள வார்த்தைகள் உம்மில் உள்ளது
உமக்காக வாழுவேன் உமக்கே நான் சொந்தம் - 2

2. போகும் போதும் வரும் போதும் பாதுகாக்கின்றீர் - 2
எனக்கொன்றும் பயமில்லை துணையாய் இருக்கின்றீர்
நீதியின் கரத்தினால் என்னைத் தாங்கிடுவீர் - 2
687.ஆதாரம் நீ தானே என் இயேசுவே
ஆதாரம் நீ தானே என் இயேசுவே
என் வாழ்வின் ஆரம்பம் நீ இயேசுவே
பணிவாழ்வின் நிறைவும் நீ இயேசுவே
என் வாழ்வின் முழுமையும் நீ இயேசுவே - 2

1. காலங்கள் மாறிடும் கோலங்கள் மாற்றிடும்
மாறாத தெய்வமே என் இயேசுவே
நான் உன்னை ஒருபோதும் பிரிய மாட்டேன்
மாறாக உன்னோடு ஒன்றாகுவேன்

2. நண்பர்கள் நகைக்கலாம் பகைவர்கள் பகைக்கலாம்
பரிவோடு நடத்தும் என் இயேசுவே - நான்
688. ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்
ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும்
உன்னுடலைச் சுவைத்திடப் போதாதய்யா
என் இயேசுவே என் தெய்வமே
ஏழையின் உணவாய் வந்தவரே - 2
வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2

1. எளியவர் உள்ளங்கள் அழைத்திடும் வேளை
எரிந்திடும் தீபம் நீதானையா - என்றும்
அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம்
கேட்டிட எழுவதும் நீதானையா - 2
எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே
சுமைகளைத் தாங்கிட வந்தவரே உணவாய் வந்தனையோ வா

2. துணை ஏதும் இன்றி வாடிடும் நேரம்
அருட்கரம் தருவதும் நீதானையா
நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போதும்
அருகினில் இருப்பதும் நீதானையா - 2
எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய்
பெருமைகள் போக்க உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா
689. ஆன்ம உணவாய் எனில் வந்து
ஆன்ம உணவாய் எனில் வந்து
அன்பு உறவில் எனை வளர்த்து
அந்தம் வரையில் என்னைக் காக்க
ஆதவனே உனை வேண்டுகிறேன் - உன்
ஆதரவையே நாடுகிறேன் - 2

1. அச்சம் யாவும் நீக்கும் மருந்தாம்
அல்லல் யாவும் போக்கும் மருந்தாம்
நித்தம் உந்தன் உணவையே நான்
உண்ணும் வேளையில் உள்ளம் ஒன்றிப் போகுமே
உறவில் உள்ளம் மகிழ்ந்திடுமே வருவாயே என் இறைவா வரம்
அருள்வாயே என் தலைவா - 2

2. தாகம் யாவும் தணிக்கும் விருந்தாம்
தளர்ச்சி யாவும் நீக்கும் விருந்தாம்
நித்தம் உந்தன் குருதியை நான் பருகிடும் போதிலே
உள்ளம் உருகிப் போகுமே
ஊக்கம் நெஞ்சில் பிறந்திடுமே - வருவாயே
690. ஆனந்த மழையில் நானிலம் மகிழ
ஆனந்த மழையில் நானிலம் மகிழ
மன்னவன் எழுகின்றான் - 2
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

1. மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே
பண்பாடவோ என்றும் கொண்டாவோ
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

2. சேற்றினிலே தாமரையாய்த் தேர்ந்தென்னை எடுத்தானே
காற்றினிலே நறுமணமாய்க் கலந்தென்னில் நிறைந்தானே - 2
எனில் ஒன்றாகினாய் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன் - மலர்கின்ற
691. இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே
இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே
இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே
மனத்தில் தோன்றும் கவலைகள் மறையும் இறைவன் வரவிலே

1. உருகும் உள்ளம் மலர்ந்திடும் உயர் நற்கருணைப் பந்தியிலே
பெருகும் கண்ணீர் உலர்ந்திடும் இறைவன் கருணைக் கரத்திலே

2. பழைய வேத வனத்திலே பொழிந்த மன்னா மறையவே
புதிய வேத மாந்தரின் புனித மன்னா இறைவனே

3. ஆயன் உலகில் கிறித்துவே அவர் தம் ஆட்டுக்கிடையிலே
புனித வாழ்வு அடையவே புசிக்கத் தந்தார் உடலையே
692. இதயத்தில் வாராய் இன்னருள் இறைவா
இதயத்தில் வாராய் இன்னருள் இறைவா
உதயத்தைப் போலவே உன்னொளி தாராய்
இறைவா வாராய் - 2
துன்பங்கள் செய்யும பாவி நான் என்று
தூற்றாமல் நன்றே அன்புடன் இன்று

1. வையகம் வாழும் மானிடர் நாமே
வானகம் செல்ல வழித்துணை நீயே
இன்பமும் துன்பமும் வந்திடும் போதே
இன்னருள் துணையாய் வரவேண்டும் நீயே

2. மழை தந்த மேகம் இனி பெய்யாது
தரைகாய்ந்த ஆறு இனி நீர் தராது
உன் வாழ்வு மட்டும் என்றும் வற்றாது
உலகெல்லாம் கொடுத்தாலும் அது தீராது
693. இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே இறைமகனே
இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே இறைமகனே
இரக்கம் பொழிந்தவரே எங்கள் இகமெல்லாம் நிறைந்தவரே
உந்தன் கருணையின் கடலினிலே எங்கள் உலகம் உயிர் பெறவே
உன் அன்பென்னும் நெருப்பிலே எல்லாத் தீமையும் கரைந்திடுதே
பரிசுத்த உறவாய் மலருதே - எனில்
வாருமே இயேசு தெய்வமே உயிராகவே உறவாகவே - 2

1. உனக்கெனவே என் தாயின் கருவினில்
தெரிந்து கொண்டீர் என்னை அறிந்தீர்
பயணங்களால் எனை அழைத்தீர்
உறவினை உதறி ஊதாரி ஆனேன்
காத்திருந்தெனக்கு மறுவாழ்வு அளித்தீர்
ஒளிந்திட்ட ஆடுநான் உன் தோளில் மகிழ்வேன் - 2 வாருமே

2. வெறுமையான ஓர் பாத்திரம் நான் இன்று
நிரம்பிடவே அருள் ஈந்தீர்
கள்வனுக்கும் உயர் பரகதி பேற்றினைப்
பரிசளித்தீர் வழி வகுத்தீர்
கற்களை எறியும் கல்நெஞ்சக் கூட்டத்தில்
காயங்கள் இன்றிப் பாவியை மீட்டீர்
அழிக்கின்ற உலகிலே அருகில் நீர் வேண்டும் - 2 வாருமே
694. இதய மலரின் இதழ்கள் திறந்தேன் உதயமே வருக
இதய மலரின் இதழ்கள் திறந்தேன் உதயமே வருக
உலகம் வாழ எனை நான் வழங்க இதயமே எழுக - 2
தேவனே இறைவனே இதயமே எழுக - 2

1. உன்னைப் பிரிந்து உலகில் என்னால் வாழ முடியுமா
அன்பை மறந்து அமைதி என்னால் காண முடியுமா - 2
இதயக் கோவிலில் பலி நீர் நடத்த
இனிய விருந்தில் எனை நான் மறக்க - 2
கொஞ்ச நேரம் எனது நெஞ்சில் தஞ்சமாகும் இயேசுவே - 2

2. எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றிக் காத்து இருக்கின்றேன்
மன்னன் உந்தன் கால்கள் ஓசை கேட்கத் துடிக்கின்றேன் - 2
மழலை மனமும் கவிதை புனைய
மலரும் நினைவுன் அருளில் நனைய - 2
நிலவைப் போலென்இதயவானில்பயணம்தொடர்வாய்இயேசுவே-2
695. இதயமே இதயமே என்னில் எழுந்து வா
இதயமே இதயமே என்னில் எழுந்து வா
உதயமாய் மனத்தினில் ஒளியை ஏற்றவா - 2
வாழ்விலே வலிமையாக வா
வசந்தமாய் என்னில் வாழ வா

1. ஏங்கும் எனதுள்ளம் நீயாக வேண்டும்
தாங்கிடும் உனது கரம் எனைக் காக்க வேண்டும்
நன்மை வடிவாக நாதா நீ வேண்டும்
நாளும் புதுவாழ்வு நான் வாழ வேண்டும்
துயரும் பிணியும் என்னை இங்குச் சூழ்கின்ற போது
துணையாக மருந்தாக நீ என்னில் வர வேண்டும்

2. வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும்
வசந்தம் என் வாழ்வில் நிலையாக வேண்டும்
மீளாத் துன்பங்கள் எனை நீங்க வேண்டும்
மீண்டும் உன் பாதம் நான் சேர வேண்டும்
தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும்
தயையோடு எனை நாளும் நீ நடத்திட வேண்டும்
696. இது என் உடல் உன் உணவாகட்டும்
இது என் உடல் உன் உணவாகட்டும்
இது என் இரத்தம் உன் பானமாகட்டும் - 2
வாக்கு தந்த தேவா தேடி வந்த இறைவா - 2
தகுதி இல்லாத ஏழை நான்
ஒரு வார்த்தை சொல்லும் குணம் பெறுவேன் - 2

1. உலகின் ஒளி அது நான் என்றீர்
உண்மையின் வழி அது என்னில் என்றீர் - 2
வாழும் காலம் வரையில் என்னுடன் இருப்பீர்
வரையில்லாத அன்பால் என்னுயிர் தந்தீர் - 2
இயேசுவே உம் நினைவாகச் செய்திடுவேன் - 2

2. சுமை கொண்டோரை நீர் வரவேற்றீர்
சுகம் காணவே உம் கரம் தந்தீர் - 2
மீண்டும் உந்தன் வரவை எதிர்நோக்கியே
ஆருயிராய் உம்மையே இதயம் ஏற்கின்றேன் - 2
இயேசுவே உம் திருவிருந்தில் மகிழ்கின்றேன் - 2
697. இது மங்கள நேரம்
இது மங்கள நேரம்
மன்னவன் எந்தன் உள்ளம் வருகின்ற நேரம்
மணவாளன் கண்டு மணக்கோலம் கொண்டு
மனம் துள்ளி துள்ளி ஆடும்
மேகம் திறந்து மின்னல் நுழைந்து தூவும் மழையைப் போல
பாவம் துறந்து வானமிருந்து வந்த உணவிது அருந்தவே
இலைகள் சுமந்து மலர்கள் தவழ்ந்து வீசும் தென்றலாக
உள்ளம் புகுந்து உயிரில் கலந்து உறைய வந்தவா வருகவே

1. இனிமையெல்லாம் தன்னுள்ளே ஏந்தியே வந்த உணவிது
இனிதாக நமக்காகத் தந்தை காட்டும் உறவு இது - 2
விண்ணோர் உண்ட உணவு இது - நம்
முன்னோர் கண்ட கனவு இது - 2 புது
வாழ்வைத் தந்திட வருகிறது - மேகம் திறந்து

2. படைத்தவரே நமக்காகப் படைத்திடும் அன்பு உணவு இது
உழைப்பேதும் இல்லாமல் கொடையாய் வந்த உணவு இது - 2
நிறைவைத் தருகின்ற உணவு இது - அவர்
நினைவாய்ச் செய்யும் உறவு இது - 2 இதை
உண்போம் அவரில் வளர்வோமே - மேகம் திறந்து
698. இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா
இதை என் நினைவாய்ச் செய்ய மாட்டாயா
என் உடலை உண்டு உயர மாட்டாயா
குருதி அருந்தி திருந்த மாட்டாயா - என் - 2
என்னைப் போல வாழ மாட்டாயா

1. கன்னத்தில் அறைந்தால் கன்னத்தைக் காட்டச் சொன்னேன்
தீமை செய்தால் நன்மை செய்யச் சொன்னேன் - 2
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2
வெறும் வார்த்தையல்ல
வாழ்ந்தும் காட்டிவிட்டேன்

2. பணிவிடை பெற அன்று பணியைச் செய்யச் சொன்னேன்
தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதியென்றேன் - 2
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2
உனை வாழச்செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2
699. இதோ இறைவனின் செம்மறியே
இதோ இறைவனின் செம்மறியே
இவரே நம் பாவம் போக்குகின்றார்
அவனியில் அமைதியை ஆக்குகின்றார் - 2

1. கடவுள் நம்மோடு இருக்கின்றார் - நற்
கருணை வடிவில் திகழ்கின்றார் - 2
உடலும் உள்ளமும் நலம்பெறவே - 2 இவர்
உணவின் வடிவில் வருகின்றார்
இதயத்தின் கதவுகள் திறக்கட்டுமே - இறை
இயேசுவே அரசராய் அமரட்டுமே - 2

2. இன்பமும் துன்பமும் நமக்கு ஒன்றே
இவர் அன்பில் ஒன்றாய் இணைந்து விட்டால் - 2
துன்பமும் பகைமையும் மறைந்துவிடும் - 2 இறை
வல்லமை நம்மிடம் நிறைந்துவிடும் - இதயத்தின்
700. இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா - 2

1. உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்குச்
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ - 2
மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா - 2

2. உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ - 2
குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா - 2
701. இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்
இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்
இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள்
வருவோம் சமத்துவ உறவிலே
பெறுவோம் இறைவனின் அருளையே - 2

1. பாலை நிலத்திலே பசியைப் போக்கவே
மண்ணில் வந்தது மன்னா உணவு - 2 இன்று
வாடும் மக்களின் துயரைப் போக்கவே
தேடி வந்தது இந்தத் தெய்வீக உணவு - வருவோம்

2. இறுதி இரவிலே இயேசு தந்த உணவு
விடுதலையைத் தந்திட பலியான உணவு - 2 இன்று
வீதியெங்கும் வாழ்வு வளம் பெற
ஆற்றலாகி விடும் இந்த உயிருள்ள உணவு - வருவோம்
702. இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா
இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா
எழுந்து வா என்னில் நிலைக்க வா
இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா - 2
எழுந்தே வருவீர் என்னோடு தங்குவீர்
என்றுமே உம்மில் நிலைத்திடச் செய்குவீர்

1. நானே உயிர்தரும் உணவு என்றீர் நாதனே வந்தருள்வீர் - 2
நான் தரும் உணவை உண்பவனோ - 2
என்றுமே வாழ்வான் என்றீர் - 2

2. கிறித்துவின் ஆவியைக் கொண்டிராதவன்
கிறித்தவனே அல்லன் - 2
கிறித்துவே உம் தூய ஆவியையே - 2
என்னில் பொழிந்திடுமே - 2
703. இயேசுவே என் நண்பனே ஏழை நெஞ்சில் எழுந்து வா
இயேசுவே என் நண்பனே ஏழை நெஞ்சில் எழுந்து வா
மனுமகனே என் இளவரசே என் இதயக் குடிலில் தவழந்து வா

1. நன்மைகள் செய்வதில் என்னையே மறந்து
பிறரின் வளர்ச்சிக்காய் வாழுவேன் - 2
உன்னையேநாடிஉண்மைக்குவாழும்உயர்வுமனமேபோதுமே- 2
கன்னி ஈன்ற திருமகனே காலம் தந்த தனிமகனே
கருணை இருப்பிடம் நீயன்றோ கண்ணீர் துடைப்பதுன் கரமன்றோ

2. ஒளியினைத் தேடும் செடியெனத் திகழும்
உனதருள் பார்வைக்காய் ஏங்குவேன் - 2
நம்பிக்கையில்லா மனங்களில் உனது
நலந்தரும் செய்தி ஆகுவேன் - 2
கடவுள் மனிதனாய் வந்தவனே
மனிதனில் இறைவனைக் கண்டவனே
ஒன்றே அனைவரும் என்றவனே உலகினில் பேரின்பம் ஆனவனே
704. இயேசுவே என் இராசனே வாழ்வை வழங்க வந்தாய்
இயேசுவே என் இராசனே வாழ்வை வழங்க வந்தாய்
தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் - 2

1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள் - அத்
தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் - 2
இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்
என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்

2. வானமும் பூமியும் அழிந்துவிடும் - இறை
வார்த்தையோ ஒருநாளும் அழியாது - 2
இயேசுவே தன்னை உயர்த்துவோன் தாழ்வடைவான்
தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்
705. இரக்கம் நிறைந்த தெய்வமே
இரக்கம் நிறைந்த தெய்வமே
இதயம் திறந்து அழைக்கின்றேன்
உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் - 2

1. பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்
பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்
உதயம் தேடும் மலரைப் போலவே
உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்
நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை
நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா
வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

2. தேடும் உலகச் செல்வம் நிறைந்தாலும்
பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்
அலைகள் ஓயாக் கடலைப் போலவே
அன்பே உனது அருளை வேண்டினேன்
தாயில்லாக் குழந்தை போலவே
தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே
முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே
காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே
706. இருளகற்றும் ஒளிச்சுடராய் வருவாய் என் இகமதிலே
இருளகற்றும் ஒளிச்சுடராய் வருவாய் என் இகமதிலே
மருளகற்றும் அருமருந்தே தருவாய் என் அகமதிலே

1. உடல் நலிந்து நலம் குறைந்து திடம் இழந்து தவிப்பவர்க்கும்
தடம் புரண்டு திசை விலகிப் பழமையிலே உழல்பவர்க்கும்
வளமுடன் நலமும் உளமதில் திடமும் - 2
மனமுவந்தே தினம் வரமருள்வாய்

2. பிரிவினைகள் நிதம் வளர்த்த பிரிவடையும் மனங்களிலே
பரிவிரக்கம் பிறர் நலன்கள் சரிந்து வரும் இந்த தரணியிலே
சமத்துவ உணர்வை வளர்க்கும் இவ்விருந்தை - 2
நிதம் எமக்கருளும் பரம்பொருளே
707. இறையவனே அருள் உறவே உளமதில் வருவாயே
இறையவனே அருள் உறவே உளமதில் வருவாயே
வெண்மதியே தண்ணிலவே சுடரொளி பொழிவாயே
ஒரு கணம் உனை அழைத்தேன் நீ குரல்தனைக் கேளாயோ
உன்னருகில் இருந்து நான் என்னுறவே நீ வா

1. உன்னிலன்றி உயிர் இல்லை வாழ்வினில் செயல் இல்லை - 2
தருவுடனே கிளை இணைந்து கனி தரவே வந்திடுவாய்
நீயின்றி நானில்லையே எனக்கேதும் உறவில்லையே - 2
கொடியாக நான் படர்ந்து உறவாகவே வந்திடுவாய்

2. உலகையாளும் மெய்ப்பொருளே தலமெல்லாம் பார்த்திருந்தேன் - 2
பொழுதெல்லாம் உன் நினைவே எனையாள வந்திடுவாய்
எங்கேனும் வன்பகையே உள்ளத்தில் படர் வெறுமை - 2
அளவில்லா உம்மன்பு நிரம்பிடவே வந்திடுவாய்
708. இறையே என் இசையே என் உயிர் தேடும் சுவாசமே
இறையே என் இசையே என் உயிர் தேடும் சுவாசமே
உனக்காக உருகும் என் உளம் தேடிவா
உன்னோடு உடன் வாழ உனதன்பில் உறவாட
ஏங்கும் என் இதயத்தின் இசைகேட்கவா
எந்தன் நெஞ்சிலே வாரும் இயேசுவே
எந்தன் வாழ்வையே மாற்றுமே
எந்தன் நெஞ்சிலே வாருமே எந்தன் வாழ்வையே மாற்றுமே

1. கண்மூடி நிற்கின்றேன் என் முன்னே வருவாயா
கண்ணாளா கரம் கோர்த்து எனை அணைப்பாயா
அன்பாக எனில் வந்தாய் இதயத்தில் இடம் கேட்டாய்
உனக்காக எனைத் தருவேன் என் நாயகா
நலிந்தேன் உன் நினைவாலே மகிழ்வேன் உன் வரவாலே
உன் அன்பு நிதம் வேண்டி உருக்குலைகின்றேன்
என் உயிரே என் உயிரே நீ ஒளியேற்றவா - எந்தன் நெஞ்சிலே

2. தென்றலிலே உன் வாசம் தேடிடும் என் சுவாசம்
மணம் வீசும் மலர்ப்பாதம் அது தேடுதே
தேடியே நாடி வந்து தேவா உன் பதம் அமர்ந்து
தினம் உந்தன் புகழ் பாட அது ஏங்குதே
தொலைந்தேனே உனைத்தேடி வருவாயோ எனைத்தேடி
என் ஆன்மத் தாகத்தை நீ தீர்க்கவா
என் உயிரே என் உயிரே நீ ஒளியேற்றவா - எந்தன் நெஞ்சிலே
709.இறைவன் அருகில் அமர்ந்து
இறைவன் அருகில் அமர்ந்து
அன்பைத் தரும் நேரம் - இன்ப நேரம்
அவரே ஆன்ம உணவாய்
என்னில் வரும் நேரம் - இன்ப நேரம்
நேரம் இன்ப நேரம்

1. குருதி சிந்தி எனை மீட்கும் நேரம்
உம்மை முழுவதும் எனக்காக்கினாய்
அமைதித் தேடி நான் ஓய்ந்த நேரம்
என்னைத் தேடி வந்து தேற்றினாய்
துயரங்கள் எனை வாட்டும் நேரம்
துணை நின்று வழி காட்டினாய் - 2
என் தேவன் எனைத் தேடி வந்த நேரம்
என் நிலை மாறுமே - என்னிதயம்
அவரிலே வாழுமே - இறைவன்

2. வருந்தி வருந்தித் தடுமாறும் நேரம்
உந்தன் தோளில் என்னைத் தாங்கினாய்
எனது எனக்கு என்றே வாழ்ந்த நேரம்
பகிர்ந்து வாழ எனை மாற்றினாய்
உலகமே எனைத் தூற்றும் நேரம்
உறவென்று இன்று நீ வந்தாய் - 2
உம் பார்வை பதிந்ததால் என்னை மறந்தேன்
உம் வழி வருகின்றேன்
உன் உடலை அனுதினம் பெறுகின்றேன்
710. இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு
இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு
இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் - 2

1. பன்னிரு சீடர்களைப் பந்தியிலே அமர்த்தி - 2
பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே - 2

2. அப்பத்தைக் கையெடுத்து அன்புடனே கொடுத்து - 2
இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் - 2

3. இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் - 2
எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே - 2
711. இறைவன் என்னில் எழுந்தது
இறைவன் என்னில் எழுந்தது
எனக்கு என்னென்ன ஆனந்தம்
இந்த ஏழையின் உறவினில் ஒன்றென
ஆனது என்னென்ன பேரின்பம் - 2

1. வானக வழியைக் காட்டிட வந்தார் மனிதரின் உணவாக - 2
வாய்மையும் தூய்மையும் விளங்கிட எழுந்தார் வாழ்வின் உணவாக
நல்ல வாழ்வின் உருவாக அது வான்மட்டும் உயர்ந்தாக
என் ஆண்டவரே என் தேவனே அன்பின் இயேசுவே எழுந்தாக

2. மாயஇவ் வுலகில் நான் உழன்றாலும் மேன்மைக்கு வழியாக-2
தூயவன் திருமகன் புகழை எந்நாளும் துதியுடன் நான் பாட
நல்ல மெய்யுணர் வதுக்காக என்னில் பேதமை ஒழிந்தாக - என்
712. இறைவன் என்னில் தங்கிட வா
இறைவன் என்னில் தங்கிட வா
நிறைவாய் அருளைப் பொழிந்திட வா
ஒரு வார்த்தை சொல்லி என்னைத் தகுதியாய் மாற்றிட வா
இயேசுவே வாராய் எழுந்து வாராய்
உறவோடு உயிரோடு கலந்திட வாராய்

1. என் பாதம் நோகாமல் என் பயணம் இனிதாக
என்னோடு என்றும் வாழ்ந்திட வா
எந்நாளும் என்னோடு தங்கிட வா
என் வாழ்வின் வழியாக முன் போக வா
உனில் வாழ என் வாழ்வில் அருள் தந்திடு - இயேசுவே

2. உன் அருகில் எனைச் சேர்த்து உறவோடு அணைத்திட
உணர்வோடு என்னில் மகிழ்ந்திடவா
பாவங்கள் புரிந்தே நான் வாழ்கின்றேன்
பரிவோடு எனை மீட்க வந்திடுவாய்
பண்போடு நான் வாழ வரம் தந்திடு - இயேசுவே
713. இறைவன் தரும் இந்த உணவு
இறைவன் தரும் இந்த உணவு
இதயம் நிறைந்திடும் உணர்வு
இறைவன் தரும் இந்த விருந்து
இதுவே அகமருந்து
என் வாழ்வும் - என் இயேசுதான்
என் வழியும் - என் இயேசுதான்
என் உயிரும் - என் இயேசுதான்

1. தனிமையில் இருந்தால் கூட உன் உணர்வே உரமாகும்
நான் துயரினில் விழுந்தால் கூட உன் கரமே துணையாகும்
இருளில் நானும் நடந்தாலும்
ஒளிப்பிளம்பாய் அருகே இருக்கின்றாய்
சுமைகளுமே சுகமாகும் உந்தன் வரவே வரமாகும்
எனைத்தேடி வந்தாயே நலம் யாவும் தந்தாயே
நல் வரமாய் வந்தாயே புது வாழ்வைத் தந்தாயே

2. உன்னில் கலந்திடும் போது - நான்
என்னிலை அறிந்து கொண்டேன்
உன்னை ஏற்றிடும் போது - நான்
பிறரைஅன்பு செய்வேன்
பேச்சினிலும் மூச்சினிலும் உந்தன் சாட்சியாய் எழுந்திடுவேன்
என் தேடல் நீதானே என் ஆவல் நீதானே
என் பாதை நீதானே என் பயணம் நீதானே
714. இறைவன் தரும் திருவிருந்து - இது
இறைவன் தரும் திருவிருந்து - இது
ஆன்ம வாழ்வின் அருமருந்து - 2
கல்வாரி மலைமீது பலியானதைக்
கனிவோடு நினைக்கும் திருவிருந்து
விருந்து விருந்து - இது இறைவன் தரும் திருவிருந்து - 2

1. பாவங்களோடு வாழ்வோரெல்லாம்
பரிவில் அழைக்கும் விருந்து - 2
தயவோடு பாவக்குறை நீக்க - 2
இறைவனே தன்னை உணவாக்கும் விருந்து - விருந்து

2. வாழ்நாளிலே இதை உண்போரெல்லாம்
பரகதி சேர்க்கும் விருந்து - 2
இறையோடு புதுவாழ்வினிலே - 2
இணையவே தன்னை உணவாக்கும் விருந்து - விருந்து
715. இறைவனின் உடலிது அவரது இரத்தமிது
இறைவனின் உடலிது அவரது இரத்தமிது
அவர் நினைவாய் நாம் செய்யும் மீட்பின் சின்னமிது
நம் வாழ்வின் உணவிது - 2

1. அப்பத்தை உண்டு கிண்ணத்தைப் பருகும்
வேளைகள் எல்லாம் விசுவாசமே
ஆண்டவர் வருகின்ற நாள் வரை நாமும்
மரணத்தின் அறிக்கை செய்வோமே
ஆதலினால் தகுதியுடன் - 2 அப்பத்தை உண்டிடுவோம்-நாம்
கிண்ணத்தைப் பருகிடுவோம்

2. பிளவுகள் அகற்றி பிரிவினை மறந்து
விருந்தினில் ஒன்றாய்க் கூடிடுவோம்
உறவினை வளர்க்க உள்ளத்தைப் பகிர்ந்து
விருந்தினை உலகினில் படைத்திடுவோம்
தினந்தோறும் திருவிருந்தில் - 2 இறைவனில் கலந்திடுவோம்
இறை நிழலாய் வாழ்ந்திடுவோம்
716. இறைவனின் வார்த்தை விருந்துண்ண வாரீர்
இறைவனின் வார்த்தை விருந்துண்ண வாரீர்
இதை உண்டு மகிழ்வில் எந்நாளும் வாழ்வீர் - 2

1. நம்மோடு இறைவன் நம்மோடு வாழ்வது
நமக்கெனப் பேரானது - இது - 2
அன்பான இறைவன் அவர்தரும் இரக்கம் - 2
என்றெல்லவோ இது உண்டிடும் உணவானது - 2 இது

2. வானோரில் இருந்து வருகின்ற உணவு
வழியாகும் ஒளியானது - இது - 2
தேனான அமுது தேற்றிடும் விருந்து - 2
மணாeர்களாக மகிமை தரும் விருந்து - 2 இது
717. இறைவனே வானக விருந்து தந்தார்
இறைவனே வானக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறி என்னைத் தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன் - 2

1. எந்தன்நாவில்தினம்வந்திடுவார்எந்தன்நெஞ்சில்என்றும்தங்கிடுவார்
உந்தன் அன்பில் தினம் வளர்ந்திடுவேன்
உன்னில் இன்பம் என்றும் நிலைத்திடுமே
திருவிருந்தே தேனமுதே திருவடி பணிகின்றேன் - 2
மலராக மலர்ந்து வந்தேன் மனத்தினிலே பூசை செய்தேன் - 3

2. விண்ணின் அருள் என்னில் பொழிந்திடுவாய்
கண்ணின் மணி எனக் காத்திடுவாய்
அன்பின் பாடல் என்றும் இசைத்திடுவேன்
என்னில் தெய்வம் என்றும் மகிழ்ந்திடுமே
தினம் தினம் நான் வருகின்றேன் விருந்தினில் மகிழ்கின்றேன் - 2
மலரோடு மகிழ்ந்து வந்தேன் மனத்தினிலே பூசை செய்தேன் - 3
718. இறைவா உன் அன்பு நிறைவான அன்பு
இறைவா உன் அன்பு நிறைவான அன்பு
உறவாக உணவாக வழங்கிய அன்பு
தன்னிகரில்லாத் தலைவனின் அன்பு
மனிதத்தைப் புனிதமாய் மாற்றிடும் அன்பு
எல்லாம் இறையன்பே எதிலும் நிறையன்பே
வாழ்வாக வழியாக ஒளியாக வந்த தெய்வமே - 2 - என்

1. பாலைநிலப் பயணத்திலே வான் மன்னாவை பொழிந்த அன்பு
பகலிலும் இரவிலுமே - எந்தக்
குறையின்றி காத்த அன்பு - 2 - எல்லாம் இறையன்பே

2. தாய்வயிற்றில் தோன்று முன்பே என்னைக் கருவாக அறிந்த அன்பு
சிறுபிள்ளை என்னையுமே இறைவாக்குரைக்கப்
பணித்த அன்பு - 2 - எல்லாம் இறையன்பே
719. இறைவா எழுந்தருள்வாய் எந்தன் இதயத்தில் வந்தருள்வாய்
இறைவா எழுந்தருள்வாய் எந்தன் இதயத்தில் வந்தருள்வாய்
கறைகளைக் கழுவிடுவாய் - உந்தன்
இதயம் போல் மாற்றிடுவாய் - 2

1. உலகினைப் படைத்து உயிரினைக் காக்கும் - இறைவா
அலகையை அடக்கி அமைதியைத் தந்த - இறைவா
எந்தனின் இதயம் அமைதியைக் கண்டிட - இறைவா
உந்தனின் அமைதியை உலகமும் கண்டிட - இறைவா

2. நொறுங்கிய உள்ளமும் மலர்ந்திடக் கனிந்திட - இறைவா
குறுகிய மனமும் பரந்திட விரிந்திட - இறைவா
பொய்ம்மையும் பகைமையும் ஒழிந்திட மறைந்திட - இறைவா
வாய்மையும் அன்பும் வளர்ந்திட வாழ்ந்திட - இறைவா
720. இறைவா எழுந்தே வர வேண்டும்
இறைவா எழுந்தே வர வேண்டும்
நிறைவாய் அருளைத் தர வேண்டும்
நின்வழி சென்றிடும் வரம் வேண்டும்
நிம்மதி வாழ்வில் பெற வேண்டும்

1. அன்பின் வடிவே ஆரா அமுதே
இன்பப் பெருக்கே பரம்பொருளே - 2
அல்லும் பகலும் உனையே நினைத்து
உருகும் வரமே தருவாயே - 2
நல்லோர் தீயோர் எல்லா உயிர்க்கும்
நலமே நல்கும் நாயகனே - 2
நானில மனைத்தும் ஒருங்கே அணைக்கும்
நல்லதோர் இதயம் தருவாயே - 2
அருட்கனியே - 2 தனிமுதலே - 2
அகநிறைவே - 2 ஆண்டவனே
அகவிருள் நீக்கி அருள் ஒளி காட்ட அருட்பெரும் சுடரே வாராயோ

2. என்னைப் படைத்தாய் இதயம் தந்தாய்
என்னில் நிறைவாய் அன்பிறையே - 2
எந்தன் எண்ணம் சொல்லில் செயலில்
என்றும் உறைவாய் முழுமுதலே - 2
எளியோர் தாழ்ந்தோர் வறியோர் வாழ்வில்
ஒளியை ஏற்ற அருள்வாயே - 2
தன்னலமின்றிப் பிறர்க்கென வாழும்
பொன்னரும் இதயம் அருள்வாயே - 2 அருட்கனியே
721. இறைவா என் இறைவா என் இதயத்தில் வந்திடுவாய்
இறைவா என் இறைவா என் இதயத்தில் வந்திடுவாய்
அன்பின் சுடராய் உறவின் உயிராய் இறைவா வந்திடுவாய்

1. காய்ந்த சருகாய்ப் பதராய் இருந்தேன்
கனிவாயுன் அருள் தந்தாய்
கலங்கிடும் வேளையில் கவலைகள்
சூழ்கையில் கருத்துடன் நீ வந்தாய் - உன்
அன்பினை நான் சுவைத்தேன் - உன்
அருளினில் நான் நனைந்தேன்
கனிவாய்க் காத்திடும் கருணையை உனில் கண்டேன்

2. நீரின்றி வாடிடும் செடியாய் இருந்தேன்
மழையாய் நீ வந்தாய்
நீரின்றி வாழும் நிலையற்ற வாழ்வில்
நிலையாய் நீ வந்தாய் - உன் அன்பினை நான்
722. இறைவா என் உள்ளம் வருவீர்
இறைவா என் உள்ளம் வருவீர்
இதய ஆலயம் வாழ்வீர்
அன்பின் மழையைப் பொழிந்திட வாரீர் - 2
அருளின் கொடையைத் தந்திட வாரீர்

1. உலகின் ஒளியே உண்மையின் உருவே
உள்ளத்தின் இருளை நீக்கிட வாரீர்
என்றும் உம்மை நேசித்திடவே - 2
எங்கள் இதயம் எழுந்தே வாரீர்

2. ஆன்ம நோயை அகற்றிட வாரீர்
ஆசீர் அளித்து காத்திட வாரீர்
துன்பம் துடைத்து தேற்றிட வாரீர்
தூயனாய் என்னை மாற்றிட வாரீர்
723. இறைவா என்னோடு பேசிட வா - என்
இறைவா என்னோடு பேசிட வா - என்
இதயம் மகிழ்ந்திட வா - 2
உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன் - 2
உனைப்பாடி மகிழ்ந்திருப்பேன்

1. கரங்களில் என்னைப் பொறித்தாய்
கண்ணின் மணியாய்க் காத்தாய்
மகனாய் மகளாய் ஏற்றாய் மனத்தினில் அமைதியைத் தந்தாய்
என்னில் வந்த சொந்தமாய் நின்றாய்
உன்னில் என்னை இணைத்திட வந்தாய்
வருவாய் வருவாய் வருவாய் வரம் தருவாய்

2. விழியினில் நிலவாய் வந்தாய் மார்பினில் சுடராய் நின்றாய்
உறவாய் எனை நீ அணைத்தாய் உயிராய் எனை நீ இணைத்தாய்
விண்ணில் என்னை இணைத்திட வந்தாய்
மண்ணில் பல விந்தைகளைப் புரிந்தாய் - வருவாய்
724. இன்றும் என்றும் திருநாளாம் நம் இயேசுவின்பாதத்திலே
இன்றும் என்றும் திருநாளாம் நம் இயேசுவின்பாதத்திலே
அடியவர்க்கெல்லாம் பெரும்விருந்தாம்
அவர் ஆலய பீடத்திலே - 3

1. மன்னவன் விருந்து தருகின்றார் அது மனிதர்க்கு திருவுணவாம்2
மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம் - 2
அது மாறாத பேரின்பமாம்
மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம்

2. கொடியில் கிளைகள் சேர்ந்திருந்தால் - அவை
கோடியாய்ப் பலன் தருமாம் - 2
இயேசுவில் நானும் இணைந்திருந்தால் - என்றும்
இல்லாத பேரின்பமாம் - 2 இல்லாத
725. இனிய அன்பு தேவனே எம் இதயம் எழுந்து வாரும்
இனிய அன்பு தேவனே எம் இதயம் எழுந்து வாரும்
இனி எந்தன் வாழ்வு உமதே - 2

1. துன்பங்கள் ஆயிரம் அலைகளாய் என்னிடம் வருகின்றன
அதில் துவண்டு நான் போயினும் - உந்தன்
திருமுகம் காண்கின்றேன்
என்றும் நீ இருக்க எனக்கேன் குறையோ - 2
உயர் இறைவன் அன்பு என்றும் போதுமே
துயர் யாவுமே என்றும் தீருமே

2. தீபம் போல் வாழ்வு உன்முன் என்றும் ஒளிரட்டும்
அதில் சுடர்போல் நானும் என்றும் உன்னால் ஒளிரணும்
என்றும் நீ இருக்கக் குறையே இல்லையே - 2
இந்த இறைவன் கருணை என்றும் போதுமே
எல்லை இன்றியே கடலாகுமே
726. இனிய இயேசுவே என் இதயம் வாருமே
இனிய இயேசுவே என் இதயம் வாருமே
தனியாய்ப் பேசவே மனம் உனையே நாடுதே - 2

1. ஒளியும் உயிருமில்லா எளிய பேழையில் - 2
எளியேன் எனக்காய் இரவும் பகலும் மறைந்து இருப்பதேன்

2. வெண்மை அப்பந்தன்னில் உண்மையாகவே - 2
உயிரும் உடலும் ஒருங்கே இணைத்து எமக்குத் தந்தாய்

3. உந்தன் வருகை தந்தாய் எந்தன் நெஞ்சமே - 2
இறைவன் வதியும் இல்லிடமாகவே உயர்ந்து மாறுமே
727. இனிய தெய்வம் இயேசுவே எங்கள் வாழ்வின் நாயகா
இனிய தெய்வம் இயேசுவே எங்கள் வாழ்வின் நாயகா
ஏங்கும் ஏழை நெஞ்சங்கள் ஏற்றம் காண எழுந்து வா

1. மார்த்தாள் மரியாள் இல்லம் சென்று
மகிழ்வை விதைத்த தெய்வமே
இறந்தஇலாசர்உயிர்த்துஎழுந்தான்உந்தன்வல்லமைச்செயலிலே-2
மண்ணில் மாந்தர் உதயம் காண மடிந்த இதயம் உறவில் உயிர்க்க
கருணைக் கடலே கனிந்த அன்பே
அணையா விளக்கே அருகில் வா

2. வானம் பார்த்த பூமியாக வளமை இழந்து தவிக்கின்றோம்
வந்து தங்கும் எம்மில் இறைவா வசந்தம் பெறுவோம் நாளிலே
நீயில்லாத வாழ்க்கை எல்லாம் நிலவில்லாத வானம் தானே
மனிதம் மலர மாண்பு உயர தேவ தேவா எம்மில் வா
728. உணவாக எழும் தெய்வமே உறவாட எனில் வாருமே
உணவாக எழும் தெய்வமே உறவாட எனில் வாருமே
தனைத்தந்த தெய்வம் எனையாள வந்தால்
தனிமைகள் பறந்தோடுமே தனி இன்பம் எனைச் சூழுமே

1. பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தை
இணைத்திடத் தோன்றிய தேனமுதே
பகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளைப்
போக்கிட மலர்ந்திட்ட வான் கவியே
திருஉணவும் திருப்பானமும் உனதுறவை எடுத்துச் சொல்லும் - 2
ஒரு பந்தி சமபந்தி எந்நாளும் மலரச் செய்யும் ஆ ம்

2. காலமெல்லாம் திருஉணவில் தனை வழங்கும்
கரையில்லா உனதன்பை நான் மறவேன்
கலங்கிடும் வேளையில் கைவிடாமல்
கரம்பிடிக்கும் என்தேவா உனைப் பிரியேன்
காத்திருக்கும் கண்களுக்குக் காட்சியாக நீ வருவாய் - 2
கனிவுடனே தங்கிடுவாய் ஏழை என் நெஞ்சினிலே ஆ ம்
729. உணவாக வா என் துணையாக வா
உணவாக வா என் துணையாக வா
என் மனவானிலே என் சொந்தமாக வா - 2 உணவாக வா

1. தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம்
தினம் தினம் போராடி சோர்வுற்றஞ்சும் - 2
தாகம் கொண்டோர்களே சுமை சுமந்தோர்களே - 2
கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே அன்பால் - 2

2. வாழ்விக்கும் உணவாக நீ வந்த நேரம்
நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னைப் பாரும் - 2
உள்ளம் உடைந்தோர்களே மாண்பை இழந்தோர்களே - 2
பாசத்தால் நனைக்கின்ற என் இயேசுவே உந்தன் - 2
730. உணவே உணவே உயிருள்ள உணவே
உணவே உணவே உயிருள்ள உணவே
உறவே உறவே அழியா உறவே
விருந்தே விருந்தே அன்பின் விருந்தே
மருந்தே மருந்தே வாழ்வின் மருந்தே
விண்ணக வாழ்வின் முன்சுவையாய்
இயேசுவே வாரும் மண்ணக வாழ்வு மாண்புறவே
வரங்கள் தாரும் உணவே உறவே

1. திரு உடலை உண்டு திரு இரத்தம் பருக
நிலைவாழ்வு எனதாகுமே
என் கடமை முடிக்க உன் பணியில் சிறக்க
உமதாற்றல் துணையாகுமே
பசிதாகம் இல்லாமல் செய்கின்ற உணவே
விசுவசித்து ஏற்போர்க்குத் தெவிட்டாத அமுதே
பணிந்தும்மை வணங்குகிறோம்
கனிவோடு வருவாயே உணவே மருந்தே

2. விண்ணில் இருந்து இறங்கி வந்த உணவே
உன்னை உண்டு என்றும் வாழ்வேன்
உலகம் வாழ அதுவும் நிறைவாய் வாழ
தனையளிக்கும் அன்பை உணர்ந்தேன்
முன்னோர்கள் உண்டிட்ட உணவென்று இதுவே
எந்நாளும் வாழ்விக்கும் இறையன்பின் உருவே
புலனுக்குப் புலப்படா பூரணமே ஆரணமே
731. உம்மைப் போல் நானும் வாழ என்னில் வாருமே
உம்மைப் போல் நானும் வாழ என்னில் வாருமே
உமது அருளில் வளர்ந்திட என்னில் தங்குமே
என் வாழ்வின் நிறைவாய் என்னில் நீ நிலைத்திட
என்னில் வாருமே என்னை மாற்றுமே

1. சின்னஞ்சிறு கோதுமை அப்பமதில் உம்
தெய்வீகக் கோலத்தை அடக்கியே - 2
தினம் தினம் நீர் என்னில் வந்து
உம்மால் எம்மை நிரப்புகின்றீர்
நான் வாழ நீ வேண்டும் என் இயேசுவே
நீயின்றி நான் இல்லையே - 2

2. என்னில் உம் திட்டம் என்னவென்று
நானும் கருத்தாய் அறிந்திடவே - 2
வாழ்வில் அதனைச் செயலாக்கிட
என்னை உம் அருளால் நிரப்பிடும் - நான் வாழ

732. உயிர் தரும் உணவே இறைவா என்
உயிர் தரும் உணவே இறைவா என்
உயிருக்குள் உயிராய் வா வா
அருள் தரும் ஊற்றே இறைவா
நல் ஆற்றலாய் என்னுள்ளம் வா வா
வாவாஇறைவாவாழ்வின் உறவாய்என்னுயிர்இயேசுவேவாவா- 2

1. உயிர் உள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா வா - 2
நிரந்தர வாழ்வே என் தேவா - 2
நிம்மதி வாழ்வாய் எனில் வா வா - 2
வாவாஇறைவாவாழ்வின் உறவாய்என்னுயிர்இயேசுவேவாவா- 2

2. அழியாத உணவே என் இறைவா
ஆன்ம ஒளியாய் எனில் வா வா - 2
அன்பின் பகிர்வே என் தேவா
அனுதின உணவாய் எனில் வா வா - 2
வாவாஇறைவாவாழ்வின் உறவாய்என்னுயிர்இயேசுவேவாவா- 2
733. உயிரான உணவு வடிவில் இயேசு வருகிறார் - நம்
உயிரான உணவு வடிவில் இயேசு வருகிறார் - நம்
உடன் வாழும் ஆவலோடு தேடி வருகிறார்
உண்ணும் உணவு நம்மில் இணைந்து ஒன்றாவதுபோல்
உள்ளம் ஏற்கும் நம் வாழ்வு இயேசுவாகவே

1. நீதி தேடும் நெஞ்சம் வாழ இயேசு துடிக்கிறார்
அநீதி புரியும் நெஞ்சம் செல்ல இயேசு மறுக்கிறார் - 2
ஒருவர் ஒருவர் புரிந்து வாழும் கூட்டுவாழ்விலே - 2
ஒன்றி நின்று உறவை வளர்த்து மகிழ்வு காண்கிறார்

2. உழைத்துக் காய்ந்த கரத்தில் தவழ இயேசு சிரிக்கிறார்
உழைக்காதுண்போர் அருகில் வரவே இயேசு அழுகிறார் - 2
இறைமைக் கனவே இகத்தில் மலர்த்தும் மாந்தர் மனத்திலே-2
இறவா உணவாய்த் தன்னை இணைத்து உறுதி கொடுக்கிறார்
734. உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய்
உயிரின் உயிரே இறைவா உணவின் வடிவில் வருவாய்
வாடும் உள்ளம் என்னைத் தேற்ற வா
வாழ்வின் பாதை நாளும் மாற்ற வா
உன்னருள் வருகையில் உலகமே மகிழ்ந்திட

1. உலகம் வாழ நீயும் உந்தன் உடலைச் சிதைத்து
உறவு பலியாய் உயிரைத் தந்தாய்
உனது வழியில் நானும் எனது வாழ்வை உடைத்து
உலகை மாற்றும் துணிவைத் தாராய்
உன் அன்புப் பாதைகள் என் வாழ்வின் பாடங்கள்
உன் அருளின் வாரத்தைகள் என் வாழ்வின் தேடல்கள்
உலகெல்லாம் மகிழ்ந்திட உள்ளத்தில் நீ வா

2. கருணை மொழிகள் பேசி கனிவுச் செயல்கள் காட்டி
கடவுள் ஆட்சிக் கனவைத் தந்தாய்
காணும் உயிர்கள் யாவும் கடவுள் உருவைக் காணும்
புதிய நெறிகள் வகுத்துத் தந்தாய்
இறையாட்சிக் குடும்பமாய் இவ்வுலகம் அமைந்திட
இங்குப் பகைமை அழிந்திட நல்பகிர்வு வளர்ந்திட
நீதியின் பாதையில் மானுடம் வாழ்ந்திட
735. உயிரின் உயிரே வா உன்னத ஒளியே வா
உயிரின் உயிரே வா உன்னத ஒளியே வா
அருளின் நிறைவே வா அன்பே எம்மில் எழுந்து வா - 2

1. வாழ்விக்கும் தெய்வம் நீயானாய்
வாழ்ந்தோம் உந்தன் தயவினால் - 2
முத்துகள் நீ தந்தாய் முத்தங்கள் நான் தந்தேன்
முதல்வா தலைவா விரைந்து வா - 2

2. அன்பென்னும் உறவு நீட்டினாய் ஆனந்த இராகம் மீட்டினேன் - 2
பாவங்கள் நீ வென்றாய் பாவியாய் நான் நின்றேன்
மாபரனே என்னை ஏற்றிட வா - 2
736. உயிரின் ஒளியே உறவொன்று தருவாய்
உயிரின் ஒளியே உறவொன்று தருவாய்
வாழ்வின் வழியே உளம் நின்று பொழிவாய்
உந்தன் திருவுளம் என்னிலே உயிர்த்தெழும்
உனதன்பில் வளர்ந்திடும் நின்பதம் உயர்ந்திடும் - 2
தலைவா உந்தன் திருமுன் சிலிர்த்து நின்றிடும் மனமும்
உந்தன் வழியினில் மலரும் மகிழ்ந்து தொடர்ந்திடும் பயணம்
தலைவா உந்தன் திருமுன் திருமுன்
சிலிர்த்து நின்றிடும் மனமும் மனமும்
உந்தன் வழியினில் மலரும் மலரும்
மகிழ்ந்து தொடர்ந்திடும பயணம் பயணம்
உணர்வுகள் நிலைபெறும் உறவுகள் உரம்பெறும்
உந்தன் மலரடி சரணம் சரணம்

1. உன்னெழில் தரிசனம் என்னகம் மலர்ந்திடும் பரம்பொருளே
ஆதவன் தழுவிடும் குளிர்கொன்றை மலராய்
வாடிடும் இதயத்தில் வசந்தமாய் வந்தாய் வளர்பிறையே
மேற்றிசை மெல்லிய இளந்தென்றல் காற்றாய்
ஆத்துமம் உறையும் ஈகையின் முதல்வா - 2
இதம் நிதம் வரைந்தாய் இசையாகி நிறைந்தாய்

2. தாகங்கள் தவிப்புகள் உலர்த்திடும் உன்னருள் வானமுதே
சூரியன் சுகித்திடும் வெண்பனித்துளியாய்
உன் பணிபுரிவதில் என் மனம் நிறைந்திடும் தேன்சுனையே
புவியினில் புரிந்திடும் வான்மழை முகிலாய்
இயற்கையில் இயங்கிடும் ஈசனே இறைவா - 2
இறைவிதை பொழிந்தாய்த் திருச்சபை மலர்ந்தாய்
737. உயிருக்குள் உயிரான என் இயேசுவே
உயிருக்குள் உயிரான என் இயேசுவே
உன்னோடு நான் வாழ வெகு ஆசையே
என் உள்ள உணர்வெல்லாம் நீ தானே அறிவாய்

1. உயிர் வாழும் வாழ்வு அழகானது - அதை
உனக்காக வாழ்வது அர்த்தமானது
உன் வாக்கை உலகெல்லாம் வாழ்வாக்கவே
உன் உயிரின் உணவு எனக்கு என்றும் வழியாகுமே - ஆ ஆ

2. அகம்தேடும் ஆனந்த அருள் ஊற்றே நீ
என் அகம் புகுந்து ஆட்கொள்ளும் உயிர்க்காற்று நீ
அன்பதனால் என் வாழ்வு அசைவாகவே
உன் அன்பன் உணவு எனைச் சேர நீயாகினேன் - ஆ ஆ
738. உயிரே எந்தன் உயிரே என்னில் ஒன்றாய்க் கலந்து விடு
உயிரே எந்தன் உயிரே என்னில் ஒன்றாய்க் கலந்து விடு
உன்னால் வாழும் என் உயிரே இனிதாய் இன்று ஆக்கி விடு
உணவாய் என்னில் நீ வரும் வேளை
உலகே இனிதாய் மாறிடும் நாளை

1. பாலைவனப் பயிராய் வாடி நின்ற வேளை
பாய்ந்து வரும் வெள்ளமாய் நீயாகினாய்
காய்ந்து போன நிலையில் நான் நின்ற வேளை
கனி கொடுக்கும் மரமாக நீ மாற்றினாய்
உயிரே உயிரே என்னில் இன்று கலந்திட வா
உறவே உறவே என்னில் இன்று மகிழ்ந்திட வா
என் வாடிய நெஞ்சம் உந்தன் வரவால் இனிதாய்ப் பூ பூக்கும் - 2

2. தேய்ந்து போன நிலையில் நான் நின்ற வேளை
தோள் கொடுக்கும் தோழனாய் நீ மாறினாய்
சோர்ந்து போன நிலையில் நான் நின்ற வேளை
தாங்கி வரும் கரமாக நீ ஆகிறாய் ‡ உயிரே உயிரே
739. உயிரே என்றாக உணவில் ஒன்றாக
உயிரே என்றாக உணவில் ஒன்றாக
இணைந்தார் நம்மில் எழுந்தார் - 2
திருவிருந்திலேபெரும் நிறைவிலே- 2 நாளும் மகிழ்ந்துவாழ்வோம்

1. உறவோ பிரிவோ நிறைவோகுறைவோ எமக்குப் பயமில்லையே - 2
எங்கள் இதயத்திலே அன்பர் இயேசுவையே - 2
என்றும் தாங்கி வாழ்ந்து செல்வோம்

2. உயர்வோ தாழ்வோ வாழ்வோ வீழ்வோ எமக்குப் பயமில்லையே - 2
எங்கள் இதயத்திலே அன்பர் இயேசுவையே - 2
என்றும் தாங்கி வாழ்ந்து செல்வோம்
740. உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்
உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும் - 2

1. ஆறாதத் துயர் தீர்க்கும் அருமருந்தே
அழியாத வானகத் திருவிருந்தே - 2
வழியாக வா என் வாழ்வினிலே உயிராக வா என் உடலினிலே
ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில் உள்ளம் மகிழ்ந்திடுமே
ஒரு பொழுதேனும் உன்னை மறந்தால் உயிரும் பிரிந்திடுமே

2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே நிறைவாழ்வைஎமக்குத் தருபவனே - 2
ஒளியாக வா என் பாதையிலே வளமாக வா என் வாழ்வினிலே
நீதியின் இறைவா நேர்மையின் தலைவா உள்ளம் வாருமே
வான்மழை போல வானக வாழ்வின் நிறைவைத் தாருமே
741. உயிரோடு வருவாய் உறவில் நீ இணைவாய்
உயிரோடு வருவாய் உறவில் நீ இணைவாய்
உண்மைக்குச் சாட்சியானாய்
பாரினில் வாழும் உயிர்களுக்கு
உம் பாசத்தைப் பொழிந்து மகிழ்ந்திடவே
உணவாய் - 2 வருவாய் - 2
இறைவா இறைவா என் இறைவா

1. பெருகிய பாவம் நொறுங்கிய மனிதம்
கருணையின் தேவா கண் பாரும்
வாட்டிடும் வறுமை வதைத்திடும் ஏழ்மை
உயிர்த்திடும் இறைவா உயிர்தாரும்
அழிந்திடும் சமூகத்தை மீட்டிடவே
எழுந்திடும் தீமையை ஒழித்திடவே - உணவாய்

2. ஏங்கிடும் உள்ளம் ஏற்றங்கள் காண
உலகிற்கு ஒளியாய் வந்திடுமே
உழைப்பின் முதல்வா உன்னத தேவா
உறவினில் மலர உனைத்தாரும்
பணிவுடன் பகிர்ந்து நான் வாழ்ந்திடவே
பரமனே உம்மில் நான் இணைந்திடவே - உணவாய்
742. உலகாளும் தலைவன் உயிருள்ள இறைவன்
உலகாளும் தலைவன் உயிருள்ள இறைவன்
உதிக்கின்ற நேரமிது உள்ளங்கள் எல்லாம்
உண்மையில் வாழ உணவாகும் தருணமிது
கரம் கூப்பி சிரம் தாழ்த்திப் பணிவோம் - அவர்
பணி செய்யும் சீடராய் உயர்வோம் - 2

1. செல்கின்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தவர்
நமையெல்லாம் அழைக்கும் நேரமிது
தேவையில் இருப்பவர் அனைவரைத் தேடி
பணி செய்ய அழைக்கும் நேரமிது
ஆனந்த நேரமிது - 2 அருள்மழை பொழிகிறது - கரம் கூப்பி

2. அயலாரைத் தேடி நேசித்த இறைவன்
பாதையில் சென்றிடும் நேரமிது
நண்பருக்காக உயிர்தர அழைத்தவர்
தியாகத்தை உணரும் நேரமிது - ஆனந்த நேரமிது
743. உள்ளத்தின் உயிராய்எழுவாய் உயிருக்கு உணவாய் வருவாய்
உள்ளத்தின் உயிராய்எழுவாய் உயிருக்கு உணவாய் வருவாய்
குரு இவர் கரம் வழி அருள்வாய் இறைவா வருவாய்

1. வானுறை இறைவன் பாவியர் எம்மை
சீருடன் பொறுத்த அன்பின் சின்னமாய் இறைவா வருவாய் - 2

2. உலகத்தின் ஒளியாய்ப் பலருக்குத் துணையாய்
நிலவிட அருள்வாய்த் திருக்குலத்தவர் யாம் இறைவா வருவாய் - 2

3. அழிவிற்கு மரித்து அருளிலே உயிர்க்கும்
எழில்மிகு கிறித்தவ வாழ்வில் வளர இறைவா வருவாய் - 2
744. உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல்
உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல்
இறைவனுக்கே எந்தன் பாடல் - 2
உருவமில்லாத வலிமை இது
வாழ்வினை வெல்லும் இலக்கு இது
உள்ளம் என் உள்ளம் அது இறைவனின் இல்லம்
செல்லும் அது செல்லும் உன் வழிதனில் என்றும்

1. பசியினில் நானும் வாடிடும் பொழுது
மன்னா பொழிகின்ற உள்ளம்
தாகத்தினாலே தவித்திடும் பொழுது
பாறையில் நீர்சுரக்கும் உள்ளம் - 2

2. பகலினில் நானும் பயணத்தைத் தொடர
மேகத்தூணாகும் உள்ளம்
இலக்கினை அடைய இரவிலும் செல்ல
நெருப்புத் தூணாகும் உள்ளம் - 2
745. உள்ளம் என்னும் கோவிலிலே வாராயோ இறைவா
உள்ளம் என்னும் கோவிலிலே வாராயோ இறைவா
இன்பம் எங்கள் வாழ்வினிலே தாராயோ தலைவா - 2
நீயே என் தேடல் நீயே என் பாடல்
நீயே என் இராகம் தாளம் சங்கீதமாம் - 2
மழையாக நதியாக இசையாக வா
உணவாக உறவாக உயிராக வா

1. என் வாழ்வு உனைத் தேடும் பயணம் அன்றோ
உன் அன்பு எனை மேவும் தருணம் இன்றோ - 2
தாயன்பில் தலை சாய்க்கும் சேயாகினேன்
நானுந்தன் பேரன்பில் குயிலாகினேன் - 2
ஆனந்தம் ஆனந்தம் என்
விழியிலும் மொழியிலும் ஆனந்தம்
பேரின்பம் பேரின்பம் என்
கனவிலும் நனவிலும் பேரின்பம்

2. உம் வாக்கு என் வாழ்வு விளக்கல்லவா
என் போக்குத் தனை மாற்றும் மொழியல்லவா - 2
உள்ளார்ந்த நலம் வேண்டி மன்றாடினேன்
உம் மார்பில் கார்மேக மயிலாகினேன் - 2 ஆனந்தம்

746. உள்ளக் கமலம் உனதாய் மாற என்னிடம் வாராய்
உள்ளக் கமலம் உனதாய் மாற என்னிடம் வாராய்
உவப்புடன் உமதருளை நாளும் தாராய் - 2

1. சுமை சுமந்து சோர்ந்திருப்போர் வாரீர் என்றீரே
சுமை இனிது நுகம் எளிது என்றும் சொன்னீரே - 2
கவலையினால் வாடுகையில் எங்கே செல்வோம் யாம் - 2
இளைப்பாற்றி கொடுப்பவரும் நீரே அன்றோ

2. உலகினுக்கு ஒளியாக வந்தாய் நீயே
வாழ்வினுக்கு வழிநானே என்றாய் நீயே - 2
உள்ளத்தினது இருளினிலே வாடும் நாங்கள் - 2
உமதருளில் நிலைத்திருக்கும் மாண்பைத் தாராய்
747. உள்ளம் கனிந்து ஓடோடி வந்து
உள்ளம் கனிந்து ஓடோடி வந்து
உம் பாதம் பற்றிக்கொண்டேன் - இறைவா
உம் பாதம் பற்றிக்கொண்டேன்

1. கடலாக நீயும் துளியாக நானும்
உம் மீதே நான் கரைவேன் - இறைவா
உம் மீதே நான் கரைவேன் - உள்ளம்

2. சுமை தாங்கி நீயும் சுமையாக நானும்
ஆறுதல் நான் அடைந்தேன் - இறைவா
ஆறுதல் நான் அடைந்தேன்

3. சொந்தங்கள் எல்லாம் நீயே இறைவா
உம்மிலே நான் மகிழ்ந்தேன் - இறைவா
உம்மிலே நான் மகிழ்ந்தேன்

4. நிசமாக நீயும் நிழலாக நானும்
உம்மிலே நான் கலந்தேன் - இறைவா
உம்மிலே நான் கலந்தேன்

5. என் வாழ்வினில் எல்லாம் நீதானே இறைவா
உன்னிலே நான் பணிந்தேன் - இறைவா
உன்னிலே நான் பணிந்தேன்
748. உள்ளம் மகிழ உறவு வளர உணவு வந்தது
உள்ளம் மகிழ உறவு வளர உணவு வந்தது
உலகம் எங்கும் மனிதம் வாழ உயிரைத் தந்தது
நலமளிக்கும் அருமருந்தாய் - நாளும்
நமைக்காக்கும் வானின் விருந்தாய் - 2

1. நிலவுள்ள வானத்தில் நிலைத்திடும் பேரொளி
கனிவுள்ள நெஞ்சத்தில் உதிக்கும் அருள்மொழி
நிறமுள்ள பூக்களில் மலர்ந்திடும் அழகொளி
நிறைவுள்ள நெஞ்சத்தில் பிறக்கும் நிம்மதி
உள்ளம் தூய்மை கண்டிட வழி சொன்னாய்
உலகில் அமைதி நிலவிட உனைத் தந்தாய் - 2
இறைவா என்னில் எழுந்து வா உனதாய் எனை மாற்ற வா

2. துயருறும் வேளையில் கலங்கிடும் கண்களை
துடைத்திடும் உறவென்று உன்னைக் காண்கின்றேன்
சுற்றமும் சொந்தமும் கைவிடும் பொழுதினில்
சிறகினில் அணைத்திடும் அன்பில் நனைகின்றேன்
உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்திட சுகம் தந்தாய்
உண்மை நீதி காத்திட அருள் தந்தாய் - 2
நாளும் நன்றி பாடுவேன் நலமாய் உன்னில் வாழுவேன்
749. உறவாட வாரும் என் உயிருள்ள தேவா
உறவாட வாரும் என் உயிருள்ள தேவா
உனக்காகத் தானே உயிர் வாழ்கிறேனே
நீயில்லை என்றால் நான் எங்குச் செல்வேன் - 2

1. அன்போடு வந்தாய் உயிரோடு கலந்தாய்
வாழ்வெல்லாம் நீயாகிறாய் என் சொந்த உடலாகிறாய்
நீயாக வா எனதாக வா என் நெஞ்ச உயிராக வா

2. சுமையோடு வந்தேன் சுகம் தந்து காத்தாய்
நினைவெல்லாம் நனைத்தோடினாய்
என் இன்ப நிலையாகிறாய் ‡ நீயாக வா

750. உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்
என் நெஞ்சம் இனிதாகப் பாடும்
கார்மேகம் காணும் மயிலாக நானும்
என் நாவில் ஆனந்த இராகம்
உணவாய் வந்த தெய்வம் - என் உள்ளம் கவர்ந்த தெய்வம்
உள்ளம் கவர்ந்த தெய்வம் - என் உணவாய் வந்த தெய்வம் - 2

1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண
விளக்கோடு உனைத் தேடினேன்
விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள
நான் இங்கு உளம் வாடினேன்
வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ
உனக்காக நான் வாழ்கிறேன் உன் அன்பில் ஒன்றாகிறேன்

2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்
நான் என்னை அழகாக்கினேன்
மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள
உனக்காக யாழ் மீட்டினேன்
வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ
உம் மாண்பு நிறைவானது உம் மாட்சி நிலையானது
751. உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்
உறவு ஒன்று உலகில் தேடி அலைந்து நான் திரிந்தேன்
உறவே நீ என்றாய் அன்பு தெய்வமே - 2
உறவே வா உயிரே வா எழுந்து வா மகிழ்ந்து வா - 2

1. உள்ளமெனும் கோவிலில் உறவென்னும் தீபமே
வாழ்வென்னும் சோலையில் வந்திடும் வசந்தமே - 2
அன்பனே நண்பனே உன்னை அழைத்தேன் வா
ஆன்ம உணவே அருளின் வடிவே அடியேன் இல்லம் வா
உறவின் தெய்வமே என்னில் உறைந்திட வா
அன்பின் சங்கமமே என்னில் தங்கிட வா

2. துன்பமெனும் வேளையில் அன்புடன் அணைக்கவே
துணையென வாழ்வினில் என்னுடன் தொடரவே - 2
இறைவனே இயேசுவே இதயம் எழுந்து வா
நாதனே நேசனே பாசமாய் நீ வா - உறவின் தெய்வமே
752. உறவே வா என் உயிரே வா
உறவே வா என் உயிரே வா - 2
புதுவாழ்வினை அளிக்க வா
நீ இல்லையென்றால் நான் ஒன்றும் இல்லை
உன் உறவினில் எனக்கொன்றும் குறையுமில்லை
உயிர் கொடுக்கும் உறவே வா உன்னதக் கொடையே வா

1. எங்கள் அன்பில் நீ இருக்க வேண்டும்
இறைவா நீ இருக்க வேண்டும்
உந்தன் அன்பு இல்லை என்றால்
எந்தன் வாழ்வு அழிந்திடுமே
உன் உறவாலே என்னைத் தேற்றுமையா
உன் வரவாலே என்னை மாற்றுமையா

2. எங்கள் உறவில் நீ இருக்க வேண்டும்
இறைவா உயிர் கொடுக்க வேண்டும்
உயிர் தரும் வாழ்வினை அளிக்க வா - உம்
உறவினில் நாளும் களிக்க வா - உன் உறவாலே
753. உறவைத் தேடி இறைவன் இங்கு வருகிறார்
உறவைத் தேடி இறைவன் இங்கு வருகிறார்
நிறைவைத் தந்து நம்மில் இன்று வாழ்கிறார்
உள மகிழ்ச்சியில் நமை நிறைத்திட
அவர் மாட்சியில் நாம் நிலைத்திட
மனக்கதவைத் திறந்து அன்பை நாளும் பொழிகிறார்

1. அமைதி அன்பு நிலைத்திடவே அருமைத் தோழனாய்
அழைத்துச் செல்ல நேசக்கரம் நீட்டி வருகிறார் - 2
காடும் மலையும் கடலின் அலையும் என்ன செய்திடும்
அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால் - 2

2. உரிமை வாழ்வைத் தந்திடவே உண்மை நண்பனாய்
உணர்வு பெற்று வாழ்ந்திடவே உயிர்த்து வருகிறார் - 2
சாவும் பிணியும் பேயின் பிடியும் என்ன செய்திடும்
அன்பர் இயேசு நம்மில் என்றும் நிலைத்து இருப்பதால்-2
754. உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா - 3

1. நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா - 2
எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா - 2

2. முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா - 2
இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண
எனைத் தேர்ந்த என் மன்னவா - 2
755. உன்னைக் கண்டு உறவாட உன்னைக் உண்டு உயிர் வாழ
உன்னைக் கண்டு உறவாட உன்னைக் உண்டு உயிர் வாழ
ஏங்குகிறேன் இயேசுவே என்னைத் தாங்கிட வா நேசரே - 2
அழைத்தேன் இறைவா இதயம் வருவாய் - 2

1. மாறாத பேரன்பு உன் கருணை அது
மலரச் செய்யும் என்னில் உன் திறனை - 2
வாராது வந்த அன்பே இயேசையா - உன்னை
சேராது வாழ்வு என்னில் ஏதையா

2. யாவர்க்கும் நிறைவாகும் சமாதானம் - அதை
வாழ்வோர்க்கும் பகிர்ந்தளிக்க வரவேணும் - 2
மேகங்கள் மீதமர்ந்து மீண்டும் வரும் - உந்தன்
வருகையின் மகிழ்வூட்டும் விருந்தருளும்
756. உன்னைத் தேடி உன் உறவைத் தேடி காத்திருந்தேன் வா
உன்னைத் தேடி உன் உறவைத் தேடி காத்திருந்தேன் வா
அன்பின் சிறகில் என்னை மூடி இன்பம் பொழிந்திட வா - 2

1. தகுதி இழந்தும் தாழ்ந்து இருந்தும்
தலைவா என்னைத் தேர்ந்ததேன் - 2
வார்த்தை போதும் என்று இருந்தேன்
வாழ்வின் விருந்தாய் வந்ததேன்
எனது ஆன்மவீணை மீட்டி அமுதகானம் இசைக்கின்றாய் - 2
உமது பாதம் அமர்ந்து நானும் உயிரின் கீதம் இசைக்கவா - 2

2. தலைவன் என்னும் மமதை கொண்டு
ஆட்சி செய்திடவில்லையே - 2
சீடர் பாதம் கழுவி அன்பின் பணியை நாளும் உணர்த்தினாய்
நண்பர் வாழ்ந்திட உயிரை அளிக்கும்
பலியே உயர்ந்த வாழ்வென்றாய் - 2
அதையே நாங்கள் வாழ்வில் தொடர
இதையுன் நினைவாய்ச் செய்யவா - 2
757. உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என்
உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என்
உள்ளத்தில் உறைந்திட வா
உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் - என்
உயிரினில் கலந்திட வா
வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே - 2

1. உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா
வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா - 2
நீதியும் நேர்மையும் மறைந்தாலும்
உரிமையை மனிதம் இழந்தாலும் - 2
உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

2. பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா
அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா - 2
வாள்களும் போர்களும் அழித்தாலும்
வாழ்வினை வாழ்வே எரித்தாலும் - 2
வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா
758. உன்னோடு உறவாட ஆவல் கொண்டேன்
உன்னோடு உறவாட ஆவல் கொண்டேன்
என் இயேசுவே என் உடன் பேசவா - 2

1. தாய் கண்ட சேயாய் நான் ஓடி வந்தேன்
நீர் தேடும் மானாய்ப் பாய்ந்தோடி வந்தேன் - 2
கார் மேகம் கண்டேன்
பார் போற்றும் தேவா உன் கருணையில் நான்
கார் மேகம் கண்டேன்
ஆனந்தம் கொண்டேன் - நீ வந்து
அருள் செய்ய வேண்டுகிறேன்

2. பாதைகள் தெரியா என் வாழ்க்கை ஓடம்
நீயின்றி எப்போது கரை ஓரம் சேரும் - 2
வழிØயான்று கண்டேன்
வழிகாட்டும் இயேசு உந்தன் வாழ்க்கையில் நான்
வழிØயான்று கண்டேன்
வாழ்வுண்டு என்றேன் - என் பாதை
நீயாக வேண்டுகிறேன்
759. உன்னோடு உறவாடும் நேரம்
உன்னோடு உறவாடும் நேரம்
என் பாடல் அரங்கேற்றம் ஆகும் - 2
எந்நாளும் என் வாழ்வில் நீ செய்த நன்மை
நாள்தோறும் நான் பாடும் கீதம் - 2

1. பல கோடி பாடல்கள் நான் பாடவேண்டும்
மனவீணை உனை வாழ்த்த வேண்டும்
ஒளிவீசும் தீபங்கள் நீயாக வேண்டும்
இமையோரம் நின்றாள வேண்டும் - 2
இதழோர இராகம் உன் சீவ கானம்
அருள் தேடும் நெஞ்சம் உன் பாதம் தஞ்சம்
மனமே மனமே இறையோடு பேசு

2. கல்வாரி வாக்குகள் வாழ்வாக வேண்டும்
வாழ்வே உன் கவியாக வேண்டும்
அலைமோதும் எண்ணங்கள் நீயாக வேண்டும்
வினை தீர்க்கும் மருந்தாக வேண்டும் - 2
மணியோசை நாதம் நான் கேட்ட காலம்
வான் தந்த வேதம் தேனாகும் கோலம்
உயிரே உயிரே இறையோடு பேசு
760. உன்னோடு நான் வாழும் ஒரு நாளே போதும்
உன்னோடு நான் வாழும் ஒரு நாளே போதும்
என் வாழ்வின் பொருள் காணவே
என்னோடு நீ பேசும் ஒரு வார்த்தை போதும்
என் சீவன் உயிர் வாழவே
மனத்தினில் என்றென்றும் மாறாது உன் பாசம்
தெய்வமே உன்னாலே நான் என்றும் வாழ்வேன்
உயிராக உறவாக என் தேவா வாரும்
என் வாழ்வின் குறை தீர்த்திடும்
உன்னாலே என் வாழ்வில் எல்லாமும் ஆகும்
தாயாக என்னைத் தாங்கிடும்

1. உனை விட்டு வெகுதூரம் சென்றேன்
ஊதாரி வாழ்க்கை நான் வாழ்ந்தேன்
உன் அன்பு நெறிகள் நான் மறந்தேன்
உதவாத செயல் எல்லாம் செய்தேன்
செல்வம் சேர்த்தேன் மகிழ்வே இல்லை
உறவைச் சேர்த்தேன் உணர்வே இல்லை
என் வாழ்வை நீர் மாற்றுமே - 2

2. தடுமாறும் என் வாழ்க்கை ஓடம்
துணையாலே உன் கரை சேரும்
விழியோரம் வழிகின்ற நீரும்
விடைதேடி உன் பாதம் சேரும்
என் வாழ்க்கையின் நம்பிக்கை நீ
உயிர் தேடிடும் உயர் செல்வம் நீ
என் வாழ்வில் எல்லாமும் நீ - 2
761. உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்
உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும்
உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும்
உன் அன்பில் நான் உறவாட வேண்டும் - 2

1. என் வாழ்விலே இது ஒரு பொன்னாள்
என் அகமதிலே நீ வரும் திருநாள் - 2
உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன் - 2
மன்னவன் உனக்காய் என்னையே கொடுப்பேன்

2. பொருட் செல்வமே என் கடவுள் என்று
ஏழையின் பொருளை எனக்கெனப் பறித்தேன் - 2
மனம் மாறினேன் மகிழ்வடைந்தேன் நான் - 2
பன்மடங்காக ஏழைக்குக் கொடுப்பேன்

3. என் பாவத்தை மன்னிக்க வருவாய்
என் உளமதிலே அமைதியைத் தருவாய் - 2
என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் - 2
என் வீட்டிற்கு மீட்பினைத் தருவாய்
762. உனைப் பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
உனைப் பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாகி உணவாகி உயிராகியே
என் நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ
என் நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ

1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீ தானே என்னை நினைத்தாய் - 2
என் பேரை உன்கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
என்னை விட்டு விலகுவதில்லை நீ என்னைக் கைவிடுவதுமில்லை
கண் இமையாகச் சிறகாக அணைத்தென்னைக் காக்கின்ற

2. சாநிகம பநிசசா சசநிசச சசநிசச நிரிரி நிசநிச நி
சாநிபமபநிபபா கமம பபமநதம்மபா
சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமைகாக்கும் விழிபோல எனைச் சூழ்ந்து தினம் காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான் பயம் கொண்ட வேளைகளில்
வழித்துணையாகத் துயர் போக்கும் மருந்தாக வருகின்ற
உனைப்பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
763. எங்களோடு தங்கும் இயேசுவே
எங்களோடு தங்கும் இயேசுவே - 2
மாலை நேரம் ஆகுதே பொழுதும் சாய்ந்து போகுதே
இருளும் சூழ்ந்து கொண்டதே இதயம் சோர்ந்து போனதே
எங்களோடு தங்கும் - 2 எங்களோடு தங்கும் இயேசுவே

1. உள்ளம் சோர்ந்து போகிறோம் உடன் நடக்க வா
நம்பிடாத மந்த உள்ளம் கடிந்து கொள்ள வா
மோசே துவங்கி நடந்த யாவும் எடுத்துரைக்கவா
குழப்பம் தீர்த்து தெளிவு கொள்ள அறிவுறுத்தவா
கவலை நீக்கி கலக்கம் போக்கவா
ஐயம் போக்கி ஆற்றலூட்டவா - 2
பணிந்து உம்மை வேண்டினோம் எம் இல்லம் தங்க வா

2. நீர் எம்மோடு பேசும்போது உள்ளம் உருகுதே
உம் வார்த்தை கேட்க எங்கள் இதயம் பற்றியெரியுதே
இல்லம் நுழைய பந்தி அமர்ந்த உணர்வு பொங்குதே
நீ அப்பம் பிட்டு புகழ்ச்சி கூற கண்கள் திறந்ததே
எங்கள் இல்லம் வந்து தங்குமே
இன்னல் நீங்கி இன்பம் பொங்குமே - 2 பணிந்து உம்மை
764. எந்தன் இதய இனிய வேந்தன்
எந்தன் இதய இனிய வேந்தன்
என்னில் வந்து தங்கும் நேரம் வந்ததும் வசந்தம் வீசுமே
வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு - 2
என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே

1. வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்பே
வீசிடும் காற்று நீ எனில் இல்லையென்றால் - 2
ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க
ஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாட ஆ
அன்பு தெய்வமே அருள் தாருமே
நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும்
இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே

2. நிம்மதி நீயாய் இருக்கின்ற போது
நிதமும் நீ என்னில் தங்கிட வேண்டும் - 2
சிந்தனைகள் யாவும் நீர் சீர்படுத்த வேண்டும்
சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும் ஆ
அன்பு தெய்வமே அருள் தாருமே
என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே
அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே
765. எந்தன் இதயம் வந்த நேரம் இன்ப நேரமே
எந்தன் இதயம் வந்த நேரம் இன்ப நேரமே
நீயும் நானும் பேசும் மொழி தான் புனித கானமே - 2
மன்னவனே நீ மகிழும் காலம் எனது வாழ்விலே
நான் திருந்தி உன்னைத் தழுவும் போது உதயமாகுதே

1. நடந்து செல்லும் பாதையில் தடைகள் வந்து சேர்கையில்
உள்ளம் வருந்தி சோருதே உவகை என்னில் மறையுதே
இடர்கள் நீக்கும் இறையே வா சுடராய் என்னில் எழுந்து வா-2
ஓடம் போல சுமந்து என்னை
அணைத்துக் கரைக்கு அழைத்து வா - 2

2. அருவி போலப் பாய்ந்திடும் உந்தன் அன்பின் சுகமதை
எளியோர் பணியில் காண்கிறேன்
அவரில் உன்னை தொழுகிறேன்
நன்மை ஒரு நாள் வென்றிடும்
உந்தன் அன்பைச் சொல்லிடும் - 2
ஏற்றத்தாழ்வு மறைந்து போகும்
எந்தன் வாழ்வு மலர்ந்திடும் உம்மில் -2
766. எந்தன் உயிரே நீதான் இயேசுவே
எந்தன் உயிரே நீதான் இயேசுவே
உன்னை மட்டும் சுவாசிப்பேன் - 2
நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறவாமல் - 2
என் மீது பாசம் கொண்டாய்
என் நெஞ்சில் வாசம் செய்தாய் -2

1. கல்வாரி நினைவுகள் தான் என் வாழ்வின் வரமாகுமே
உன்னோடு ஒன்றாகினால் என் வாழ்வில் வளமாகுமே - 2
உணவாய் எழுந்து எனில் வந்து - என்
உணர்வாய் கலந்து உயிர் சுமந்தாய்
மெழுகாய் உருகி ஒளிர்ந்திடவே உனது ஆற்றல் வேண்டுமே

2. என் வாழ்வின் தேடல்களில் வழியாகி ஒளியாக வா
என் வாழ்வின் சோகங்களில் தாயாகித் தாலாட்ட வா - 2
உறவாய் என்னை நீ அழைத்தாய் - என்
உறவுகள் இன்று உயிர் பெறுமே
சிலுவைகள் தோளில் நான் சுமக்க
உனது சிறகுகள் வேண்டுமே
767. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா

1. பாவப் பிணியைப் போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

2. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா
768. எந்தன் சொந்தமே இயேசுவே
எந்தன் சொந்தமே இயேசுவே
உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய்
எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே

1. சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது
சுகமாய் வாழ எழுந்தென்னில் வா - 2
எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் - 2
என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய்

2. சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும்
என் நெஞ்சிலே நீ இல்லையேல் - 2
சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் - 2
இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன்
769. எந்தன் நெஞ்சில் வாழும் என் இயேசுவே
எந்தன் நெஞ்சில் வாழும் என் இயேசுவே
சொந்தம் நீயே என்றும் என் நாதனே
வாடிடும் நெஞ்சம் தேடாதோ - உன்
வாசல் தேடிப் போகாதோ - என்
வாழ்வென்னும் சோலையில் வலம் வரும் நதியே
என்னுயிரே நீ வா - உன்
பொன்னொளி கதிரினில் என் விழி சங்கமம்
நின்னருளே நீ வா

1. உயிர் மூச்சு நீயே உனை நாளும் மறவேன்
உன்னோடு உறவாட தினம் தேடினேன்
என் சொந்தம் யாவும் நிறம் மாறிப் போகும்
நீங்காத நிழலாக நீ வந்தால் போதும்
தாயாய் என்னில் நீ வேண்டும் - உன்
சேயாய் என்றும் நான் வாழ - 2
உள்ளக் கோவிலில் உந்தன் தரிசனம்
தா அன்பே நீ வா அன்பே - 2

2. நினைவெல்லாம் நீயே என் வாழ்வின் என்றும்
ஆதாரம் நீயாக நான் வாழ்கிறேன்
என் துன்பம் யாவும் கரைந்தோடிப் போகும்
எனைத் தேற்றும் அன்பே நீ என்னில் வந்ததால்
ஊற்றாய் உள்ளம் நீ வேண்டும் - உன்
அன்பால் என்றும் சுகம் காண
உள்ளக் கோவிலில் உந்தன் தரிசனம்
தா அன்பே நீ வா அன்பே - 2
770. எல்லாம் எனக்கு நீயாய் இருக்க
எல்லாம் எனக்கு நீயாய் இருக்க
யாரிடம் செல்வேன் இறைவா
நீ சொல்லும் வார்த்தை வாழ்வல்லவா - 2
அல்லும் பகலும் உடன் வாழ்பவா

1. சொந்தங்கள் நூறாய் வாழ்வினில் சூழ்ந்தாலும்
துன்பங்கள் வந்தால் நிலைப்பதில்லை
உறவுகள் ஆயிரம் உலகினில் கொண்டாலும்
இறவாது இறுதியில் வருவதில்லை
நிரந்தரம் உந்தன் அருள் துணை வலிமை - 2
நிகரின்றிப் பொழியும் வரம் மழை மேன்மை
உன் பாசம் தெரிந்து நான் யாரிடம் செல்வேன் இறைவா

2. வண்ணங்கள் பலதாய் ஒரு சேர தோன்றும்
வானவில் என்றும் அழகல்லவா
எண்ணங்கள் ஒன்றாகச் செயல்கள் நன்றாகும்
வானமும் பூமியும் புதிதல்லவா
அருகினில் மகிழ்வதே புதுவாழ்வின் வளர்பிறை
உன் நேசம் மறந்து நான் யாரிடம் செல்வேன் இறைவா
771. எழுவாய் அமலா மகிழ எம் இதயம்
எழுவாய் அமலா மகிழ எம் இதயம்
எனதுள்ளம் மகிழ்ந்திட வா
அருள்பொழி நிலவே இருள்நிறை உலகை
மாற்றி அமைத்திட வா

1. வாழ்வில் உமை மறந்தோம் எம்
தாழ்வில் உமை இகழ்ந்தோம் - 2
வானவர் போற்றும் வானமுதே வாழ்த்திப் புகழ்ந்திட வா

2. பாவக் கறை போக்க எம்
வாழ்வில் குறை நீக்க - 2
தாழ்ந்து நின்றோம் உம் மாபதமே வாழ்த்திப் புகழ்ந்திட வா
772. எழுவாய் எமதுள்ளம் இறைவா - உம்
எழுவாய் எமதுள்ளம் இறைவா - உம்
எளியோர் உண்ணும் உணவாய் நீ
எழுவாய் எமதுள்ளம் இறைவா

1. வருந்தி வாடிடும் மக்கள் நீர் வாருங்கள் என்னிடம் என்றீர்
வருந்திய மக்கள் வந்தோம் உம்மை அருந்திட
உணவாய் அளிப்பாய்

2. உண்ண உடலை அளித்தீர் - யாம்
குடிக்கக் குருதியைக் கொடுத்தீர்
மாசின் மக்கள் பிழைக்க மண்ணில்
மனுமகன் புகழைப் போற்ற

3. அன்பின் அருவி நீரே உன் அன்பைப் பருக வந்தோம்
அருளின் மழைநீர் நீரே அதனை அடியோர் எம்மேல் பொழிவீர்
773. எழுவீர் இறைவா ஏழையின் உளமே
எழுவீர் இறைவா ஏழையின் உளமே
எழிலே வாழ்வில் தருவீர் வளமே - 2

1. பாலை நிலத்தில் பசித்த முன்னோர்
புசிக்கும் உணவாய் அளித்தீர் மன்னா - 2
பாரில் வாடும் மாந்தர் நாடும் பரம உணவே வா

2. வாழ்வில் வழியும் நீரே என்றீர்
வானோர் அமுதம் எமக்கு ஈந்தீர் - 2
பாறை பிளந்தே பானம் அளித்த சீவிய சுனையே வா

3. பேழையில் உறைந்த ஏழையின் விருந்தே
வேளையில் உதவும் தெய்வீக மருந்தே - 2
பனிமலை உருக்கும் பகலவன் போல பாவத்தைப் போக்கிட வா
774. என் அன்பு இறைவா என் தங்கத் தலைவா
என் அன்பு இறைவா என் தங்கத் தலைவா
என்னுள்ளம் எழுந்திடுவாய்
என்னில் உன் அன்பைப் பொழிந்திடுவாய்
எந்தன் முதல்வா தலைவா என்னில் வருவாய்
எந்தன் உறவாய் உன்னைத் தருவாய்

1. நிமிடமும் ஒரு யுகமாகும் நீயின்றி வாழ்ந்திருந்தால்
யுகமும் ஒரு நொடியாகும் எந்தன் உள்ளம் நீயிருந்தால்
தன னனனனா - 2 தன னனனன னனனன னா
காலம் யாவும் கடந்த தேவா
கண்ணின் இமையாய்க் காத்திடுவாய்
காற்றும் கடலும் படைத்த தேவா
கரங்கள் பிடித்து நடத்திடுவாய் - எந்தன்

2. வறண்ட ஒரு நதியாவேன் வாழ்வில்
உன்னைப் பிரிந்துவிட்டால்
வழிந்தோடும் நல் அணையாவேன்
வள்ளல் உம்மில் இணைந்துவிட்டால்
தன னனனனா - 2 தன னனனன னனனன னா
வாழ்வில் வெளிச்சம் வழங்கும் தேவா
வளமாய் வாழ வழியாய் வா
விடியல் அனைத்தும் விண்மீன் ஆக
வறுமை நீக்கிட உள்ளத்தில் வா - எந்தன்
775. என் அன்புத் தாயாக எனைக்காக்கும் இறைவா
என் அன்புத் தாயாக எனைக்காக்கும் இறைவா
உனையன்றிச் சொந்தங்கள் வேறில்லையே - 2
என் உறவானவா என் உயிரானவா
என் வாழ்வெல்லாம் நீயே துணையாகவா

1. கரங்களில் என்னைப் பொறித்தவரே
உன் தோளினில் என்னைச் சுமந்தவரே
கருணையின் மழையே தெய்வமே
காலங்கள் கடந்த பரம்பொருளே
கண்ணின் மணியாய்க் காப்பவரே
தாய்மையின் உருவம் ஆனவரே
ஏழிசை மீட்டியே இறை உன்னைப் புகழ்வேன்
உன் பதம் பணிவேன் மாபரனே
பொன்மனம் படைத்தவன் புகழினைப் பாடுவேன்
கரு முதல் காக்கும் தாயவனே - 2

2. வியத்தகு இறைவனின் படைப்புகள் எல்லாம்
உயிரே உந்தன் அருள் கொடையே - 2
துணையாய் இருப்பது நீயென்றால்
தோல்வியைக் கண்டு பயமேதேன்
வறியவர் வாழ்வில் வளம் சேர்க்க
வாழ்வை முழுவதும் உமக்களித்தேன் - ஏழிசை மீட்டியே
776. என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது
என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது - 2
என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன் - 2

1. பசியால் வாடும் ஏழையின் நிலையில்
பாவி நான் நின்றிருந்தேன்
பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி
அருளமுதை ஈந்தார் - 2

2. ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும்
அணைத்திடவே வந்தார்
ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை
மாற்றிடவே வந்தார் - 2
777. என் ஆன்ம உணவே வா என் உள்ள உயிரே வா
என் ஆன்ம உணவே வா என் உள்ள உயிரே வா
நீயின்றிப் போனால் நான் வீழ்ந்து போவேன்
நான் வாழ என்னகம் வா - 2

1. முன்னோர் உண்டனர் மன்னா மடிந்து போயினர்
உன்னைத் தகுதியாய் உண்டால் வாழ்வோம்
சாவை வெல்லுவோம் - 2
ஆவலாய் அழைத்தேன் வா இறைவா - இந்த
ஏழைக்கு உன் அருள் தா இறைவா - 2
உன்னில் நான் என்னில் நீ வாழ்ந்திட வரம் தர

2. இனி நான் மெல்லத் தேய்வேன் மறைந்து போவேன்
இனி நீரே என்னில் வாழ்வீர் வாழச் செய்குவீர் - 2
எனவே அழைத்தேன் வா இறைவா - என்றும்
என்னகம் குளிர வா இறைவா - உன்னில் நான்
778. என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா
உன் உறவை எண்ணியே
உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்துவா - 2

1. அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒருநாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் - 2
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - 2
என் இனிய அன்பே எழுந்து வா

2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு - 2
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ - 2
என் இனிய நண்பா எழுந்து வா

3. பொய்ம்மை மலிந்துமெய்ம்மை மெலியும் நிலையைக் காண்கிறேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகிறேன் - 2
எந்தன் தெய்வமே உன் அன்பால் ஆள வா - 2
என் உள்ளம் நிறைந்து வாழ வா
779. என் இதயம் என் இதயம் எழுந்து வாருமே
என் இதயம் என் இதயம் எழுந்து வாருமே
என் நிறைகள் என் குறைகள் பகிர்ந்து கொள்ளுமே
என் மனத்தில் என் நினைவில் நிலைத்து நில்லுமே
என் அருகில் நிதமிருந்து வழிநடத்துமே

1. இன்பம் பெருகும்போது அதைப் பகிர்ந்து கொள்ளவா
துன்பம் வரும்போது நீ தோள் கொடுக்கவா
இனிமை பொங்கும் போது இணைந்து மகிழவா
இன்னல் அணுகும்போது கைகொடுக்கவா
அப்ப வடிவில் வா வார்த்தை வடிவில் வா
அன்பு வழியில் வா அயலான் வழியில் வா

2. சோதனையின் போது சொந்தமாக வா
வேதனையின் போது தாங்கிக் கொள்ளவா
பாவம் செய்யும் போது தடுத்து நிறுத்தவா
பயந்து ஒளியும் போது பாதுகாக்கவா - அப்ப வடிவில் வா
780. என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து
என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து
என் வாழ்வின் அருமருந்து - 2
இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார் இயேசு - 2

1. உயிரினை அளித்திடும் திருவுடலாம்
உறவினை வளர்த்திடும் இறையுடலாம்
பிணிகளை நீக்கிடும் கனிகளைக் கொடுத்திடும்
மாபரன் இயேசுவின் உயிருடலாம் - 2
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் என்றே
அன்புடன் அழைக்கின்றார் இயேசு இயேசு

2. பாவங்கள் கழுவிடும் திரு இரத்தமாம்
பரகதி சேர்த்திடும் இறை இரத்தமாம்
அன்பிலும் பண்பிலும் அருளிலும் வளர்த்திடும்
ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தமாம்
அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் என்றே
அன்புடன் அழைக்கின்றார் இயேசு இயேசு
781. என் இயேசு நாயகா என்னகம் வாரும்
என் இயேசு நாயகா என்னகம் வாரும்
பண் கொண்டு பாடி வா விண்ணக இராகம் - 2
உன் இதயம் தாரும் மன்னவா என் இதயம் வாரும் இனியவா

1. மண்ணில் அன்று உம்மை அங்கு நீர் தந்தாயே
என்னில் இங்கு நீயும் இன்று வந்தருள்வாயே - 2
விண்ணில் கீதங்களைப் பாடும் என் சீவனே - 2
என்னில் உன் கவிதைகளைப் பாடிட வா - 2

2. இருளின் பாதை தானே இங்குத் தெரிகின்றது
அருளின் பாதை தனையே நீ காட்டிடுவாயே - 2
வாரும் என் இயேசுவே மாற்றும் எம் வாழ்க்கையை - 2
தாரும் உன் சீவனுள்ள சந்தங்களை - 2
782. என் இறைவன் இயேசு என் இதயம் தேடி
என் இறைவன் இயேசு என் இதயம் தேடி
எழுந்து வரும் வேளையிது
உணவாய் எழுந்து வரும் வேளையிது

1. அன்பு செய்து வாழுங்கள் என்று சொன்ன இயேசுவே
நமது இதயம் தேடி வருகிறார்
பாவக் கறைகள் போக்கியே பரிசுத்தமாக்கவே
பரமன் இயேசு நம்மில் வருகிறார்
முடிவில்லாத வாழ்வையே மானிடருக்கு அருளவே
மாட்சியோடு தேவன் வருகிறார் ஆ
அழிவில்லாத உணவெனத் தன்னையே தந்து நம்
ஆத்துமாவின் பசியைப் போக்கினார்

2. வெறுமையான என்னையே செல்வராக ஆக்கிட
இயேசு என்னைத் தேடி வருகிறார்
பிரிவில்லாத உறவையே நிரந்தரமாய்த் தந்திட
மகிழ்ச்சியோடு விருந்து தருகிறார்
இறைவன் என்னில் எழுந்ததால் இன்பம் என்னில் நிறைந்ததால்
துயர மேகம் கலைந்து போனதே ஆ
இதயக்கதவு திறந்ததால் புதிய ஒளி பிறந்ததால்
இருளின் ஆட்சி மறைந்து போனதே
783. என் இறைவனே என் தலைவனே வா எழுந்து வா
என் இறைவனே என் தலைவனே வா எழுந்து வா
என்னை நிறைக்க வா பசும்புல்லில் என்னை மேய்த்து
குளிர் ஓடையில் அமரச் செய்தார் - 2

1. காரிருள் சூழ் பெறும் பள்ளத்தாக்கிலே
நான் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
நீர் என்னோடு இருக்கையில் பயமில்லையே
உம் கோலும் கவணும் என்னைக் காக்கும்
நீர் இருக்க எனக்கேது தயக்கம்

2. பகைவர்கள் முன்னே சுவை விருந்தாய்
என் தலைமீது நறுமண அபிசேகமாய்
நீர் எனக்குப் புத்துயிர் அளிக்கின்றீர்
உன் நீதியின் பாதையில் நடத்துகின்றீர்
நீர் இருக்க எனக்கேது கலக்கம்
784. என் உயிரில் கலந்து என்னில் உறவாட வா
என் உயிரில் கலந்து என்னில் உறவாட வா
என் உள்ளம் நினைந்து என்னில் வாழ வா
என் மன்னவா நீ என்னில் வா குறைகள் நீக்க வா

1. உன் உடலைத் தந்து நானே உணவென்றாய்
உன் குருதி சிந்தி நானே பானம் என்றாய்
வறண்ட நிலமாய் நான் வாழ்கிறேன்
உயிரின் ஊற்றாய் நீ நின்றாய்
வாழ்வின் ஊற்றாய் நீ வந்தாய் - என் - 2

2. உன் சிலுவைச் சாவே உலகின் மீட்பென்றாய்
உன் உயிரைத் தந்து நானே உறவென்றாய்
தனிமை எந்தன் உறவானது
தாயைப் போல நீ வந்தாய்
தந்தை போலத் தேற்ற வந்தாய் - என் - 2
785. என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது இறைவா
என் உள்ளம் உனக்காக ஏங்குகின்றது இறைவா
என் நெஞ்சம் உனை எண்ணிப் பாடுகின்றது - 2
வருவாயோ என்னுள் உறைவாயோ
விரைவாக வாழ்வின் நிறைவாக - ம் ம்

1. நீரின்றி அமையாது இவ்வுலகம் வேரின்றி நில்லாது செழுமை மரம்
நிலவின்றி ஒளிராது இரவில் முகம்
மலரின்றி சிலிர்க்காது நல் வசந்தம்
நீதானே எந்தன் ஆதாரம் உன்னில் வாழ்ந்தாலே பலன் ஏராளம்
இறைவா எனவே கிளையாய்க்
கொடியோடு கொடியாய் வா வா வா வா இறைவா - 2

2. மனம் தேடும் இன்பங்கள் கிடைப்பதில்லை
மாறாத செல்வங்கள் உலகிலில்லை
பிரியாத சொந்தங்கள் தரையிலில்லை
இறவாத வாழ்வென்று இகத்திலில்லை
நீதானே வாழ்வின் உணவாவாய்
எனக்கு நிலையான வாழ்வின் வரம் தாராய்
இறைவா உம்மில் உம்மில்
நிறைவாழ்வு காண்பேன் - வா வா வா வா இறைவா - 2
786. என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய்
என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய்
நம் ஆண்டவர் நம்மில் வரும்போது - 2

1. பாவி என்னுள்ளம் உன்னில்லமாக்குவாய்
பாவத்தினால் வந்த சாபம் போக்குவாய்
தாவி வருவாய் என் தாகம் நீக்குவாய்
காவலாய் என்னில் என்றும் நீ வாழுவாய்
வாழ்வரசே வந்தென்னை ஆளுவாய்

2. வானிலிருந்து என் ஆன்ம அமுதமாய்
வாழ்வும் என் வாழ்வினிலே ஒளியுமாய்
கானிலே அன்று என் இன்ப மன்னாவாய்
தானமாய் எல்லாம் எமக்கே தந்தவா
எல்லை உண்டோ உந்தனின் அன்பிற்கே
787. என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2. எழில் வானம்போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
788. என் சொந்தமான இயேசுவே என்னில் வந்த நாதனே
என் சொந்தமான இயேசுவே என்னில் வந்த நாதனே
உன்னைக் கண்டு உறவாட உன்னில் என்றும் நான் வாழ
(என் இதயம் ஏங்குதே இதயம் ஏங்குதே)
எந்தன் இதயம் ஏங்குதே எந்தன் இதயம் ஏங்குதே

1. சுமைகளோடு நானிருந்தேன் சுகமாய் என்னில் நீ இணைந்தாய்
வலிமையின்றி நான் தவித்தேன் பலமாய் என்னில் நீ நிறைந்தாய்
ஏழ்மையோடு நான் பிறந்தேன் வளமையோடு எனை வளர்த்தாய்
வறுமையோடு நான் தளர்ந்தேன்
வளர்ச்சியோடு எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே

2. பார்வை இழந்து நானிருந்தேன்
கண்ணில் ஒளியாக நீ இணைந்தாய்
கேட்க முடியாமல் நான் தவித்தேன்
அருள்மொழியாக நீ நிறைந்தாய்
பாதை தெரியாமல் நான் நடந்தேன் கரங்கள் பிடித்து நீ நடந்தாய்
நண்பர் இன்றி நான் தளர்ந்தேன்
நட்பின் சான்றாக எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே
789. என் தெய்வம் என் சொந்தம்
என் தெய்வம் என் சொந்தம்
என்னோடு வாழும் என் சீவ சங்கீதமே
எனக்காக எல்லாமும் எனதாக்க சீவன்
எந்நாளும் உமைப் பாடுதே - 2

1. நான் வாழும் வாழ்வெல்லாம் நானல்ல நாதா
நீயின்றி வாழ்வேதையா
காண்கின்ற யாவும் என் கர்த்தாவே தேவா
கவிபாடும் கலைக்கூடமே
என்பாடல் உன்னோடு எந்நாளும் வாழும்
என் இதயம் நீர் மீட்டவே
பாடும் சங்கீதம் பரமன் உன் கீதம்
பார் போற்றும் தேவா நீர் வந்தாள வேண்டும்

2. நதிபாடும் கடல்பாடும் நிலமெல்லாம் பாடும்
நின் அன்பின் நிறைவாகவே
நிழல் தேடும் நெஞ்சங்கள் நின் அன்பில் வாழும்
நிறைவோடு நிறைவாகவே
வசந்தங்கள் என் வாழ்வில் வருமின்ப வேளை
வான் நோக்கும் என் கண்களே
வரம் வேண்டி நாளும் வாழ்கின்ற சீவன்
வளம் ஈந்து என்னில் தினம் வாழ்கின்ற தேவன்
790. என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா
என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா
என்னில்லம் உன்னில்லம் ஆக்கிட வா என்னை நீ ஆள வா

1. அகத்தின் இருளை அகற்றும் அருளைப்
பொழிவாய் நின் வரவால் - 2
நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும் - 2
நல் உள்ளம் அருள வா
என் தெய்வமே மகிமை மன்னவா - 2

2. வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே
மாந்தரைக் காத்திட வா - 2
உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும் - 2
என் உள்ளம் எழுந்து வா - என் தெய்வமே
791. என் தெய்வமே இயேசு தெய்வமே
என் தெய்வமே இயேசு தெய்வமே
உன் பாதமே மலர் சூடுவேன் - 2

1. என் இறையே என் எழிலே வா - உன்
சொந்தமாக என்னைத் தேற்ற வா
பூவிளையும் தேனமுதே வா
உன் புன்னகையால் என்னைத் தேற்ற வா
என் உயிரே என் உளமே வா
உன் உயிரில் கலந்திடுவேன் நான்

2. உலகமெல்லாம் ஒளிபெறவே வா - என்
உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ள வா - 2
தென்றலிலே மகிழ்ந்து தவழ்ந்து வா
உன் தேனிசையால் என்னை ஈர்க்க வா
தென்பொதிகைச் சந்தனமே வா தேன்மதுரத் தீந்தமிழே வா
792. என் தேடல் நீ என் தெய்வமே
என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே - இறைவா

2. உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே - இறைவா
793. என் தேவன் என்னில் வந்தார்
என் தேவன் என்னில் வந்தார்
என் வாழ்வில் துணையாய் நின்றார்
அன்பின் பாதையில் அவர் நாளுமே
எனை ஆட்கொள்வார் இனிதாகவே என் சீவிய காலம் மட்டும்

1. இத்தனை காலம் என்னிறை தேவன்
எத்துணை நன்மைகள் என்னிடம் கண்டார்
நித்தமும் என்னிலே நெஞ்சமும் பாடாதோ
கர்த்தரின் நாமம் நித்தமும் வாழும்
இத்தரை மீது சத்தியமாக
நித்திய வாழ்வினை நெஞ்சம் தேடாதோ
இனி நாளுமே இறை பாதையில் - 2 இனிதான பயணங்களே

2. என்னிறை தேவன் தன் நினைவாகத்
தன்னையே தந்து என்னையே மீட்டார்
உன்னதமாகவே என்னகமே வந்தார்
கண்ணியமாகவே என்னையே நாளும்
மண்ணகம் மீதே காத்திடும் போதே
விண்ணகம் வாழ்வது எண்ணியே மகிழ்கின்றேன் - இனி
794. என் தேவனே என் இறைவனே என் இனிய நேசனே
என் தேவனே என் இறைவனே என் இனிய நேசனே
என் அன்பனே என் நண்பனே இதயம் வாருமே
வா வா விரைந்து வா என்னில் வா எழுந்து வா - 2

1. தண்ணீர் கண்ட மானைப் போல்
தாவி நானும் வருகின்றேன் - 2
ஆன்மதாகம் தீரவே அள்ளிப் பருக விழைகின்றேன் - வா வா

2. வருக தேவா வருகவே வாழ்வை எமக்குத் தருகவே - 2
உன்னில் என்றும் வாழவே உமது அருளைப் பொழியவே - வா வா
795. என் தேவா வா எழுந்து வா
என் தேவா வா எழுந்து வா
உன்னில் இன்பம் நான் என்றும் காண
என் தேவா எழுந்து வா

1. நாடினேன் உன்னுள்ளம் காணவே
விரும்பினேன் உன்னோடு வாழவே - 2
மலரைப் போல வாசமாய் ஒளியைப் போல உள்ளமாய் - 2
நான் வாழ என்னில் வா உன்னில் நான் மகிழ வா

2. அப்பத்திலே உணவாய் வருகின்றாய்
இரசத்திலே இரத்தமாய் வருகின்றாய் - 2
கருணை உள்ளம் கொண்டவனே
அருளும் ஒளியும் தந்திடுவாய் - நான் வாழ
796. என் மீட்பர் எந்தன் உள்ளம் வருகின்ற நேரமிது
என் மீட்பர் எந்தன் உள்ளம் வருகின்ற நேரமிது
என் இயேசு எந்தன் உயிர் கலந்திடும் வேளையிது
உணவாய் உணர்வாய் வா இறைவா - 2
என் உயிராய் உறவாய் வா இறைவா

1. மண்ணோடு விதையானேன் உந்தன்
உயிர் தந்தாய் நான் மரமானேன்
விண்ணோடு முகிலானேன்
உந்தன் வரம் பொழிந்தாய் நான் மழையானேன்
கடலோடு கலந்திடும் நதியாக நான்
உன்னில் கலந்திடும் புது உறவு
கனிவோடு காத்திடும் கரம் பற்றி நடந்திடும்
உன் அன்பு தரும் நிறைவு
காற்றோடு பேசும் பூவாய் உன்னோடு நானும் பேச
அமுதாகும் உந்தன் வரவு

2. விளக்கோடு திரியானேன்
சுடராக என்னில் வந்தாய் ஒளியானேன்
உன்னோடு உறவானேன் உணவாக நீ வந்தாய் நிறைவானேன்
உடலோடு கலந்திடும் உயிர்மூச்சே நீ
என்னில் உருவாக்கும் புது உணர்வு
விழியோடு இமையாக வழியெல்லாம் துணையாக
ஒன்றான புது நினைவு உலகெல்லாம் உந்தன் ஆசி
விலகாது எந்த நாளும் நிலையாகும் புதுவாழ்வு
797. என் சீவநாயகா எனையாளும் என் மன்னவா
என் சீவநாயகா எனையாளும் என் மன்னவா
உன் நாமம் நான் பாடவா உன்னோடு ஒன்றாகவா
நிதம் பாடும் சீவன் உன்னையே

1. என்றும் உன் நினைவில் உன்னுறவில்
உலகமெல்லாம் உன் சிறகில்
உயிர்வாழ நான் காண்கின்றேன்
மண்ணில் வாழுகின்ற காலமெல்லாம்
வந்து விடும் வசந்தங்களும் உன்னன்பில் நான் வாழவே
உந்தன் அன்பு ஒன்றே போதுமே எந்தன் துன்பம் தூரப் போகுமே
என்றும் வாழும் தேவனே என்னை ஆளும் நாதனே
நிதம் பாடும் சீவன் உன்னையே

2. தேவன் நீ எழுதும் கவிதைகளே
நின் அன்பில் சங்கமமே எனைத் தேடும் நெஞ்சங்களே
எங்கும் உன்முகம் தான் காணுகின்றேன்
உன் உறவில் வாழுகின்றேன் உயிரோடு உயிராகவே
என்னில் வாழும் சீவநாதனே என்றும் வாழும் தேவநாமமே
தேடும் அன்பு தெய்வமே நாடும் யாவும் உம்மையே
நிதம் பாடும் சீவன் உன்னையே
798. என் சீவன் தேடும் தெய்வம் என் நெஞ்சில் வரும் நேரம்
என் சீவன் தேடும் தெய்வம் என் நெஞ்சில் வரும் நேரம்
என் உள்ளம் எங்கும் பூப்பூக்குதே
புது சந்தோசங்கள் எனில் தோன்றுதே - 2
வாரும் தேவா வாரும் புதுவாழ்வு என்னில் தாரும்
உன் ஆசீர் பொங்க நான் வாழுவேன் - 2

1. எனைத் தேற்றும் உன் வார்த்தை உயிரானது - நான்
உனக்காக உயிர் வாழ உரமாகுது - 2
எனையாளும் நினைவெல்லாம் நீயல்லவா - 2 - நிதம்
துணையாகும் என் வாழ்வின் வரமல்லவா - 2

2. எனைத் தாங்கும் உன் அன்பு மாறாதது - அது
என் வாழ்வின் செல்வத்துள் மேலானது - 2
என் சொந்தம் இனி என்றும் நீயல்லவா - 2 - நிதம்
என் வாழ்வின் பொருள் தேடும் உறவல்லவா - 2
799. என் சீவன் பாடுது உன் வரவை நாடுது
என் சீவன் பாடுது உன் வரவை நாடுது
அன்பே அருட் செல்வமே

1. காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும்
உன் வாக்கு மாறாது இறைவா - 2
புதுமை பிறந்தது பாவம் அழிந்தது புனிதம் சேர்ந்திட வா - 2

2. இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும்
என் பாடல் மாறாது இறைவா
நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது வாழ்வை வளமாக்க வா - 2
800. என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே
என்னில் எழும் தேவன் என் இதயம் வந்தாரே - 2
எண்ணில்லாத பேரன்பில் மனம் பொங்கி நிரம்பிடுதே

1. மலரைப் போல் எந்தன் மனத்தினை
தினம் திறந்து காத்திருந்தேன் - 2
காலைப் பொழுதாக எழும் கதிரே எனக்காக - 2
எழுந்து மலர்ந்து இதயம் திறந்து
வல்ல தேவன் என்னில் எழுந்தார்

2. நிலவைப் போல் எந்தன் மனத்தினில்
நீர் ஒளிரக் காத்திருந்தேன் - 2
மாலைப் பொழுதாக எழும் மதியே எனக்காக - 2
இதயமதிலே உதயமாவாய்ப் புதிய வாழ்வினையே தருவாய்
801. என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
என்னில் ஒன்றாக எந்தன் நல்தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணில்லா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார் - என் - 2

1. உதயம் காண விழையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே - 2
பகலை மறைக்கும் முகிலாய்ப் பல பழிகள் சூழந்ததே - 2 - அந்த
முகிலும் இருளும் குறையும் தீர முழுமை தோன்றுமே

2. என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன் - 2
என்று பகர்ந்த இறைவா என்னை அணைக்க வாருமே - 2 - உந்தன்
அன்பு விருந்தை நாளும் அருந்தி அமைதி காணுவேன்
802.என்னில் நீ வருவதற்காய் உனைத் தேடி வருகின்றேன்
என்னில் நீ வருவதற்காய் உனைத் தேடி வருகின்றேன்
உன் சாயல் நானாகவே என் வாசல் வா தெய்வமே - 2
உனையன்றி வழியில்லை உனையன்றி ஒளியில்லை
உன் சாயல் நானாகவே என் வாசல் வா தெய்வமே

1. இதயவாசல் திறக்கின்றேன் இரு கரத்தைக் குவிக்கின்றேன் -2
உயிரின் மூலமே உறவின் பாலமே
அன்பின் முழுமையே அனைத்தின் முதன்மையே - 2
ஆதவன் பூமியில் வெளிச்சமாவது போல்
அன்பனே என்னில் நீ வெளிச்சமாகிட

2. உன்னில்வாழத்துடிக்கின்றேன் உன் அன்பை நினைக்கின்றேன் - 2
என்னின் தொடக்கமே அன்பின் அர்த்தமே
ஆதி அந்தமே எனது சொந்தமே - 2
அழுதிடும் மழலைக்கும் அணைக்கும் தாயைப்போலுன்
சிறகினில் நான் தங்கி இளைப்பாறிட
803. என்னிறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
என்னிறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தன்னிறை அன்பால் தான் கண்ட
சீவனாம் பரமனின் பாதம் - 2
எந்நாதமே என்னிதயம் பண்ணாகுமே
எந்நாளுமே அவரன்பு என் மீதிலே

1. என் ஆயனே உன் பாதையில்
எந்நாளும் நான் பாடும் சங்கீதமே
உன்னோடு தான் ஒன்றாகிட உயிரோடு உயிர் சேர்ந்து உறவாகிட
நெஞ்சமும் பாடுது கண்களும் தேடுது
தஞ்சமென்றவரையே என்னுள்ளம் நாடுது - 2

2. உறவானவா என் உயிரானவா
உலகெங்கும் அரசாளும் என் மன்னவா
நிலையானவா என் கலையானவா
அலைபாடும் கடலாக எனைக் காப்பவா
என்னன்பு தேவனே என்னகம் வாருமே
என்னிலே எழுந்து நீர் என் நிலை மாற்றுமே - 2
804.என்னுயிரே என்னிறையே இயேசு தெய்வமே
என்னுயிரே என்னிறையே இயேசு தெய்வமே
என் இதயம் எழுவாயே இனிய நல்விருந்தே
அன்பேஉந்தன் வார்த்தை சொல்லபாவம்கொண்டவாழ்வைவெல்ல
அருளின் மழையை என்னில் பொழிய வா ஆ ஆ

1. ஏழை மனிதரிலே ஏங்கிடும் கண்களிலே
மழலை மொழியினிலே இரக்கச் செயல்களிலே
இயேசு உன் முகம் பார்க்க இறை உன் மொழி கேட்க
ஆனந்த மழையே அமுதே என்னில் நீயும் எந்த நாளும்
உறைந்திட வா நிறைந்திட வா வாழ்ந்திட வா மகிழ்ந்திட வா

2. உறவின்றி தவிப்போர்க்கும் உணர்வின்றி வாழ்வோர்க்கும்
உரிமை இழந்தோர்க்கும் சுமைகளால் சோர்ந்தோர்க்கும்
கண்ணின் இமையாகக் காக்கும் சிறகாக - ஆனந்த மழையே
805.என்னைத் தேடிவந்து நாடி வந்து
என்னைத் தேடிவந்து நாடி வந்து
என்றும் தேற்றிடும் தேனமுதே
எந்தன் பாவம் போக்க பசியைப் போக்க
தன்னை உணவாய்த் தந்தவரே
அன்பாய் வருவாய் என்னுள்ளே
அமைதி தருவாய் மனத்தினிலே

1. வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச
விடியல் என்றும் என் வாழ்வில் காண
உலகிற்கு வந்தவரே
நன்மை என்றும் என் வாழ்வில்
உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர
உணவான அருமருந்தே - அன்பாய்

2. புதுமை என்றும் என் வாழ்வில் பெருக
இனிமை என்றும் என் வாழ்வில் தொடர
உறவான நல்உணவே
அன்பு என்றும் என் வாழ்வில் காண
அன்பாய் ஒளிர்பவரே - அன்பாய்
806. என்னோடு நீ தங்குவாயா இயேசுவே என் மனம் ஏங்கிடுதே
என்னோடு நீ தங்குவாயா இயேசுவே என் மனம் ஏங்கிடுதே
நிழலாய் நினைவாய் என் கனவாய் என்னோடு நீ தங்குவாயா
காலையும் மாலையும் ஆகியதே நேரமும் பொழுதும் போகின்றதே
தனிமையும்வெறுமையும்என்னருகேஇனிமைதருவதுஉன் உறவே

1. பயணத்தின் பாதையில் உடன் வருவாய்
பயம் கொண்ட வேளையில் துணை தருவாய்
திருமறை விளக்கங்கள் உரைத்திடுவாய்
ஆறுதல் தேறுதல் வழங்கிடுவாய்
அப்பத்தைக் கைகளில் பகிர்ந்தளிப்பாய்
அகக்கண்கள் திறந்தே உயிர்க்கச் செய்வாய் - காலையும்

2. முத்தமிழ்க் கலையாய் எழுந்தருள்வாய்
முக்கனிச் சாறாய்ச் சுவை தருவாய்
தேனோடு இணைந்து தினையாவாய்
ஊனோடு கலந்து உயிராவாய்
என் மன உணர்வினில் ஒன்றாவாய் - இனி
என்னில் வாழ்வது நீயாவாய் - காலையும்
807. என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்
என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்
என் தெய்வமே - 2
நீயின்றி நானில்லையே உன்
நினைவின்றி வாழ்வில்லையே

1. இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

2. உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன் போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதாரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே
808.என்னோடு நீ பேசவா என் நெஞ்ச நாயகனே
என்னோடு நீ பேசவா என் நெஞ்ச நாயகனே
புதிய பூமி புலரவே தலைவனே வழியாய் வா

1. இதயம் திறந்து இமைகள் மூடி
உனக்காய்த் தானே காத்திருந்தேன் - 2
அமுதம் பருகும் ஆசை கொண்டு
வார்த்தைக்காகத் தவமிருந்தேன்
நம்பிக்கை சோதியே எழுந்து வா என் ஆத்ம தாகம் போக்க வா
மனிதன் வாழ மன்னா பொழிந்த மன்னவனே விரைந்து வா
வா வா என்னில் வா என்னுயிராய் நீயாக வா

2. மழையின் மேகம் நல்லோர் தீயோர்
வேற்றுமையோடு பொழிவதில்லை - 2
உந்தன் அன்பை நானும் காண சிலுவைத் தியாகம் செய்தவரே
இருளில் வாழ்ந்திடும் மாந்தர்கள் ஒளியைக் காண எழுந்து வா
- மனிதன் வாழ மன்னா பொழிந்த
809. எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன்பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே
ஆனந்தம் என வாழ்வில் என்றுமே

1. உன் அன்பே தூய்மையானது என் வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது - 2
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் - 2
நம்பிக்கையின் தீபமாய் நீ இருக்கின்றாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே

2. உன் அருளே மேலானது என் வாழ்வில்
உன் உறவே மாறாதது
உனக்காக நான் எனறும் காத்திருப்பேன்
நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
810. எனில்வாரும்என் இயேசுவே என்றும்என்னோடு உறவாடவே
எனில்வாரும்என் இயேசுவே என்றும்என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே

1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

2. பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே - தேவா
811. எனையாளும் அன்பே என் இறைவா
எனையாளும் அன்பே என் இறைவா
நீ வரும் நேரம் நான் மலர்ந்தேன்
உன்னருளின் உன்னதத்தில்
உள்ளமெல்லாம் நிறைந்து நின்றேன்
இனி நான் மறைந்து போய்விடுவேன்
வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்

1. சொல்லாத நேசங்களை உன்
தியாகத்தில் சொல்லித் தந்தாய் - நீ
இல்லாத குறை நீங்கவே உணவாக உடலைத் தந்தாய்
கல்லாகிப் போனேனே கருணாளனே - 2
உனது கரத்தின் சிற்பங்களாக என்னை மாற்றுவாய்
வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்

2. எழுந்து நான் செல்லுவேன் - என்
தந்தையின் இல்லம் நோக்கி - வெகு
தூரம் விலகிச் சென்றேன் உந்தன் அன்பை மறந்து நின்றேன்
காலம் கடந்து வந்தேன் கருணாளனே - 2
பாசம் கொண்டு என்னை ஏற்றுப் பகிர்வு கொண்டாடச் செய்வாய்
வருகிறான் இறைவன் அன்பைத் தருகிறான் தலைவன்
812. எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா
எனையாளும் இறைவா என் நெஞ்சம் வா வா
உனை நம்புகிறேன் உன்னோடு நான் கொண்ட
உறவினிலே வாழ உனைத் தேடுகிறேன்
இறைவா வருவாய் இதயம் தருவாய் - 2

1. உள்ளத்தின் இறைவா உமதருள் வார்த்தை
உருக்கிடுமே பாவக்கறை தனையே - 2
உதிர்த்திடுமே உள்ளக் கவலைகளை - 2
அன்பால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை - 2

2. பார் போற்றும் பண்பாம் உன் எளிய வாழ்வு
படைத்திடுமே பாச உலகந்தனை - 2
பகிர்ந்திடுமே அன்பு வாழ்வுதனை - 2
பாசத்தால் உயர்த்திடுமே இந்த உலகந்தனை - 2
813. ஏழிசை நாதனே எழுவாய் - இறை
813. ஏழிசை நாதனே எழுவாய் - இறை
அருளை என்னில் நீ பொழிவாய் - பல
வரங்கள் தந்து என்னைக் காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய் - 2

1. வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அரும் மருந்து - 2
உறவை வளர்க்கும் விருந்து - 2
என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து - 2

2. விழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளிவிளக்கு - 2
மனிதம் வாழும் தெய்வம் - 2
என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம் - பாடுவேன்
814. ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே - என்
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே - என்
பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே - 2
அலகை வலையில் அடிமையாகி
அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே - நீர்
குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ - 2
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன் - உம்
மலர்ப்பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் - 2
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்
815. ஏழைமனம் அழைக்கின்றது இயேசுவே நீ வரவேண்டும்
ஏழைமனம் அழைக்கின்றது இயேசுவே நீ வரவேண்டும்
நான் கலங்கும் வேளையிலும் நீ துணையாக வேண்டும்
இயேசுவே உன் கரம் தாங்க வேண்டும்

1. உன் வழி தொடரும் என் கால்கள் உறுதியாய் நடந்திட ஒளி தாராய்
உணர்வினில் கலந்திடுவாய் மனமென்னும் கோயிலில் எரிந்திடும்
தீபங்கள் இயேசுவே நீயாவாய் நீ என்னில் எழுந்திடும் நேரமிது
நான் என்னை மறந்திடும் காலமிது

2. நீயின்றி எனக்கோர் உறுதியில்லை - உன்
துணையின்றி எனக்கோர் கதியில்லை
உயிராய் எழுந்திடுவாய் அன்பிலும்
நட்பிலும் நான் தினம் வளர அகமதில் நிறைந்திடுவாய்
அமைதியின் பாதையில் நடந்திடவே அடைக்கலமாகும் ஆண்டவரே
816. ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா
ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உள்ளதெல்லாம் இழந்தேன் நான் - 2

1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என - 2 எந்நாளும் கருதுவேன்

2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ
உம் திரு ஆவி பெற - 2 உன் பாடுகள் ஏற்பேன்

3. கடந்ததை மறந்தேன் கண் முன்னால் என் இயேசுதான் - 2
தொடர்ந்து ஓடுவேன் - 2 தொல்லைகள் என்ன செய்யும்
817. ஒரு கணமும் எனைப் பிரியாமல்
ஒரு கணமும் எனைப் பிரியாமல்
என்னோடு தங்கும் ஆண்டவரே
உம்மை நான் பிரிந்து சென்றாலும்
என்னோடு தங்கும் ஆண்டவரே - 2
என்னோடு தங்கும் - 3 ஆண்டவரே - 2

1. நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை
எனை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் - 2
பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது - 2
வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலைப் புதுப்பித்திட

2. என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது
உமது அருளால் துன்பங்கள் மறைகின்றன - 2
உம் தெய்வீக ஆறுதலால் என்னைப் பலப்படுத்தும் - 2
என் முழு உள்ளத்தினால் உம்மையே நான் தினம் நேசித்திட
818. ஒருநாளும் அழியாத உறவென்னிலே
ஒருநாளும் அழியாத உறவென்னிலே
உருவாகும் அருளேசு வரவென்னிலே - 2
பிரிவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில்
எனையாளும் அவரன்பு இனி நாளுமே

1. நட்பென்னும் வானங்கள் இருள்மூடும் போதிலே
உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே - 2
உன் அருளன்பு எனைத் தாங்குமே
அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரங்கள்
ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து
ஒருநாளும் அழியாத உறவொன்று தா

2. இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே
இரவென்ன பகலென்னவோ இதயத்துள் நீ பேசவே - 2
இனி எந்நாளும் பயமில்லையே
முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே
ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன்
உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா
819. ஒரு நாளும் உனை மறவா திருநாள் தினம் வேண்டும் - உன்
ஒரு நாளும் உனை மறவா திருநாள் தினம் வேண்டும் - உன்
அருள் தேடும் என் விழிகளுக்கு
கருணை மழை வேண்டும் - 2 இயேசுவே வாருமே - 2
இயேசுவே எந்தன் நேசரே என்னோடு பேச வாருமே - 2

1. ஆயிரம் ஆயிரம் உறவுகளும்
அலை அலையாய் வரும் நினைவுகளும்
சேய் என்னைத் தேற்றிடும் நிகழ்வுகளும்
இறைமகன் உந்தன் உயிர்ப்புகளே ஆ - 2
கலங்கரை விளக்கே வா காரிருள் நிலவே வா
கதியென நினைக்கும் அடியவர் மனத்தில் அமர்ந்திடவே நீ வா - 2

2. பகிர்வுகள் தருகின்ற நிறைவுகளும்
தியாகத்தினால் வரும் உயர்வுகளும்
அடியவர் பணியில் அகமகிழ்வும்
தலைவா உமது வழியல்லவா ஆ - 2
உனைப் போல் நான் வாழ்வேன் உலகில் இனி உயர்வேன்
உந்தன் அருள் துணை எம்மில் இருக்க கவலைப்பட மாட்டேன் - 2
820. ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்

1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் - 2
உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக - 2

2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் - 2
உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே

3. அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வா வா - 2
குறையே நீக்கும் விமலா நிறையே வளர்க்க வா வா - ஒளியே
821. ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உறவானவா நின்மலர் பதத்திலே
எனை மறந்து உனையறிந்து எழிலடைந்திட பாடுகின்றேன்

1. உனக்காக என் சீவன் உயிர் வாழுது
உலகெல்லாம் உனைக் காணத் துடிக்கின்றது - 2
உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது - 2
நாளும் பொழுதும் நீ எனில் வளர
நானிலம் எங்கும் நின் மணம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட
எனை மறந்து பாடுகின்றேன்

2. உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது - 2
உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயே தானே நினைவினில் மலர
நின் உயிர் தானே எனில் என்றும் வளர - உயிர்
822. கண்விழிபோல் காக்கும் எந்தன் சொந்தம் நீயே
கண்விழிபோல் காக்கும் எந்தன் சொந்தம் நீயே
உன் கரங்களில் பொறித்து என்னைப் படைத்தாய் நீயே
என்றென்றும் தேடிவரும் அருள் தெய்வமே
என உள்ளத்தில் குடிகொள்ளும் என் இயேசுவே
வாரும் வாரும் அருள்தாருமே - 2

1. வானோர்கள் பாடும் சங்கீத குரலில்
என் நாவும் உன் புகழை இசைபாடுமே
அன்னை மரியாளின் குரலில் புகழ்பாடும் இசையில்
என்பாடல் உன் அருளைப் புகழ்ந்தேற்றுமே
உன்னையே நாடி உயிர் வாழ்கிறேன்
என் தெய்வமே உன்னைத் தினம் நாடுவேன்
என் வளமே என் வாழ்வே என் தோழனே
என் மனமும் உன் உறவில் இணைந்தாகுமே
உனதொளியில் உனதாற்றலில்
உலகில் எங்கும் உனைப்புகழ

2. அன்பே அமுதே அருளின் உருவே
என்றென்றும் உள்உருகித் தொழுதிடுவேன்
உண்மை வழியே உயிரின் ஊற்றே
உடல்தந்து உயிர்தந்து மீட்பவரே
காலங்கள் தோறும் உனைப் போற்றுவேன்
என் சொல்லால் என்றும் பணியாற்றுவேன் - என் வளமே
823. கணநேரம் பிரியாமல் எனைத் தாங்கும் இறைவா
கணநேரம் பிரியாமல் எனைத் தாங்கும் இறைவா
உம் அன்பில் நான் என்றும் சரணாகதி
தாயாகத் தாங்கி மார்போடு அணைக்கும் - 2
தாய்மையின் நிறைவே சரணாகதி
முதலாகி முடிவாகி அழியாத உணவாகும்
முழுமுதல் பொருளே சரணாகதி - 3 கண நேரம்

1. சமத்துவ சோதர உறவுகள் மலர
இறைவார்த்தை உணவாக வருகின்றார்
தாழ்ச்சியின் வடிவாய் தியாகத்தின் நிறைவாய்
தன்னையே உணவாகத் தருகின்றார்
இதுவே திருவிருந்து நம் இதயத்தில் பெரும் விருந்து
அன்போடு உண்போம் அமைதியில் துளிர்ப்போம் - 2 முதலாகி

2. என் பாதம் அமர்ந்து உன் மார்பில் சாய்ந்து
என் கதை சொல்ல வந்தேன் ஐயா
சோதனை நீக்கி வேதனை போக்கி
அணையாத ஒளியேற்றித் தருவீர் ஐயா
ஆனந்தம் பொங்கிடுதே இவ் அருள் பெறும் திருவிருந்தில்
அன்போடு உண்போம் அமைதியில் துளிர்ப்போம் - 2 முதலாகி
824. கருணை தேவனே கனிவாய் என்னில் வா
கருணை தேவனே கனிவாய் என்னில் வா
வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா
உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே உணவாய் எழுந்து வா

1. அன்பே உன் வரவின்றி அருளே உன் துணையின்றி
இருளில் நான் தள்ளாடுவேன்
உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி
துயரில் நான் கண் மூடுவேன் - 2
உயிரூட்டும் உணவாக வா வழிகாட்டும் விளக்காக வா - 2
ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே

2. ஊர் தூங்கும் வேளை ஒளி தூவும் நிலவாய்
என் வாழ்வில் ஒளியாகினாய்
வழி பார்த்து கண்கள் நீர் கோர்த்து நிற்க
என் பாதை வழியாகினாய் - 2
என் தேவன் நீயில்லையேல் என்னுள்ளம் தடுமாறுமே - 2
உன் பாதை நானில்லையேல் என் வாழ்வு வீணாகுமே
825. கருணையின் நிறைவே அருள் வள உறைவே
கருணையின் நிறைவே அருள் வள உறைவே
திரு விருந்தினிலே உவந்து வந்தாய்
நின் திருவுடலை உணவாய் அளித்தாய்
உந்தன் உறவைத் தரலானாய் - 2

1. அடிமைத்தளையை அகற்றும் விருந்தாய்
ஆவலைத் தணிக்கும் அமுதாய் மாறி
அகத்தொளி வீசிடும் அகலாய்த் திகழ்ந்திடும்
ஆசீர் சுனையே அகம் வருவாய்

2. பழைய புதிய முறைகள் இணையும்
பாலமே புதுமை விருந்தே வாழி
இறைமனு உன்னில் முறையாய்க் கலந்திட
தேவா கருணை வடிவெடுத்தாய்

3. ஒருமை விளைத்து மறுமை அளிக்கும்
தேவ நற்கருணை விருந்தே போற்றி
குழந்தையின் ஆலய அரங்கைத் தருகின்றேன்
வாழ்வே வருவாய் குடியிருப்பாய்
826. கனிந்த அன்பிலே கடவுள் அன்பிலே
கனிந்த அன்பிலே கடவுள் அன்பிலே
கவலை நீக்கும் திருவுணவாய் வாரும் இயேசுவே
இனிமை தந்திடும் இதய அன்பிலே
வானகத்தின் அனுபவத்தைத் தாரும் இயேசுவே - 2

1. நன்மை தரும் நல்லுறவாய் எழுந்து வாருமே
நலமளிக்கும் அருமருந்தாய் எழுந்து வாருமே - 2
இறையுறவாய்த் திருவருளாய் எழுந்து நீர் வந்தால்
ஏக்கம் நீக்கும் இறைமகிழ்வை நான் சுவைப்பேனே - 2

2. நன்மைகளின் அடிப்படையே எழுந்து வாருமே
நலிந்தவரின் உடனிருப்பே எழுந்து வாருமே - 2
விடுதலையாய் வழித்துணையாய் எழுந்து நீர் வந்தால்
மாற்றமாகும் இறைசுகத்தில் நான் திளைப்பேனே - 2
827. காணாமலே உன்னைக் கண்டுகொண்டேன்
காணாமலே உன்னைக் கண்டுகொண்டேன்
கேளாமலே உந்தன் குரல்கேட்டேன்
தேடாமலே உன்னைத் தெரிந்துகொண்டேன்
தேடிவந்து என்னோடு ஒன்றான தெய்வமே

1. எம்மோடு குடிகொள்ளும் இம்மானுவேலா
உனைக் காணும் பேராவல் எனக்குண்டு நாளாய் - 2
எளியோரில் சிறியோரில் நான் உன்னைக் காணலாம்
ஏக்கத்தில் இடர்பாட்டில் உன் குரலைக் கேட்கலாம் - 2

2. மனம் மாற மனமின்றி இடம் மாறித் தேடலாம்
ஏன் அங்கு இல்லையென்று ஏமாந்துப் போகலாம் - 2
உன் வார்த்தை வழியில் மனம்மாறித் தேடினால்
தேடிவரும் தெய்வம் உன்னைத் தெளிவாகக் காணலாம் - 2
828. காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே
காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே
கண்விழித்துப் பார்த்திருந்தேன் பேசவே
விரைந்து என்னில் வந்திடுவாய்
மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன்

1. உயிராக நீ வந்தால் உடலாகி இணைந்திடுவேன்
உறவாக நீ கலந்தால் உள்ளத்தைத் தந்திடுவேன்
மழையாக நீ பொழிந்தால் மண்ணாகக் குளிர்ந்திடுவேன்
மலராக நீ மலர்ந்தால் மணமாக மாறிடுவேன் - 2

2. கதிராக நீ வந்தால் பொழுதாகப் புலர்ந்திடுவேன்
மலையாக நீ வளர்ந்தால் இமையாமல் இரசித்திடுவேன்
இடியாக நீ பிறந்தால் ஒளியோடு வாழ்ந்திடுவேன்
அன்பாக நீ கரைந்தால் உன் அடிமை ஆகிடுவேன் - 2
829. கிறித்துவின் சரீரமிது கிறித்தவர் உணவுமிது - இந்த
கிறித்துவின் சரீரமிது கிறித்தவர் உணவுமிது - இந்த
உணவையே உண்போம் ஓருடலாவோம்
ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் - 2

1. கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது - 2
அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது - 2

2. மனத்திற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் - 2
மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் - 2
830. குறையாத அன்பு கடல் போல வந்து
குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே - 2

1. கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றார் - 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ... ஆ... - நான் - 2

2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே - 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ... ஆ... - கண்ணீர் - 2

3. இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் - 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ... ஆ... - நான் - 2
831. சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா
சக்தியானவா ஜீவநாயகா அன்பாலே வாழும் தேவா
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா

1. மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்கவா - 2 அக்களிக்கவா
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்கவா - 2 ஒத்துழைக்கவா
திக்கனைத்துமே உண்மை எதிரொளிக்கவா - 2 எதிரொளிக்கவா
யுத்தம் நீங்கியே அமைதி உதிக்கச் செய்யவா - 2 உதிக்கச் செய்யவா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா

2. வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்கவா - 2 மகிழ்வளிக்கவா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்தவா - 2 மாண்புயர்த்தவா
ஆணவத்தையே வென்று பணிவை ஆக்கவா - 2 பணிவை ஆக்கவா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்டவா - 2 ஊக்கம் ஊட்டவா
நீதி நேர்மையில் எம்மை நாளும் ஆளவே
அன்பாலே வாழும் தேவா
832. சமபந்தி விருந்தின் சங்கமமே - இது
சமபந்தி விருந்தின் சங்கமமே - இது
இறைமகன் இயேசுவின் திருவுள்ளமே - 2
இதை எந்தன் நினைவாய்ச் செய்யுங்கள் என்ற
இறைவாக்கு நிறைவேறும் பலிபீடமே - 2

1. அன்பின் சின்னம் சமபந்தி நட்பின் இலக்கணம் சமபந்தி
உறவின் பாலம் சமபந்தி இந்த உன்னத வாழ்வே சமபந்தி
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்
நம்மை இணைத்திடும் சமபந்தி - இந்த
உன்னத வாழ்வே சமபந்தி

2. மன்னிப்பு தந்திடும் சமபந்தி மாண்பினைப் போற்றிடும் சமபந்தி
பணிவிடை புரிந்திடும் சமபந்தி - நம்மில்
புனிதமாய் மலர்ந்திடும் சமபந்தி - ஒரே உள்ளமும்
833. சிறகுகள் தா இறைவா நான்
சிறகுகள் தா இறைவா நான்
சிகரங்கள் காண வேண்டும்
உறவாய் வா தலைவா - உள்ளம்
நிறைவினில் இதயம் நீ வந்தாலே நிறையும்
அருமையான அன்பில் நனைந்தாலே மகிழ்வேன்

1. நீ தந்த நல்பாதையை மறந்து திசை மாறித் திரிந்தேன்
தீ போல என்னைத் துன்பம் சூழ சுயம் இழந்து வீழ்ந்தேன் அ ஆ
ஒடிந்து வீழும் மனச்சிறகு உயர பறக்க வலு தா
உள்ளம் உணர்ந்து கொண்டால் உள்ளம் தெளிவு கொள்வேன்
வருவாயே என் உள்ளே

2. உன் சொல்லைத் தான் மறந்தேன் பாரங்கள் சுமந்தேன்
உன் அன்பின் மழையில் நனைந்தேன் உள்ளாற்றல் அறிந்தேன் அ ஆ
இருள் சூழும் பொழுதுகளில் எனைக் காக்க கரம் தா
மனம் வெம்பி நின்றேன் உனை நம்பி வந்தேன்
சொல்லாயோ பதில் ஒன்று
834. சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேச வா
சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேச வா
உன் மொழி கேட்க வந்தேன் என்னோடு பேச வா - 2

1. என் உள்ளத்தில் கறையுண்டு குறைகள் பல உண்டு
உன் மொழியில் நிறையுண்டு இதய சுகமுண்டு - 2
இறைவனே நீரே எந்தன் நம்பிக்கை
என் வாழ்விலே என்றும் நீர் துணை

2. என் உள்ளத்தில் சுமையுண்டு விழிநீர் சோகமுண்டு
உன் வரவில் சுவையுண்டு இனிய வாழ்வுண்டு 2 - இறைவனே
835. ஜீவன்தேடும் தெய்வம் இன்று என்னில் வருகின்றார்
ஜீவன்தேடும் தெய்வம் இன்று என்னில் வருகின்றார்
கானம் பாடும் நேரம் எந்தன் உயிரில் இணைகின்றார்
தெய்வமே உன்னைத் தேடினேன் என்னில் உறைந்திட வா
ஆன்ம தாகம் உந்தன் வேதம் என்னைக் காத்திட வா - 2

1. பாதையெங்கும் தீபம் ஏற்றி நிழலாய்த் தொடர்கின்ற நேரம்
மெளனமொழியால் அன்பைச் சுமந்து
முகிலாய் வருகின்ற காலம் - 2
இயேசுவே என் தெய்வமே புதுவாழ்வின் வசந்தமே - ஆன்ம

2. பூமியெங்கும் பூக்கள்தூவி புனிதம் காண்கின்ற இதயம்
பாசவிழியால் உன்னைத் தேடி
உறவினில் வளர்கின்ற உதயம் - 2
இயேசுவே எம் மீட்பரே இருள் அகற்றும் தீபமே - ஆன்ம
836.ஜீவன் தேடும் தேவன் நீ நான் பாடும் இராகம் நீ
ஜீவன் தேடும் தேவன் நீ நான் பாடும் இராகம் நீ
நாவிற் கீதம் உன் நாமம் சொல்லும்
நாளும் உன் தாளில் மலர்ந்திடும் என் எண்ணம் - 2

1. சீவ இராகங்கள் தேவ வார்த்தையில் ஒலிக்கும்
தேவ வார்த்தைகள் தேடும் வாழ்வினைக் கொடுக்கும் - 2
காலம் மலராதோ கனவு கலையாதோ
வாடும் சீவன்கள் பாடும் இராகங்கள் உலகில் கேட்காதோ

2. இதய சோகங்கள் இறையின் அருளில் மறையும்
உதய நெஞ்சங்கள் உலகில் எங்கும் பிறக்கும் - 2
புதுமை நிகழாதோ பழைமை மறையாதோ
நேச உறவுகள் பாச மனதுகள் கண்டு மகிழாதோ
837. சுடர் விடும் அன்பே வருக வருக சுவை தரும் கனியே வருக வருக
சுடர் விடும் அன்பே வருக வருக சுவை தரும் கனியே வருக வருக
படரொளி விளக்கே பவித்திர அழகே வருக வருக வருக

1. கற்பனை கடந்த சோதியே வருக
கருணையே உருவாம் விளக்கே வருக - 2
அற்புதக் கோல ஆதியே வருக
அருமறை வேத ஆண்டவா வருக வருக - 3

2. அருளொளி விளக்கை ஆணவம் எனுமோர்
இருளற என்னுள் ஏற்றிட வருக
துன்புறு தத்துவத் துரிசெல்லாம் நீக்கி
இன்புற நான் இனி வாழ்ந்திட வருக வருக - 3
838. சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றி கொடுக்கின்றார் ஆ...

1. இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் - 2
இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன்

2. வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் - 2
வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன்

3. துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் - 2
அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார்
839. செந்தமிழ் நாதனே தேன்சிந்தும் நாதமே
செந்தமிழ் நாதனே தேன்சிந்தும் நாதமே
என்னில் எழுந்து வா என்னை ஆள வா
முகிலாக மழையாக மழை தந்த வளமாக
மனமெங்கும் மணந்து வா என் உயிரோடு கலந்து வா

1. இளங்காலை வானம் குயில் பாடும் கானம்
இவை காணும் நெஞ்சம் உன்பாதம் தஞ்சம் - 2
இமை மூடினும் உனைத் தேடிடும் விழிØயான்று தா - 2

2. வாழ்வில் நீ தந்த வசந்தங்கள் கோடி
வாழ்வே நீ என்றும் உன் அன்பைப் பாடி - 2
உயிர் நீங்கிடும் உனை நாடிடும் உறவொன்று தா - 2
840.ஜெபிக்க செபிக்க இறை உறவில் நானும் மலர்கின்றேன்
ஜெபிக்க செபிக்க இறை உறவில் நானும் மலர்கின்றேன்
கொடுக்க கொடுக்கப் பிறர் உறவில் நானும் மகிழ்கின்றேன்
படிக்க படிக்க உம் வார்த்தையில் பாதை காண்கின்றேன் - 2
பரமனே இறைவனே பலமும் பெறுகின்றேன்
அருள் நலமும் அடைகின்றேன்

1. ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு
அற்புதமாய் நீ கொடுத்தாயே - 2
அப்படியே நாங்களும் பிறரின் தேவையில் - உம்
சொற்படியே உள்ளதைப் பகிர்ந்து வாழவே
அருள் தருவாய் குணம் தருவாய் அன்பின் தெய்வமே

2. அனைத்தும் படைத்து எமக்களித்து
ஆண்டு ஆளும் அதிகாரம் அன்புடனே நீ அளித்தாயே - 2
அகமகிழ்ந்து நாளுமே அன்புப் பணியிலே - சுய
நலம் துறந்து வாழ்விலே இன்பம் காணவே
அருள் தருவாய் குணம் தருவாய் அன்பின் தெய்வமே
841. செம்மறியின் விருந்துக்கு
செம்மறியின் விருந்துக்கு
அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2

1. இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் - 2
உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய்

2. வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே - 2
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே
842. சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்
சொந்தம் தேடும் எந்தன் உள்ளம் இயேசுவே வாரும்
சுமைகள் சுமந்து சோர்ந்த வாழ்வில் அமைதியைத் தாரும்
உணவாய் வந்த தெய்வமே என் உணர்வில் கலந்திடு
உறவில் நானும் வளர்ந்திட உன் அருளைப் பொழிந்திடு

1. ஓடைநீரை நாடிவரும் மானின் நிலையினில்
உயிரின் தாகம் தீர்க்கும் உந்தன் அன்பை எண்ணியே - நான்
ஏங்கினேன் என் இதயம் திறந்தேன் இனிமை சேர்த்திட வா
இயேசுவே உம் பாதம் தொடர்ந்திடவே ஆற்றலை அளித்திட வா
துணையென நீ வருகையில் தயக்கமில்லையே
துயிலும் போதும் நடக்கும் போதும் கலக்கமில்லையே

2. அமைதி உன்னில் காணும்போது வசந்தம் மலருதே
அன்பில் இணைந்து வாழும்போது நிறைவு நெஞ்சிலே - நான்
தேடினேன் உன் வரவில் மகிழ்ந்தேன்
வருந்தும் மனங்களெல்லாம்
இயேசுவே உன் மார்பில் சாய்ந்திடவே
பேரருள் பொழிந்திட வா - துணையென நீ
843. தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த
தன்னை வழங்கும் தலைவன் தந்த விருந்திது - இந்த
தரணி மாந்தர் வாழ நல்ல மருந்திது - 2
உள்ளங்களில் ஆட்சி செய்ய வந்தது - நாளும்
உண்மையின் சாட்சியாக அழைக்குது

1. அவல நிலையில் உள்ளோர்க்கு அமைதி தரும் - இது
உரிமை இழந்த மனிதருக்கு சக்தி தரும் - 2
அன்பு நீதி நேர்மையுள்ள ஆட்சியைத் தேடும் - 2 - நம்
உள்ளத்தில் உறைந்து உணர்வினில் கலந்திட

2. காலந்தோறும் கண்ணிமை போல் நம்மைக் காக்கும் - இது
கறைகள் நிறைந்த இதயத்தினைத் தேடிவரும் - 2
மனிதநேயம் மானிடரில் காண ஏங்கிடும் - 2 - நம்
மனக்கவலைகளை மகிழ்ச்சியால் நிறைத்திட
844. தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதான் ஐயா
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதான் ஐயா
சேயாக நம்பி வந்தேன் வாழ்வில் ஒளியேற்ற வா
கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத் தேற்றவே
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா

1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன்சுவாசக் காற்றில் கலந்தாலே போதும்
விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல்தானே
உன் கோயில் குடிகொள்ள நீ வா

2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மீட்டிடுவேன்
உன் வார்த்தைக் கடலில் மிதந்தாலே போதும்
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீதானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா
845. தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே
தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே
தேடும் நெஞ்சம் தேற்ற வரும் திருவுணவிதுவே
அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள் - 2
உணவை உண்டு தனை அளித்து தரணி மாற்றுங்கள்

1. கோதுமை மணியின் பலியினிலே - இந்த
வெண்மை அப்பம் பிறக்கின்றது
என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட
தன்னைத் தியாகமாய்த் தருகின்றது - இதை
உண்ணும் யாவரும் தன்னைப் பிறர்க்கென
அளித்திடக் கேட்கின்றது - 2
நம்மையும் உணவென நாம் கொடுப்போம் - பிறர்
நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம் - 2

2. விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே - நெஞ்சில்
பேத உணர்வுகள் மறைகின்றது
ஏழை அடிமைகள் உயர்வு தாழ்நிலை
என்ற பிரிவுகள் இறக்கின்றன - பிறர்
பணி செய்வதே தலைவன் பண்பென்ற
படிப்பினை தருகின்றது - 2
விருந்தினில் கலந்திடும் பொருள் உணர்வோம் - பிறர் பணி செய்து வாழ்வதில் நிறைவடைவோம் - 2
846. தியாக தீபம் இயேசுவின் பிரசன்னம் - நம்மைத்
தியாக தீபம் இயேசுவின் பிரசன்னம் - நம்மைத்
தேடிவந்த தெய்வ அன்பின் பிரசன்னம் - 2
மன்னிக்கின்ற மனத்தில் இயேசு பிரசன்னம் - 2
மனிதநேயம் தேடுவோரில் பிரசன்னம்
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்

1. கடலில் தவிப்போர் காணும் இயேசு பிரசன்னம்
கலங்கிப் புயலில் நிற்போர் காணும் பிரசன்னம்
மயங்கும் மாலைப்பொழுதில் இயேசு பிரசன்னம்
மயக்கும் மன அமைதி தரும் பிரசன்னம் - 2
ஒளியே உயிரே உண்மையின் வடிவே
எம்மில் தருவாய் பிரசன்னம் - 2
கருணைக்கடலே கனிந்த அன்பே
எம்மில் தருவாய் பிரசன்னம் - 2

2. பாசம் உள்ள நெஞ்சில் இயேசு பிரசன்னம்
பகிர்ந்து வாழும் மனிதர் நடுவில் பிரசன்னம்
பாவ வாழ்வை நீக்கும் இயேசு பிரசன்னம்
பகிர்வு கொண்ட பணியில் இயேசு பிரசன்னம் - 2 ஒளியே
847. தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்
தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்
பகிரும் உள்ளங்கள் நடுவிலே பரமன் வருகின்றார் - 2
வருகின்றார் வருகின்றார் அருளை நம்மில் பொழிகின்றார் - 2

1. உறவில் நாளும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்
உண்மை வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2
கண்ணின் மணிபோல் என்னைக் காக்கும்
பரமன் வருகின்றார் - 2
கனிவாய் உன்னை நாளும் தேற்றும்
பரமன் வருகின்றார் - 2 வருகின்றார்

2. அன்பில் என்றும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்
அமைதி வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார் - 2
உடனிருந்து உயிரை வழங்கும் பரமன் வருகின்றார் - 2
தன்னைத்தந்து நம்மை மீட்கும் பரமன் வருகின்றார்
- வருகின்றார் வருகின்றார்
848. தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்
தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்
தேவன் வரவிலே ஜீவன் உருகிடுமே
இதைப் (உமைப்) பாடாத நாளில்லையே
இதைத் (உமைத்) தேடாமல் வாழ்வில்லையே
இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2

1. வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே
வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே
வானதேவன் வார்த்தை இங்கும் வடிவம் ஆனதே
வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழும் என்னிலே
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உமைப் பாடாத

2. அன்பிற்காக ஏங்கும் எந்தன் ஆசை ஓய்ந்திடும்
அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும்
நினைவில் ஆடும் நிழல்கள் யாவும் நிசங்களாகிடும்
நீங்கிடாமல் நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும் - ஒளியே
849.தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி
தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி
நீயே என் வாழ்வின் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம்
தங்கும் எந்தன் உள்ளம் பொங்கும் அன்பின் வெள்ளம்

1. வானில் உலவும் நிலவும் இங்குத் தேய்ந்து போகலாம்
தேனில் கலந்த மலரும் இங்குக் காய்ந்து வீழலாம் - 2
உயிரில் கலந்த உணவும் இங்கு உடைந்து போகலாம்
விழியில் விழுந்த நினைவும் இங்கு வழிகள் மாறலாம் - 2
காலம் தேயலாம் உன் கருணை மாறுமோ
வாசம் போகலாம் உன் பாசம் தீருமோ இயேசுவே

2. சாய்ந்து கொள்ளத் தோள்கள் தினம் தந்த தெய்வமே
சோர்ந்து போகும் கால்கள் பலம் தந்த செல்வமே - 2
முள்ளில் விழுந்து தொழுதேன் நீ உறவில் தேடினாய்
அள்ளி அன்னையாய் எடுத்தாய் உன் சிறகில் மூடினாய் - 2
நதிகள் காயலாம் உன் நட்பு காயுமோ
நண்பர் பிரியலாம் உன் அன்பு மாறுமோ இயேசுவே
850. தெய்வீக நண்பனே தெம்பூட்டும் அன்பனே
தெய்வீக நண்பனே தெம்பூட்டும் அன்பனே
என் ஆன்ம உயிர் மூச்சு நீ
இயேசுவே வந்தென்னை வளமாக்குமே - 2

1. உன்னோடு கைகோர்த்து நடந்திடும்போது
என்னோடு உறைகின்ற அச்சம் விலகுமே - 2
உன் மார்பில் தலைசாய்த்து மகிழ்ந்திடும் போது
என் நெஞ்சின் பாரங்கள் எளிதாகுமே
உன் அன்புக் கருணையை நான் அள்ளிப் பருகிட
எனை வாட்டும் தாகங்கள் தீருமே - 2

2. எங்கெங்கும் உனைக்கண்டு மகிழ்ந்திட வேண்டும்
எல்லாரும் உறவென்று அறிந்திட வேண்டும் - 2
எல்லாமே எனக்கென்று தவித்திடும் நெஞ்சம்
எல்லார்க்கும் நானென்று உணராதோ
உன் அன்புக் கருணையில் என் ஏக்கம் தீர்ந்திட
உனைப்போல என் நெஞ்சை மாற்றுமே - 2
851. தேடி வந்த தெய்வம் இயேசு - எனைத்
தேடி வந்த தெய்வம் இயேசு - எனைத்
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழ வைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கினார்
நாளும் பொழுதும் என்னையே தாவி அணைத்திட்டார்
அன்பே அவர் பெயராம் அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம் - 2

2. இயேசு என்னில் எழுந்திட்டார் என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உமை நாடும் - 2
852. தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த தெய்வம்
தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த தெய்வம்
கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும் - 2
இந்த வானதேவன் தந்த வாழ்வுப்பாதை
எந்தன் வாழும் காலம் போதும் - 2

1. வார்த்தையாகி நின்ற இறைவன் - இந்த
வாழ்வைத் தேர்ந்த தலைவன் - 2
பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து - அந்தப்
பாதையில் அழைத்த அறிஞன் - 2
காலம் கடந்த கலைஞன் என் தலைவன் - இந்த

2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய - எங்கும்
மனித மாண்பு நிறைய - 2
புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து
புதுமை செய்த பெரும் புனிதன் - 2
வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன் - இந்த
853. தேவகுமாரா கேட்கிறதா என் தியானகீதம் கேட்கிறதா
தேவகுமாரா கேட்கிறதா என் தியானகீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் எனை மட்டும் பார்க்கிறதா - 2

1. உன்னைக் காண விழி கொடுத்தாய்
உன்னைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உன்னை நினைத்து உருகி விட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன் - 2
உனக்கே என்னைக் கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளம் வருகிறது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது - உன்னை
854. தேவன் என்னைத் தேடி வரும் நேரம்
தேவன் என்னைத் தேடி வரும் நேரம்
ஆனந்தக் கவிதைகள் இதயத்தில் அரங்கேறும்
அந்த இதயம் பாடும் புது கீதம்
இந்த உலகம் காணும் புது உதயம்

1. வானம் பார்க்கும் பூமியைப் போலென்
மனமும் உன் முகம் பார்க்கின்றதே
அருளின் முகிலே வா அன்பின் மழையே வா
நிறைவினில் நிதம் நான் வாழ்ந்திடவே
நிறைவினில் உறவுகள் மலர்ந்திடவே

2. நீரினை நாடும் மான்களைப் போலென்
நெஞ்சம் உன்னகம் தேடுதே
நீதியின் கதிரே வா தீதில்லா திருவே வா
இழப்பதில் இன்பம் கண்டிடவே
இகமெல்லாம் ஒன்றெனக் கொண்டிடவே
855. தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா
தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா
தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா - 2
உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை
உன் புகழ் பாடவே பொங்கி வரும் வல்லமை - 2
மனமார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை

1. நான் எந்தன் வேலியாக என்னலம் கொண்டேன் - நீ
பூமி எங்கும் வாழும் தென்றலாகினாய் - 2
உன்னொளி காண காண உள்ளம் மலர வேண்டுமே
உன் வழி போக போக உறவும் பெருக வேண்டுமே - 2
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே

2. நான் சிறு கணம் எரியும் ஒளித்துகளானேன் - நீ
அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் - 2
உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீரவே
தன் தலை தியாகம் ஏற்கும் தீபவாழ்வைப் போலவே - 2
இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே
856. தேவாதி தேவன் இராசாதி இராசன் விருந்து அளிக்கின்றார்
தேவாதி தேவன் இராசாதி இராசன் விருந்து அளிக்கின்றார்
மாறாத தேவன் மண்ணோரின் இராசன் மகிழ்வாய் வருகின்றார்
வாரும் வாரும் அனைவரும் விருந்தில் கலந்து மகிழுவோம்
இறைவன் அளிக்கும் விருந்திது இனிதே உண்போம் அனைவரும்

1. உள்ளம் உவந்து அழைக்கின்றார்
உண்மை இறைவன் அழைக்கின்றார் - 2
உலகம் மகிழ அழைக்கின்றார் புனிதரோடு அழைக்கின்றார்

2. தேவன் தன்னை அளிக்கின்றார் தேற்றும்
உணவாய்த் தருகின்றார் - 2
தூய வாழ்வு வாழ்ந்திட தூயன் தன்னை அளிக்கின்றார்

3. இறைவன் தரும் நல் விருந்திது இன்பம் தரும் நல் விருந்திது - 2
மறையோர் போற்றும் உணவிது அன்பைப் பொழியும் அமுதிது
857.நம் இயேசுவின் விருந்து தான்
நம் இயேசுவின் விருந்து தான்
நம் நோய் தீர்க்கும் மருந்திது தான் - அன்று
மாலைப் பொழுதில் சீடர்கள் நடுவில்
ஒன்றாக அமர்ந்து அப்பமும் இரசமும்
உணவாய் அளித்த இறைவனே

1. உனக்கும் எனக்கும் உறவு என்றும் வேண்டுமே
நானே தருகின்ற விருந்தில் கலந்து நிறைவாயே
அன்புக்கு எல்லையாய் என்னையே கொடுத்தேன்
ஏற்றுக்கொள் என்னையே உள்ளத்தை திறந்து
வாரும் ஆண்டவரே என் உள்ளத்தில் வாரும்

2. கடவுள் அரசில் விருந்து என்றும் உண்பவன்
பேறு பெற்றவன் என்று சொன்ன இயேசுவே
பகைவர்க்கும் அன்பையே பரிசாகக் கொடுத்தீர்
ஆன்மாவும் குணமாகும் ஒரு வார்த்தை சொன்னாலே
வாரும் ஆண்டவரே என் உள்ளத்தில் வாரும்
858. நமது (நம்) தேவன் வருகின்றார் இந்த விருந்திலே
நமது (நம்) தேவன் வருகின்றார் இந்த விருந்திலே
அவரின் அன்பைத் தருகின்றார் நம் வாழ்விலே
தெய்வீக உணவு தேன் சிந்தும் மருந்து - 2

1. அழிவில்லாத உணவு இது வானம் விருந்து இது
அலையும் மனத்தில் அமைதி அளிக்கும் ஆறுதல் அமுது
முடிவில்லா வாழ்வைத் தரும் அழியா மருந்து - நம்
உறவு வாழ்வில் நிறைவை அளிக்கும் தேவனின் விருந்து
இனிய விருந்திது அன்பின் மருந்திது
தியாக ஒளியிது தீரா உணவிது

2. இரக்கம் நிறைந்த இதயம் திறந்து நம்மில் வருகின்றார்
கலக்கம் மிகுந்த பிeவு வாழ்வில்
அன்பைப் பொழிகின்றார்
பாவ வாழ்வைப் போக்கியே நல் பாதை அமைக்கிறார்
பரந்து விரிந்த உலகில் வாழ தன்னை அழைக்கிறார்
படைப்புகள் யாவுமே இறைவனைப் போற்றுமே
அவரது நிழலிலே என்றும் வாழுமே
859. நற்கருணை ஆண்டவர் விருந்திது
நற்கருணை ஆண்டவர் விருந்திது
நமக்குத் தரும் ஆன்ம உணவிது
இதனை நாம் உண்டிடுவோம் ஓருடலாய் வாழ்ந்திடுவோம்
இயேசுவோடு இணைந்திடுவோம் இயேசுவாக வாழ்ந்திடுவோம்

1. நற்கருணை ஆண்டவர் எழுந்து நம்மில் வருகின்றார் - அவர்
விருந்திலே நாமும் பங்கு கொள்வோம் - 2
தகுதியோடு நற்கருணை நாளும் நாமும் உண்டால்
இனி வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார் - 2

2. நற்கருணை விருந்தில் நாமும் தினம் மகிழ்ந்திடுவோம் - 2
நாமெல்லாம் ஒன்றுகூடி பகிர்ந்து உண்போம் - 2
நல்லவராய் இயேசு நம்மில் எழுந்து இன்று வருகின்றார்
நலமோடு வாழ்வு வாழ அருளைப் பொழிகின்றார் - 2
860.நற்கருணை ஆண்டவரே அன்பு நேசரே
நற்கருணை ஆண்டவரே அன்பு நேசரே
தினமும் என்னை வாழ வைக்கும் அருள்நாதரே - 2
தேடி வந்தேன் உந்தன் பாதம் வரம் தாருமே - 2
நாடி வந்தேன் உந்தன் அன்பில் நான் மகிழவே - 2
வா இறைவா வா வாழ வைக்க வா
தா இறைவா தா உன்னை எனக்குத் தா - 2

1. அதிகாலை எழும்போது ஆற்றலாக வா
அனுதினமும் அன்பில் வளர அன்னையாக வா - 2
துன்பம் என்னைச் சூழும்போது இன்பமாக வா - 2
துள்ளித் துள்ளி மகிழும் போது தோழனாக வா - 2
- வா இறைவா வா

2. கண்மூடித் தூங்கும் போது காவலாக வா
கவலையினால் கலங்கும்போது கரம் பிடிக்க வா - 2
சொந்தமின்றி வாடும்போது பந்தமாக வா - 2 நான்
சொர்க்கம் இங்கே உண்டு என்று சொல்லித் தர வா - 2
- வா இறைவா வா
861. நற்கருணை ஆண்டவரே
நற்கருணை ஆண்டவரே
இயேசு தரும் தெய்வ பிரசன்னம்
நற்கருணை ஆண்டவரே நாளும் வரும் தெய்வ தரிசனம்
வானதூதரே வாழ்த்திப் பாடுங்கள் வாழ்த்திப் பாடுங்கள்
வல்ல தேவனை - 2 வந்து பாருங்கள் - 2

1. வானத்தினின்று பூமிக்கு வந்து வாழ்வு தந்திடும் தேவ நற்கருணை
பேழையினின்று இறையருள் தந்து
வளமை அளித்திடும் இறைவனின் கருணை
தினம் தினமும் திருவருளும் மழையெனவே பொழிந்திடுமே
இருள் விலகும் அவர் வரவில் ஒளி உதிக்கும் புது உறவில்

2. நேற்றும்இன்றும்என்றென்றும்வாழ்வின் மையம்திவ்யநற்கருணை
தூய உள்ளத்துடன் இதை உட்கொண்டால்
தேடி வந்திடுவார் இயேசு இராசனே
அவர் நினைவில்இதைச் செய்தால்மறை உண்மை பொருள் தருமே
இதை உண்ணத் தடையென்ன விரைந்திடுவீர் உண்டிடுவீர்
862. நாளெல்லாம் நினைந்தேன் நலம்தரும் உணவே
நாளெல்லாம் நினைந்தேன் நலம்தரும் உணவே
வாழ்வுக்கு நீரே ஆதரவே - 2

1. வானிலிருந்து இறங்கிய விருந்தே
தான் எனப் பகர்ந்தாய்த் தவறில்லா தலைவா
ஏன் எனக்கே இனி வீண் தயக்கம்
தெளிதேன் சுவை நீ என யான் அறிந்தேன்

2. உண்மையின் அரசே உணர்ந்திட்ட மொழியே
என்னுள்ளத்தினிலே எழுந்திடும் உறுதி
காரணமாம் விசுவாசமுமாம்
நிறைபேறு மகிழ்வாம் அருள் பூரணமாம்
863. நான் கண்ட தெய்வம் நீயல்லவா
நான் கண்ட தெய்வம் நீயல்லவா
என் உள்ளம் கவர்ந்ததும் உனையல்லவா
நான் பாடும் பாடல் உனக்கல்லவா
என் வாழ்வின் பொழுதெல்லாம் நீயாக வா

1. கனிவான இதயம் உனதல்லவா
இனிதாகப் பேசும் உன் மனமல்லவா - 2
இரக்கத்தைப் பொழிவதுன் குணமல்லவா
மறவாது ஈவதுன் கரமல்லவா

2. பாவத்தால் பலதூரம் சென்றாலும் - உன்
பாசத்தால் பாவியை வென்றாயே நீ - 2
பரிசுத்த உமது திரு இரத்தத்தால்
பரிசுத்த படைப்பாக உருவாக்கினாய்
864. நான் தேடினேன் என் இயேசுவே
நான் தேடினேன் என் இயேசுவே
உன் வரம் வேண்டினேன் அருள்நாதனே - 2
என் வாழ்வில் ஒளியாக நீயாக வேண்டும்
என் வானின் கதிரே என் தேவனே

1. மேலான அன்பாக நீயாகி நின்றாய்
உன் வார்த்தை என் வாழ்வில் பொருளாகுமே - 2
என் அன்பே வா வா என் பலமாய் வா வா - 2
என் வாழ்க்கை ஓடம் தடுமாறும் நேரம்
கரை சேர்க்கும் சுடராக இறையே நீ வா வா

2. வழியோரம் வாழ்கின்ற எளியோர்கள் இறைவா
விழியோரக் கண்ணீரை உன் பாதம் வைக்கின்றேன் - 2
நிழலாகச் சோகம் தொடர்கின்ற போது - 2
துயர் நீக்கும் மருந்தாகத் தலைவா நீ வா வா
வான் சேர்க்கும் சுரங்கள் உருவாக்க வா வா
865. நான் தேடும் தெய்வம் இன்று எனைத் தேடி வரும் பொழுது
நான் தேடும் தெய்வம் இன்று எனைத் தேடி வரும் பொழுது
பலகோடி இன்பம் என் நெஞ்சில் தங்கும்
வானாளும் வல்ல மகன் வருகின்ற வழியெங்கும்
மலர்தூவிக் கவிபாட இன்பம் பொங்கும் - 2
1. பாலையிலே உயிர்வாழ மன்னாவைக் கொடுத்தாய்
பகலெல்லாம் வேதமாகி இரவினில் ஒளிபதித்தாய்
வானத்துப் பறவைகளே மலர்களைக் கண்பார்த்தால் - 2
வாடாது என் முகத்தைத் தானேற்றுப் பொழிகின்றார்
நாளெல்லாம் பிறர்க்காக நான் வாழும் போது
நான் வாழ என் தெய்வம் வழிகாட்டுவார் - 2

2. ஏழைகளின் உருவிலே என் இறைவன் இருக்கின்றார்
தேடி அலைந்து நானும் சேவை செய்திடுவேன்
வேலைகளின் இடையினிலே
வேந்தனை நான் நினைக்கையிலே - 2
நாடி எந்தன் செயல்களிலே
தானிருந்து முடிக்கின்றார் - நாளெல்லாம்
866. நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு
இதை யாராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் - 2

1. எனது உணவை உண்ணும் எவரும்
பசியை அறிந்திடார் ஆ - 2 - என்றும்
எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார்

2. அழிந்து போகும் உணவிற்காக
உழைத்திட வேண்டாம் ஆ - 2 - என்றும்
அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்
867.நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே
நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே
நீ எனதாகும் பொழுதில் - உன்
எண்ணங்கள் எனை மாற்றுமே உன்னருள் போதுமே

1. தனிமையில் கூட தனி சுகமே - என்
தலைவன் உமது உடனிருப்பால் - 2
சுமைகள் கூட சுகம் தருமே - உன்
இமைகள் என்னை அரவணைத்தால்
படைப்பினில் ஒளிர்வது உன் முகமே - இது
பரமனே உந்தன் அதிசயமே

2. இடர்கள் கூட இனிக்கின்றதே - என்
இனியவன் என்னில் இயங்குவதால் - 2
தடைகளில் மனம் மகிழ்கின்றதே - என்
தாயாய் உன் கரம் தேற்றுவதால்
நினைவிலும் நீங்காத உன் முகமே - இது
நேசமே உந்தன் அதிசயமே
868. நீ தானே இறைவா நிலையான சொந்தம்
நீ தானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனையென்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம் - 2
நீயே சொந்தம் நீயே தஞ்சம்
நீயே செல்வம் வாழ்வின் மையம் - 2

1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே - 2
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2
வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே - 2 - நீயே

2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன - 2
நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2 - நீயே
869. நீ தானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே
நீ தானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே
தூங்காது என் கண்களே துணையாக நீ இல்லையேல்
என் உயிரானவா என் உறவானவா
மகிழ்வாக என் வாழ்வை தினம் காப்பவா
என் உடன் வாழவா என் துயர் போக்கவா
உன் நெஞ்சோடு எனைச் சேர்த்துத் தாலாட்டவா

1. உறவாடி களிகூர்ந்த என் சொந்தங்கள்
சுமை வந்த போதெல்லாம் பறந்தோடின
நலமான பொழுதெந்தன் உடன் வாழ்ந்தவா
தடுமாற்றம் கண்டென்னைத் தனியாக்கினாய்
உம் தோள்களில் எனைத் தாங்கினாய்
என நெஞ்சத்தின் வலி போக்கினாய்
தாயாக எனை என்றும் நீ தேற்றினாய்

2. சோகங்கள் என் வாழ்வைத் தினம் சூழ்கையில்
நம்பிக்கை தீபங்கள் நீயேற்றினாய்
இனி வாழ்ந்து பயன் இல்லை என ஏங்கினேன்
புவி வாழ்வில் பொருள் தந்து அறிவூட்டினாய்
என் பாதையின் இருள் போக்கினாய்
என் வாழ்க்கையின் புதிர் நீக்கினாய்
தாயாக எனை என்றும் நீ தேற்றினாய்
870.நீயாகநான்மாறவேண்டும்உனைப் போல உறவாட வேண்டும்
நீயாகநான்மாறவேண்டும்உனைப் போல உறவாட வேண்டும்
என் இயேசுவே உன் அன்பினிலே எந்நாளுமே நான் வாழணும்
உனில் நானும் உயிர் வாழ வேண்டும் - 2

1. ஏழை நானும் நீயின்றி வாழ்ந்தால் வாழ்வின் பொருளேது -2
கணநேரம் உனை நானும் மறந்திடும் போது
கவலைகள் சூழ்கின்றது ஏங்கும் என் இதயம் எழுந்தே நீ வாராய்
உயிரோடு கலந்திடுவாய் - 2

2. என்றும் உந்தன் அன்பொன்றுபோதும் எனக்கினி வாழ்வினிலே- 2
ஏழை என் நினைவினில் எழுந்திடும் எண்ணம்
எல்லாமும் நீயாகவே
சொல்லொன்று போதும் உன் சொல்லொன்று போதும்
என் ஆன்மா குணமடையும் - 2
871. நீயே எந்தன் சொந்தமாய் நீயே எந்தன் பந்தமாய்
நீயே எந்தன் சொந்தமாய் நீயே எந்தன் பந்தமாய்
நிலைத்திடுவாய் என்னை நிறைத்திடுவாய்
இறைவா அருள்வாய் அருளைக் கேட்கிறேன்

1. மனம் சோர்ந்து நான் வாழும் நேரங்களில்
தலை சாய்ந்து நான் தூங்க இடம் தாருமே
மனம் நொந்து நான் வாழும் வேளைகளில்
தலைவா உன் கரம்பற்ற இடம் தாருமே
நான் செல்லும் வழியெல்லாம் துணையாகினாய்
என் தேவா நீ என்னில் உணவாகுவாய்
உனையே நினைத்து உனையே பாடி
இறைவா உன்னில் சரணடைந்தேன் - ஆ ஆ

2. குணம் வேண்டி நான் வாடும் நேரங்களில்
நோய் தீர்க்கும் மருந்தாக நீ தேடி வா
கண நேரம் பிரியாமல் எனைக் காக்கவா
உன் பாத மலர் தேடி நான் கேட்கிறேன்
என் வாழ்வின் பொருளெல்லாம் நீயாகவா
என் வாழ்வின் சுடராக நீ ஓடி வா
உனையே நினைத்து உனையே நாடி
இறைவா உன்னில் சரணடைந்தேன் - ஆ ஆ
872. நீயே எந்தன் தெய்வம்
நீயே எந்தன் தெய்வம்
நீயின்றி வேறேது சொந்தம் நீயே எந்தன் தெய்வம்

1. ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்
அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய் ஆ - 2
கண்ணெனக் காத்திட எந்தன் நெஞ்சில் வா வா
கவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா

2. விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்
வீணென என் மனம் சோர்ந்து போகலாம் ஆ - 2
துணை வரும் அருளினால் என்னைத் தாங்க வா வா
துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா
873. நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்
நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்
நிலையாக வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நானோ உன் சாயல்
உனைப் போல வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
நீயே என் கோயில் ஆண்டவனே

1. வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையில் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்
செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையில் வழிபாடாய் உனைப் பார்க்கிறேன்
2. புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன்
உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன்
பேழையின் பிரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்
உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன்
874.நீலவானின் நிலவு போல் இனிமை தரும் தேவா
நீலவானின் நிலவு போல் இனிமை தரும் தேவா
இதயத்தைத் திறந்தேன் நான் அன்பே நீ வருவாயா
வைகறை வசந்தமே என் வாழ்வின் உதயம் நீயாக வா

1. ஆலயம் நுழைந்ததும் அழுகை வருகுது
உன் அன்பின் நினைவினில் நெஞ்சம் மகிழுது
இரவிலும் பகலிலும் உனையே நினைக்கின்றேன்
இன்னிசை கீதத்தால் நிதமும் துதிக்கின்றேன்
என்னில் இனிமேல் வாழ்வது நானல்ல நீ இயேசுவே
அன்பாக வா அருளாக வா இதய வேந்தே வா

2. கேட்பதைக் கொடுத்திடும் இரக்கம் மிகுந்தவர்
நான் செல்லும் வழியெல்லாம் துணையாய் வருபவர்
உமக்காக வாழ்ந்திட உலகை மறந்தேனே
துன்பங்கள் துயரங்கள் ஏற்று மகிழ்ந்தேனே
எனக்கெல்லாம் நீ இயேசுவே நீயில்லையேல் நானில்லையே
உயிராக வா உறவாக வா என்னோடு வாழ வா
875. நெஞ்சத்தில் வா என் தெய்வமே
நெஞ்சத்தில் வா என் தெய்வமே
நீயாக நான் மாறவே உன்னை நான் கண்டு உன் பாதை சென்று
நீயாக நான் வாழவே - 2

1. என் உள்ளம் நீ வந்து அமர்கின்ற நேரம்
என் கண்கள் புதுப்பார்வை காணும் - 2
என்னில் நீ ஒன்றான நிலையான உறவு
புதுவாழ்வு எனை வந்து சேரும்
எனில் வாழ்வது இனி நீயல்லவா
உன் வாழ்வு எந்தன் வழியல்லவா - 2

2. உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை
ஒருபோதும் தவறாவதில்லை - 2
என்னோடு நீ வாழும் சுகமான நினைவில்
எதைக் கண்டும் நான் அஞ்சவில்லை
என் நெஞ்சமே இனி உன் இல்லமே
என்னோடு நிதம் வாழ வா தெய்வமே - 2
876. நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார்

1. வருந்திச் சுமக்கும் பாவம் - நம்மைக்
கொடிய இருளில் சேர்க்கும் - 2
செய்த பாவம் இனி போதும் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2

2. குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மைக்
கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்குப் பாரும் செந்நீர் வெள்ளம் - 2
அவர் பாதம் வந்து சேரும் - 2
877. நெஞ்சமெல்லாம் கோயில் செய்தேன்
நெஞ்சமெல்லாம் கோயில் செய்தேன்
உனையழைத்தேன் நீ வா வா
சிந்தையெல்லாம் நொந்தழுதேன் - 2
சொந்தமெல்லாம் நீ தானே

1. அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு
எந்நாளும் நண்பன் நீயே - 2
கண்ணின் மணிபோலக் காத்திடுவோனே - 2
உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன்

2. வானின் முழுநிலவே வாழும் உயிர்ச்சுடரே
நீயின்றி வாழ்வேதையா - 2
பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2
உன் ஆசீர் தந்தால் மகிழ்வேன் ஐயா
878. நெஞ்சமெனும் ஆலயத்தில்
நெஞ்சமெனும் ஆலயத்தில்
வரவேண்டும் இறைவா - உனைத்
தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா

1. என்னகம் எழுந்து இருள் ஒழித்து
விண்ணகம் சேர்க்க வரவேண்டும் - 2
மண்ணக இன்ப நினைவழித்து
உன்பதம் காண வரவேண்டும்

2. அன்பின் சின்னம் எனில் வளர
அன்பனே நீயும் வரவேண்டும் - 2
உன்னத வாழ்வில் உனை அடைய
என்னகம் நீயும் வரவேண்டும்
879. நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா
நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா
நித்தம் அது உனதாகுமே - 2
நேசம் உன்னில் நான் காண்பதால்
உன்னோடு உறவாட என் சீவன் ஏங்கும்

1. உன்னைக் காணாமலே உடன்
பேசாமலே நான் தவித்திடுவேன் ஆ...
எந்தன் நிலைமாறியே வழி தடுமாறியே
நான் கலங்கிடுவேன் ஆ...
நீயில்லாமல் உயிர்வாடுதே எந்தன்
உணர்வோடு போராடுதே - 2
உயிராக வா உறவாக வா
அழைத்தேன் அழுதேன் உயிரே நீ வா வா

2. என் கோயில் தெய்வம் அது நீயானதால்
உன்னை வணங்கிடுவேன் ஆ
உயிர் ஆதாரமே என்னில் நீயானதால்
உன்னில் மகிழ்ந்திடுவேன் ஆ
நீயில்லாமல் நானில்லையே - உந்தன்
நினைவின்றி வாழ்வில்லையே - 2
நிழலாக வா நீங்காமல் வா
அழைத்தேன் அழுதேன் அன்பே நீ வா வா
880.நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் சீவனே - 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2

1. தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
இமைகளில் இருந்து நீ சுமைகள் தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதியைத் தந்திடும் எந்தன் தந்தையாகினாய்
உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2

2. வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே - 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
மேகமாய்த் திரண்டு நீ அருளைப் பொழியும் அண்ணலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா உணவின் சுவையாகினாய்
- உன்னைத் தேடாத
881. பகிர்ந்திட அழைக்கும் பந்திக்கு வருக
பகிர்ந்திட அழைக்கும் பந்திக்கு வருக
பகிர்ந்திட்ட வாழ்வைச் சிந்தித்து வருக
பருகும் பானத்தால் விருந்தின் அப்பத்தால்
பாரினில் பகிர்ந்து மகிழ்ந்து வாழ்க

1. பரிவுடன் மனிதரின் பசிக்குப் பகிர்வதே
பலியின் நிறைவு நிகழ்ச்சியாம் (ஆ ஆ)
பணிந்த உணர்வில் பணிகள் புரிவதே
பாதம் கழுவலின் தொடர்ச்சியாம்
பாரில் பரவும் வறுமை விலகும்
பகிர்ந்திடும் பண்பு உயிர் பெற்றால்
பகர்ந்திடச் சொல்லி தன்னைப் பகிர்ந்து
பாச இயேசவின் பாதை தொடர
பகிர்ந்திட அழைக்கும் பந்திக்கு வருக

2. உயர்வு தாழ்வின்றி ஒன்றி உழைப்பது
உண்மை பலியின் அர்த்தமாம் (ஆ ஆ)
உறவு வாழ்ந்திடத் தன்னை இழப்பது
உயர்ந்த வாழ்வுக்கு அடித்தளம்
ஊரில் என்றும் பிரிவுகள் இல்லை - உறவின்
விருந்தைப் புரிந்திட்டால் உறவின் தீபம் உலகில் ஒளிர
உயிரை ஈந்த இயேசு வழியில்
பகிர்ந்திட்ட வாழ்வைச் சிந்தித்து வருக
882. பகிர்வினில் இணைந்திடுவோம்
பகிர்வினில் இணைந்திடுவோம்
இறை உறவினில் கலந்திடுவோம் - 2
இயேசுவின் உடலை உள்ளத்தில் ஏற்று
என்றுமே வாழ்ந்திடுவோம் - நாம் - 2
இயேசுவின் நல்விருந்து நிறைவாழ்வினைத் தரும் விருந்து-2

1. உயிருள்ள உணவாய் நீ இருக்க
உவப்புடன் உம்மை உண்டிடுவோம் - 2
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே - 2
உலகுக்கு அளித்து வாழ வைப்போம் - 2 இயேசுவின்

2. அழிவில்லா உணவாய் நீ இருக்க
அகத்தினில் ஏற்று வாழ்ந்திடுவோம் - 2
புவிதனில் புனிதனாய் நடந்திடவே - 2
புதுயுகம் படைப்போம் இப்பூவுலகில் - 2 இயேசுவின்
883. பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன்
பண்பாடி நாளும் பதம் தேடிவந்தேன்
அகம் வந்து என்னை அருள் செய்ய வாராய்
மருள்நிறை வாழ்வில் நான் வாடும் போது
இருள் போக்க இறையே நீ எழுவாயே - 2

1. உள்ளத்தின் ஏக்கங்கள் நிதம் வாட்டுதே
உன்னன்பு தொடுதல்கள் எனைத் தேற்றுதே - 2
உதிர்த்திடும் கண்ணீர் உன் முன்னே மலராய் - 2
உருமாறி ஒன்றாய் கரம் கோர்த்து நிற்கும்
உவப்புடன் உன்னை அணி செய்து மகிழும்

2. கன்னல் போல் உன்னை நான் சுவைத்திடுவேன்
கார்மேக மழையுன்னில் நனைந்திடுவேன்
கனிவுறு வார்த்தைகள் உதிர்த்திடும் போது - 2
கறை நீங்கி என் வாழ்வும் கனிவாக ஒளிரும்
கதிரான உன்னைக் கனவாகக் காணும்
884. பாட்டு நான் பாடக் கேட்டு
பாட்டு நான் பாடக் கேட்டு
என் பாடல்நாயகா விருந்தாக வா வா
உன் அன்பில் நான் இன்று ஒன்றாக வேண்டும்
உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும்

1. இராகங்கள் இல்லாத வாழ்வெனும் வீணையில்
கானங்கள் அரங்கேறும் உன் வரவால் - இறைவா
சோகங்கள் மறைந்தோடும் உன் உறவால்
இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில்
அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா
அதை நானும் அணையாமல் நான் காக்க வா

2. மாதங்கள் பன்னிரண்டும் தேவா உன் திருவாசல்
மானிடரின் வரவுக்காய்க் காத்திருக்கும் - தினம்
மாறாத அன்புக்காய்ப் பூத்திருக்கும்
நீ வாழும் கோயில் தான் ஏழை என்னுள்ளம்
உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே
உனைவிட்டுப் பிரிந்தாலே அருளில்லையே
885.பாரும் தேவனே ஒரு நிமிடம் கேளும்
பாரும் தேவனே ஒரு நிமிடம் கேளும்
நாதனே என் கானமே - 2
உன் உறவையே நான் தேடினேன்
உன் வருகைக்காய் தினம் வாடினேன்

1. உன் பார்வை எனக்கென்றும் சூர்யோதயம்
என் ஆசை மலர்விழிகள் அதில் விரியும்
உன் நினைவு எனக்கென்றும் சந்திரோதயம்
என் வாழ்வு அதில் மூழ்கிக் கவிபாடும்
நான் தேடினேன் உன் வாக்கையே
உன் இல்லமே என் சொந்தமே - 3

2. பாதங்கள் பயணத்தில் தடுமாறுதே
பாவங்கள் குறை தீர்த்து எனைத் தாங்குமே
பயணங்கள் வழிமாறி இருளானதே
சலனங்கள் தீர்த்தெந்தன் வழியாகுமே
நான் பார்க்கிறேன் ஒளிதீபமே
நான் போகிறேன் வழிகாட்டுவீர் - 3
886. புதிய வாழ்வு என்னில் காண இயேசு உன்னையே
புதிய வாழ்வு என்னில் காண இயேசு உன்னையே
விடியலாக உன்னைத் தேடி நாடி வந்தேனே
வரங்கள் யாவும் தந்திடு அருளை நாளும் வழங்கிடு - 2
இதயம் திறந்து தினமும் தொழுதேன்

1. ஏழு சுரங்களில் மீட்டினேன் தினம்
ஏக்கத்தோடு நாடினேன் - 2
கரங்கள் நீட்டி அணைத்திடு - 2
உந்தன் கருணையாலே மாற்றிடு - 3
உறவின் வரவு எந்தன் யாகமே - உந்தன்
தயவின் தேர்வு எந்தன் யோகமே - 2

2. தேனின் இனிமை உன்னிலே அதைப்
பானமாகப் பருகினேன் - 2
காலமாய் நீ மிளிர்ந்திட - 2
உந்தன் நொடிகளாய் என்னை மாற்றிடு - 3 - உறவின்
887. புது வாழ்வு தரும் இறைவிருந்துக்கு செல்வோம்
புது வாழ்வு தரும் இறைவிருந்துக்கு செல்வோம்
புகழ்ப்பாக்கள் பாடி இறை உடலைப் பெறுவோம்
நிறை வாழ்வுக்கான வழியினை நாம் அடைவோம்
இறை மைந்தன் இயேசு உம்மிலே இணைவோம்

1. வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்த தேவன்
நாம் வாழ்வு பெறத் தன்னையே தருகிறார் - 2
வானகத்தின் விருந்துக்கு அழைப்பு பெற்றோர் - நாமெல்லாம்
வாழ்வினையே பெற்றிடுவோம் இறை உறவில் நாமெல்லாம்
தினனன தினனா - தினனன தினனா
புகழ்வோம் புகழ்வோம் இறை மைந்தனைப்
பெறுவோம் பெறுவோம் இறை இயேசுவை

2. வார்த்தை வடிவில் வாழ்க்கையான தேவன்
நாம் வாழ்வு பெற நம்மில் வருகிறார் - 2
அன்பு நீதி சமத்துவமே அகிலமெங்கும் - நிறைந்திட
உயிரும் உடலும் கலந்து நம்மில் வாழ்வு தந்த தேவனை
தினனன தினனா - தினனன தினனா
புகழ்வோம் புகழ்வோம் இறை மைந்தனை
பெறுவோம் பெறுவோம் இறை இயேசுவை
888.பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல
பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல
பேசும் தெய்வமே என் தெய்வம் பேசும் தெய்வமே

1. நேற்றும் இன்றும் மாறாதவர் என்றும் வாழ்கிறவர் - 2
மாறாதவர் வாழ்கிறவர் மாறாதவர் என்றும் வாழ்கிறவர்
அவர்தான் இயேசு என் தெய்வம்

2. இதுதான் வழி என்று குரல் கொடுப்பார் கூடவே நடந்திடுவார்- 2
குரல் கொடுப்பார் நடந்திடுவார்
குரல் கொடுப்பார் என்னோடு நடந்திடுவார் - அவர்தான்
889. பேரின்பமே வாருமே என்னில் பேறாகும் நிலையாகுமே நீர்
பேரின்பமே வாருமே என்னில் பேறாகும் நிலையாகுமே நீர்
ஆனந்த நிலையாகும் அறவாழ்வின் துலக்காகும் - 2

1. வானோக்கி வாழ்வோர்க்கு வழியாகினாய்த்
தானீந்து உலகோர்க்கு உணவாகினாய் - 2
எம் தெய்வமே எமில் வாருமே - 2
இயேசு என் மீட்பரே எம்மைக் காப்பவரே
இயேசு எம் ஆண்டவர் இன்புறும் வானகம் சேர்த்திடும் நல்லவர்

2. புறவாழ்வில் நிலையில்லை உமை நோக்கினால்
அறவாழ்வில் தெளிவில்லை இருள் மேவினால் - 2
ஒளி வீசுவாய் எமை ஏத்துவாய் - 2 இயேசு
890.பொன்மாலை (காலை) நேரம் பூந்தென்றல் காற்றில்
பொன்மாலை (காலை) நேரம் பூந்தென்றல் காற்றில்
என் சீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்பமேகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1. நீ இல்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் தான்-2
காலந்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே
என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வர வேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னைச் சிறகில் மூடுமே... ஆ... ம்...

2. ஒருகணம் என் அருகினில் நீ அமரும் போது ஒரு யுகம்
உனைத் தினம் நான் புகழ்கையில்எனக்குள் தோன்றும் புதுயுகம் - 2
முள்ளில் பூக்கும் ரோசா என்னை அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் இறையே எந்தன் இதயம் உன் அன்பைப் பாடுதே... ஆ... ம்...
891. மனிதம் மலர மண்ணில் வந்தவா
மனிதம் மலர மண்ணில் வந்தவா
விண்ணகம் செல்ல வழியைத் தந்தவா
அமிழ்தே தேனே எம்மைத் தேற்ற வா - 2
உயிரே உறவே எம்மில் உறைய வா - 2

1. அருள் கொடுப்பாய் இன்று இருள் போக்குவாய்
ஒளியேற்றுவாய் ஒளியானவா - 2
உரிமைகளைக் காக்க வா உறவாக வா அன்பாக வா - 2
எம்மை அரவணைப்பாய்

2. பிரிவுகளைக் களைந்திடுவாய் உறவுகளை வளர்த்திடுவாய்
தாழ்வுகளை ஒழித்திடுவாய்
சமத்துவத்தைக் கொணர்ந்திடுவாய் - 2
மனிதத்தையே போற்ற வா எம்முயிரே எம்மில் வா - 2
எம்மை அரவணைப்பாய்
892. மாறாத நேசம் எனில் தந்த தேவா
மாறாத நேசம் எனில் தந்த தேவா
மனமென்னும் கோயில் உனக்காக நீ வா - 2
உளம் என்னும் வீணை கரம் தேடுதே
உறவே நீ என்னில் சுரம் மீட்ட வா

1. ஆறுதல் தேடி அலைகின்ற போது
ஆதவன் நீயே ஆறுதல் தந்தாய் - 2
துயரினில் மூழ்கி மடிந்திடும் வேளை
துணையாக வந்தாய் துயரெல்லாம் மறந்தேன் - 2
போற்றுவேன் தேவா போற்றுவேன் - உன்
திருவடி பணிந்து போற்றுவேன் - 2

2. உன்னருள் தேடி உன் பதம் வந்தேன்
உலகாளும் தேவா உன்னருள் தந்தாய் - 2
உனக்காக வாழ உறவெல்லாம் துறந்தேன்
அழியாத உறவாய் எனில் வந்து சேர்ந்தாய் - 2 போற்றுவேன்
893. மிகுந்த அன்பிதுவே உயர்ந்த அன்பிதுவே
மிகுந்த அன்பிதுவே உயர்ந்த அன்பிதுவே
பரமும் துறந்து இகமுமே எழுந்த அன்பரசே
இத்துணை எம்மையே நேசித்து எளிமை நிலை கொண்டாய்
பக்தியோடென்றென்றும் பணிசெய்வோமே பாரின் மீட்பரே-2

1. சிறந்த போசனமே நிறைந்த போசனமே
உவந்த உள்ளமும் நிரம்பிட உறைந்த போசனமே - இத்துணை

2. நித்தமும் வாழ்வடைவார் நின்னையே அருந்துவோர்
சத்தியம் வழியும் உயிரும் நீ சதமும் தோத்திரமே - இத்துணை
894. முத்தமிழ்த் தலைவன் மூவோர் இறைவன்
முத்தமிழ்த் தலைவன் மூவோர் இறைவன்
எழுந்து வருகின்றார்
என் நெஞ்சத்தில் நிறைந்து சிந்தையில் கனிந்து
இனிமை பொழிகின்றார் - 2 இறைவன் வருகின்றார்

1. பாவத்தின் பிடியில் தவித்திடும் நிலையில்
பாவியைத் தேடிவந்தார் - தன்
உடலையே அளித்து விடுதலை அளித்து உயிராய் மாறுகின்றார்
எல்லையில்லாத அன்பினைப் பொழிந்து
என்னைக் காக்கின்றார் என் இறைவன் வருகின்றார்

2. வாழ்வினை இழந்து வாடியே உலர்ந்த
உள்ளத்தில் உறைகின்றார் - அங்கு
வறட்சியை நீக்கி வளமையை ஈந்து வாழ்வாய் மாறுகின்றார்
எண்ணில்லாத அருளினால் என்றும்
என்னை ஆளுகின்றார் என் இறைவன் வருகின்றார்
895. முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன் - இறைவா
முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகின்றேன் - இறைவா
உன் முன்னிலையில் மண்டியிட்டுக் கிடக்கின்றேன் இயேசையா

1. நானே உயிர்தரும் ஊற்று என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ
உம் ஊற்றில் பருகும் எனக்கென்றும்
இறப்பில்லையோ இருளில்லையோ தாகம் இல்லையோ

2. நானே உயிர் தரும் உணவு என்ற
வார்த்தையின் பொருள் என்னவோ
உம் உடலை உண்ணும் எனக்கென்றும்
பசியில்லையோ துயர் இல்லையோ துன்பமில்லையோ
896.யாரிடம்செல்வோம்இறைவாவாழ்வுதரும்வார்த்தையெல்லாம்
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன - இறைவா - 4

1. அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் - 2
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய் - 2

2. மனத்தினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதய்யா - 2
குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ - 2

3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல் - 2
உலகிருக்கும் நிலை கண்டு உனது மனம் இரங்காதோ - 2
897.இராசாதி இராசனே தேவாதி தேவனே
இராசாதி இராசனே தேவாதி தேவனே
விண்ணோர் வணங்கிடும் விமல இராசனே

1. வானின்று இறங்கிய உணவு நானென்றீர்
ஆவலாய் உண்பவர் ஆன்ம வாழ்வைக் கண்டிடுவீர் - 2
தேவாதி தேவனே இராசாதி இராசனே
போற்றித் துதித்துப் பாடிடுவோம் - 2
2. அன்பினால் உம்மையே உணவாகத் தந்தீர்
அன்புடன் உலகினில் வாழ்வும் வழியும் காட்டினீர் - 2
- தேவாதி தேவனே

3. என்னில் நீ நிலைத்தாலே வாழ்வு உண்டென்றீர்
உம்மில் நான் நிலைக்கவே விரைந்து எம்மில் வந்திடுவீர் - 2
- தேவாதி தேவனே
898.வசந்த இராகம்பாடுவோம் இந்தப் புனிதமான விருந்தினில்
வசந்த இராகம்பாடுவோம் இந்தப் புனிதமான விருந்தினில் - 2
ஆனந்த கீதங்கள் பாடிப் போற்றுவோம் ஆ

1. விண்வெளி போற்றிப் பாடும் எந்தன் மன்னன் வருகையில்
காற்றும் இராகம் பாடும் எந்தன் இதயம் எழுகையில்
கடலலைகள் கவிபாடும் எந்தன் மீட்பர் புகழினை
அவரன்பு நம்மைக் காக்கும் அவரைப் போற்றுவோம் நாம்

2. தண்ணொளி வீசும் நிலவும் எந்தன் இனிய இயேசுவை
பாய்ந்து ஓடும் நதியும் தன்னைப் படைத்த இறைவனை
உறைபனியும் தென்றல் காற்றும் இங்கு இணைந்து பாடுதே
அவர் வரவால் உள்ளம் நிறைந்து அவரைப் போற்றுவோம் நாம்
899.வருவீர் எமது நடுவிலே தருவீர் உமது வரங்களை
வருவீர் எமது நடுவிலே தருவீர் உமது வரங்களை
வருவீர் எமது நடுவிலே கவலை மறந்து வாழவே
கருணை முகிலே எழுந்து வா

1. உலகின் இருளை விலக்கவே வளமே இனிது நிலவவே
உலகின் ஒளியாய் உதித்தவா உளமே ஒளிர வருவீரே

2. பள்ளம் செல்லும் நீரைப் போல் உள்ளம் உம்மை நாடினால்
எல்லாம் உம்மில் சேருமே தொல்லை எல்லாம் தீருமே
900.வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
எனைத் தாங்கும் என் தெய்வமே
என் நிழலாக எழும் தெய்வமே

1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்
உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எனைத் தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே
நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது
துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது
பலனாகக் கை மீது வா இங்குப் புலனாகும் இறையாக வா

2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
உன் பார்வைகள் என் வழியாகுமோ
இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா
ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா
901. வா மன்னவா இதயம் எழுந்து வா
வா மன்னவா இதயம் எழுந்து வா
என்னுள்ளம் மலர வா
அன்புப் பாதையில் கால்கள் நடந்திட
என் வாழ்வில் தீபம் ஏற்றிட

1. வாழ்வில் இன்னல்கள் எத்தனை வந்தாலும்
உன் அன்பு என்றும் மாறாதையா
ஒளிவெள்ளமாய் என்னில் நீ உதித்தாய் - 2
என் இயேசுவே எழுந்துவா

2. சொந்தங்கள் பந்தங்கள் விலகிடும் நேரம்
உன் துணை என்றும் மாறாதையா
உன் கையில் என் பெயர் பொறித்து வைத்தாய் - 2
என் தெய்வமே எழுந்து வா
902.வார்த்தையாக இருந்தவரே வடிவெடுத்து வந்தவரே
வார்த்தையாக இருந்தவரே வடிவெடுத்து வந்தவரே
காத்திருந்த சேயெனக்கு உம்முடலைத் தருவாயா
தருவாயா தருவாயா உண்மையே உயிரே
உள்ளம் வர சம்மதமா இறைவா சம்மதமா

1. வீதியிலே இருந்த என்னை விருந்துக்கு அழைத்து வந்தாய்
ஊதாரி மைந்தன் என்னைப் புத்தாடை அணிய வைத்தாய் ஆ
வெறுமையான பாத்திரம் நான்
அப்பங்களால் வழியச் செய்வாய்
ஒன்றுமில்லா கற்சாடி நான் இரசமாய் நீ நிரம்பிடுவாய் ஆ

2. தூரத்திலே இருந்த என்னை என்னருகே வா என்றாய்
பாவத்திலே வீழ்கையிலே
சாய்ந்து கொள்ளத் தோள்கொடுத்தாய் ஆ
பாழ்வெளியில் அலைந்த என்னைப்
பந்தியிலே அமரவைத்தாய்ப்
பக்கத்திலே நீ இருந்து பரிவன்பைத் தந்திடுவாய் ஆ
903.வாரும் எந்தன் இசையமுதே இறைவா என் தலைவா
வாரும் எந்தன் இசையமுதே இறைவா என் தலைவா - 2
நாளும் தேடும் உணவாய் நீ வந்தாய் உமைத் தந்தாய் - 2
உண்மை உணவாய் நீ நின்றாய்
முழு உருவாய் என்னில் கலந்தாய்

1. எந்தச் செயலும் செய்யும் போதும் உம்மை நினைத்தே செய்கிறேன்
எந்தன் மூச்சு எந்தன் பாட்டு உம்மை வைத்தே பாடினேன்
இயேசுவே உந்தன் அன்பைப் பொழிந்து என்னில் கலந்தாயே - 2
எந்தன் வாழ்வு அர்த்தம் பெறவே
உம்மை உணவாய் ஏற்றுக் கொண்டேனே

2. நெருப்பின் வெண்மை தாங்கிடாத பொன்னும் பலனைத் தருவதில்லை
துன்பம் தாங்கும் நெஞ்சம் ஒன்றே வெற்றி வாசலை அடையுமே
தியாக உச்சம் எதுவென்று நீ எனக்குக் காட்டினாயே - 2
உம்மைப் போல நானும் வாழ
உம்மை உணவாய் ஏற்றுக் கொண்டோமே
904.வா வா வரமும் தா நாவில் வா எம் நாதனே
வா வா வரமும் தா நாவில் வா எம் நாதனே - 2

1. விண்ணகம் நின்று இறங்கி வந்தவா
மண்ணோரைச் சாவில் மீட்டு நின்றவா - 2
தன்னிகரில்லா மன்னவனே தரணி போற்றும் விண்ணவனே
என்னரும் சோதியே எம்மில் வா

2. நற்கனி தந்திடும் நல்ல மரமும் போல்
பொற்கொடி மாமரி பூவில் உனைத் தந்தார் - 2
நீரே நல்ல கனியாக ஏவைக் கனியின் மருந்தாக
ஏழை எந்தன் விருந்தாக
905.வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்
வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் - 2

1. இறைவன் என்னில் உறைகின்றார்
இன்பம் எனக்குத் தருகின்றார் - 2
அன்பும் அருளும் பொழிகின்றார் - 2 ஆ...
என்னை முழுவதும் ஆள்கின்றார்

2. உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே - 2
யாழும் இசையும் போலவே - 2 ஆ...
வாழும் இறையில் ஒன்றிப்போம்

3. கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே - 2
கிறிஸ்து நம்முள் வாழவே - 2 ஆ...
நமக்கு பயமே இல்லையே

906.வாழ்வின் இனிமை வழங்கும் கனியே
வாழ்வின் இனிமை வழங்கும் கனியே
வளமாய் எம்மில் தவழ்க - 2

1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்
இருளின் துயரம் விலக - 2
இறைவன் உவந்து வழங்கும் கனியாய்
அருளைப் பொழிந்தே வருக

2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்த்
துலங்கும் இறைவா வருக - 2
தேய்வு தொடராப் புதுமை நிலவாய்த்
திகழும் வாழ்வைத் தருக

3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து
புனித இதயம் பெறவே - 2
புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்க்
கனிவாய் எழுந்தே வருக
907.வாழ்வு தரும் உணவே வாழும் எங்கள் உறவே
வாழ்வு தரும் உணவே வாழும் எங்கள் உறவே - 2
வானத்தினின்று இறங்கிய உணவே - 2
உனக்காக எந்தன் உள்ளம் ஏங்குதே - உன்
தெய்வீகத் திருவிருந்தை நாடுதே - 2
வாரும் வாரும் இயேசுவே என்னில் வாருமே
வாடும் எந்தன் நெஞ்சிலே அமைதி தாருமே - 2

1. வலுவூட்டும் உணவு இங்குப் பல உண்டு - எனில்
உயிரூட்டும் பேருணவு நீர் மட்டும் தானே - 2
என் வழியாய் அன்றி மீட்பு இல்லை என்று
என்னகத்தில் உறையும் தேவ கருணையே - 2
என் ஆண்டவரே தேவனே சிரம் தாழ்ந்து வணங்கினேன்
வாரும் வாரும் இயேசுவே என்னில் வாருமே
வாரும் எந்தன் நெஞ்சிலே அமைதி தாருமே - 2

2. உறவூட்டும் உம் அன்பு தினம் உண்டு - இனி
மகிழ்வூட்டும் நல் அன்பர் நீர் மட்டும் தானே
உம் வழியில் நல் மீட்பு உண்டு என்று சொன்னீர்
எமை என்றும் தேடி வரும் தேவ கருணையே - 2
என் மீட்பரே உம்மையே சிரம் தாழ்ந்து வணங்கினேன் - வாரும்
908.வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே - 2

1. ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே - 2
எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல் - 2

2. உலகம் யாவும் வெறுமையே உனை யான் பெறும் போது - 2
உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால் - 2

3. தனிமை என்றே ஏங்கினேன் துணையாய் நீ வந்தாய் - 2
அமைதியின்றி ஏங்கினேன் அதுவும் நீ என்றாய் - 2

4. எந்த மன்னர் உம்மைப் போல் பொங்கும் அன்பினால் - 2
வந்து எமது நடுவிலே தங்கி மகிழுவார் - 2
909.வாழும் என் தேவனே - தினம்
வாழும் என் தேவனே - தினம்
எனில் வாருமே - என்றும்
பூவாக உனைச் சேருவேன்
என்னில் ஒளியாக வா என்னை
உருவாக்க வா - என்றும்
என்னோடு ஒன்றாக வா

1. கண்களில் மிதக்கும் கருவிழி நானே
கண்ணிமை போலக் காத்திடுவாயே
உன்னடி வந்தேன் என்னையே கொடுத்தேன்
உன்வழி என்றும் தொடந்திடத் துடித்தேன் - 2
வாடிய மலருக்கு வாழ்வளிப்பாயே - 2
இயேசுவே - 4

2. விண்வெளி முழுவதும் உன்முகம் பார்த்தேன்
வீசிடும் தென்றலில் உன்மொழி கேட்டேன்
என்னிடம் வருவாய் இயங்கிடு விரைவாய்
வந்திடும் இசையில் கலந்திடு நிறைவாய்
வாடிய மலருக்கு வாழ்வளிப்பாயே - 2
இயேசுவே - 4
910. வானக அப்பமே வரவேண்டும் - இவ்
வானக அப்பமே வரவேண்டும் - இவ்
வையக உணவே வரவேண்டும்
விண்ணக உறவைத் தரவேண்டும் - நான்
உன்னுடன் வாழும் வரம் வேண்டும் - 2

1. உள்ளத்தில் உனக்குக் கோயில் செய்தேன் - அதில்
உயர்ந்த கோபுரம் கட்டி வைத்தேன் - 2
அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தேன் - 2 அங்கு
வாழ்ந்திட மன்னவா வரவேண்டும் - 3

2. தந்தையின் உறவை நாடி நின்றேன் - என்றன்
தன்னலம் தவிர்க்க அன்பைக் கேட்டேன் - 2
தந்தையின் உறவின் பாலமாக - 2 எந்தன்
சொந்தமாய் சுதன் நீ வரவேண்டும் - 3

3. பொன்னும் பொருளும் நிலமெல்லாம் - பெரும்
பெயரும் சீரும் சிறப்பெல்லாம் - 2
உன்னோடு உறவு இல்லையெனில் - 2 அதைப்
பெற்றாலும் எனக்குப் பயன் என்ன - 3
911. வானவர் அருந்தும் விருந்திது - மன
வானவர் அருந்தும் விருந்திது - மன
வாசல் தேடி இறங்குது
மனிதமும் புனிதமும் இணைந்தது இறை
கருணையும் அருளும் கலந்தது
அள்e அள்e குறையாத அன்பிது
மெல்ல மெல்ல என்னில் உயிரானது

1. குருதியிலே இறையுடலே இதயங்கள் தேடுதோ
குருதியில் நனைந்திட்ட இறைவனின் உடலில்
இணைந்திட இதயங்கள் தேடுதோ
சிலுவையில் உயிரினைத் துறந்திட்ட தேவன்
கல்வாரி மலை தந்தக் காட்சியினை
ஒருகண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ
நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ
தஞ்சம் வந்த தெய்வீக மலையிதோ

2. புழுதியிலே பூமழையே பூமியின் சுவாசமே
புழுதியில் விழுந்திட்ட விதைகளின் மேலே
ஒருதுளி மழையென நீ வந்தாய்
இருளிலும் துயரிலும் மருகிடும் பொழுதில்
இதயத்தின் காயங்கள் ஆற்றினாய்
உடலாலே நான் செய்த பாவங்களை
உன் உயிருக்குள் வலியாக உணர்ந்தாயே
இந்நாளில் எந்தன் உள்eம் வாருமே
எந்நாளும் உன் அருளில் வாழுவேன்
912. வானவர் வாழ்த்தும் தூய நல் அமுதே
வானவர் வாழ்த்தும் தூய நல் அமுதே
வாழ்வின் வழித்துணையே அமுதே - 2

1. தெய்வீகம் மறைத்து மனுவுருவெடுத்தீர்
தெய்வமாய் மாற்றிடவோ - எம்மை
மண்ணுயிர் மறைத்து உணவினில் வந்தீர்
விண்ணகம் சேர்த்திடவோ எம்மை - 2

2. அன்பு என்னும் அகல் விளக்கேற்றி
ஆவலாய்ச் சுடரானோம் உமக்காய் ஆவலாய்ச் சுடரானோம்
ஆவல் என்னும் வேட்கையைத் தணிக்கும்
அருட்கடல் நீராவாய் எமக்காய் - 2

3. கலங்கித் தவித்துக் கடலில் நின்றேன்
கலங்கரை விளக்கானாய் ஒளியாய்க் கலங்கரை விளக்கானாய்
துலங்கிடும் ஒளியில் வழியும் சென்றேன்
துணையைக் கண்டேன் அழியா - 2
913. வானிலிருந்து இறங்கி வந்த உணவு இயேசு நீரன்றோ
வானிலிருந்து இறங்கி வந்த உணவு இயேசு நீரன்றோ
நண்பருக்காய் உயிரைக் கொடுக்கும்
சிறந்த அன்பும் உமதன்றோ உமது வார்த்தை உண்மையே
நம்புகின்றேன் இயேசுவே
என் நெஞ்சக் கோயிலில் எழுந்து வா
என் அன்பர் இயேசுவே உணவாய் வா
இருளின் ஒளியைக் கொடுக்க நான் உலகில் உனைப்போல் வாழ
என் நெஞ்சக் கோயிலில் எழுந்து வா - 3

1. அழிந்து போகும் உணவிற்காக உழைக்க வேண்டாம் என்றவா
அழிவில்லாத வாழ்வைக் கொடுக்கும்
உணவாய் என்னைத் தருகின்றேன் என்று சொன்ன இயேசுவே
அப்பத்தின் வடிவில் வருகின்றீர் நம்பினேன் இயேசுவே என்னில்வா

2. இமயம் குமரி இணைந்து நீளக் கோயில் எழுப்பி அழைத்தாலும்
இதய வீட்டைப் பூட்டிக் கொண்டால் நீர் அங்கே தங்க மாட்டீரே
இந்த உண்மை உணர்ந்து என் இதயம் திறந்து அழைக்கின்றேன்
நீ வாழும் இல்லமாய் மாற்ற வா
914. வானின் அமுதே வளர் அருள் உறவே
வானின் அமுதே வளர் அருள் உறவே
வாழ்வின் வழியே எமை நடத்திடுவீர் - 2

1. மீட்பால் படைப்பால் உமக்கென அமைந்தோம்
மீண்டும் உறவைப் பெருக்கும் நற்கருணை
திராட்சை செடிநீர் கொடி எமை இணைத்தீர்
தேனின் இனிய உணவென அமைந்தீர்

2. தாழ்ச்சித் திரையில் உமை மறைத்ததும் ஏன்
தாழ்ந்த மனித குலம் உயர்த்திடவோ
வீழ்ந்த இயற்கை வியந்தும்மைப் புகழ
விண்ணே அதிர திருப்பெயர் புகழ்வோம்
915. விண்ணக விருந்தே என்னில் வா
விண்ணக விருந்தே என்னில் வா
என்னகம் வாழ இறங்கி வா
மண்ணக மீட்பின் மாண்பே வா
மாபரனே மீட்கவா மீட்கவா மீட்கவா
அகிலம் ஆளும் தெய்வ உணவே நீர்
அன்பைத் தரும் அமுத உணவே நீர்
எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2

1. மன்னா உணவே மண்ணிலே வந்தாய் உண்பவர் வாழவே
நித்திய வாழ்வில் நிலை பெறவே உணவைத் தந்தாயே
இது உன் உடலன்றோ வாழ்வு மாறும் அன்றோ
இது உன் இரத்தமன்றோ தாகம் தீருமன்றோ
இயேசுவே நீர் வர வேண்டும்
என்னையும் மாற்றிட வேண்டும்
உலகம் வாழ்வதற்காக என்னையே நான் தர வேண்டும்
எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2

2. வானம் இறங்கி வந்த மழையாய் வாழ்வு நனையவே
கானம் இசைத்து உந்தன் புகழை என்றும் பாடவே
எனது சதை என்றாய் உண்மையின் உணவென்றாய்
எனது இரத்தம் என்றாய் உண்மையின் பானமென்றாய்
வார்த்தையை வாழ்ந்திட வேண்டும்
வல்லமை நான் தர வேண்டும்
வறுமையில்லா வாழ்வு வந்திட தியாகம் வேண்டும்
எழுந்து வாராயோ என்னில் வாராயோ - 2
916. விண்ணையும் மண்ணையும் படைத்தவா
விண்ணையும் மண்ணையும் படைத்தவா
தன்னையே உணவாய் அளித்தவா - 2
அன்பினால் அகிலமே ஆளும் தெய்வமே
அன்பிற்காக இன்னுயிரும் ஈந்த இயேசுவே
அளவில்லா உம் அன்பில் நிறைவு தாருமே
என் அன்பே என்னுயிரே என்னில் வாருமே
உம் அன்பில் நான் வாழ ஆற்றல் தாருமே - 2
மகரிகரிசா மகரிகரிசா சரிகரிகமகம பதநி

1. என்னில் மகிழ்வு எந்தன் உறவாய் நீர் வருவதனால்
எம்மில் நிறைவு நெஞ்சில் அமைதி உமைத் தருவதனால் - 2
சரிகரிகரிகரிபா சரிசரிசரிசரிசா
எல்லையில்லா அன்பினாலே தேடிவந்தவா
ஏழை எந்தன் வாழ்வு சிறக்க தன்னைத் தந்தவா - 2
உம்முடலைத் தந்தாய்உயிர் கொடுக்கச் சொன்னாய்- 2 என் அன்பே

2. அடிமைக்கோலம் ஏற்று எம்மை மீட்க வந்தவா
அடியேன் எந்தன் நிலையை மாற்ற உணவாய் வருபவா - 2
சரிகரிகரிகரிபா கரிகரிகரிகரிசா
கள்ளமில்லா அன்பினாலே களிப்பைத் தருபவா
உள்ளமதில் உண்மை அன்பை நாளும் அருள்பவா - 2
அன்புருவாய் நின்றாய் பேரின்பம் தந்தாய் - 2 - என் அன்பே
917. விண்ணோர் வீடும் போதாதே என்னே உனது தயை
விண்ணோர் வீடும் போதாதே என்னே உனது தயை
மண்ணோர் உயர்ந்திடவே மறைந்தாய் அப்பமதில்
தேவ திரு அமுதே சீவ தருகனியே
பாவ வினையகற்றும் பரம போசனமே

1. அன்னை தந்தை எவர்தானும் உம்மைப் போலுண்டோ
தன்னைப் பலியாக்கும் பெலிக்கான் ஆனீரே - தேவ திரு

2. எம்பால் கொண்ட அன்பதுவே அரசே
நீருமது என்பும் தசை யாவும் ஈந்தீர் ஆண்டவரே - தேவ திரு

3. நீவீர் என்னுள் எழுந்தருள ஏழை தகுதி அல்லேன்
சொல்வீர் ஓர் வார்த்தை நானே சுகம் பெறுவேன் - தேவ திரு
918. விருந்திது அன்பின் விருந்திது
விருந்திது அன்பின் விருந்திது
விருந்திது உறவின் விருந்திது - 2
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் பண்பாடி விருந்துண்போம் - 2

1. உடலும் உயிரும் என என்னோடு வருவாய் உறவினில் நீ மலர்வாய்
வழியும் ஒளியும் என என்னோடு இருப்பாய்
வாழ்வினில் துணை வருவாய்
உன்னோடு நானும் உணவாகுவேன் என்னோடு நீயும் உறவாடுவாய்
ஆயனாய் இருந்திடுவாய் என்னை ஆவியால் நிரப்பிடுவாய்

2. செபமும் செயமும் என என்றென்றும் பாடி உணவாய் நீ வருவாய்
இரவும்பகலும்என என்னோடுஇருப்பாய்பயமின்றிநான் வாழ்வேன்
உன் நாமம் என்றும் நான் பாடுவேன்
என்னோடு நீயும் இளைப்பாறுவாய்
ஆயனாய் இருந்திடுவாய் என்னை ஆவியால் நிரப்பிடுவாய்
919. விருந்துக்கு வாருங்கள்
விருந்துக்கு வாருங்கள்
நம் இறைவன் தரும் விருந்துக்கு வாருங்கள்
அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும்
விருந்துக்கு வாருங்கள் - திரு - 2

1. மண்ணோரை நல் மனத்தோராய்
மாற்றும் விருந்துக்கு வாருங்கள்
விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும் விருந்துக்கு...
தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும் விருந்துக்கு...
பாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும் விருந்துக்கு...

2. ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும் விருந்துக்கு...
வேற்றுமைத் தீயை மனத்தினில் நீக்கும் விருந்துக்கு...
மன நோயகற்றி நிறை மகிழ்வளிக்கும் விருந்துக்கு...
மரணத்தை வென்று இறைவாழ்வளிக்கும் விருந்துக்கு...
920.விருந்து கொண்டாட திருவிருந்து கொண்டாட
விருந்து கொண்டாட திருவிருந்து கொண்டாட
இயேசு அழைக்கிறார் நம் நேசர் அழைக்கிறார்
இறையாட்சி விருந்து நம்மை உறவாக்கும் விருந்து - 2 இது

1. திரும்பி வந்த மகனுக்காகத் தந்தை தந்த விருந்து
திருந்தி வரும் மாந்தருக்காய்த் தேவன் தரும் விருந்து
வருந்தி சுமை சுமைப்போரை இளைப்பாற்றும் விருந்து - 2
வானின்று இறங்கி வந்து வாழ்வருளும் விருந்து - 2 இது

2. இறைவாக்கை வாழ்வாக்க ஆற்றல் தரும் விருந்து
இருள் சூழும் பயணத்திலே ஒளியூட்டும் விருந்து
இலவயமாய் இயேசு தரும் இதய அமைதி விருந்து - 2
இறவாத வாழ்வு தரும் இணையில்லாத விருந்து - 2 இது
921. வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா
வாழ்வு மலர்ந்திட வான்மழையென வா
வழி இருளினிலே வளர்மதி என வா - இங்குப்
பாடும் இந்த சீவனிலே பரமனே நீ வா

1. அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு
அமைதி எங்கும் அமைதி எனப் பயணமதை நான் தொடர - 2
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா

2. இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்
எனைப்பிரியா நிலையெனவே இணைப்பிரியா துணையெனவே
- இறைவா என் இறைவா