முகப்பு


321. அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2

1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும்
உன்னை நானோ மறவேனே - அஞ்சாதே
322. அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க
அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க - 2
உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார்
உன் வாழ்வில் உறவாய் உன்னில் நிறைந்தார்

1. தீயின் நடுவே தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை
தோல்வி நிலையில் துவண்டு வாழும்
துன்பம் இனியும் தொடர்ந்திடாதே
காக்கும் தெய்வம் காலமெல்லாம் - 2
கரத்தில் தாங்கிடுவார் அன்பின் கரத்தில் தாங்கிடுவார்

2. தூர தேசம் வாழ்க்கைப் பயணம்
தேவன் நேசம் உன்னைத் தொடரும்
பாவம் யாவும் பறந்து போகும் பரமன் அன்பில் பனியைப் போல
வாழும் காலம் முழுதும் உன்னில் - 2
வசந்தம் வீசிடுமே அன்பின் வசந்தம் வீசிடுமே
323. அடைக்கலமான ஆண்டவரே அனைத்திலிருந்து காப்பவரே
அடைக்கலமான ஆண்டவரே அனைத்திலிருந்து காப்பவரே
உமக்கே நான் சொந்தம் - 2

1. இரவும் பகலும் உன் நினைவே
ஒளிர்ந்திடும் வாழ்வில் உம் நிழலே - 2
நெருக்கடி வேளையில் இருகரம் விரித்து
அருள்மழை பொழிவாய் வெண்ணிலவே என் வெண்ணிலவே

2. பகையும்பாவமும்ஒழிந்திடவேநீதியும்நேர்மையும்நிலைத்திடவே- 2
வார்த்தைகள் வளமாய் ஓங்கிடவே
அருகினில் தவழ்வாய் வெண்ணிலவே என் வெண்ணிலவே
324. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - 2
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம்

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - 2 நிரந்தரம்

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2
325. அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரன்றி வேறில்லையே

1. போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2
காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2

2. இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் சீவனே - 2
326. அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2
அன்பனே இறைவனே என்னிலே வாருமே

1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2
வேதனை நிறைந்த மனத்தில் மன்னிப்பு வழங்கவும்
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும்

2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனத்திடம் தழைக்கவும் - 2
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும்
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்

327. அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே
அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே
அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி - 2

1. நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி - 2
அன்பு மொழியை விதைத்திடுவோர்
அருளின் பயிரை அறுத்திடுவார் - 2 அமைதி

2. உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி - 2
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் - 2 அமைதி
328. அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்
அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்
அன்பில் விளைந்த கனிகள்
அகலான இதயம் சுடரான வாழ்வு தெய்வம் உந்தன் இல்லம் - 2
எல்லாமே ‡ 2 நீயல்லவா இருப்பதும் இயக்கமும் அருளல்லவா
அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி
உண்மைக்கு உருவாகி உடன்வாழும் இறைவா

1. என் வாழ்வைப் பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய்
வாழும் தெய்வம் நீயே
செயற்கறிய செயல்புரியும் ஊக்கம் தந்தாய்
தொடரும் இந்தப் பயணம் - 2
என் தாயாக நீ இருந்தாய் தந்தை அன்பாலே அரவணைத்தாய் - 2
நல் நண்பனாக வந்து உறவு தோள்கொடுத்து
இன்பப் பாடல் இசைத்தாய் பாதைக்கு விளக்கானாய் - எல்லாம்

2. இந்தப் புவிவாழ சிந்தும் மழையாக வந்து வeமை ஊட்டுகின்றாய்
மண்ணில்உயிர்வாழநல்லபயிராகநின்றுநிறைவைஎன்னில்தந்தாய்-2
உயர் நோக்காக உளம் நுழைந்தாய்
உயிர் மூச்சாக எனில் கலந்தாய் - 2
முழு மனிதனாக வந்து உறவுப் பாடம் தந்த
உனது ஆட்சி அமைப்பேன் சமநீதி மலரச் செய்வேன்
329. அழகிய கவிதையில் பாடிடுவேன்
அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் - 2

1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் அனைத்தும் எனக்களித்தார் - 2
எரித்திடும் துயரில் எனைக் காத்தார்
எனவே அவர் என் ஆண்டவரே

2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
கவலைக் கறைகள் படர்கையிலே - 2
அன்பின் கரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே
330.அழைத்தது நானல்லவா மகனே மகளே நீ கலங்காதே
அழைத்தது நானல்லவா மகனே மகளே நீ கலங்காதே
படைத்தது நானல்லவா மகனே மகளே நீ திகையாதே
பகலும் இரவும் காப்பது நானே என் உறவே அகலாதே
நான் உனக்காக வருகின்றேன்

1. உன் உறவாய் நான் இருப்பேன் வழிமுழுதும் காத்திடுவேன்
உன் நிழலாய் நான் வருவேன் சுமைமுழுதும் நான் சுமப்பேன்
இதுகருவில் உருவான உறவல்லவா தாயுமானவன் நான் அல்லவா
என் சிறகில்வாழ்வில்நீயல்லவா என் தோள்கள் இருப்பது உனக்கல்லவா
உனை நான் வரைந்தேன் உயிராய்ச் சுமப்பேன்

2. விண்ணும்மண்ணும்மாறிடலாம்சொந்தமும்பந்தமும்விலகிடலாம்
பாசமும் நேசமும் பிரிந்திடலாம் பெற்ற தாயும் உன்னை மறந்திடலாம்
விழுந்தாலும் எழுந்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை வெறுத்தாலும் காத்திடுவேன்
மாறாதுமறையாதுசொல்அல்லவாகுறிகளும்குறையாஎன்அன்பல்லவா
உனை நான் மறவேன் உயிராய்ச் சுமப்பேன்
331. அன்பு செய்யுங்கள் அன்பு செய்யுங்கள்
அன்பு செய்யுங்கள் அன்பு செய்யுங்கள்
தா...ரா...ர/தா... ரா...ர/தா...ரா...ர
அன்பு செய்யுங்கள் நம் ஆண்டவரை
அன்பு செய்யுங்கள் நம் அருகில் இருப்பவரை - 2
முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும்
முழு வலிமையோடும் முழு ஆற்றலோடும் ம் ம் ம்
அன்புசெய்யுங்கள் தா ரா ர
அன்புசெய்யுங்கள் நம் ஆண்டவரை
அன்பு செய்யுங்கள் நம் அருகில் இருப்பவரை

1. கடவுளுக்குரியதை கடவுளுக்கும்
மனிதனுக்குரியதை மனிதனுக்கும் - 2
கொடுத்து வாழுங்கள் இன்பம் காணுங்கள் - 2
மீட்பினில் மலர்ந்திடவே இறை மீட்பினில் மலர்ந்திடவே
- முழு உள்ளத்தோடும்

2. ஒருவருக்கொருவர் அன்பு செய்வது ஆண்டவர் நேசிப்பது - 2
மனித நேயமே இறைவன் சாயலே - 2
பாடுவோம் நம் வாழ்வில் என்றும் பாடுவோம் - நம் வாழ்வில்
- முழு உள்ளத்தோடும்
332. அன்பென்ற நதி மீது படகாகு
அன்பென்ற நதி மீது படகாகு
அறியாத பேரின்பக் கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகு
அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும் - 2

1. வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்
துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு
உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்
தனைக்காட்டும் குணம் நீக்கி நலம் நாட்டு
நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்
பணிவேகம் தனில் இன்னும் பலம் ஊட்டு - 2
அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு
இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு - 2

2. மலர்வாசம் தரும் பூவில் இழப்பில்லை
மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை
தானே தன் கனி உண்ணும் செடியில்லை
தனக்கென்று வாழ்ந்தால் விண் விடிவில்லை
இளகாத மனம் செய்த பணியில்லை
இரங்காத இதயத்தில் இறையில்லை - 2
தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்
அன்புள்ளம் இறை தந்த வரமாகும் - 2
333. அன்பெனும் அருளே நீ வாழ்க
அன்பெனும் அருளே நீ வாழ்க
உயிர்ப்பொருளே உறைவிடமே நீ வாழ்க
அன்பெனும் அருட்சுடராய் அமைந்தாயே இறைவா - 2
ஆதியந்தம் இல்லாது ஆட்சி செய்யும் தலைவா

1. இன்பமெல்லாம் ஓர் உருவாய் இயங்கி வரும் இறைவா
ஈயாதார் உள்ளத்திலும் வீற்றிருக்கும் இறைவா - 2
உண்மைக்கே உறைவிடமாய் உத்தமனே இறைவா - 2
ஊன் உயிர் நிலையாக வந்து உணவளிக்கும் இறைவா - 2

2. எல்லார்க்கும் எல்லாமே அளித்து வரும் இறைவா
ஏகபரன் ஏகமகன் என்றுணர்த்தும் இறைவா - 2
ஐயமின்றி வாழ்ந்திடவே வழிவகுத்தாய் இறைவா - 2
குறைவில்லா மனிதம் என்றென்றும் வாழவேண்டும் இறைவா - 2
334. அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே
அன்பெனும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினைப் பாடிடுவேன் - 2

1. அகமெனும் கோயிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் - 2
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்

2. வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் - 2
தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்
335. அன்பே அன்பே உயர்ந்தது இறை
அன்பே அன்பே உயர்ந்தது இறை
அன்பே உலகில் சிறந்தது - 2
அன்பிற்காய் மனுவான அன்பிற்காய்த் தனைத்தந்த
அவர் அன்பே உலகில் சிறந்தது - 2

1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி
அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி - 2
அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2

2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து
கல்வாரி சரித்திரத்தை நான்
காலமெல்லாம் காத்திடவே - 2 அன்புப் பணியாற்றுவேன்
336. அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச் சொல்லித் தா - 2
ஏழை எந்தன் உள்ளம் நீ வா ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2

1. தாய் போல என்னைத் தாலாட்டுப் பாடிச் சேயாக நீயும் சீராட்டினாய்
நீர்தேடிச் செல்லும் மான்போல நானும் உம் பாதம் சேர வழிகாட்டினாய்
நீயில்லையென்றால் நானும் இல்லையே
நீயின்றிப்போனால் வாழ்வுமில்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே
நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புது வாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2

2. நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேளை
நிலமாக நின்று தாங்கிக் கொள்ளுவாய்
மலர்ச் சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லையென்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லையென்றால் கீதம் தோன்றுமா
நீ என்னில் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே நீ தந்த செல்வங்கள்
என் வாழ்வில் துன்பங்கள் நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
337. அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்

1. மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா - 2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா

2. இறைவாக்குச் சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா - 2
மறைபொருள் உணர்வரமும் அன்புக்கு ஈடாகுமா
338. அனைத்தையும் படைத்த தந்தையின் அன்பே
அனைத்தையும் படைத்த தந்தையின் அன்பே
நமக்குத்துணை நமக்குத்துணை
அன்பும் உண்மையும் ஆகிய அவரே நமக்குத்துணை - 2
கண்மணிபோல் நம்மைக் காக்கும் அவரே நமக்குத்துணை - 2
கலங்காதே என்று தேற்றும் அவரே நமக்குத்துணை - 2
அவர் வாழுகின்ற தந்தை
நிறைவாஞ்சையான நம் தந்தை - 2

1. யாவையும் காக்கும் மாண்புயர் தெய்வம் நமக்குத்துணை - 2
காலங்கள் தோறும் வாழ்ந்திடும் செல்வம் நமக்குத்துணை - 2
வாழ்வினைக் காட்டும் வழியும் அவரே நமக்குத்துணை - 2
வறுமையைப் போக்கும் வளமையும் அவரே நமக்குத்துணை - 2
அவர் வாழுகின்ற தந்தை நிறைவாஞ்சையான நம் தந்தை - 2

2. நீதியைக் காக்கும் நேரிய தெய்வம் நமக்குத்துணை - 2
மேதினில் யாவையும் மீட்கின்ற தெய்வம் நமக்குத்துணை - 2
ஆயிரம் வழிகளில் அருகினில் இருப்பார் நமக்குத்துணை - 2
அல்லல்கள் நீக்கி அரவணைத்திடுவார் நமக்குத்துணை - 2
அவர் வாழுகின்ற தந்தை நிறைவாஞ்சையான நம் தந்தை - 2
339. ஆண்டவரே தாவீதின் திருமகனே
ஆண்டவரே தாவீதின் திருமகனே
கேட்பதைத் தாரும் இயேசய்யா
நாங்கள் கேட்பதைத் தாரும் இயேசய்யா - 2

1. வயல்வெளியில் வியர்வை சிந்தும் உழைக்கும் மக்களின்
வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா
சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே
உரிமைக்காக உயிர் கொடுக்கும் சக்தியாக வா
பொய்ம்மை அழிந்து உண்மை மலர
பாசம் வeர்ந்து உறவு பிறக்க - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே

2. கடலலையில் போராடும் மனிதருக்கெல்லாம்
கலங்கரை தீபம் நீயாக வா - 2
ஏழ்மையெனும் பிணியில் வாடும் மாந்தருக்கெல்லாம்
ஏற்றம் காணும் வழியைச் சொல்லும் இயேசு ராசனே
நன்மை நிறைந்து நீதி நிலைக்க
வானம் பொழிந்து வறுமை ஒழிய - 2
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
340. ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர்
ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர்
நானும் மயங்கிப் போனேன் - 2

1. தாயின் கருவினில் உருவாக்கினீர்
தடுக்கி விழும் போது தாங்கி நின்றாய்
தூரச் சென்றாலும் துணையாய் வந்தீர்
துன்பத்தில் வாழ துணிவைத் தந்தாய் - 2
அஞ்சாதே என் மகனே உன்னோடு நான் இருப்பேன்
கலங்காதே என் மகனே கரம் பிடித்து நடத்திடுவேன்
உலகம் முடியும் வரை உன்னோடு நான் இருப்பேன் - 2

2. எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்
விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்
உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்
உண்மைக்குச் சாட்சி சொல்லிடுவேன் - 2 அஞ்சாதே
341. ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன்
ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன்
உம் அடியவன் கேட்கின்றேன் - 2 பேசும் - 4

1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் - உம்
வார்த்தை வழிகாட்ட வேண்டும் - 2
தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது என்
நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் - உம்
அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது
என் வாழ்வை வளமாக்க வேண்டும் - பேசும் - 4

2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே உம்
வார்த்தை விளக்காக வேண்டும் - 2
நாளும் நடக்கின்ற செயல்களிலே - உம்
கரம் ஒன்றே நான் காண வேண்டும் - என்
இதயத்தில் நீ பேச வேண்டும் - உம்
இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் - பேசும் - 4
342. ஆன்மா பாடும் ஆனந்த கீதமிது
ஆன்மா பாடும் ஆனந்த கீதமிது
அன்பே உன்னில் மூழ்கிடும் நேரமிது - 2
என் இறைவனே உன்னில் மகிழ்வேன்
என் எழிலரசே உன்னில் வாழ்வேன்

1. தளர்கையில் சாய்ந்திடத் தோள்கொடுப்பாய் - என்
தனிமையில் நண்பனாய்த் துணை கொடுப்பாய் - 2
உனை நான் மறந்து வாழ்வதில்லை - 2 என்
உறவே உன்னைப் பிரிவதில்லை - 3

2. இதயத்தின் ஆழத்தில் உனை வைத்தேன் - என்
உயிரே உன்னில் எனை வைத்தேன் - 2
வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் - 2 என்
சீவனே உன்னில் வாழ்ந்திடுவேன் - 3
343. ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே
ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே
உன் சேயாய் நானும் என் தாயாய் நீயும் வாழ்ந்தாலே தெய்வீகமே - 2

1. நெஞ்சினிலே நிதம் வைத்தீர் சிந்தையிலே உருப்பதித்தீர்
உன் அன்பில் எனை மறந்தேனே - 2
ஆறாத காயங்களில் தீராத துன்பங்களில்
உம் வார்த்தையால் குணம் தந்தீரே
என்னுயிர் நண்பன் விழியினிலே - 2
கண்மணி நான் கலங்கிடுவேனா(னோ) - 2

2. உன் தோளில் எனைச் சுமந்து உன் அன்பில் நிதம் நனைத்துக்
கலங்காதே என மொழிந்தீரே ஆ - 2
நலனின்றிப் போய்விடினும் நம்பிக்கைச் சாய்ந்திடினும்
என்னருகில் நீர் இருப்பீரே
என்னுயிர் நண்பன் விழியினிலே - 2
எதுவரினும் துணிந்திருப்பேனே - 2
344. இசை ஒன்று இசைக்கின்றேன்
இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய குரல் தனிலே - 2
என் இதய துடிப்புகளோ - என்
இசையின் குரலுக்குத் தாளங்களே - 2

1. காலத்தின் குரல்தனில் தேவா - உன்
காலடி ஓசை கேட்கின்றது - 2
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்
மலர்ந்திடும் மண்ணிலே - 2

2. ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
சிலுவை தியாகம் தொடர்கின்றது - 2
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது
விடியலின் ஆரம்பம் - 2
345. இதயக் கதவைத் திறந்து வைத்தேன்
இதயக் கதவைத் திறந்து வைத்தேன்
இனிமை நிறைக்கும் இயேசுவே
உதயம் தேடும் நேரமெல்லாம் உந்தன் உறவை நாடுவேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே - 2

1. ஏழை மனிதரில் உன் முகம் காணவே
ஏங்கிடும் இதயத்தில் உன்னருள் நிறைக்கவே - 2
உண்மை அன்பு மாண்பு ஓங்கிட உந்தன் உயிரே தியாகமாகுதே - 2
புதிய அன்புவெள்ளம் எங்கும் பொங்கிப் பாயும் நேரமே
புதிய உலகம் மலருமே இறைவன் அரசும் வளருமே

2. நீதி தேடிடும் அன்பின் பணியிலே
சமத்துவ வாழ்வினைச் சத்தியமாக்குவேன் - 2
மனிதநேயம் காக்கும் பொறுப்பிலே
புனித பயணம் தினமும் செல்லுவேன் - 2
நீதி நேர்மை உணர்வு கொண்டு இறைவன் வழியை நாடுவேன்
புதிய உலகம் காணுவேன் இறைவன் அரசில் வாழுவேன் - 2
346.இதயத் துடிப்பின் ஓசையிலே
இதயத் துடிப்பின் ஓசையிலே
இறைவா உன்னைத் தேடுகிறேன்
எண்ண அலைகளின் நடுவினிலே உந்தன் தரிசனம் நாடுகிறேன்
இதயத்தின் நினைவினிலே சுவாசிக்கும் காற்றினிலே
உயிர்களின் இயக்கத்திலே உன்னைக் காண்கின்றேன்
பாடுகிறேன் வாழ்வு பெற ஆ

1. வானின் அமுதம் நீ வாழ்வின் பாடம் நீ
வாழ்வை வளமாக்கும் நீர் தரும் மேகம் நீ - 2
சீவன்உனைதினம்தேடுகிறேன்உனைக்காணாமல்நான்வாடுகிறேன்
வானமுதே வான் மழையே வா
உன்னைக் கண்டாலே உள்ளம் பூப்பூக்கும்
உன் மொழி கேட்டாலே உதயம் வசமாகும்
உந்தன் நினைவுகளால் உள்ளம் இனிதாகும்
உந்தன் உடன் வரவால் சுமைகளும் சுகமாகும்

2. கலைகளின் சங்கமம் நீ கவினுறு கலைஞனும் நீ
மண்ணை விண்ணாக்கும் மாண்புறு மன்னவன் நீ - 2
உயிர்களிலே நிதம் உனைக் காண்பேன்
உயிர் துடிப்பினிலே உன் கரம் உணர்வேன்
காலமெல்லாம் வாழ்ந்திடவே வா வா - உன்னைக் கண்டாலே
347. இதயத்தைப் புரிந்திடும் இதயம் கண்டேன் - அதன்
இதயத்தைப் புரிந்திடும் இதயம் கண்டேன் - அதன்
ஆழத்தை அளந்திடும் கரங்கள் கண்டேன்
அன்பின் தூய்மையை உன்னில் கண்டேன்
மாதவனே உன்னில் என்னைக் கண்டேன்

1. அன்புக்குப் பதிலன்பு தந்திடவோ - அது
விண்ணிற்கும் மண்ணிற்கும் தூரமல்லோ - 2
என்றவோர் எண்ணத்தை மாற்றிடவோ - 2
இன்றுனைக் காண்பது உண்மையல்லோ - 2

2. எரியும் ஒளியெல்லாம் நீயல்லவோ - அதை
அறியும் அறிவெல்லாம் உனதல்லவோ
பரிவின் தொடக்கம் நீயல்லவோ - 2
பரிந்து பேசுவதுன் குணமல்லவோ - 2
348. இதயமே இதயமே இறைவனைத் தேடு
இதயமே இதயமே இறைவனைத் தேடு
இகமதில் இறைவனின் புகழினைப் பாடு - 2

1. உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது
உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமுமடைந்தது - 2
பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே
பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே - 4

2. வானினின்று மானிடரைக் காணும் தெய்வமே
வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே - 2
நீதியும் நேர்மையுமாய் வழிநடத்துமே
நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே இறைவனே - 4
349. இதயமே நீ கலக்கம் ஏன் கொள்கிறாய்
இதயமே நீ கலக்கம் ஏன் கொள்கிறாய்
காத்திடும் தேவன் உன்னிலே - 2
எங்கெங்குச் சென்றாலும் உடனிருக்கிறாய்
என்னென்ன செய்தாலும் துணையிருக்கிறாய்
இதயமே கலக்கம் கொள்வதேன் - 2

1. நீ போகும் பாதை இருளாகும் நேரம்
வழியேதும் தெரியாமல் நீ வீழ்கையில் - 2
உறவெல்லாம் உனைவிட்டுப் பிரிந்தெங்கோ செல்கையில்
துணையேதும் இல்லாமல் பயம் சூழ்ந்து கொள்கையில்
உறவாகுவார் வழிகாட்டுவார் தாயாக மார்போடு
உனை அணைத்திடுவார்
இதயமே கலக்கம் கொள்வதேன் - 3

2. உடல் நோய்கள் உள நோய்கள் உனை வாட்டும் நேரம்
உடல் சோர்ந்து உளம் சோர்ந்து நீ சாய்கையில்
துயரமே வாழ்வென்று உளம் வாடும் வேளையில்
வலுவின்றி வாழ்வின்றி தள்ளாடும் பொழுதினில்
உனைத் தேற்றுவார் வலுவூட்டுவார் எந்நாளும்
காக்கும் தேவன் உனைத் தாங்குவார்
இதயமே கலக்கம் கொள்வதேன் - 2 - இதயமே
350. இதய வானில் பறக்கின்றேன் இனிய உலகம் காண்கின்றேன்
இதய வானில் பறக்கின்றேன் இனிய உலகம் காண்கின்றேன்
எங்கு நோக்கினும் உமதன்பு எதிலும் உமது இறையன்பு
என்றும் மாறா பேரன்பு

1. வானெங்கும் பறந்து திரியும் பறவை இனங்கள்
ஊரெங்கும் ஊர்ந்து தவழும் உயிரினங்கள்
கடலெங்கும் காணக் கிடக்கும் காட்சிகள்
காற்றினில் கலந்து நிற்கும் சாட்சிகள்
எங்கும் இறைவா உந்தன் இயக்கமே

2. காடெங்கும் வனப்பு மிகுந்த பசுமை இனங்கள்
நாடெங்கும் வியப்பு நிறைந்த விந்தைப் பொருள்கள்
நிலமெங்கும் நிதமும் காணும் நிகழ்வுகள்
நெஞ்சங்கள் நாளும் பாடும் - நாதங்கள் எங்கும்
351. இம்மையும் நீ மறுமையும் நீ
இம்மையும் நீ மறுமையும் நீ
இயேசுவே என் இன்பமே நீ இன்பமே நீ - 2

1. உன்னிடம் என்னை நான் கொடுத்தேன்
உன் கரம் பற்றி வழிநடப்பேன் - 2
நான் இனி என்றும் மறைந்திடுவேன் - 2
நாளும் நீ என்னில் வளர்ந்திடவே

2. உன் அருள் ஒன்றே நினைந்திருப்பேன்
உனக்கொரு பாடல் புனைந்திருப்பேன் - 2
காலடி பற்றியே வாழ்ந்திருப்பேன் - 2
காலமெல்லாம் உனை வாழ்த்திடுவேன்
352. இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல்
இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல்
காக்கும் நல் தேவனாக
எல்லாமும் தந்து என்னோடு இருக்கும் இயேசுவே வாழ்க வாழ்க - 3

1. இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே
இதயத்தின் கவலைகள் மறையுதையா
நெஞ்சினில் உமையே நினைக்கின்ற போது
உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது - 2
நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமையா
குறைவில்லாப் புதுவாழ்வு தருபவர் நீரல்லவா
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி
ஆண்டவா உன்னைத் துதிக்க வந்தேன்

2. தாளத்தை இழந்த பாடலைப் போல
உனை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே
உன் திரு வார்த்தையைத் தியானிக்கும் போது
பலன்தரும் நல்ல நிலமானேன் - 2
ஆகாய கங்கையைப் போல் அருள்மழை பொழிபவரே
பூமழை தூவி உந்தன் பொற்பாதம் பணிகின்றேன்
கண்மணி போல் என்னைக் காக்கும் ராசா
கானங்கள் இசைத்து துதிக்க வந்தேன்
353. இயற்கையின் அதிசயம் அது இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம் அது இறைவனின் கலைநயம் - 2
உலகொரு ஓவியம் நாம் அபிநய காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள்

1. தூரத்து மேகக்கூட்டங்கள் தூரல் போட்டுப் பாடுங்கள்
தாகம் கொண்ட ஓடைகள் தாளம் போட்டு வாருங்கள்
விந்தைகள் செய்யும் இறைவனின் அருளை
சிந்தையிலேற்றித் தினந் தொழுவோம்
கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம்
கடவுளின் கருணைக் காவியம்
எனவே பாடுங்கள் இறைவனைப் போற்றுங்கள் ஆ ஆ ஆ

2. கானத்துக் குயிலின் கீதங்கள் காற்றில் தவழ்ந்து வாருங்கள்
பச்சை வண்ணச் சோலைகள் பாக்கள் பாடி வாருங்கள்
- விந்தைகள் செய்யும்
354. இயேசு இயேசு என்று அழைத்து
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை - 2 உந்தன்
குரலைக் கேட்டு உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஒளியாய் - 2
வந்தார் மாபரன் இயேசு - உயிர்
தந்துனை மீட்டார் இயேசு கல்வாரி சிகரமதில் - 2

2. பாவிகள் நம்மை மீட்கவேமண்ணில்ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார்- 2
போதனைகள் பல தந்து - நம்மை
வேதனையில் வெற்றி பெறச் செய்தார் - கல்வாரி
355. இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வு கொண்டது - அதை
ஏழிசையில் பாடுகின்றது - 2

1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் - 2
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்

2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்குக் கண்டார் - 2
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
356. இயேசு என்னை அன்பு செய்கின்றார்
இயேசு என்னை அன்பு செய்கின்றார் - 2
அளவில்லாமல் ஆசீர் அருள்கின்றார் - 2
இனித் துன்பம் ஏதும் இல்லை ஒரு துயரம் வாழ்வில் இல்லை

1. தனிமை என்னும் பாழ்வெளி என்னைத் தவிக்க வைத்ததுவே
தவறு செய்த நேரத்தில் மனம் பதறித் துடித்ததுவே - 2
இனியும் வாழ்வு கிடைக்குமா என்று கலங்கித் தவித்து நின்றேன்
இதயம் தேடும் தலைவனை நான் காணத் துடித்து நின்றேன்
தாயைப் போல தேடி வந்து
என்னை அணைத்தாரே தழுவி அணைத்தாரே

2. உறவுகள் என்னை வெறுத்தபோது உள்ளம் கலங்கி நின்றேன்
உண்மைக்காக உழைத்த நேரம் உதவி தேடி வந்தேன் - 2
என்றும் மாறா இறைவனை நான் காண வேண்டி நின்றேன்
ஏழை வாழ்வில் ஏற்றம் காண ஏங்கிக் காத்து நின்றேன்
இரக்கம் பொழியும் இறைவன் என்னைத்
தேடி வந்தாரே அன்பைப் பொழிந்தாரே
357. இயேசு நாமம் பாட பாட இனிமை பொங்குதே - அவர்
இயேசு நாமம் பாட பாட இனிமை பொங்குதே - அவர்
இல்லம் வாழ எந்தன் இதயம் ஏங்கித் தவிக்குதே - 2

1. ஓங்கும் குரலைக் காக்க வேண்டும் உன் நாமம் பாடவே - 2
என் உள்ளம் தேறவே என் தாகம் தீரவே
உன்னன்பில் வாழவே என் தேவா தேவா வா

2. ஏங்கும் விழிகள் தேற்ற வேண்டும் வான் தீபம் காணவே - 2
உன்னன்பில் வாழவே உன்னோடு சேரவே
என்னில் நீ வாழவே என் தேவா தேவா வா
358. இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன்
இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன்
இனி என்ன கவலை
கேட்பதை எல்லாம் கொடுத்திடும் இயேசு
இருக்கையில் ஏன் கவலை - 2

1. என் தேவை என்னவென்று படைத்தவர் அவர் அறிவார்
என்னையே நான் கொடுத்துவிட்டேன் அவரே பார்த்துக் கொள்வார் - 2

2. என் இதயம் கவலையினால் மிகுந்திடும் வேளையிலே
ஆண்டவர் தம் ஆறுதலால் இன்பத்தில் ஆழ்த்துகிறார் - 2

3. உம் வழியில் என் கால்கள் தள்ளாடும் நேரத்திலே
ஆண்டவரே உன் அருளோ என்னைத் தாங்கிடுதே - 2
359. இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே
இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே
எந்நாளுமே சங்காக முழங்கிட வேண்டும் - 2

1. நான் பாடும் பாடல் நானிலம் எங்கும்
எதிரொலித்திட வேண்டும் ஆ ஆ - 2
உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
உணர்வு பெற வேண்டும் - உவகை பெற வேண்டும் - 2

2. பலகோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின்
இணையில்லா திருநாமம் ஆ ஆ
வாழ வைப்பதும் வாழ்விக்கப் போவதும்
அருள் தரும் ஒரு நாமம் - இயேசுவின் திரு நாமம் - 2
360. இயேசுவின் திரு நாமம் எந்தன் இதயத்தின் எழில் ராகம்
இயேசுவின் திரு நாமம் எந்தன் இதயத்தின் எழில் ராகம்
இயேசுவின் திரு நாமம் பாவினிலே என் நாவினிலே - இப்

பாரினிலே எழும் புது வெள்ளம் 1. காலை மாலையில்லை வேளை நேரமில்லை
என்றும் ஒலித்திடும் நாமம்
நாடு நகரமில்லை ஊரு தெருவுமில்லை
எங்கும் ஒலித்திடும் நாமம்
இது விண்ணவர் வணங்கிடும் நாமம்
இது மண்ணவர் போற்றிடும் நாமம் - பாரினிலே

2. வாழ்வின் சுமையாலே வருந்தி அழுவோர்க்கு
வரங்களைப் பொழிந்திடும் நாமம்
தாழ்வுப் பிணியாலே வெந்து அலைவோர்க்கு
விடுதலை அளித்திடும் நாமம்
இது ஆறுதல் தந்திடும் நாமம்
இது தேறுதல் தந்திடும் நாமம் - பாரினிலே
361. இயேசுவே உந்தன் வார்த்தை எனக்கு வாழ்வு
இயேசுவே உந்தன் வார்த்தை எனக்கு வாழ்வு
இயேசுவே உந்தன் பார்வை எனக்கு விளக்கு
நீயே எந்தன் வாழ்வின் நிறைவாகும்

1. இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே
நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே
தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

2. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே
பகைமையும் சுயநலங்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே - 2
நீதியும் அன்பு நேர்மையும் பொங்கி நிறைந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

3. நன்மையில் இனி நிலை பெறும் என் சொல்லும் செயல்களுமே
நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலை வருமே - 2
மிஞ்சிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே
இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே
362. இயேசுவே உயிர் ஆற்றலே புவியை இயக்கும் புனிதன் நீ
இயேசுவே உயிர் ஆற்றலே புவியை இயக்கும் புனிதன் நீ - 2
நேசமே நிறை பாசமே என்னை நடத்தும் துணைவன் நீ
பெருமை விரட்டி தொடரும்போதும் நிறைவு அமைதி அருள்பவன் நீ

1. இருளில் விழுந்து மடியும்பொழுது அறிவொளி தரும் தந்தை நீ
துயரின் பிடியில் துவளும் நொடியில் ஆறுதல் தரும் தாயும் நீ - 2
தனிமை போக்கும் உறவும் நீ இனிமையாக்கும் இறையும் நீ - 2
மனத்தில் ஒலிக்கும் கவலைக் கடலை அகற்றும் அருளும் நீ

2. வாழ்வை மறுக்கும் தீமையை விரைந்து ஒழிக்கும் வீரம் நீ
எளியோர் வாழ்வு புவியில் புலர உழைத்து மகிழும் தியாகம் நீ - 2
நீதி கேட்கும் வன்மை நீ நன்மை நாடும் தூய்மை நீ - 2
உண்மை எங்கும் மலர உதவும் மக்கள் சக்தியும் நீ
363. இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல்
இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல் - 2
இயேசுவே என் வாழ்க்கை காணும் தேறுதல் -2
பாசமே உன் நாமம் வாழ்வின் ஆனந்தம் - 2
நேசமே உன் பார்வை நாளும் பேரின்பம் - 2
ஆசையாய் நான் பாடுவேன் புது கீர்த்தனம் - 2
துதிகளின் தேவனின் திருப்பெயர் பாடிப் புகழ்வோம் மானிடரே
நல்லவர் தேவனின் வல்லமை பாடிப் புகழ்வோம் மானிடரே
ஆறுதல் தேறுதல் இயேசுவே உன் வார்த்தை

1. வாய்மையும் நேர்மையும் எனக்கரணாகும் என்னோடு நீயிருக்க -2
வாழ்விலும் தாழ்விலும் நம்பிக்கையாலும்
உன்னோடு நான் நடக்க - 2
ஆழ்கடல் கடந்தேன் பாழ்வெளி நடந்தேன்
தோள்களில் சுமந்துசென்றீர் - 2
பேரிடர் நேரம் பெருமழைக்காலம்
உயிரினைக் காத்து நின்றீர் -2 ஓ
ஆண்டவரே என் ஒளியாகும் அவரே எனது மீட்பாகும் - 2
உயிருக்கு அடைக்கலம் அவரிருக்க
யாருக்கு அஞ்சி நான் நடுங்க வேணும் - 2

2. தீயோர் வளமுடன் வாழ்வதைக் கண்டு
தினம் மனம் வெதும்பமாட்டேன் - 2
காலடிச் சுவடுகள் கவனித்துக் கொள்வார்
கலக்கங்கள் கொள்ள மாட்டேன் - 2
நன்மைகள் நிறைத்து தீமைகள் தகர்த்து
புகலிடம் அடித்திடுவார் - 2
வாழ்வோரின் ஒளியில் கடவுளின் திருமுன்
நாள்தோறும் நடந்திடுவார் - 2 ஆண்டவரே என்
364. இயேசுவே என்னுடன் நீ பேசு
இயேசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழிநடத்து

1. உன்திருப்பெயர் நான் பாடிடும் கீதம்
உன் திரு இதயம் பேரானந்தம் - 2
உன் திருவாழ்வெமக்கருளும் இறைவா இறைவா
உன் திருவாழ்வெமக்கருளும்
உன் திருநிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பாய்

2. இயேசுவின் பெயருக்கு மூவுலகென்றும்
இணையடி பணிந்து தலைவணங்கிடுமே - 2
இயேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
இயேசுவே உம் புகழ் வாழ்க
இயேசுவே நீர் என் இதயத்தின் வேந்தன் என்னைத் தள்ளிவிடாதே.
365. இறையவனே உன்னை நான் காண வந்தேனே
இறையவனே உன்னை நான் காண வந்தேனே
என்னவனே என்னை நான் உன்னிடம் தந்தேன்
நீயே எனக்கு எல்லாம் நீயே எனக்கு எல்லாம் - 2

1. தனிமைக் குளிரும் நிலவாகும் நீ என்னோடு இருப்பதால்
தடுக்கும் கல்லும் தடமாகும் நீ எனக்காய் நடப்பதால் - 2
காரிருள் ஒளிரும் சுடராகும் நீ என் முகம் பார்ப்பதால்
கசக்கும் உறவும் கரும்பாகும் நீ என் கரம் பிடிப்பதால்

2. வீசும் புயலும் பூவாகும் நீ என் மனம் நிறைவதால்
சுமையும் இனிய சுகமாகும் நீ எனக்காய்ச் சுமப்பதால் - 2
பாவ வாழ்வும் பனியாகும் நீ என் கறை துடைப்பதால்
எல்லாம் இன்றே இனிதாகும் நீயும் நானும் இணைவதால்
366. இறையவனே என் வழித்துணை நீயே
இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க - 3

1. திசை தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண - 2
கலங்கரை தீபம் எனக்கு நீ ஆவாய்
நலம் தரும் வானக உணவென வாராய்

2. இகவழியாக அகவொளியாவாய்
பகைமையை நீக்கிப் புது உறவாவாய் - 2
தகுதியில்லாத எளியேனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்
367. இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்
இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்
தாவி மேவி வருகின்றேன் என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா என்னை நோக்கி ஓடி வந்து
என்னைக் காப்பாயோ - 2

1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா - 2
ஒரு குறையும் இன்றிக் காத்தாய் நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே வாழ்ந்த நானும் - இனி
என்ன கைம்மாறு செய்வேன் - 2

2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவர் நீதானையா
மனத்தில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானையா - 2
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒரு நாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும் - இனி
அப்பா தந்தாய் என்று அழைப்பேன் - 2
368. இறைவா எனக்கொரு ஆசை - 2
இறைவா எனக்கொரு ஆசை - 2
உனை முகமுகமாய் நான் தரிசிக்கணும்
உன் திருப்பதமே நிதம் அமர்ந்திடணும்

1. அதிகாலைத்துயில்எழும்போது உன் முகம் தெரிந்திட வேண்டும்
எழுந்து நான் நடந்திடும்போது உன் கரம் பிடித்திட வேண்டும்
வீதியில் வலம்வரும்போது
உன் துணை உணர்ந்திட வேண்டும் - 2
தனிமையில் நான் வாடும்போது நண்பனாய் அருகில் வேண்டும்
என் ஆசை ஆசை ஆசை நீயே இறைவா
என் ஆசை ஆசை ஆசை உன் இல்லம் தலைவா - 2

2. கேள்விகள் எனில் எழும்போது பதில்களை நீ தர வேண்டும்
தவறுகள் செய்திடும்போது மன்னிப்பு வழங்கிட வேண்டும்
நம்பிக்கை தளர்கின்ற போது நெஞ்சுரம் நீ தர வேண்டும் - 2
வாழ்க்கையின் அசைவினில் எல்லாம்
உன் அருள் பொழிந்திட வேண்டும் - என் ஆசை
369. இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன்
இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன்
என் சிறகுகளின் நிழலின் கீழ் உன்னைக் காத்திடுவேன்
உன்னை விட்டு விலகிடாமல் உன்னோடு என்றும் இருப்பேன்
உன்னைக் கைவிடாமல் உனக்குத் துணையிருப்பேன்

1. நான் உனது அடைக்கலமும் ஆற்றலுமாய் இருந்திடுவேன்
உனக்கு முன்னே நான் சென்று தடைகளெல்லாம் தகர்த்திடுவேன்
பாவங்களைப் போக்கிடுவேன் நோய்களைக் குணமாக்குவேன்
உனது துக்கங்களை சந்தோசமாய் மாற்றுவேன்
பழையவை மறைந்திடும் புதுவாழ்வு உன்னைச் சேரும்
என் அன்பினால் உனைக் காப்பேன் கலங்காதே திகையாதே

2. போகும்போதும் வரும்போதும் உன்னை நான் காத்திடுவேன்
நீடிய ஆயுளை உனக்குத் தந்து நலன்களினால் நிறைவளிப்பேன்
உனக்காக அனைத்தையுமே செய்து நான் முடித்திடுவேன்
கண்ணின் கருவிழிபோல் கருத்தாய் உனைக் காப்பேன்
கண்ணோடு அரவணைத்து ஆறுதல் நான் தருவேன்
காலமெல்லாம் என் கருணை உனைத் தொடரும் என் மகனே/ளே
370. இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இறையாட்சி மலரக் கண்டேன்
எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் - 2

1. இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் - இறை
அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் - 2
பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் - 2
பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன் - எந்தன்
வாழ்வின் பொருள் அறிந்தேன்

2. அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் - அகச்
சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன் - 2
நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் - 2
நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் - அன்பில்
நிறைவை நான் கண்டேன்
371. இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
சத்திய சீவ வழியான தெய்வம்
நடுவராய் பூமியில் பிறந்த அன்பு தெய்வம்
நித்திய வாழ்வு தருகின்ற தெய்வம்
அப்பா பிதாவே தெய்வமே உமது இராச்சியம் வருகவே
உம் திருச் சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேறவே-2

1. செங்கடலில் நீர் அன்று பாதை பிளந்தீர்
பாலையில் மக்களுக்கு மன்னா பொழிந்தீர்
கடும் வெயிலில் மேக நிழலானீர் இருளில் தீப ஒளியானீர்
சீனாய்மாமலைமேலேநீர் நீதிப்பிரமாணங்கள்பகிர்ந்துதந்தீர்- 2 அப்பா

2. மனிதனாய் பூமியில் வந்து பிறந்தீர்
இறுதியில் எமக்காய் உயிரைத் தந்தீர்
திருவுடலை எமக்குத் திருவுணவாய் இவ்வுலகத்தின் சீவனாய்
வழியும் உண்மையும் ஆனவனே உம் திருநாமம் வாழ்கவே-2
372. உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது - 2
பணம் பதவி சாதி மதம் அடிமை ஆண்டான் என்ற பேதம்
உங்களிடையே என்றும் இருக்கக் கூடாது - 2

1. பளுவான சுமையைக் கட்டித் தோளினில் வைப்பார்
தம்மைத் தலைவர்கள் என்பார்
தன் விரலாலும் அசைத்துக்கூடப் பார்த்திட மாட்டார் - 2
பண பலத்தால் பாமரரை அடக்கி ஆளுவார் - 2
தம்மை முதலாளி என்பார் - பணம்
பதவிக்காக மனிதரையே விலை பேசிடுவார் - 2

2. சாதி என்ற கொடுமையினால் மனிதரைப் பிரிப்பார்
தம்மை உயர்ந்தவர் என்பார்
ஏழை மனிதர்களை மிருகமாக நடத்திடச் செய்வார் -2
மதத்திற்காக மனிதனையே சூறையாடுவார் - 2
தம்மைக் கடவுள் என்பார் - கொடும்
மதவெறியால் மனிதனையே ஏமாற்றிடுவார் - 2
373. உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்த்
உந்தன் கைகளில் நான் சின்னப் பிள்ளையாய்த்
தவழ்ந்தாட வேண்டும் செல்ல மலராய்
எந்தன் உயிரே நான் உந்தன் நிழலில்
வளர்ந்தாக வேண்டும் வளர்பிறையாய் - 2

1. பெற்ற தாயின் அன்புக்கு மேலாகவே
வற்றாத அருளைப் பொழிந்தாயே - 2
உந்தன் கரத்தில் என்னைப் பொதித்தாயே
என்னை முழுதும் நீ அறிந்தாயே

2. இருள்நிறை பள்ளத்திலும் வீழ்ந்தாலுமே
அணைத்தென்னைத் தோள்மேல் சுமந்தாயே - 2
கருணையினை கற்றுத் தந்தாயே
உந்தன் வரத்தால் என்னை நிறைத்தாயே
374. உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா
உமதன்புப் படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா
உம் கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா
உம் முகத்தைப் படைப்பினில் காணுகின்றேன் இறைவா
இறைவா இறைவா உயிரான இறைவா உடன் வாழும் இறைவா

1. வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா
கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா
அதிகாலைப் பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா
அழகுமலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா
உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய் - 2
உன் பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்
அழகிய என் உலகை அணைத்துக் காத்திடவே

அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய் - இறைவா

2. கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா
தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா
நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா
வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கிறேன் இறைவா
இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகின்றேன் - 2
இறையுன் படைப்போடு ஒன்றாய்ப் பாடுவேன்
எல்லா உயிர்களுமே என்றும் வாழ்ந்திடணும்
எல்லா மாந்தருமே மகிழ்வைக் கண்டிடணும் - இறைவா
375. உலகொன்று தந்து நலமென்று கண்ட தெய்வம் வாழ்கவே
உலகொன்று தந்து நலமென்று கண்ட தெய்வம் வாழ்கவே
உயிர்மூச்சில் நின்று நடமாடுகின்ற தெய்வம் வாழ்கவே - 2
தெய்வம் வாழ்கவே தெய்வம் வாழ்கவே தெய்வம் வாழ்கவே

1. புவியோடு வானம் மழையாகக் கண்ட பந்தம் வாழ்கவே
அதிகாலை ஒளியில் மலர் காணும் புதிய சொந்தம் வாழ்கவே
நிலமென்னும் அன்னை உயிர்வாழத் தந்த கனிகள் வாழ்கவே
உறவாடி வாழ உயிர்நாடியான வார்த்தை வாழ்கவே
எது இங்கு இல்லை உன்னன்பைச் சொல்ல யாவும் வாழ்கவே-2

2. எது வந்த போதும் எனைத் தாங்கும் அன்புத் தாய்மை வாழ்கவே
தடுமாறும் போதும் தன் பிள்ளை என்ற தந்தை வாழ்கவே
சுமைதாங்கி வாழ்வில் சுவைகூடச் செய்த நண்பர் வாழ்கவே
இதயங்கள் இரண்டு ஒன்றாகிக் கண்ட இன்பம் வாழ்கவே - எது
376. உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சந்தோசம்
உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சந்தோசம்
அதை எண்ணும் போதெல்லாம் ஒரு சங்கீதம்
என் இயேசுவே என் தெய்வமே
உன் வார்த்தையே என் வாழ்வையே உனதாக அழைக்கின்றதே - 2

1. உள்ளக் கதவை திறந்து வைத்து உந்தன் குரலைக் கேட்கின்றேன்
உனதுஇனிய மொழியும் எனிலே நம்பிக்கை தீபங்கள் ஏற்றுதே - 2
உன் வழி தொடரவே தயக்கமோ தடுக்குதே
தயக்கமும் நீங்கினால் தடைகளே இல்லையே
அன்பே இறைவா அருளைப் பொழிவாயே

2. உந்தன் நினைவால் உயிரை வளர்க்க
அன்பால் இதயம் துடிக்கணும்
மனித இதய காயங்கள் மறைய என் வாழ்வே மருந்தாய் மாறணும்
நண்பர்கள் சூழவே என் சுயநலம் மறையணும்
உறவுகள் நிலைக்கவே தியாகத்தில் வளரணும் - அன்பே
377. உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல்
உள்ளத்தின் உள்ளே ஒரு தேடல்
இறைவனுக்கே எந்தன் பாடல் - 2
உருவமில்லாத வலிமை இது வாழ்வினை வெல்லும் இலக்கு இது
உள்ளம் என் உள்ளம் அது இறைவனின் இல்லம்
செல்லும் அது செல்லும் உன் வழிதனில் என்றும்

1. பசியினில் நானும் வாடிடும் பொழுது மன்னா பொழிகின்ற உள்ளம்
தாகத்தினாலே தவித்திடும் பொழுது
பாறையில் நீர்சுரக்கும் உள்ளம் - 2 உள்ளம்

2. பகலினில் நானும் பயணத்தைத் தொடர மேகத்தூணாகும் உள்ளம்
இலக்கினை அடைய இரவிலும்
செல்ல நெருப்புத் தூணாகும் உள்ளம் - 2 உள்ளம்
378. உள்ளம் உருகிப் பாடுவேன் உன்னையே இயேசுவே
உள்ளம் உருகிப் பாடுவேன் உன்னையே இயேசுவே
பிள்ளை போல மழலையில் உன்னிடம் பேசுவேன் - 2
எந்தன் குரலைக் கேட்ட நீ என்னில் வாழுவாய்
கள்ளம் நீக்கி கயமை மாற்றி என்னை ஆளுவாய்

1. உண்மை வாழ்வும் வாழும்போது உலகம் வெறுத்திடும்
உனது நெஞ்சம் ஒன்றினாலும் என்னை ஏற்றிடும் - 2
உன்னை அன்றி வேறு துணை உலகில் எனக்கில்லை
உள்ளத்திலே நீ குடிகொண்டாலே கவலை எனக்கில்லை - 2

2. அன்னை என்று அழைத்தபோது நீயே தோன்றினாய்
அரவணைக்கும் கரங்களிலே என்னை ஏந்தினாய் - 2
இன்னல் என்னை என்ன செய்யும் நீதான் இருக்கையிலே
இன்பம் நாளும் என்னுள் தங்கும் எந்தன் வாழ்வினிலே - 2
379. உறவே மனிதம் உறவே புனிதம்
உறவே மனிதம் உறவே புனிதம்
உறவே உண்மை தெய்வம் - 2
மனங்கள் இணைய மலரும் எங்கும் இறைவன் ஆட்சியே
மண்ணில் நாமெல்லாம் அதற்கு சாட்சியே

1. பிறக்கும் போது உலகில் நாமும் தேடி வந்ததென்ன
அன்புச் செல்வம் அல்லவா
இறக்கும்போது இங்கிருந்து எடுத்துச் செல்வதென்ன
உறவு ஒன்றே அல்லவா - 2
தன்னை வழங்கும் தியாகமாகவே
தெய்வம் கண்களில் தெரியும் நேரிலே
பிறருக்காக ஆற்றும் பணியிலே
பிறப்பின் மேன்மை புரியும் பாரிலே
வாழுவோம் அன்பிலே பண்பிலே
வளருவோம் உறவிலே மனித நிறைவிலே

2. ஏற்றத் தாழ்வு அகற்றி வாழ்ந்தால் மகிழ்வு இல்லையா
எங்கும் வளமை இல்லையா
மக்கள் கைகள் இணைந்தால் ஆற்றல் பிறப்பதில்லையா
மாற்றம் நிகழ்வதில்லையா - 2
அன்பு நீதி நெறியில் நிலைத்தால்
ஆவோம் இன்பக் குடும்பமாகவே
சுவர்கள் வீழ்த்தி பாலம் அமைத்தால்
சுடரும் அமைதி உலகமாகவே
களைவோம் பிரிவையே பிளவையே
காண்போம் உறவையே வாழ்வின் நிறைவையே
380. உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்
உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம் - 2

1. உலகாளும் தேவன் நெறிவாழும் இதயம் தெய்வம் தரிசனம் - 2
மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம் - 2
நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

2. அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம் - 2
மெய்யாகிப் பொய்மைப் பழிநீக்கும் நெறியில்தெய்வம் தரிசனம் - 2
ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில் தெய்வம் தரிசனம் - 2
தணலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

3. மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம் - 2
சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம் - 2
உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்
இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2
381. உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் வேண்டும் வேண்டும்
உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் வேண்டும் வேண்டும்
உன் நிழலில் தானே வாழ்ந்திட வேண்டும் இயேசுவே இயேசுவே
உன் அருள் ஒன்றே எனக்கு வேண்டும் இயேசுவே இயேசுவே
என்னிலை உன்னில் இழந்திட வேண்டும்
புது உருவுன்னில் அடைந்திட வேண்டும் - 2

1. ஆறுகள் கடலில் கலப்பது போல்
மழைத்துளி மண்ணில் சேர்வது போல் - 2
உணவினில் கரைந்திடும் உப்பினைப் போல்
என்னிலை உன்னில் இழந்திட வேண்டும் - 2
கூட்டினை அடைந்திடும் பறவையைப் போல்
மலரினில் தங்கிடும் தேன்துளிபோல் - 2
குழலினில் புகுந்திடும் காற்றினைப்போல்
உனக்குள்ளே நானும் சேர்ந்திட வேண்டும் - 2 - உன் அருள்

2. மழைமேகம் கண்ட உழவனைப்போல்
தாலாட்டை ரசிக்கும் குழந்தையைப்போல் - 2
செல்வத்தைப் பெற்றிடும் வறியவர்போல்
உனைக் கண்டு நான்தினம் மகிழ்ந்திட வேண்டும் - 2
மலரினைச் சுற்றிடும் வண்டினைப்போல்
தொடர்ந்திடும் கடலின் அலையினைப்போல் - 2
நீரைத் தேடிச் செல்லும் வேரினைப் போல்
ஓயாது நான் உனைத் தொடர்ந்திட வேண்டும் - 2 - உன் அருள்
382. உன் கண்ணுக்குள்ளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கண்ணுக்குள்ளே கண்மணியாய் இருக்கின்றேன்
உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் - 2
காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே
இனிய இயேசுவை நான் காண்கின்றேன் - இனி
உனதன்பை என்றும் நான் பாடுவேன்

1. உலகில் என்னைத் தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவா
உயிரைத் தந்து காக்கும் தெய்வம் என்றும் நீயல்லவா - 2
உன்பாதம்அமர்ந்துவாழ்வதுஒன்றேஉன்னைநான்கேட்கிறேன்-2
உன் முகம் பார்த்து என்னையே
நானே மறக்கின்றேன் தெய்வமே

2. உனது திருக்கரம் என்னை நடத்த எனக்குக் கவலையில்லை
நல்ல மேய்ப்பன் உந்தன் வழியில் எந்தக் குறைவுமில்லை - 2
உன் மந்தை சேர்ந்த ஆட்டைப் போல என்றும் நான் வாழுவேன் - 2
எந்தத் தீங்கும் எனைத் தொடாமல் என்னைக் காத்திடுமே
383. உன் கரம் பற்றி வழி நடப்பேன் நீ காட்டும் பாதையிலே
உன் கரம் பற்றி வழி நடப்பேன் நீ காட்டும் பாதையிலே
தெரியாத பாதை முடியாத போதும் பலம் தரும் உன் துணையே

1. நிலையான வாழ்வு நிறைவான மகிழ்வு
தொலைதூர வழி தாண்டியே
பல காலமாகும் தலைவா உன் பாதம் மகிழ்வோடு சரணாகவே - 2
தொலை தூரக் கனவில் மனம் தேற்றும் நிறைவு
ஒரு போதும் நான் வேண்டிலேன்
அடியடியாய்ப் படிப்படியாய்த் தொடர்ந்தாலே பேரின்பமே - 2

2. இருள் சூழ்ந்த போதும் இடர் வந்த போதும்
சிறிதேனும் பயமில்லையே
தடுமாறினாலும் தடம் மாறினாலும் பலவீனம் எனக்கில்லையே - 2
என் காதில் கேட்கும் உன் பாத ஓசை என்னோடு நடமாடுமே
களைப்பினிலும் சலிப்பினிலும் கலங்காது முன்னேறுவேன் - 2
384. உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு
உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே

1. யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் களையும் - 2
யாழிசை கேட்டுத் தனை மறந்து - 2 உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே இணைந்திடுமே

2. விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணிலாத் தாரகை உனக்குண்டு - 2
உன்னருட் பேரொளி நடுவினிலே - 2 நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
385. உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென
உன் திரு வீணையில் என்னை ஒரு நரம்பென
இறைவா ஏற்றிடுவீர் சுகராகம் மீட்டிடுவீர் - 2

1. தூசு படிந்த நரம்பு என்று என்னை வெறுத்து விடாதீர்
மாசு நிறைந்த மனிதன் என்று உம் உறவை நிறுத்தி விடாதீர் - 2
என் இயேசுவே என் தெய்வமே என்னோடு நீர் பேச வேண்டும்
உம் வார்த்தையில் தினம் நானும் உயிர் வாழ வேண்டும்
இறைவா இறைவா இறைவா இறைவா - 2

2. தீராத சோகத்தில் நான் மூழ்கும்போது சுமைதாங்கி நீதானையா
ஆறாத சொல்லால் அடிவாங்கும் போது இடிதாங்கி நீதானையா- 2
என் தலைவா என் துணை வா என் தனிமை நீர் நீக்க வேண்டும்
உம் பார்வையால் என் விழி ஒளி பெற வேண்டும் - இறைவா
386. உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுமையா
உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுமையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுமையா - 2

1. மாணிக்கத்தேரோடு காணிக்கை வந்தாலும்
உனக்கது ஈடாகுமா - 2
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமோ

2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன்நாமம் என்னென்பேன்
நிறையென்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உன் நாமம் என்னென்பேன் - 2
387. உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன்
உன் நினைவில் உன் திருமுன் சங்கமிப்பேன்
உன் துணையோடு நாள் எல்லாம் பண்ணிசைப்பேன்
என் இயேசுவே என் சீவனே
துணையாகி எனை ஆளும் தேவ தேவனே
சரிகமப கமபதப பதப பதப பதனிச சரிச சரிச சரிகரிச

1. அலைபோல சோகங்கள் தினந்தோறும் வந்தாலும்
அரண்போல எனைக் காக்கும் என் தெய்வமே ஆ - 2
மலைபோல பாவங்கள் மனத்துக்குள் இருந்தாலும்
மறவாமல் மன்னிக்கும் மாமன்னன் நீ
எந்நாளுமே என் இயேசுவே
என் வாழ்வெல்லாம் உன் தாய் அன்பிலே

2. செல்கின்ற இடமெல்லாம் சொல்கின்ற மொழிகேட்டு
நல் வாழ்வில் உனைக் காணும் வரம் ஒன்று தா ஆ - 2
தாழ்ந்தோர்க்கும் வீழ்ந்தோர்க்கும் நற்செய்தி நானாகி
நல்லோராய் மாற்றுகின்ற வாழ்வொன்று தா
உன் வார்த்தையால் உளம் மாற்ற வா
உன் பார்வையால் என்னைக் குணமாக்க வா
388. உன் நினைவில் சங்கமிக்கும் என் இதயம்
உன் நினைவில் சங்கமிக்கும் என் இதயம் - அது
உன் வழியைப் பின்தொடரும் வாழ்வில் நிதம் - 2

1. உன் உறவினில் விழி திறந்தது
தன்னலத்தின் தளை அறுந்தது எந்தன் இயேசுவே
உன் வழியினில் நான் நடந்திட
உன் பணியினை நான் தொடர்ந்திட
உன் உடலும் குருதியுமே உறுதி தந்தது ஆ
உந்தன் அன்புக்கெல்லை இல்லையே
உன் நினைவில் துன்பம் இல்லையே

2. வழி தவறிய ஆடென உனதருள் வழியினை நான் மறந்திட
என்னைக் காணக் கல்லும் முள்ளும் அலைந்து தேடினாய்
ஒரு கிளையென நீ இருந்திட அதில் கொடியென நான் படர்ந்திட
உந்தன் அன்பு நெஞ்சினிலே என்னை மூடினாய் ஆ - உந்தன்
389. உன் பாதம் சரணாகின்றேன் - 2
உன் பாதம் சரணாகின்றேன் - 2
உனில் வாழும் நினைவாகின்றேன்
உனைப் பிரியா உறவாகின்றேன் உனைச் சேரும் உயிராகின்றேன்

1. இமையாக எனை நீ காத்தாய்இருள் போகும்வாழ்வு மகிழ்வாகும் - 2
இறவாதது உன் இரக்கந்தான்
நிஜமானது உன் பேரன்புதான் இயேசையா இயேசையா
கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு
களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம்

2. கடல் தேடும் நதி நானாக நிலம் தேடும் மழை நீயாக - 2
உடன் வாழ்வது உன் அன்புதான்
உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசையா இயேசையா
கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில்
தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட
390. உன்னருகில் நான் இருக்கும் ஒரு நொடிப் பொழுதும்
உன்னருகில் நான் இருக்கும் ஒரு நொடிப் பொழுதும்
ஒரு கோடி இன்பங்கள் என் இதயம் பாயும் - 2
ஒளிக்கீற்றாய் உன் பார்வை எனைத் தொடும் நேரம்
அனல்காற்றாய் உன் அன்பு எனைச் சூழ்ந்து கொள்ளும்
இதயமே பேசு ஆதாரம் இயேசு - 2

1. கண்ணுக்குள் கருவிழியாய்ப் பார்க்கும் உன் பாசம்
மண்ணுக்குள் சிறுவிதையாய் எனை மாறச் செய்யும் - 2
எனக்குள்ளே மறைந்திருக்கும் உன் இதய பந்தம்
உன்னோடு நான் கொள்ளும் மாறாத சொந்தம் - இதயமே

2. எனை விட்டு விலகாத உன்னன்புத் தேடல்
உன் அன்பின் சாட்சியாக மாறிடவே தூண்டும் - 2
என் பாதைப் பயணத்தில் சோர்கின்ற நேரம்
அணைக்கின்ற தாயாக எனை என்றும் தேற்றும் - இதயமே
391. உன்னருகில் நானிருந்தால் துன்பமெல்லாம்
உன்னருகில் நானிருந்தால் துன்பமெல்லாம்
இன்பமாகும் இயேசுவே
உன் நினைவில் நான் வாழ்ந்தால்
என் வாழ்வு ஒளியாகும் இயேசுவே - 2
இயேசுவே இயேசுவே - 2

1. உன் விழியே என் விழியானால்
இரவெல்லாம் பகலாகும் இருளெல்லாம் ஒளியாகும்
உன் அன்பில் நான் வாழ்ந்தால்
உறவெல்லாம் உயிராகும் உணர்வெல்லாம் அருளாகும்
உன் விழியின் பார்வையிலே உன் அன்பின் மகிழ்வினிலே - 2
கரம் பிடித்து வழிநடத்தும் இயேசுவே - 2 இயேசுவே - 4

2. உன் வார்த்தை எனதாகினால்
நற்செய்தி அறிவாகும் விடுதலையே வழியாகும்
உன் மகிழ்வில் நான் வாழ்ந்தால்
நம்பிக்கை நனவாகும் என் வாழ்வு பகிர்வாகும்
உன் வார்த்தை ஒளியினிலே உன் மகிழ்வின் அருளினிலே - 2
காலமெல்லாம் வழிநடத்தும் இயேசுவே - 2 இயேசுவே - 4
392. உன்னாலே நான் உயிர் வாழ்வேன் - உன்
உன்னாலே நான் உயிர் வாழ்வேன் - உன்
துணையில் நான் வாழ்ந்திருப்பேன்
நான் இருப்பது நடப்பது எல்லாமே
உன்னாலே தான் இறைவா - 2

1. வாழும் காலமெல்லாம் உன் நினைவில் வாழ்ந்திடுவேன்
பேசும் மொழியில் எல்லாம் உன் நாமத்தை முழங்கிடுவேன் - 2
நீயில்லா வாழ்வில் நிம்மதியும் நிலையாய் இருந்திடுமோ
உன் அருள் கொடையும் இல்லாமல் வாழ்வும் மலர்ந்திடுமோ
நிறைவான அமைதி பெறுவதெல்லாம் உன்னிடம் தானன்றோ

2. துன்பங்கள் சூழ்ந்தாலும் உன் துணையை நம்பிடுவேன்
சொந்தங்கள் வெறுத்தாலும் உன் அணைப்பில்மகிழ்ந்திடுவேன் - 2
நீ என்றும் என்னுடன் இருப்பதனால் கலக்கம் எனக்கு இல்லை
கோட்டையும் அரணுமாய்க் காப்பதனால்
எதற்கும் பயமுமில்லை
கண்மணி போல எனைக் காக்கும் தெய்வம் நீயன்றோ
393. உன்னை எண்ணி இறைவா உள்ளம் நிறைந்தேன் - இந்த
உன்னை எண்ணி இறைவா உள்ளம் நிறைந்தேன் - இந்த
உலகையே ஆளும் உந்தன் அன்பில் நனைந்தேன்
கண்ணின் மணியெனவே என்னைக் காத்து வந்தாய்
சின்ன வழியினிலே என்னை அழைத்து வந்தாய்
நாள்தோறும் நூறாகப் பலன்தருவேன் - என் இறைவா
வேராக நீ என்னில் இணைந்திருந்தால்

1. நீலவானம் பனிசிந்தும் மேகம்
நிதம்வந்து கரைதேடும் அலைகளும்
வீசும் தென்றல் வாச மலர்கள் பேசாமல் உன்புகழ் பேசுதே
படைப்பின் சிகரம் நானே உந்தன் பாதம் அமர்ந்திடுவேனே
மகிழ்வேன் புகழ்வேன் நினைத்துன்னைப் பாடுவேன்

2. தேனினும் இனிமை தெய்வீக மகிமை
தேவனே உன்திரு வார்த்தையே
அறியாத பிள்ளை ஆட்கொண்டு என்னை
அகலாய் மலைமேல் உயர்த்தினாய்
உன் சாயல் நானே அன்றோ உருமாற்றியது நீ அன்றோ
மலர்வேன் வளர்வேன் நன்றியைப் பாடுவேன்
394. உன்னை நம்பி வாழும்போது உறுதி பெறுகிறேன்
உன்னை நம்பி வாழும்போது உறுதி பெறுகிறேன்
உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்
உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்
இறைவா இறைவா அமைதி காண்கிறேன்
நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

1. என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் - 2
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைப்பேன் - 2
இனி இமயமென தடைவரினும் எளிதாய்க் கடப்பேன்
எளிதாய்க் கடப்பேன் - நான் எளிதாய்க் கடப்பேன்

2. இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே
இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே - 2
உன் சொல்லின் உறுதியில் நான் பயணம் செல்லுவேன் - 2
உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்
என்றும் வாழுவேன் - நான் என்றும் வாழுவேன்
395. உன்னை நான் ஒருபோதும் மறப்பதே இல்லை
உன்னை நான் ஒருபோதும் மறப்பதே இல்லை
உனக்காக உன்னில் இருக்கின்றேன் - 2
உன் அன்பன் இயேசுவே நான் இருக்கின்றேன் - 2
உன் நண்பன் இயேசுவே அருகில் இருக்கின்றேன் - 2

1. பாவியாய் எனதன்பை மறந்து நீ சென்றாலும் - 2
பரிவுடனே தேடி நான் அணைத்துக் கொள்வேன்- உன்னை
பரிவுடனே தேடி நான் அணைத்துக் கொள்வேன்

2. சோதனையாய் வேதனையில் சோர்ந்து நீ துவண்டாலும் - 2
அன்னையாய் அரவணைத்தே காத்திடுவேன் - உன்னை
அன்னையாய் அரவணைத்தே காத்திடுவேன்
396. உன்னை நான் புகழ்ந்திட ஒரு வரம் வேண்டினேன்
உன்னை நான் புகழ்ந்திட ஒரு வரம் வேண்டினேன்
உன்னை அன்பு செய்திட உன்னருள் தேடினேன் - 2
உன் நாமம் பாடிடவும் உனக்காக வாழ்ந்திடவும்
உன் அன்புத் துணையினை நான் தினமும் நாடினேன் - 2

1. உனையன்றி எனக்கென்று வேறொரு தலைவனுண்டோ
நீயின்றி என் இதயம் நிறைவினை அடைவதுண்டோ - 2
கார்முகிலாய் என் வாழ்வில் கருணைமழை பொழிபவனே
கனவிலும் நான் உனைப்பிரியா வரமொன்று தாருமையா

2. பாசத்தின் கண்கொண்டு பாவியைப் பார்க்கையிலே
பாவச்சுமை உன் கண்களுக்குப் பாரமாய்த் தெரிவதில்லை - 2
உன் கையில் எனைப் பொறித்தாய்
உன் தோளில் எனைச் சுமந்தாய்
உன் அருளின்றிப் பதிலன்பு செய்ய எனக்கேது திறனையா
397. உனை நாடி நாடி வரும் நேரம் உயிர் நாடி உருகிப் பாடும்
உனை நாடி நாடி வரும் நேரம் உயிர் நாடி உருகிப் பாடும்
சொந்தம் தேடி தேடி வரும் வேளை சொல்லாமல் சோகம் போகும்
உன்னில் என்னை என்னில் உன்னை - 2
என்றும் அன்பில் ஒன்றி வாழ வாழ்த்தும் உந்தன் வார்த்தை

1. வாழ்வின் ஒளி உன் வார்த்தை வழியை விலக விழுந்தேன்
வாழ்வே உன்னில் சரணாக வரங்கள் கரந்தாய் மழையாக - 2
வானம் போன்ற உந்தன் அன்பில் வாழும் சீவன் நான்
உன் வள்ளல் உள்ளம் சொல்லும் வார்த்தை வளமை தந்ததே
ஆகாகா ஓகோகோ ஆகாகா

2. தனிமை இருளின் சிறையில் தவித்து என்னை இழந்தேன்
இறையே உன்னை உயிராக இதயம் தந்தாய் உணர்வாக - 2
எந்தன் வாழ்வு உந்தன் உறவில் சொந்தம் காண்கிறதே
என் நெஞ்சில் என்றும் சந்தோசம்தான் சந்தோசம்தானே - ஆகாகா
398. எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா
எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா
என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைத்தேன்
இறைவா - 6
தாய் மடி சேரும் சேய் போல ஓடி வருவேன்
எனை அன்பு செய்யும் நல்ல தெய்வம் நீ தான்
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீ தான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் - எங்கெங்கோ

2. உன்நிலைபாதை மாறும் வேளை வாசல் தேடி வருவேன்
இறைவா - 6
தாகம் கொண்ட மான்போல ஓடி வருவேன்
என் வழி துணையாய் ஆன தெய்வம் நீ தான்
எனை என்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீ தான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
நான் பேசும் மொழியில் அகரனகரம் நீ தான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான் - எங்கெங்கோ
399. எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்
எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்
இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும் - 2

1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்
சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்
மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே

2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்
கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
எல்லாம் உன் புகழ்ப் பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே
400. எந்தன் செபவேளை உமைத் தேடி வந்தேன்
எந்தன் செபவேளை உமைத் தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடிவந்தேன் - 2

1. சோராது செபித்திட செப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம் பாதம் வந்தேன் - 2

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிடக் காத்திருப்பேனே - 2
401. எந்தன் நெஞ்சம் சிந்து பாடும்
எந்தன் நெஞ்சம் சிந்து பாடும்
நீரே தஞ்சம் என்று உம்மைத் தேடும் - 2
அரணும் நீரே கோட்டையும் நீரே
சரணடைந்தேனே ஆண்டவர் நீரே
என் வாழ்வின் நம்பிக்கை நீரே

1. காரிருளில் ஒளி தந்தவரே உம்மைக்
காலமெல்லாம் இனி நான் மறவேன்
கண்மணிபோல் என்னைக் காப்பவரே உம்
காலடியை இனி நான் தொடர்வேன்
கனிவாய் என்னில் உறைபவரே உன்
கடைக்கண் பார்வையால் தாங்குமையா
கடைசிவரை என்னைக் காப்பவரே - உன்
கருணையின் நிழலில் தேற்றுமையா
கரம்பிடித்துவழி நடத்துமையா

2. ஆண்டவரே உன் இல்லத்திலே நான்
ஆயுள் முழுவதும் குடியிருப்பேன்
ஆண்டவரே உன் பாதத்திலே தினம்
அமர்ந்து உம் மொழி கேட்டிடுவேன்
என் வார்த்தைகளெல்லாம் இனிதாகும்
என் எண்ணங்களெல்லாம் நிறைவேறும்
கனவுகளெல்லாம் நனவாகும்
மனக் காயங்களெல்லாம் குணமாகும் - உம்
சிறகினில் என்னைச் சுமந்திடுவாய்
402. எந்தன் மனத்தில் இன்றும் என்றும்
எந்தன் மனத்தில் இன்றும் என்றும்
உந்தன் நினைவுகள் வேண்டும்
எந்தன் வாழ்வின் செயல்களில் எல்லாம்
உந்தன் வழித்துணை வேண்டும்
தேடுகிறேன் தெய்வமே பாடுகிறேன் பரம்பொருளே
வாழத்தான் கேட்கிறேன் வேறு யாரைக் கேட்பது
உன்னைத் தானே கேட்கிறேன்

1. ஏன் பிறந்தேன் என நான் அழும் போது
தாங்கிடும் தாய்மடி வேண்டும்
வான்மழை வரம் தரத் துளிர்த்திடும் வசந்தம்
போல் ஒரு இதம் தர வேண்டும்
இமைப் பொழுதும் நீங்காமல் உனை நான் நினைத்திட வேண்டும்
இம்மையிலும் மறுமையிலும் அதுவே தொடர்ந்திட வேண்டும்
- வாழத்தான் கேட்கிறேன் வேறு

2. தொழுதிடும் காலை இளங்கதிர் போல
என் மனம் நிறைந்திட வேண்டும்
விழுந்திடும் போதும் தளர்ந்திடும் போதும்
எழுந்திடும் வல்லமை வேண்டும்
என்னுடனே நீ இருக்க யாருக்கு நான் அஞ்ச வேண்டும்
மண்ணுயிரைக் காப்பவனே மனத்தினில் நேசம் வேண்டும்
- வாழத்தான் கேட்கிறேன் வேறு
403.என் அன்புத் தாயாக எனைக் காக்கும் இறைவா
என் அன்புத் தாயாக எனைக் காக்கும் இறைவா
உனையன்றி சொந்தங்கள் வேறில்லையே - 2
என் உறவானவா என் உயிரானவா - என்
வாழ்வெல்லாம் நீயே துணையாக வா - 2

1. கரங்களில் என்னைப் பொறித்தவரே
உன் தோளினில் என்னைச் சுமந்தவரே - 2
கருணையின் மழையேதெய்வமேகாலங்கள்கடந்த பரம்பொருளே
கண்ணின் மணியாய் காப்பவரே தாய்மையின் உருவம்ஆனவரே
ஏழிசை மீட்டியே இறையுன்னைப் புகழ்வேன்
உன் பதம் பணிவேன் மாபரனே
பொன் மனம் படைத்தவன் புகழினைப் பாடுவேன்
கருமுதல் காக்கும் தாயவனே - 2
கருமுதல் காக்கும் தாயவனே

2. வியத்தகு இறைவனின் படைப்புகளெல்லாம்
உயிரே உந்தன் அருட்கொடையே - 2
துணையாய்இருப்பதுநீயென்றால்தோல்வியைக் கண்டு பயமேது
வறியவர் வாழ்வில் வளம் சேர்க்க
வாழ்வை முழுவதும் உமக்களிப்பேன் - ஏழிசை
404. என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
எந்நாளும் உன்னருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன் - 2

1. உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கிறது - 2 உன்
அன்பை நானும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது

2. உன் வாயில் சொல்லமுதாய் எந்நாளும் வாழ்ந்திடுவேன் - 2 நல்
வாழ்வு நல்கும் வார்த்தையெல்லாம் நானிலம் முழங்கிடுவேன்

3. உன் மேனி பாய்ந்து வரும் செந்நீராய் நானிருப்பேன் - 2 பிறர்
வாழ்வு காண நானும் ஒருநாள் ஆறாய்ப் பாய்ந்திடுவேன்
405. என் உயிரே என் இயேசுவே உம்மைப் புகழ்கின்றேன்
என் உயிரே என் இயேசுவே உம்மைப் புகழ்கின்றேன்
என் வாழ்வு மலர சமூகம் மாற என்னை அர்ப்பணித்தேன் - 2

1. ஊர்கள் தோறும் உனக்காய்ச் செல்லுவேன்
வேர்கள் உம் சொல் என்று சொல்லுவேன் - 2
கார்மேகம் போன்ற நல்லன்பைப் பொழிந்து
பிறரை உயர்த்துவேன் - 2
வாழ்வு கொடுத்த இறையே போற்றி என்னை நீ நடத்திடு
அன்பே எந்தன் வேதம் வந்தேன் உந்தன் பாதம் - 2

2. அருளால் என்னை உலகில் படைத்திட்டாய்
இருளில் ஒளியை ஏற்ற அழைத்திட்டாய் - 2
நீதியும் அன்பும் இல்லா இவ்வுலகில் ஒளியை ஏற்றுவேன் - 2
வார்த்தை அளித்த இறையே போற்றி என்னால் நீ மகிழ்ந்திடு
அன்பே எந்தன் தந்தை நீரே வாழ்வின் எல்லை - 2
406. என் உள்ளம் கவிØயான்று பாடும்
என் உள்ளம் கவியொன்று பாடும்
அது என் தேவன் உன்னைத் தேடும் -2
தேனும் சுவையும் போல தேடிய இன்பம் சேர
என் தேவன் உன்னில் வாழும்

1. மாநிலத்தின் படைப்பினிலே உன்னை நானறிந்தேன்
மலர்களின் புன்னகையில் உன் எழில் நானுணர்ந்தேன் - 2
மழலைக்குழந்தை அழகினிலேமாந்தர் மனத்தின் அன்பினிலே- 2
மன்னவா உனைக் கண்டேன் மாபெரும் மகிழ்வடைந்தேன்

2. நண்பர்களின் பண்பினிலே உன் நயம் நானுணர்ந்தேன்
பண்களின் இசையினிலே உன் சுவை நானறிந்தேன் - 2
பணிகள் ஆற்றும் கரங்களிலே
பகிர்ந்திடும் அன்பர் குணங்களிலே - 2
பரமனே உனைக் கண்டேன் பக்தனாய் மாறிவிட்டேன்
407.என் சொந்தமான இயேசுவே என்னில் வந்த நாதனே
என் சொந்தமான இயேசுவே என்னில் வந்த நாதனே
உன்னைக் கண்டு உறவாட உன்னில் என்றும் நான் வாழ
எந்தன் இதயம் ஏங்குதே - 2

1. சுமைகளோடு நான் இருந்தேன் சுகமாய் என்னில் நீ இணைந்தாய்
வலிமையின்றி நான் தவித்தேன் பலமாய் என்னில் நீ நிறைந்தாய்
ஏழ்மையோடு நான் பிறந்தேன் வளமையோடு எனை வளர்த்தாய்
வறுமையோடு நான் தளர்ந்தேன் வளர்ச்சியோடு எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே ஆ

2. பார்வையிழந்துநான் இருந்தேன் என்னில்ஒளியாக நீஇணைந்தாய்
கேட்க முடியாமல்நான் தவித்தேன் அருள்மொழியாக நீ நிறைந்தாய்
பாதை தெரியாமல் நான் நடந்தேன் கரங்கள் பிடித்து நீ நடந்தாய்
நண்பனின்றிநான் தளர்ந்தேன் நட்பின் சான்றாக எனைத் தேர்ந்தாய்
எம்மில் வாழும் இயேசுவே உம்மில் என்றும் ஒன்றாகவே ஆ
408. என் தெய்வம் என் சொந்தம்
என் தெய்வம் என் சொந்தம்
என்னோடு வாழும் என் சீவ சங்கீதமே
எனக்காக எல்லாமும் எனதாக்க சீவன்
எந்நாளும் உமைப் பாடுதே - 2

1. நான் வாழும் வாழ்வெல்லாம் நானல்ல நாதா
நீயின்றி வாழ்வேதய்யா
காண்கின்ற யாவும் என் கர்த்தாவே தேவா
கவிபாடும் கலைக்கூடமே
என்பாடல் உன்னோடு எந்நாளும் வாழும்
என் இதயம் நீர் மீட்டவே
பாடும் சங்கீதம் பரமன் உன் கீதம்
பார் போற்றும் தேவா நீர் வந்தாள வேண்டும்

2. நதிபாடும் கடல்பாடும் நிலமெல்லாம் பாடும்
நின் அன்பின் நிறைவாகவே
நிழல் தேடும் நெஞ்சங்கள் நின் அன்பில் வாழும்
நிறைவோடு நிறைவாகவே
வசந்தங்கள் என் வாழ்வில் வருமின்ப வேளை
வான் நோக்கும் என் கண்களே
வரம் வேண்டி நாளும் வாழ்கின்ற சீவன்
வளம் ஈந்து என்னில் தினம் வாழ்கின்ற தேவன்
409.என் தெய்வம் வாழும் பூமியிது எத்துணை அழகு இது
என் தெய்வம் வாழும் பூமியிது எத்துணை அழகு இது
உலகே கண்கள் திறவாயோ உவகை இன்று காணாயோ

1. பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர் மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தண்ணொளி நிலவும்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு - 2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப் பருகு

2. நிறைந்த அன்புடை நெஞ்சும் நிலவென ஒளிதரும் அறிவும்
மலர்ந்த முகந்தனின் அழகும் மங்காக் கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குரல்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு - 2
எழில் கண்டு வணங்கு இன்பம் அள்ளிப் பருகு
410. என் தெய்வமே எனை மீட்க வாருமே
என் தெய்வமே எனை மீட்க வாருமே
உன் திருப்பாதையில் நான் செல்லும் நேரமே
அன்பின் பூக்களே எந்தன் வாழ்வினில் மலர்ந்திடச் செய்யுமே

1. கவலையினால் வரும் சோகம் உன் பார்வையில் மகிழ்வாய் மாறும்
அலை அலையாய் வரும் ஏக்கம்
உன் நினைவால் பனியாய் உருகும்
தேவனே உன் வார்த்தையில் நிலைத்திட வரம் தருவாய்
கானமே என் சீவனில் கலந்து உன் புகழ்பாடும்
இயேசுவே என் வசந்தமே மலர்ந்திட வாருமே
இயேசுவே என் நண்பனே அணைத்திட வாருமே

2. பாதத்தில் அமர்ந்திடும் நேரம் என் ஆன்மா உன்னிடம் பேசும்
உணர்வினால் எழுந்திடும் பாசம்
என் வாழ்வினில் நிழலாய்த் தொடரும்
தேவனே உன் பாதையில் நடத்திட கரம் பிடிப்பாய்
தேவனே உன் பார்வையில் நடந்திட அருள் புரிவாய்
தேவனே உன் பாதையில் நடந்திட கரம் பிடிப்பாய்
411. என் மனம் பாடும் பாடலிது தேவா
என் மனம் பாடும் பாடலிது தேவா
என்னுள்ளே தீரா தாகமிது நாதா
நீ தரும் நேசம் நினைவில் வாழும் - 2
நிலையில்லாப் பனிபோல என் சோகம் மாறும்

1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய் - 2
கனவெல்லாம் கானல் நீரோ நான் கண்ணீரில் வாழும் மீனோ
உம் திருவடியே என் மனம் சரணம்
உளமதிலே நீ உன்னொளி தரணும்

2. வழிமீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன் - 2
நான் என்ன வாடும் பூவோ இல்லை உன் பாதம் சூடும் பூவோ
என் மனம் நீ வா நிம்மதியைத் தா
என் முகம் தனிலே புன்னகையைத் தா
412. என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும் - எந்தன்
எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும் - எந்தன் - 2
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் - வரும் - 2

2. போராட்டம் சூழ்ந்தென்னைத் தீவாக்கும் போது
பாலங்கள் நீயாக வேண்டும் - இணைப் - 2
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் - மறைப் - 2
413. என் வாழ்வில் என் இயேசுவே எல்லாரும் நீயாகவே
என் வாழ்வில் என் இயேசுவே எல்லாரும் நீயாகவே
துன்பத்தின் போதும் இன்பத்தின் போதும்
எல்லாமும் நீயாக வேண்டும்

1. ஆனந்தம் வழிந்தோடும் போது ஆணவம் ஆளாது காத்து
உள்ளத்தின் வேந்தனாய் நின்று வாழ்வாக வழியாக வாராய்

2. மண்ணாசை எனைச் சூழும் போதும் என்னாயுள் முடிகின்ற போதும்
என் நாவு உன் நாமம் பாட அன்பாக அரணாக வாராய்
414. என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானையா
என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானையா
எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா-2

1. சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன
எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே
காலை நேரத் தென்றலாகக் கனிவோடு என்னில் வாருமே

2. மலருக்கு மணமாகப் பயிருக்கு மழையாக
எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணை நீயாய் இருக்க எனனைச் சூழ்ந்து அன்பே வாரும்
415. என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
காலமெல்லாம் காக்கும் தேவன்
உன்னோடு தான் உன்னோடு தான் - 2

1. கண்காணும் செல்வங்கள் கரைந்தோடிப்போனாலும்
கரையாத அவரன்பு குறையாது - 2
கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2

2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
தோள்மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2
416. என்னைச் சுமப்பதனால் இறைவா
என்னைச் சுமப்பதனால் இறைவா
உந்தன் சிறகுகள் உடைவதில்லை
என்னை நேசிப்பதால் இறைவா
உந்தன் அன்பு குறைவதில்லை
இயேசுவே என் சொந்தமே இயேசுவே என் பந்தமே
எந்நாளும் எனைக் காக்கும் என் தெய்வமே

1. அன்பு ஒன்றால் உலகை ஆள உண்மை வழியைக் காட்டினாய்
பகைமை நீக்கி பாசம் ஓங்க நேசதீபம் ஏற்றினாய்
உன் சிறகின் நிழலில் பயணம் தொடர்வேன்
பாதுகாப்பாய் இறைவா என்னைப் - 2

2. நீதி வழியில் நிறைவினைக் காண நீயும் உலகில் தோன்றினாய்
சேயை நேசிக்கும் தாயைப் போல தயவாய் என்னைக் காக்கின்றாய்
உன் அமைதியின் வழியில் அனைத்துமாய் ஆனேன்
ஆண்டு நடத்தும் இறைவா என்னை - 2
417. என்னைச் சுமப்பதனால் இறைவா
என்னைச் சுமப்பதனால் இறைவா
உன் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதனால் இறைவா உன் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை -2
ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும் நதிகள் அழுவதில்லை -2

1. கருவைச்சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை - 2
மதுவைச்சுமக்கும்மலர்களுக்கென்றும்பனித்துளிசுமையில்லை-2
வானைச் சுமக்கும்மேகத்திற்கென்றும்மழைத்துளி சுமையில்லை- 2

2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும்மனிதரில்இரங்கும்மனதுக்குச்சிலுவைகள்சுமையில்லை-2
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை - 2
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என் இதயம் சுமையில்லை -2
418. என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்
என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்
உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன் - 2
காற்றும் நீயே கடலும் நீயே கருணை நீயே கனிவும் நீயே
அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை
எந்தன் அன்புக் காணிக்கை எந்தன் நன்றிக் காணிக்கை

1. உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்
உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும் - 2
கனவுகளாலே வாழ்வு இல்லை
உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை - 2
வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன் - 2

2. நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்
நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும் - 2
நினைவுகளாலே வாழ்வு இல்லை
உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை - 2
வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன் - 2
419. எனது விழியில் உனது பார்வை
எனது விழியில் உனது பார்வை
எனது நாவில் உனது மொழிகள்
எனது நெஞ்சில் உனது கனவு இறைவா - 2
உனது வழியில் எனது பயணம் உனது வார்த்தை எனது வாழ்வு
உனது வாழ்க்கை எனது வழிகள் தலைவா - 2

1. உனது நினைவில் நாளும் வளர்ந்தேன் இறைவா
உனது உருவில் நானும் கலந்தேன் தலைவா - 2
உனது உறவில் என்னை இழந்து
உனது உணர்வை என்னில் கரைத்து - 2
உனது நினைவில் வாழச் செய்தாய் - தலைவா - 2
என்னைக் காக்கும் அரணும் நீ என்னைத் தேற்றும் தாயும் நீ
எனை ஆளும் தெய்வம் நீ எனில் வாழும் தெய்வம் நீ

2. எனது பலமும் பலனும் நீயே இறைவா
எனது நெஞ்சில் நண்பன் நீயே தலைவா - 2
எனதுதுயரம்எனது அழுகை எனதுசுமைகள்மாற்றும்உன்னை - 2
எனது தோழனாகக் கொண்டேன் தலைவா
எனது சீவன் ஆக்கிக் கொண்டேன் இறைவா - என்னைக்
420. ஒரு காற்றாய் இளங்காற்றாய் உன் ஆலயம் தேடி வந்தேன்
ஒரு காற்றாய் இளங்காற்றாய் உன் ஆலயம் தேடி வந்தேன்
சிறு நதியாய் புது மலராய் உன் சந்நிதி நாடி வந்தேன்
என்னையே விளக்காக ஏற்றவே வந்தேன் - அதில்
என்னையே எண்ணெயாய் ஊற்றவே வந்தேன்

1. ஆன்ம நூலில்இதயப்பூவைமாலையாக்கித் தொடுக்கவந்தேன் - 2
ஆண்டவரின் அடிமையென்று
உனக்கு என்னைக் கொடுக்க வந்தேன் - 2
உந்தன் தரிசனம் கிடைக்கவே பல வருடங்கள் தவித்தேனே
உந்தன் குரல் என்னை அழைக்கவே - சிறு
குழந்தைபோல் துடித்தேனே

2. வைர விளக்காய் விண்மீனாய் வானம் உனக்கு தீபம் ஏற்றும் - 2
சொட்டு சொட்டாய்க் கடல் பிழிந்து
மேகம் உனக்குத் தீர்த்தம் ஊற்றும் - 2
இந்த இயற்கையின் அழகுகள் பல வியப்புகள் கொடுக்குதே
என்னை உனக்கெனக் கொடுத்திட
உந்தன் படைப்புகள் அழைக்குதே - 2
421. ஒரு கோடி தேன்பூக்கள் ஒன்றாக மணம் வீசும்
ஒரு கோடி தேன்பூக்கள் ஒன்றாக மணம் வீசும்
என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம்
மனமென்னும் பொன் வண்டு உன்னன்பில் கட்டுண்டு
தமிழாலே கவிபாடும் பேரானந்தம்
சிறகுகளாய் என் மனம் என் மனம் விரிகிறதே பறந்திட பறந்திட
இறை உறவில் இணைந்திட இணைந்திட மகிழ்கிறதே நம்தன 2
வாராயோ பேரன்பே என் இயேசுவே
தாராயோ பேரின்பம் என் வாழ்விலே

1. உன்னன்பில் என் கண்கள் கடலானதே
என் வானில் விண்மீன்கள் ஒளிவெள்ளமே - 2
உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே
என் வாழ்வில் ஈடேதும் இதற்கில்லையே
நீ வேண்டுமே நிதம் வேண்டுமே
நிஜமான உன் அன்புத்துணை வேண்டுமே
மாமன்னனே என் வேந்தனே
நிலைவாழ்வு தருகின்ற இறைமைந்தனே

2. என் வாழ்வில் விளக்காக வர வேண்டுமே
என் கால்கள் இறைவார்த்தை வழிசெல்லவே
என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே
உயிர்மூச்சே நீதானே என் தேவனே
உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே - நீ வேண்டுமே

422. ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும்
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் - 2
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர
மனத்தில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2

1. இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம்
பின்பு பிரிந்து திரிந்த காலம் - 2
இனியொரு தரம் இறைவனின் கரம்
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே - 2

2. உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி
அதை மறுப்போர் இல்லை உறுதி - 2
தினம் அவர் தரும் உறவினில் வரும்
சுகமோ என்ன சுகம் என் மனமே - 2
423. ஒரு தாய் தன் குழ்நதையை மறப்பாளோ
ஒரு தாய் தன் குழ்நதையை மறப்பாளோ
அவள் மறந்தாலும்
நம் இறைவன் நம்மை என்றும் மறப்போரோ - நாம்
உழைக்கும் போதும் உறங்கும் போதும் காக்கின்றார் - நாம்
இழக்கும் போதும் இருக்கும்போதும் காண்கின்றார்
அவரே இறைவன்

1. உலகமெல்லாம் அவர் படைத்தார்
உலகாளும் மனிதரை அவர் அழைத்தார் - 2
இருள்சூழலில் நிலவொளியாகிறார்
நம்மைப் படைத்த நம் ஆண்டவர்
உறங்குவதில்லை அயர்வதுமில்லை
கண்ணயர்வதுமில்லை ஏனோ ஏனோ ஏனோ
நம்மை அன்பு செய்வதால் தானே - 2
நம்மை எண்ணி எண்ணியே நாளும் ஏங்கும் தெய்வம்

2. காலமெல்லாம் காக்கின்றார் இடறல்கள் இல்லாமல் காக்கின்றார்- 2
அருள்வழியில் வளர வழியாகிறார் - நம்மைப் படைத்த ...
424. ஒருநாளும் விலகாத என் தெய்வம் இயேசு
ஒருநாளும் விலகாத என் தெய்வம் இயேசு - 2
என் பக்கம் இருக்கின்றார் அவர் என்னோடு இருக்க
எந்நாளும் காக்க அஞ்சாமல் நடந்திடுவேன் - 2

1. என் ஆற்றல் அவரே என் மீட்பும் அவரே
பலன் தந்து என்னை எந்நாளும் காப்பவரே
என் கோட்டை அவரே என் அரணும் அவரே
என் முன்னும் பின்னும் எனைச் சூழ்ந்து வருபவரே
என்னை உள்ளங்கையில் பொறித்து
காலமெல்லாம் காக்க என் தேவன் இருக்கின்றார் - 2

2. என் தேவன் அவரே என் ஆயன் அவரே
தன் சிறகில் என்னை எந்நாளும் சுமப்பவரே
என் ஒளியும் அவரே என் வழியும் அவரே
நான் எங்குச் சென்றாலும் என்னோடு வருபவரே
என் கரம் பிடித்து என்னை
பசும்புல்லில் நடத்த என் நேசர் இருக்கின்றார் - 2
425. ஒருபோதும் உனைப்பிரியா நிலையான
ஒருபோதும் உனைப்பிரியா நிலையான
உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும் உன் நாமம் சொல்லவேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே - 2
நீங்காத நிழலாக வா இறைவா

1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் - 2
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் உன்
மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்
தாய் உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன் ஆ ஆ

2. நீர் தேடும் மான்போலத் தேடிவந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் - 2
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்
426. ஒரு வரம் நான் கேட்கின்றேன் திருப்பதம் நான் பணிகின்றேன்
ஒரு வரம் நான் கேட்கின்றேன் திருப்பதம் நான் பணிகின்றேன்
மனிதனாக முழு மனிதனாக வாழும் வரம் தான் கேட்கின்றேன்

1. நிறையுண்டு என்னில் குறையுண்டு
நிலவின் ஒளியிலும் இருளுண்டு
புகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டு
மாற்ற இயல்வதை மாற்றவும் அதற்கு மேல் அதை ஏற்கவும்
உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய்

2. உறவுண்டு அதில் உயர்வுண்டு
இணைந்த தோள்களில் உரமுண்டு
இல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டு
இதழ்கள் இணைந்தால் மலருண்டு
மகிழ்வாரோடு நான் மகிழவும் வருந்துவோருடன் வருந்தவும்
உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்.
427. ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்

1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் - 2
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2

2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் - 2
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2

3. அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன் - 2
ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
ஊமையாய்ப்பிறந்தவன் சகோதரன் காரணம் அவனும்மனிதன் - 2
428.ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்
ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்
வளர்வேன் செழித்தே உயர்ந்திடுவேன்
கனிவாய்ப்பரிவாய்நீஅணைத்தால்இனிதாய்ப்புதிதாய்மலர்ந்திடுவேன்
இறைவா முதல்வாவழிகாட்டு என் இதயம் உன் இல்லம் விளக்கேற்று - 2

1. துணையாய் அருகே நீ வந்தால் - எந்தத்
தொலைவும் எளிதாய்க் கடந்திடுவேன் - 2
சுனையென அன்பு சுரந்து வந்தால் - நான்
சுகமாய் மகிழ்வாய் நடந்திடுவேன் - இறைவா

2. ஆற்றலும் அருளும்நீ தந்தால்ஓராயிரம்பணிகள்ஆற்றிடுவேன் - 2
தேற்றிட நீயும் அருகிருந்தால் எந்தத்
துயரச் சுமையும் தாங்கிடுவேன் - இறைவா
429. ஒளியெல்லாம் நீயல்லோ இயேசையா
ஒளியெல்லாம் நீயல்லோ இயேசையா
வழியெல்லாம் நீயல்லோ இயேசையா
ஒளியெல்லாம் நீயல்லவோ இயேசையா
தாவீதின் குமரா என் இயேசுநாதா - 4

1. நீ செல்லும் இடமெல்லாம் நான் உன்னைத் தொடர்ந்தேன்
நீ சொல்லும் வார்த்தைகளால் நான் உன்னை அடைந்தேன்
- தாவீதின் குமரா
உன் பின்னே வருவோர்க்கு நல்லாசி தருவாய்
உன் பாதம் அடைவோர்க்கு நல்வாழ்வு தருவாய் - தாவீதின்

2. என்னிடம் வாருங்கள் என்று நீர் மொழிந்தீரே
உன்னிடம் ஓடி வந்தேன் என்னை நீர் காப்பீரே - தாவீதின்
இவ்வாழ்வின் இறுதியில் உம்மோடு இணைந்திட
நான் உந்தன் சொல்கேட்டு நல்வாழ்வு வாழ்வேன் - தாவீதின்
430. கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை
நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நான் இருப்பேன் - 2
அஞ்சாதே கலங்காதே - 2

1. தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளைநிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை
உயர்ந்தது அவராலே - 2
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடி மேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே
அஞ்சாதே கலங்காதே - 2

2. பாலையில் பாதையும் பாழ்வெளி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார் - 2
பார்வை இழந்தவர் வாய் திறவாதோர் யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும்
அஞ்சாதே கலங்காதே - 2
431. கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும்
அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் - 2

1. குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை - 2
நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை - 2
ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் - 2

2. காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை - 2
நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும்
உள்ளம் ஏனோ உணர்வதில்லை - 2
தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் - 2
432. கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா
கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா
கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா
கருணை உன் வடிவல்லவா
வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்
கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்
எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

1. வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்
மனதீபம் நீ என்று அறியாமலே
அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்
அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2
தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றேன்
உணராத நிலை மாற்றுவாயோ
உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்
ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்
மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

2. செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்
புவிமீது இசைஞானம் இழிவாகுமே
சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்
புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2
உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை
உண்டாக்கி அருள் வீசுவாயோ
தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்
இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்
நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்
433. கருணை மழையில் நனைந்தேன்
கருணை மழையில் நனைந்தேன்
கவிதை வெளியில் பறந்தேன்
உயிரே உயிரே உனிலே சரணம் அடைந்தேன்
உறவின் உதயம் அறிந்தேன் - 2

1. தாய்மையின் தேடலில் தோன்றிடும் போலிகள்
வாழ்வின் வேலியல்லவா அதில் விளைவது வலியல்லவா - 2
உணர்வினில் தோன்றி உயிர்க்கொடி தீண்டி
உதித்திடும் உறவுகளே உயிர் நிறைந்திடும் மகிழ்வல்லவா
உருகிடும் உடல் வழியே உயர்ந்திடும் அருள்திரியே - 2
இழந்திடும் கர்வம் இணைந்திடும் இதயம்
இருப்பினில் இன்பம் இதுவே - 2

2. இரக்கத்தைச் சுரந்திடும் இதயத்தின் சுனைகளில்
பொங்கும் புனிதமல்லவா அது புண்ணிய நதியல்லவா - 2
தன்னலம் கரைத்து தியாகத்தில் குடைந்து
வளர்ந்திடும் கனிதருவேன் நான் பொங்கிடும் வரமல்லவா
எழுந்திடும் திசைகளிலே சிறகுகள் விரிகின்றதே - 2
புன்னகை பூக்கும் பூமியை நோக்கும்
நெஞ்சினில் என்றும் இன்பம் - 2
434. கருணையின் உருவே இறைவா
கருணையின் உருவே இறைவா
கரையிலா அருள்நிறை தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா
எம் கனவுகள் மெய்ப்பட வருவாய் - 2

1. பகைமையும் வெறுப்பும் அழிந்திடணும்
பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திடணும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடணும்
நிம்மதி வாழ்வில் நிறைந்திடணும்
இதயங்களில் இரக்கம் வேண்டும்
இன்னல்களில் உதவ வேண்டும்
உறவுகளில் உண்மை வேண்டும் வேற்றுமைகள் மறையணும்
இந்த உலகில் உந்தன் ஆட்சி உருவானால் பேரின்பம் - 2

2. வறுமையும் பிணிகளும் ஒழிந்திடணும்
வளமையும் வாழ்வும் பெருகிடணும்
தீமையின் வேர்கள் அழிந்திடணும்
நன்மையின் பாதைகள் தெரிந்திடணும்
போர்களில்லாப் பூமி வேண்டும் புவியினிலே அமைதி வேண்டும்
ஆயுதங்கள் அழிய வேண்டும் அன்புலகம் மலரணும் - இந்த

435. கலங்காதே என் நெஞ்சமே
கலங்காதே என் நெஞ்சமே - 2
கர்த்தர் இயேசு அன்பு செய்ய
காலமெல்லாம் காத்திருக்க கலக்கம் ஏன் நெஞ்சமே நெஞ்சமே
கலக்கம் ஏன் நெஞ்சமே - 2

1. இருளும் புயலும் உன்னை என்ன செய்திடும்
அருளும் அன்பும் பொழியும் இயேசு அருகிருக்கையில் - 2
வாழ்வில் வீழ்ந்து வருந்தும்போது தோள் கொடுக்கிறார்- 2
தாழ்ந்து வாடும்போது தயவு காட்டுவார்
தயவு காட்டுவார் இயேசு தயவு காட்டுவார் - 2

2. உலகம் வெறுக்கும் போதும் உன்னில் நிலைக்கிறார்
உயிர்ப்பும் உயிரும் ஈந்து நாளும் உடனிருக்கிறார்
துன்ப துயரம் தூரப்போகும் துணிந்து நின்றிடு - 2
தூய தேவன் அருளை என்றும் நம்பிடு
என்றும் நம்பிடு அவரை - 2
436. கலங்காதே கலங்காதே நான் உன் கடவுள்
கலங்காதே கலங்காதே நான் உன் கடவுள்
அஞ்சாதே அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கின்றேன்
நீ என் அடியவனே நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன் - 2

1. காற்றும் புயலும் குன்றும் நதியும் ஒரு நாள் மறைந்தாலும்
தேற்றும் எந்தன் வார்த்தை உன்னில்
இனி என்றும் மறையாதது - 2
காக்கும் தெய்வம் கரத்தில் உன் ஆத்மா ஒருநாளும் அழியாதது

2. ஏழ்மை வறுமை துன்பம் துயரம் தினம் உன்னை வதைத்தாலும்
கேட்கும் வரத்தை வாரி வழங்கும் வள்ளல் நானன்றோ - 2
காக்கும் தெய்வம் கரத்தில் உன் ஆத்மா ஒருநாளும் அழியாதது
437. கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர்
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர் - 2
உயிர் வாழ எதை உண்பதோ உடலுக்கெதை உடுப்பதென்றோ

1. பறவைகளைப் பாருங்கள் - அவை
விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை
களஞ்சியம் சேர்ப்பதுமில்லை - 2
கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் - 2

2. காட்டுச் செடியைப் பாருங்கள் - அவை
உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
அழகிலே இணை அதற்கில்லை - 2
கடவுள் அவற்றை உடுத்தி வருகின்றார் - 2
438. கவிதை பாடும் நேரம் உன்னைப் புகழ்ந்து பாடும் இதயம்
கவிதை பாடும் நேரம் உன்னைப் புகழ்ந்து பாடும் இதயம் - 2
வானம்பாடி போல - உன்னைப் பாடி பாடி மகிழ்வேன் நான்

1. உந்தன் கண்ணின் ஒளியை எந்தன் இதய வீணை பாடும் - 2
மலரின் மணமும் போல - எந்தன் சீவன் பாடும் இராகம் இதுவே

2. அன்பும் பண்பும் நீயே நல் இன்ப இறையும் நீயே - 2
அருளின் வடிவம் நீயே - உன்னை நாளும் பாட வரங்கள் தா
439. கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா
கள்ளமில்லா ஒரு வெள்ளி நிலா - என
உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதா
தீராதப் பாசமே நறும் தேனான இயேசுவே
அன்பே பாரினில் நீயும் நானும்
ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே வாரும் தேவா வாருமே

1. எங்கே நோக்கினும் தனிமையே - உனை
என் மனம் மறந்ததன் தீமையே
கண்களும் நீரினில் ஆடுதே இறை கர்த்தருன் பூமுகம் தேடுதே
தேவ தேவா சிலுவைநாதா திரும்ப நாவினில் வாருமே - 2
தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே
தாயும் நீயாய் சேயும் நானாய் வாழ வேண்டும் நாளுமே

2. எல்லாம் தேவனின் மகிமையே - அதை
எங்ஙனம் புகழ்வது ஏழையே
என் மனம் நீ வரும் போதிலே - பெரும்
நிம்மதி ஆயிரம் வாழ்விலே
வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனித் தேவனே - 2
வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே
ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழ வேண்டும் நாளுமே
440. காக்கின்ற தேவன் உன்னோடுதான்
காக்கின்ற தேவன் உன்னோடுதான்
கலங்காதே திகையாதே என் மனமே - நீ - 2

1. துன்பத்தில் துணையாக உன்னோடுதான் - உன்
துயரினில் ஆறுதலாய் உன்னோடுதான் - 2
விழி காக்கும் இமையாக உன்னோடுதான் - 2 - நல்
வழிகாட்டும் ஒளியாக உன்னோடுதான் - 2

2. சோர்வினில் திடம் தர உன்னோடுதான் - உன்
நோயினில் சுகம் தர உன்னோடுதான் - 2
சோதனை வேளையில் உன்னோடுதான் - 2 - உன்
வேதனை தாங்கிட உன்னோடுதான் - 2
441. காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே
காலம் தோறும் கரங்கள் தாங்கியே என்னைக் காத்திடுவாய் - 2

1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே
உள்ளம் நொறுங்கி உடையும் வேளை - 2
உன்னைத் தேடி ஓடி வந்தேன்
கருணை தெய்வமே கரங்கள் தாருமே - 2

2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய்ப்
பாலைநிலத்தில் நடத்தினாய் - 2
கடலை அடையத் துடிக்கும் ஆறாய்
உந்தன் வழியில் நடக்க வந்தேன்
உடனே வாருமே உதவி தாருமே - 2
442.கால்கள் வழுக்கினாலும் காப்பதுன் கரமல்லவா
கால்கள் வழுக்கினாலும் காப்பதுன் கரமல்லவா
கருவில் இருக்கும் முன்னே தொடர்ந்திடும் அருளல்லவா
காத்திடும் கரமல்லவா என்னைச் சுமந்திடும் சிறகல்லவா
கருவினிலிருந்து தொடர்ந்திடும் அருளல்லவா
என்னைத் தாங்கிடும் தாயல்லவா
சா கம பா சநி தநி சா மா பா கரி சநி சா

1. இமை மூடும் பொழுதினில் இனித்திடும் தாலாட்டே
கசிந்திடும் கண்ணீரில் கனிந்திடும் ஆறுதலே ஆ - 2
சுகமான சுமையாகச் சுமந்திட்டப் பேரன்பே
தனிமையில் துணையாகித் தேற்றிடும் இறையன்பே - 2

2. மழலையின் மொழிதனில் உருகிடும் தாய் நீயே
தவழும் நான் எழும்போது மகிழ்ந்திடும் மனம் நீயே ஆ - 2
தடுமாறும் போதென்னைக் கரம் பற்றும் தாயன்பே - 2
உன் சேயாய் நான் என்றும் உன் தோளில் சாய்ந்திருக்க - 2
443. காலம் மலராதோ இறைவா கவலை மறையாதோ
காலம் மலராதோ இறைவா கவலை மறையாதோ
கண்ணீரும் அழுகையெல்லாம் புரட்சிக் கனலாக வெடிக்காதோ
கனவெல்லாம் நனவாகுமோ - 2

1. எல்லார்க்கும் எல்லாம் என்று உலகில் எல்லாமே படைத்தாயே
இல்லாரே இல்லை என்ற நியதி இதமாக வகுத்தாயே - 2
விண்ணை முட்டும் எழில்மாளிகை
மண்ணை முட்டும் சிறு கூரைகள் - 2
ஏன் இந்தப் பெரும் பேதங்கள் நீயே ஏற்காத வெறும் பேதங்கள்

2. சமத்துவம் மலரும் என்றே நீயும் உலகெங்கும் சொல்லிவைத்தாய்
அன்புகள் மலரும் என்றே அன்று
சிலுவையில் தொங்கி நின்றாய் - 2
உரிமைகளோ சிறையானதே வறுமை ஒன்றே வளமானதே- 2
ஏன் இந்த நிலையானதோ உன் சொல்லாலே இனி மாறுமோ

3. பொய்கூறும் அரசியலும் நாளும் தடுமாறும் ஆட்சிகளும்
விலைபோகும் நீதிகளும் நம்மை உலையாக்கும் சேதிகளும்-2
பகை வீதியில் கடும் ஆயுதம்
புகை போன்றெழும் போரின் விசம் - 2
எல்லாமே இனி மாறுமோ உன் சொல்லாலே அருளாகுமோ
444.கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பவன் யார்
கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப் பிரிப்பவன் யார் - 2

1. வானத்தின் தலைமைத் தூதர்களோ
வல்லமை வலிமை மிக்கவரோ - 2
வானத்தில் உள்ள வேறெதுவோ வாக்கினில் வந்தப் படைப்புகளோ

2. வாட்டிடும் வயிற்றுப் பெரும்பசியோ
வாழ்வினை முடிக்கும் கொடும்வாளோ - 2
ஆட்டிடம் உலகின் இடர் பலவோ
அதிர்ச்சியை அளிக்கும் மரணங்களோ
445. செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான்
செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான்
பாடிடுவேன் இறைவா - என் சிந்தனையில் நீ இருந்து வாழ
எழுந்தருள்வாய்த் தலைவா என்னில் - 2

1. பாலையில் மன்னா வழங்கி நின்றாய்
பலியினில் உன்னை வழங்குகின்றாய் - 2
காலையில் உணவின்றித் தவிக்கின்றேன் - 2
கனியமுதாய் என்னில் எழுந்தருள்வாய் - 2

2. உன்னுடல் உயிர்தந்ததுன் வல்லமையால்
உலகினர் உயிர்ப்பதுன் வல்லமையால் - 2
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே - 2
இறைமகனே என்னில் எழுந்தருள்வாய் - 2
446. தஞ்சம் வந்தேன் இயேசுவே ஓ கொஞ்சம் பாரும் தேவனே
தஞ்சம் வந்தேன் இயேசுவே ஓ கொஞ்சம் பாரும் தேவனே
என்னைப் பார்த்தால் போதுமே ஓ இன்பம் வந்து பாயுமே
ஏங்குதே ஏங்குதே என் மனம் ஏங்குதே
தேடுதே தேடுதே இயேசு உன்னைத் தேடுதே

1. பணம் வேண்டாம் நீயே போதும் மனம் ஒன்று தருவாயா
இனம் வேண்டாம் நீயே போதும் எனில் இன்று வருவாயா - 2
நான் வந்தேன் உன்னைக் கண்டேன்
என்னைத் தந்தேன் அணைப்பாயா - 2
தேகம் அழிந்தாலும் உன் சிநேகம் அழியாது
தேகம் அழிந்தாலுமே உன் சிநேகம் அழியாதையா
உன்னை நினைப்பேன் உயிர் கொடுப்பேன் ஒரு போதும் மறவேனே

2. புகழ் வேண்டாம் நீயே போதும் மனம் ஒன்று தருவாயா
சுகம் வேண்டாம் நீயே போதும் வரம் ஒன்று தருவாயா - 2
என் சொந்தம் என்றும் நீயே உன் சொந்தம் நானையா - 2
ஞாலம் மறைந்தாலும் உன் பாசம் மறையாது
ஞாலம் மறைந்தாலுமே உன் பாசம் மறையாதையா - உன்னை
447. தந்தையும் தாயும் நீதானே இறைவா
தந்தையும் தாயும் நீதானே இறைவா
நீயில்லா என் வாழ்வில் நிறைவேது தலைவா
ஆயனும் நீயே ஆதாரம் நீயே
நிலையில்லா என் வாழ்வின் நிரந்தரம் நீயே - 2

1. என் நேரமும் என் பாதையில் தடமாகினாய்
எப்போதுமே என் நெஞ்சிலே திடமாகினாய்
எனது மீட்பின் கிண்ணம் நீரே எனது உரிமைச் செல்வம் நீரே
இருள் சூழ்ந்த போதும் பயமேதுமில்லை
என் இயேசு எனைத் தாங்கி ஈடேற்றுவாய் - 2

2. முள் மீதிலே பூவாகவே எழிலாகிறாய்
புல் மேல் உள்ள பனியாகவே இதமாகினாய்
வளமை சேர்க்கும் அருளின் ஊற்றே
வாழ்வை வளர்க்கும் சுவாசக் காற்றே
தொடர்கின்றத் துன்பம் பறந்தோடிப் போகும்
புதுவாழ்வுப் புதுவிடியல் கைக்கூடுமே
448. தந்தையும் தாயும் மறந்திட்டாலும் மறந்திடாத தெய்வமே
தந்தையும் தாயும் மறந்திட்டாலும் மறந்திடாத தெய்வமே
நண்பரும் உறவும் பிரிந்திட்டாலும் பிரிந்திடாத இயேசுவே
உனது இரக்கம் இன்றியே உயிர்கள் வாழ்வது இல்லையே - 2
கண்ணின் மணியாய்ச் சிறகின் நிழலில்
அணைத்துக் காக்கும் ஆயனே

1. காலை மலர்ந்து மாலைக்குள் வாடி மடியும் மலரைப் போல்-2
எந்த உறவும் முடிந்திடும் உந்தன் உறவோ தொடர்ந்திடும்-2
கடலும் நீரும் காற்றும் ஓயும் கைவிடாதப் பேரன்பே

2. பாலை நிலமும் பூத்திடும் பாறையும் நீர் சொரிந்திடும் - 2
உந்தன் கிருபை போதுமே எந்த நிலையும் மாறுமே - 2
கல்லும் கனியும் இறப்பும் உயிர்க்கும்
வியக்க வைக்கும் அருளன்பே
449. தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா
தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடிவந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாமறியோம் தந்தாய்
பிள்ளைகளாகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் - 2

1. எங்களுக்குத் தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்
அனுதின உணவை எங்களுக்கு என்றும் உறுதி செய்தருளும்
வறுமை நீங்கச் செய்யும் - இங்கு வாரும்

2. உன்னதத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்குமே எங்கிலும் உம்மரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம் - தந்தையும் தாயுமான
450.தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல்
தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா - 2
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும் - 2
ஊரோடும் உறவாடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக என்னைக் காக்கும திருக்குமரா

1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்
வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே - 2
கப கக ரி ரிக ரிச சா பத பதச பதச கா
ரிக ரிரி சா தத தத பா கரி பக தப சத ரிச கரி சத கா
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே - 2
தேனின் சுவையோடு ஆ இயேசையா - 2
கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான - இலயமுடனே - 2

2. வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே - 2 ஆ
பாரில் எமக்காகத் தேவ சுதனாக - 2
நாதர் கனிவோடு ஆ இயேசையா - 2
தாமே நாடினீரே பாப நேக தேவ பாலன் தயவுடனே - 2
451. தாய்என்னை மறந்தாலும்மறவாத தெய்வமே
தாய்என்னை மறந்தாலும்மறவாத தெய்வமே- 3 இயேசுவே
நான் உன்னைப் பிரிந்தாலும் பிரியாத நண்பனே - 3 இயேசுவே
உன்னைப் பாட பாட உள்ளம் கொள்ளை கொள்ளுதே - 2
உன்னில் சேர சேர நெஞ்சம் ஏங்குதே - 2

1. துன்ப துயரங்கள் சூழ்ந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லையே
கொள்ளை நோய்களோ வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லையே - 2
என்னோடு இருப்பதால் எனக்கு என்றும் பயமில்லை
உன் தோளில் சுமப்பதால் கலக்கமில்லையே
நான் உன்னை மறக்கலாம் நீ என்னை மறவாயோ - 2

2. சொந்த பந்தங்கள் மறந்து போகலாம்
அச்சமில்லை அச்சமில்லையே
சுற்றம் சூழலும் பிரிந்து போகலாம்
அச்சமில்லை அச்சமில்லையே - 2 என்னோடு
452. தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே
தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே - உன்
துணையின்றி என் வாழ்வு வீணாகுமே - 2
நீயில்லையேல் நானில்லையே - 2 - உன்
உறவில்லையேல் வாழ்வில்லையே

1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்
உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ம் ஆ - 2
அன்பானவா அருளானவா - 2
துயர் நீக்கித் துணையாக நீர் வாருமே - 2

2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்துத் தவித்தாலும்
உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய் ம் ஆ - 2
ஒளியானவா உயிரானவா - 2
உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே - 2
453. தாய் போலத் தேற்றும் தெய்வம் நீரே
தாய் போலத் தேற்றும் தெய்வம் நீரே
ஒரு தந்தைபோல் காக்கும் தெய்வம் நீரே
தோள்மீது தாங்கும் நண்பன் நீரே
என் எல்லாமும் நீ... ரே... வாரும் - 2 இயேசுவே
என் உள்ளத்தின் ஆறுதல்

1. துணையின்றி வாழும் என் துணையாகினாய்
பலமின்றி வாழும் என் பலமாகினாய்
அன்பாகி அருளாகி இறையாசி தந்தாய் - 2
உந்தன் பாசம் பெரிது ஐயா

2. விமர்சன அம்புகள் துளைக்கையிலே
விருட்சமாய் நான் எழ கரம் நீட்டினாய்
எனைத் தேடி வந்து கண்ணீர் துடைக்கும் - 2
உந்தன்பாசம் பெரிது ஐயா
454. தாயகம் முழுவதும் நாயகன் இயேசுவின்
தாயகம் முழுவதும் நாயகன் இயேசுவின்
திருப்புகழ் பாடவந்தேன்
தேனினும் இனிய என் தேவனின் நாமத்தை
தினம் தினம் போற்ற வந்தேன்
எல்லா நாவும் முழங்கிடட்டும் இயேசு கிறிஸ்து ஆண்டவர் - 2

1. கடவுளின் தன்மையில் விளங்கிய இயேசு எனக்காய் மனுவானார்
அடிமையைப் போலவே தன்னையே
தாழ்த்தி மனிதருக்கொப்பானார் - 2
தந்தையின் திருவுளம் யாவும் நிறைவேற்றி - 2
சிலுவையில் மரித்தார் என்னை மீட்டார் - எல்லா

2. இயேசுவின் திருப்பெயர் ஒருமுறை சொன்னால்
இதயத்தில் அமைதி வரும்
விண்ணும் மண்ணும் கீழுலகும் அவர் திருமுன் மண்டியிடும் - 2
பாவங்கள் விலகும் நோய்களும் நீங்கும் - 2
சாத்தானின் படைகள் தூள் தூளாய் உடையும் - எல்லா
455. தாயாகி தந்தையாகி நெஞ்சமெல்லாம் உனதாகி
தாயாகி தந்தையாகி நெஞ்சமெல்லாம் உனதாகி
கண்களில் உன்னைத் தாங்கினேன் என் செல்லமே
கண்களில் உன்னைத் தாங்கினேன்
காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா - 2

1. உன்னை என் கைகளில் பொறித்துள்ளேன்
பயம் வேண்டாம் இனிக் கலங்க வேண்டாம்
காப்பாற்றும் தேவன் உந்தன் கரம் பற்றினேன் - 2
தோள்களில் சுமந்து வழிநடப்பேன் - 2
காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா - 2

2. அடைக்கலப் பாறையாக நான் இருப்பேன்
அரணும் கோட்டையுமாய்க் காத்துநிற்பேன்
இருளில் நீ இடறாமல் துணையிருப்பேன் - 2
சிறகினில் உனை மூடிப் பலமளிப்பேன் - 2
- காக்கின்ற தெய்வமல்லவா
456. தாயான தெய்வமே என் துணையான செல்வமே
தாயான தெய்வமே என் துணையான செல்வமே
தேன்தமிழில் கவி புனைந்து தினமும் உன்னை வாழ்த்துவேன் - 2

1. பாடி உன்னைச் சரணடைந்தேன் பாசமழை பொழிந்தாய்
கோடி நலம் செய்தாய் என் குறைகளெல்லாம் தீர்த்தாய் - 2
கரை காணா உன் அன்பில் நான் வாழ்கிறேன்
கரம் கூப்பி உன் பாடல் நான் பாடுவேன் - 2

2. தஞ்சமென்று உன்னையே செந்தமிழில் பாடினேன்
பண்போடு வாழ்ந்திட நல்ல மனம் தந்தாய் - 2
உன் வழியில் உண்மையில் நாளும் நடந்திட
உலகெங்கும் நீ வாழ்ந்து சக்தியாகிறாய் - 2
457. தாயின் முகம் பார்க்குமுன்னே
தாயின் முகம் பார்க்குமுன்னே
தந்தை கரம் சேர்க்கு முன்னே
எந்தன் பெயர் சொல்லி என்னை அழைத்தவா
தாய் வயிற்றில் என் உருவம் அமைத்தவா
என் வாழ்வில் நீ வந்தாய் என்னைப் பின் செல் என்றாய்
ஏனென்றே அறியாமலே உன் வழியில் நான் வந்தேனே

1. அழகாய் ஒரு தேசம் அதிலே இறைநேசம்
நிசமாய் நிறைவாய் உருவாக்கிட
என்னை ஆவியினால் ஆட்கொண்டீரே
என்னை அபிசேகம் செய்தீரே
அன்பின் செய்தியை அகிலம் சொல்லிட
அகலாய் என்னையே அனுப்பும் தெய்வமே - 2

2. இறைவா உம் அரசு இம்மண்ணில் வரவே
அழைத்தாய் அன்பாய் அடிமை எனையே
நான் உன்னோடு என்றீரையா
நீ அஞ்சாதே என்றீரையா
ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்
உலகை வெல்லுவேன் உந்தன் வார்த்தையால் - 2
458. தாயும் நீயே என் தயவும் நீயே
தாயும் நீயே என் தயவும் நீயே
அருளும் வளமும் நிரம்பி வழியும்
நிறைவாழ்வைத் தந்த என் தெய்வமும் நீயே

1. நான் செல்லும் இடமெல்லாம் நீ முன்னே செல்கின்றாய்
கால்கள் இடறாமல் கைகளில் தாங்குகின்றாய்
என் துன்ப துயரினில் அருகில் நீ இருக்கின்றாய்
உடல் உள்ள நோய் தீர்த்து எந்நாளும் காத்து வரும்

2. என் செவி படைத்தவரே என் வேண்டல் மறுப்பாரோ
என் விழி திறந்தவரே எனைக் காண மறப்பாரோ
எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் அறிபவரே
உம் சித்தம் வாழ்க்கையில் நிறை ஆசீர் பெருகுமே
459. தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே
தாயைப்போல என்னைத் தேற்றும் எந்தன் தெய்வமே
சேயைப்போல உந்தன் மார்பில் என்னைத் தாங்குமே
என் காயங்கள் நீ ஆற்றவா என் சோகங்கள் நீ மாற்றவா
விழியின் ஈரம் காயும் முன்பே அணைக்கவா
வழிகள் சூழும் தருணம் எல்லாம் காக்கவா

1. உண்மையென்ன பொய்ம்மையென்ன விளங்கவில்லையே
விழிகள் காட்டும் வெளிச்சம் கூட உறுதியில்லையே
பாசமென்ன வேசமென்ன அறியவில்லையே
அழிவின் குழியில் விழுந்த நிமிடம் யாருமில்லையே
மரணம் சூழ்ந்த இருள்வழிப் பார்வை தொலைத்த இருவிழி
நீ வாருமே கை தாருமே
நரக துன்பம் அறிந்தேன் இறைவா மீட்க வா

2. எந்தப் பாதை வாழ்வின் பாதை தெரியவில்லையே
அறிந்தபோதும் திரும்பி வரவும் வழிகள் இல்லையே
கடலில் பாதி கரையில் பாதி கால்கள் வைக்கிறேன்
அலையின் வலிமை இழுத்துச் செல்லும் நிலையில் இருக்கிறேன்
வாழ்க்கை முழுதும் வருத்தங்கள் இதயம் வழியும் துயரங்கள்
என் வாழ்வையே பூந்தோட்டமாய்
மாற்றும் வல்ல தேவன் என்று காட்டவா

460.தாலாட்டும் தாய் நீயல்லோ
தாலாட்டும் தாய் நீயல்லோ
கண்ணில் நீரோடு தேடும் பிள்ளை நான்
கருவிலிருந்தே என்னைச் சுமந்தாய்
கருவிழி போலென்னை இதுவரைக் காத்தாய்
இறையே கனியே அனுதினம்
இருளில் பாரம் சுமந்துவாடும் என்னைத் - தாலாட்டும்

1. வாழ்வு எல்லாம் தேடல் தானே
உனைத்தேடும் என்வாழ்வு வீணில் கரைந்திடுமோ -2
தேடித் தேடிச் சோர்ந்தாலும் தேடல் தொடர்ந்திடுமே - 2
என் தேவன் நீயின்றி மகிழ்வேது இறைவா

2. காலமெல்லாம் காத்திருந்தாய்
உன்னைவிட்டுச் சென்றாலும் நீயே கதியானாய் - 2
கால்கள் போகும் திசையெல்லாம் பாதை நீ தந்தாய்
உனைச் சேரும் பொழுதெல்லாம் திருநாளே இறைவா
461. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே - 2

1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே தீபமாக வழிநடத்தும் - 2

2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - 2
462. தினந்தோறும் தினந்தோறும் உனை நானும் தேடி
தினந்தோறும் தினந்தோறும் உனை நானும் தேடி
வருவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
இப்போதும் எப்போதும் கவிநூறு பாடி
தொழுவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும்
ஒரு தேடல் அதுபோதுமே - என்றும் என் வாழ்வே உனதாகுமே

1. வழி எங்கே எனத்தேடி விழி ஏங்கும் போது நான் -
தேடும் வழியாகும் உன் சந்நிதி
வரம் கோடி உனைநாடி மனம் தேடும் போது -
நான் காணும் கதியாகும் உன் சந்நிதி
நதிகூடும் கடலாக விழி மூடும் இமையாக
கவிபாடும் குயிலாக கனி ஊட்டும் சுவையாக
வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒரு பார்வை

2. சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது -
சுமைதாங்கும் கரமாகும் உன் சந்நிதி
சொந்தங்கள் இனி எங்கே என ஏங்கும் போது -
உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி
பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக
மழைதேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக
வந்த எந்தன் சொந்தமே வாழும் உந்தன் பந்தமே - ஒரு பார்வை
463.துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் நம்
துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் நம்
இறைமகன் எனக்கினித் தோழனே தோழனே

1. தீதானவை வழியானது என் பாவங்களும் மிகையானது - 2
என் பாவக் கறையை நீர் நீக்கி என் வாழ்வில் இன்பம் தந்தீரே
கண்பாரும் இனிமேல் துணையாக வாரும்
என்னைத் தந்தேன் நானே

2. தேவாவியே துணையானது என் கோபங்களும் கரைந்தோடுது-2
என்சோகக் குரலை நீர் கேட்டு பாவநோயின் துன்பம் தீர்த்தீரே
எந்நாளும் விலகித் தனிவாழும் போதும் உந்தன் பிள்ளையானேன்
464. தெய்வம் நமது தாயும் தந்தையாம்
தெய்வம் நமது தாயும் தந்தையாம்
வையம் நமது அன்னை இல்லமாம்
வாழும் நாமெல்லாம் ஒரே குடும்பமாம் - 2
ஆளுவோம் உலகையே அன்பின் சக்தியால்
தெய்வ அன்பின் சக்தியால்

1. அழகிய உலகினில் அருமையாய் நாமெல்லாம்
வாழும் நாளில் அன்பு வேதகீதம் இசைப்போம்
ஒருவரை ஒருவர் மதித்திங்கு வாழ்ந்து
ஒருமைப்பாடு நெறியில் நின்று பெருமை பாடுவோம்
உறவு ஒன்றுதான் உலகை இயக்குமே - அந்த
உண்மை உணர்ந்து நாம் உறவில் வளருவோம்

2. மத இன சாதியின் அடிமைகள் நாமில்லை
மாண்புநிறை நேயத்தாலே மனிதம் உயர்த்துவோம்
நீதியும் நேர்மையும் தூய்மையும் வாய்மையும்
வாழ்வுப் பயண வழித்துணையாய்
நாளும் கொள்ளுவோம் - உறவு ஒன்றுதான்
465. தெய்வீக ராகம் தேன் சிந்தும் ராகம்
தெய்வீக ராகம் தேன் சிந்தும் ராகம்
தேவா உன் நினைவாக உருவான ராகம் - 2
என் பாடல்தானே உன் கோயில் நாளும் - 2
அரங்கேறும் வேளை ஆனந்தமே உயிரே வருக உறவைத் தருக
உயிரே உனக்காக உருவான பாடல்
உறவே உனக்காக நான் பாடும் பாடல் - 2

1. உன் நாமம் சொல்லாத நாவில்லையே
எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே - 2
உன் நாமம் தானே நெஞ்சாரப் பாட
சுகமான இராகம் நான் பாடும் பாடல் - உயிரே

2. உன்னாட்சி உயராத இடமில்லையே
உன்னாட்சி மலராத மனமில்லையே - 2
உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட
மேலான இராகம் நான் பாடும் பாடல் - உயிரே
466. தேடாத இடமில்லை இறைவா - உன்னைத்
தேடாத இடமில்லை இறைவா - உன்னைத்
தேடாத நாளில்லை இறைவா
காணாமல் அலைகின்றேன் இறைவா - உன்னைக்
காண்கின்ற இடமேது இறைவா

1. ஆலயத்தில் ஆண்டவனே உனைத் தேடினேன்
அமைதி தரும் சந்நிதியில் உறவாடினேன் - 2
அயலானில் உன்னைக் காண நீ கூறினாய் - 2 - அவன்
அன்பொழுகும் உறவினிலே உனைக் காண்கிறேன் - 2

2. வாடுகின்ற மனிதனுக்கு வாழ்க்கை அளித்தேன்
வருந்துகின்ற நண்பனுக்கு ஆறுதல்தந்தேன் - 2
தேடுகின்ற அமைதிதனை வாழ்வினில் தந்தாய் - 2 என்
தேவா உன் சந்நிதியில் நான் வாழ்கிறேன் - 2
467. நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்குத் தா
நல்ல இதயம் ஒன்று தா என் இயேசுவே எனக்குத் தா
அதில் அன்பை நிறைத்துத் தா அனைவருக்கும் நான் அளிக்கத் தா

1. எனக்கெதிராய்ப் பகைமை செய்வோரை
மன்னிக்கும் மனத்தைத் தா - 2 - அந்தப்
பகைமையைத் திரும்ப நினையாமல் நான் மறக்கும் மனத்தைத் தா

2. உன்னால் அடைந்த நன்மை மறவாத
உள்ளம் ஒன்று தா - 2
எந்நாளும் உந்தன் நினைவால் வாழும் உள்ளத்தை எனக்குத் தா
468. நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
தாய் உன்னை மறந்தாலும் ஊர் உன்னை வெறுத்தாலும் - 2
உன்னோடு உனக்காக நான் இருக்கிறேன் -2
விலகுவதில்லை நான் விலகுவதில்லை
உன்னைவிட்டு எப்போதும் விலகுவதில்லை
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை

2. நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை விட்டுவிலகுவதில்லை
சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும்
என்னோடு எனக்காக நீர் இருக்கின்றீர்
கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை
என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை
நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை
469. நான் கண்ட தெய்வம் நீயல்லவா
நான் கண்ட தெய்வம் நீயல்லவா
என் உள்ளம் கவர்ந்ததும் உனையல்லவா
நான் பாடும் பாடல் உனக்கல்லவா
என் வாழ்வின் பொழுதெல்லாம் நீயாக வா

1. கனிவான இதயம் உனதல்லவா
இனிதாகப் பேசும் உன் மனமல்லவா - 2
இரக்கத்தைப் பொழிவதுன் குணமல்லவா
மறவாது ஈவதுன் கரமல்லவா

2. பாவத்தால் பலதூரம் சென்றாலும் - உன்
பாசத்தால் பாவியை வென்றாயே நீ - 2
பரிசுத்த உமது திரு இரத்தத்தால்
பரிசுத்த படைப்பாக உருவாக்கினாய்
470. நான் மீட்டும் இராகம் உனக்காகத்தானே
நான் மீட்டும் இராகம் உனக்காகத்தானே
உன் அன்பைப் பாடிடத்தான் - 2
எங்கே நீ என் அன்பே உனைப் பாடத் துடிக்கின்றேன்

1. காற்றினில் அலையும் நாணல்களில் - உன்
அசைவினை நான் காண்கின்றேன்
கடலினில் வீசும் அலைகளிலே உன் தரிசனம் பெறுகின்றேன்
பூக்களும் கவிதை கூறுமோ உன் புகழ் சொல்லுமோ
உனக்காய் ஏங்கும் என் மனத்தைக் குயில்கள் பாடுமோ
உன்னோடு நான் வாழும் நன்னாளை எதிர்நோக்கி
என் இயேசுவே ஆசை தீரப் பாடுவேன்

2. மனத்தினில்நீஎழும்அழகினைக்கண்டதும்என்னையேமறந்துவிட்டேன்
நயமுறு தோரணம் உனக்காய் அமைத்தே அன்புடன் கும்பிடுவேன்
பளிங்கு மாளிகை ஒளியிழக்கும் உன்னைக் கண்டாலே
தென்றல் கூட மெய்சிலிர்க்கும் உன் கால் பட்டாலே
திசையெங்கும் உன் நாமம் தேனாகச் சுவைத்திட
என்னுயிரே ஆசை தீரப் பாடுவேன்
471. நானே உன் அன்பு தேவன் நானே
நானே உன் அன்பு தேவன் நானே - 2
கண்ணின் இமைபோல் உன்னைக் கொண்டேன் - 2
விலைமதிப்பில்லாதவன் நீயே - 2

1. வாழ்வு தருபவன் நானே வழிநடத்துபவன் நானே - 2
கரம் விரித்து இமை திறந்து
இதயத்தில் உன்னைத் தாங்கி நின்றேன்
எனைப் பிரிந்து உன் நிலை மறந்து
உயிரற்ற சருகாய் உழன்று நின்றாய்
நீ மனம் திரும்ப ஏங்குகின்றேன் ஏங்குகின்றேன்

2. பாவம் களைபவன் நானே உன் நம்பிக்கை நானே - 2
பழிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு
மண்ணக வாழ்வினைத் தியாகம் செய்தேன்
புதைக்கப்பட்டு உயிர்த்தெழுந்து
என் அளவில்லா அன்பினை உனக்களித்தேன்
நீ ஒளியினில் வாழ்ந்திட ஏங்குகின்றேன் ஏங்குகின்றேன்
472.நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய்
நானே உன் கடவுள் முதலும் முடிவுமாய்
நானே இருக்கிறேன் - என் மக்களின் துன்பங்கள் கண்டேன்
அவர் மனம் படும் வேதனை உணர்ந்தேன்
அவர் அழுகுரல் நான் கேட்டேன்
நாடும் நலமும் வாழ்வும் வளமும் வழங்கிட மனம் உவந்தேன்
யாரை நான் அனுப்புவேன் - 2

1. எனை அனுப்பும் எனை அனுப்பும் - 2 இதோ நான் இருக்கின்றேன்
உலகம் அறியா எளியவன் வாய்மொழி பேசா சிறியவன்
உன் துணை இருந்தால் என்னுடன் நடந்தால்
துணிவுடன் நான் செல்வேன்
எனை அனுப்பும் எனை அனுப்பும் இதோ நான் இருக்கின்றேன்

2. நானே உன் கடவுள் வான்படைகளின் இறைவனாய் நானே இருக்கிறேன்
என் பெயரால் செல்பவர் யாரோ
என் செய்தியைச் சொல்பவர் எவரோ
என் பணியினைச் செய்வாரோ
அன்பும் அறமும் நீதியும் நேர்மையும் நிலைநிறுத்திடுவாரோ
யாரை நான் அனுப்புவேன் - 2 எனை அனுப்பும்
473. நிலையான சொந்தம் நீதானே என்றும்
நிலையான சொந்தம் நீதானே என்றும்
நீ போதும் என் இயேசுவே
அயராது என்றும் அணைக்கின்ற செல்வம் நீ போதும் என் யேசுவே
கொடியாக நீயும் கிளையாக நானும் பிரியாத வரம் வேண்டுமே
கடலான நீயும் கவியான நானும் இணைசேர அருள் வேண்டுமே
உனைக்காண என் விழிகள் ஒளி தேடுதே
உனையன்றி என் வாழ்வு குமிழ் போன்றதே

1. உடையாத உறவாய்க் கலையாத கனவாய் நீ போதும் என் இயேசுவே
மறையாத உன் அன்பு மடியாது என்றும் நீ போதும் என் இயேசுவே
சுமைகளால் நான் சோர்ந்திருந்தேன் சுகமாய் வந்து நீ சேர்ந்தாய்
என் வாழ்வில் நீ என்றும் நிலையான சொந்தமே

2. அணையாத அருளால் அழியாததாய் நீ போதும் என் இயேசுவே
விலகாத உயிராய் நலம் சேர்க்கும் தாய் நீ போதும் என் இயேசுவே
வறுமையாய் நான் வாழ என் வசந்தமாய் வந்து நீ சேர்ந்தாய்
என் வாழ்வினில் நீ என்றும் நிலையான சொந்தமே
474.நிலையில்லா உலகு நிசமில்லா உறவு
நிலையில்லா உலகு நிசமில்லா உறவு
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
நீ மட்டும் போதும் எப்போதும்
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
நீ மட்டும் போதும் எப்போதும் - 2

1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால்
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் - 2
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் - 2
நீ மட்டும் போதும் எப்போதும்

2. பொய்ம்மையிலே விழுந்து போலியாக நடந்து
பொழுதிங்குப் போகுது கழிந்து
உண்மை தனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு - 2 நீ மட்டும் போதும்
475.நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா
நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா
எந்நாளும் துணையாகக் கனிவோடு வர வேண்டும் - 2

1. வாழ்வும் நீ ஒளிதரும் தீபம் நீ சீவன் நீ கருணையின் தேவன் நீ - 2
தேவ தேவன் மானுவேலன் இராசராசன் இயேசுநாதர்
பாவி என்னை மீட்க வந்த அருள்மொழியே
பரம்பொருளே இறைமகனே

2. துன்பம் துயர் யாவும் உந்தன் அருளாலே
என்னை ஒருநாளும் கொஞ்சமும் அணுகாதே - 2
சோதனை வந்தாலும் - 2 ஆ தாங்கிடும் உள்ளமே
அன்புடன் தேவனே வேண்டுமுன் தயவாலே - தேவதேவன்
476. நினைவெல்லாம் நீயே நினைவெல்லாம் நீயே
நினைவெல்லாம் நீயே நினைவெல்லாம் நீயே - 2
நினைவெல்லாம் நீயாக உன் நிழலில் நான் வாழ
எனையாளும் இறைவா என்னில் வாருமே - 2
அன்பெனும் அருட்கரத்தால் எனைக் காக்க வேண்டும்
அன்றாடம் எனை நீ தொடர்ந்தாக வேண்டும் - 2

1. துன்பங்கள் துயரங்கள் எனைச் சூழ்ந்த போதும்
என் இயேசுவே உம்மை என்றும் நம்புவேன் - 2
எந்நாளும் என்னில் வாழ்ந்திட வா - 2
எந்தன் நினைவெல்லாம் நீயாக வா
காம காம கம ரிக மக ரிச நிச
காம சாம கம ரிப மக ரிச நிச
கச ரிச ரிச நிச - 2 கச ரிகா சரி கமா ரிக மபா

2. என் உள்ளம் உனை இழந்து தவிக்கின்ற போது
உந்தன் அருட்கரம் தான் என்னைத் தேற்றுதே - 2
நீ பெற்ற வெற்றி யாவும் எனதாக்க வா - 2
நிலையாக என்னில் நீயும் எனக்காக வா - காம காம கம
477. நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் - 2
இறைவா இறைவா இறைவா இறைவா

1. மழையாக வந்தும் மனம்மீது நின்றும்
நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன் - 2
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ - 2 இறைவா

2. கண்ணீரில் மூழ்கிப் போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே - 2
எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்
அருளின்றித் துயிலாத இதயம் இது - 2 இறைவா
478. நீ இல்லாமல் என்னிதயம் முழுமை ஆகுமா
நீ இல்லாமல் என்னிதயம் முழுமை ஆகுமா
நீ சொல்லாமல் இவ்வுலகம் அமைதி காணுமா - 2
இயேசு நாயகா பேசும் தெய்வமே சீவநாயகா தாகம் தீருமே
மெளனம் கலையுமா சேதி சொல்லுமா
வார்த்தை வழியிலே கால்கள் செல்லுமா

1. குருடர் பார்வை பெற்றதும் சீடர் பாடம் கற்றதும்
பாவி திருந்தி வாழ்ந்ததும் தேவன் வார்த்தை வலிமையே - 2
காற்றும் கடலும் தணிந்ததும் பகிர்ந்து வாழத் துணிந்ததும்
அன்பின் ஆட்சி மலர்ந்ததும் வார்த்தையால்
அடியேன் கேட்கிறேன் பேசும் இயேசுவே

2. பயணம் இணைந்து செல்லவும் சாவின் ஆற்றல் கொல்லவும்
அன்பின் சக்தி வெல்லவும் வார்த்தை வேண்டும் சொல்லுமே - 2
வெறித்தனங்கள் அழியவும் நெறித்தடங்கள் அமையவும்
அமைதித் தென்றல் வீசவும் பேசும் தெய்வமே
எல்லாம் அன்பின் மயம் ஆகும் இயேசுவே
479. நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னைத் தேடுகிறார்
நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார் - 2

1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள்
அழுகுரல் கேட்டு அரவணைப்பார்
நீதியைப் பூவினில் விதைத்திடுங்கள்
நீதியின் தலைவன் சிரித்திடுவார்

2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே
இனிமை பொழிந்திட வந்திடுவார்
தூய்மையின் வழியில் நடந்திடுங்கள்
வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார்
480.நீங்களே உயிருள்ள இறைவனின் ஆலயங்கள்
நீங்களே உயிருள்ள இறைவனின் ஆலயங்கள்
நீங்களே இயேசுவை மூலைக்கல் ஆக்கியவர்
நீங்களே இயேசுவின் நற்செய்தி சொல்லும் சாட்சிகள் - 2

1. உறவினில் உயிர்பெறும் ஆன்மீகம்
இயேசுவின் தலைமையில் மலர்ந்திடட்டும் - 2
பிரிவினைகள் அறுத்து விட்டால்
பேதமைகள் அழித்து விட்டால்

2. கனிதரும் திராட்சைக் கொடி அவரே
கிளைகளாய் இணைந்து கனிதருவோம் - 2
களைகள் எல்லாம் களைந்து விட்டால்
கனிதரவே கொஞ்சம் கழித்து விட்டால்
481. நீ தந்த இராகம் நான் பாடும் கீதம்
நீ தந்த இராகம் நான் பாடும் கீதம்
என் சோகம் போகும் உனைக் கண்டால் போதும் - 2

1. ஆயிரம் தீமைகள் சூழ்ந்தென்னை இங்கு
ஆன்மாவை ஆட்கொள்ளும் நேரம் - 2
ஆயனே நீ வந்து ஆறுதல் பல தந்து - 2
அன்பான வார்த்தைகள் பேசும் - 2

2. நீயின்றி வேறென்ன என் வாழ்வில் வேண்டும்
நீதானே என்றென்றும் என் சொந்தம் - 2
நிறைவான செல்வங்கள் இருந்தென்ன லாபம் - 2
இறைவா நீ தீராத இன்பம் - 2
482. நீ தானே என் கீதம் இறைவா - உன்
நீ தானே என் கீதம் இறைவா - உன்
நினைவே என் சங்கீதம் தலைவா - 2
நிறைவாழ்வு நான் காண வரம் வேண்டுமே - இனி
நிதம் எந்தன் வாழ்வு உம் பணிக்காகவே

1. ஒரு கோடி மலருண்டு உன் தாளிலே - அது
ஒரு பூவாய் இணைந்தாலே மணம் வீசுமே - 2
எழிலான சுரம் கோடி உன் யாழிலே - 2 - அதில்
நரம்பாக இணைந்தாலே மனம் பாடுமே

2. அழகான கனவொன்று என் நெஞ்சிலே - அது
அன்பாலே நிறைகின்ற உலகாகுமே - 2
இதற்காகத் தானே நீ மனுவாகினாய் - 2 - இன்று
என் வாழ்வை அதற்காகப் பலியாக்கினேன்
483. நீயே எமது வழி நீயே எனது ஒளி
நீயே எமது வழி நீயே எனது ஒளி
நீயே எமது வாழ்வு இயேசையா - 2

1. நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள்
நன்மையென்ன தீமையென்ன அறியாத கோலங்கள் - 2
நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையின் பொருளாவாய் - 2
உனது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெரிவுகள்
அவற்றில் நாம் நடந்தால் வெற்றியின் கனிகள்

2. துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக் காலங்கள்
தட்டுத் தடுமாறி விழத் தகுமானச் சூழல்கள் - 2
நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையில் சுடராவாய் - 2
உண்மை நாங்கள் போற்றிட பொய்ம்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உமதருள் தாரும்
484. நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னைவிட்டு நீங்காதிருப்பதும் ஏனோ
தெய்வீக அன்பால் தானோ - 2

1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள் - தங்கள்
கூடுகள் தேடிப் பறந்த பின்னும் - 2 - நான்
வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம் - நான்
தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்

2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல் - சொந்தத்
தாய்க் கடலோடு கலந்த பின்னும் - 2 - எந்தன்
பாதையில் விளக்காய்ப் பகலவனும் - வந்தக்
காரிருள் மாயையால் மறைந்த பின்னும்
485. நீரே என் ஆண்டவரே நீரே என் தந்தையன்றோ
நீரே என் ஆண்டவரே நீரே என் தந்தையன்றோ
உன் அன்பில் நான் வாழ உன்னோடு பேச
என்னுள்ளம் ஏங்கிடுதே
உன் ஊற்றுப் பருக உன்னில்லம் வந்தேன்
இனிதாகக் கனிவாக நிறைவாக ஏற்று நாளெல்லாம் காத்திடுவாய்

1. என் வாழ்வை நீ அமைத்தாய் தலைவா
உன்னை நான் காணவில்லை
என் எண்ணம் ஏற்றி வைத்தாய்த் தேவா உன் பாதை செல்லவில்லை
உன்னையே நான் மறந்தேன் இறைவா அக ஒளி காணவில்லை
கறையைத் துடைப்பாய் இன்று என்னை மாற்றிடவா

2. ஊரெங்கும் பாடிவந்தேன் ஏனோ உன் புகழ் பாடவில்லை
வையத்தை நீ படைத்தாய் நானோ வைகறை தேடவில்லை
காலங்கள் மாறிவிடும் உன்னுள்ளம் கருணையின் கடலாகும்
குறையைத் தீர்ப்பாய்க் கண்போல் என்னைக் காத்திடவா
486. பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே
பரம பரிசுத்த தேவனே படைப்பின் மூலவனே
நெஞ்சத்தில் நீங்கிடா நேசனே நித்தமும் காப்பவனே
என் பாடலின் சீவனே பரமனே என் தேவனே

1. அருளின் தெய்வம் என் வாழ்விலே அது பேசும் ஆனந்தமே
அன்பின் சுனை உருவாக்கிடும் இன்பத்தின் சுவைநீரது - 2
ஓர் நாளிலே உருவாகிடும் ஊரெங்குமே அரங்கேறிடும் - 2
உந்தன் அன்பினில் நாளும் வாழ்ந்திடும்
அன்புப் பேரின்பம் எங்கும் சூழ்ந்திடும்
இன்றும் என்றும் எந்தன் தேவன் நீ

2. புவியெங்கிலும் புதுமை பொங்கும் புலரும் நல் புதுவானமே
குயில் பாடிடும் புதுப்பாடலின் பூபாள பூந்தென்றலே
- ஓர் நாளிலே உருவாகிடும்
487. பாடச்சொல்லித் தந்தவர் இயேசு அல்லவா
பாடச்சொல்லித் தந்தவர் இயேசு அல்லவா
பாடல் வரிகளும் அவரல்லவா
பல்லவி சரணம் அவரல்லவா பாடுவதே என் சுகமல்லவா

1. இராகம் தாளம் அவரென்றால் நான் பாடும் குயிலாவேன்
வேதம் முழுவதும் அவரென்றால்
புதுப்பாடல் நானாவேன் பாடல் நானாவேன்

2. நெஞ்சில் வந்த துன்பங்கள் அவர் வரவால் மாறிடுமே
பேரைச் சொன்னதும் ஆகுமே
நம் வாழ்க்கை ஒளி பெறுமே வாழ்க்கை ஒளிபெறுமே
488. பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெறவேண்டும்
பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெறவேண்டும்
என் உள்ளம் உன் ஒளி பெறவேண்டும் - புதுப்
பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெறவேண்டும்

1. வாழ்வின்தடைகளைத்தாண்டிஎழும்புதுப்பார்வைபெறவேண்டும்- 2
நாளும் பிறக்கும் உன் வழியைக் காணும் பார்வை தரவேண்டும் - 2
உன்னாலே எல்லாமுமே ஆகும் நிலை வேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்

2. நீதி நேர்மை உணர்வுகளை நான் பார்க்கும் வரம் வேண்டும் - 2
உண்மை அன்பு உயர்ந்திடவே உழைக்கும் உறுதி தரவேண்டும்-2
எல்லோரும் ஒன்றாகவே வாழ வழி வேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்
489. புதிய வாழ்வு என்னில் காண இயேசு உன்னையே
புதிய வாழ்வு என்னில் காண இயேசு உன்னையே
விடியலாக உன்னைத் தேடி நாடி வந்தேனே
வரங்கள் யாவும் தந்திடு அருளை நாளும் வழங்கிடு - 2
இதயம் திறந்து தினமும் தொழுதேன்

1. ஏழு சுரங்களில் மீட்டினேன் தினம் ஏக்கத்தோடு நாடினேன் - 2
கரங்கள் நீட்டி அணைத்திடு - 2
உந்தன் கருணையாலே மாற்றிடு - 3
உறவின் வரவு எந்தன் யாகமே - உந்தன்
தரவின் தேர்வு எந்தன் யோகமே - 2

2. தேனின் இனிமை உன்னிலே அதைப் பானமாகப் பருகினேன் - 2
காலமாய் நீ மிளிர்ந்திட - 2
உந்தன் நொடிகளாய் என்னை மாற்றிடு - 3 உறவின்
490. பூவினும் மெல்லிய இதயம் தாரும் இறைவா
பூவினும் மெல்லிய இதயம் தாரும் இறைவா
தூய நல்பனிபோல் எண்ணம் தாரும் தலைவா
வானினும் உயர்ந்த இலக்கினை வழங்கிடு இறைவா
சிகரங்கள் தேடிடும் முயற்சிகள் ஈந்திடு தலைவா - 2

1. நினைவிலும் தீங்கு நினையா நெஞ்சம் வேண்டும்
நிற இன பேதங்கள் பேணிடா மானுடம் வேண்டும் - 2
உயிர்களைக் காத்திடும் உணர்வுள்ள மாந்தர்கள்
உண்மையின் வலிமையை உணர்த்திடும் உலகினர் - 2
எங்கினும் நிறைந்திட வேண்டும் எண்ணங்கள் புதிதாய் வேண்டும்

2. பணிவிடை புரிவதில் மகிழும் மனங்கள் வேண்டும்
பகிர்வதில் வளர்ந்திடும் செயல்நெறி ஓங்கிட வேண்டும் - 2
தாழ்ச்சியும் பணிவும் தாய்மையின் பரிவும்
சமத்துவக் கனவும் சாதிக்கும் உணர்வும் - 2
புவியில் நிலைத்திட வேண்டும் புனிதத்தில் நிறைந்திட வேண்டும்
491. பொன்னிலும் மணியிலும் விருப்பமானது
பொன்னிலும் மணியிலும் விருப்பமானது
தேனிலும் அடையிலும் இனிமையானது
இறைவனின் வார்த்தை உயிர்தரும் இறைவனின் வார்த்தை-2

1. இறைவனின் வார்த்தைகள் நிறைவு உள்ளது
உளத்திற்குப் புதுஉயிர் ஊட்ட வல்லது - 2
இறைவனின் ஆணைகள் உறுதியானது - 2
எளியோர்க் கறிவு ஊட்ட வல்லது - 2

2. இறைவனின் வார்த்தைகள் சரி நேரானது
உளத்திற்கு மகிழ்ச்சி ஊட்ட வல்லது - 2
இறைவனின் கற்பனை தூய்மையானது - 2
கண்களுக்கு ஒளி ஊட்ட வல்லது - 2
492.மகத்துவம் நான் கண்டேன் என் இறையவனே
மகத்துவம் நான் கண்டேன் என் இறையவனே
உன் மகத்துவம் நான் கண்டேன் - நீர்
மனிதனில் காட்டிய அளவில்லா அன்பினில்
மகத்துவம் நான் கண்டேன் - 2

1. உம் புகழ் சாற்றிடும் படைப்பினிலே மகத்துவம்
படைப்பினில் விந்தையாம் கோள்களிலே மகத்துவம்
கோள்களில் சிறந்தது இப்புவியினில் மகத்துவம்
புவியினுள் ஓடுகின்ற நீரினில் மகத்துவம்
மனிதனில் நீர் தந்த சாயலில்
மனிதனுள் நீர் வாழும் நிலையில் மகத்துவம்

2. விண் இன்று மண்ணகம் வந்ததிலே மகத்துவம்
மரியாவின் உதரத்தில் வந்ததிலே மகத்துவம்
மரணத்தை வென்ற உம் உயிர்ப்பிலே மகத்துவம்
வெண்ணிற அப்பத்தின் வடிவிலே மகத்துவம்
493. மங்கள நாளின் தலைவனே எம்
மங்கள நாளின் தலைவனே எம்
மனக்கோயிலின் இறைவனே - 2
அன்பு நிறைந்த தந்தையே என்றும்
ஆராதிப்போம் துதிப்போம் - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

1. நீ தந்த நாளெல்லாம் திருநாளே பேரானந்தத் திருநாளே
நீ செய்த செயலெல்லாம் வெளிப்பாடே
உம் நேசத்தின் வெளிப்பாடே - 2
உண்மையிலும் ஆவியிலும் உம்மைத் தொழுதேத்தும்
இந்த நாள் நல்ல நாளே
உண்மையிலும் ஆவியிலும் உம்மைத் தொழுதேத்தும்
இந்த நாள் திருநாளே

2. உம் கோயில் பறவைகள் சரணாலயம்
என்றும் வாழ்கின்ற சரணாலயம்
உம் பார்வை பட்டாலே வளமாகும் எம் பயிர்கள் வளமாகும் - 2
பறவையிலும் பயிர்களிலும்
பெரிதாகும் உமதன்பு எமக்கின்பம் - 2 - அல்லேலூயா
494. மழையினில் பெருவெள்ளம் எனைச் சூழ்ந்தால்
மழையினில் பெருவெள்ளம் எனைச் சூழ்ந்தால்
வீழ்வதில்லை நான் விழுவதில்லை
புயல் காற்று என்மேல் மோதினாலும்
சாய்வதில்லை நான் சாவதில்லை
எதிரியின் படையினைத் தாக்கிடவும் உயரிய மதிலைத் தாண்டிடவும்
ஆற்றலும் சக்தியும் எனக்கு உண்டு
இயேசுவின் துணை எனக்கிருப்பதனால்

1. இயேசுவை நம்பி வாழுகிறேன்
அவர் என்னை என்றும் பிரிவதில்லை
இருளிலும் வெயிலிலும் நடந்தாலும்
எனை என்றும் கைவிடவே மாட்டார்
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய
அவரே எனக்காய் யாவும் செய்வார்
எல்லாமே முடிந்து மடிந்தாலும் என் தேவன் விடியலாய் வந்திடுவார்
அவர் வாழ்க வாழ்க என் இயேசு இராசா வாழ்க

2. பூத்திடும் பூவெல்லாம் அவர் அழகு
பார்த்திடும் திசையெல்லாம் தெய்வீகமே
பேச்சிலும் மூச்சிலும் அவர் நாமம்
எப்போதும் என் முன்னால் என் இயேசுதான்
பசியோ பிணியோ வந்தாலும்
இயேசுவின் நாமம் பிரிவதில்லை
வெற்றியோ தோல்வியோ ஆனாலும்
என் வாழ்வின் பரிசு என் இயேசுதான்
அவர் வாழ்க வாழ்க என் இயேசு இராசா வாழ்க
495. மனமே இறைவனின் சங்கமம்
மனமே இறைவனின் சங்கமம்
மனிதம் உறவிலே சங்கமம் - 2
இளமை தீபமே வாழ்விலே சங்கமம்
நிறைவாழ்வு பெறவே உன்னில் சங்கமம் - 2
சங்கமம் சங்கமம் நாதனே நான் உன்னில்

1. கடல்களே அலைகளில் சங்கமம்
கவிஞனே கவிதையில் உன் சங்கமம் - 2
மனிதனே இறைவனில் சங்கமம்
புனிதனே அயலானில் இறை சங்கமம் - சங்கமம்

2. நெஞ்சமே நீதியில் சங்கமம்
நேர்மையே உண்மையில் உன் சங்கமம் - 2
திறமைகள் படைத்தோனில் சங்கமம்
உணர்வுகள் உறவிலே இறை சங்கமம் - சங்கமம்
496. மனமே கலக்கம் கொள்ளாதே மனமே வாழ்வில் திகையாதே
மனமே கலக்கம் கொள்ளாதே மனமே வாழ்வில் திகையாதே
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நான் நடப்பேன்
மனமே மனமே உனைத் தாங்கி நான் சுமப்பேன் - 2

1. மலைகளும் குகைகளும் நகர்ந்தாலும்
மனத்தின் உறுதி பலமாகும்
கடலும் காற்றும் பெயர்ந்தாலும் - 2
காக்கும் உந்தன் கரமாகும்
மழையும் பனியும் என்ன செய்யும்
இரவின் நிலவும் என்ன செய்யும்
உனில் என்றும் உறுதி கொள்வேன்
உனில் என்றும் அமைதி காண்பேன்

2. நன்மையும் தீமையும் மோதினாலும்
இலட்சியத் தேடல் திடமாகும்
இருளும் பகையும் வாட்டினாலும் - 2
உந்தன் நெறிகள் விளக்காகும்
வெயிலும் புயலும் என்ன செய்யும்
இடியும் மின்னலும் என்ன செய்யும்
உன் சொல்லில் பயணம் செய்வேன்
உன் உறவில் விடியல் காண்பேன்

497. மனவீணை தனில் இன்று உருவாகும் பலராகம்
மனவீணை தனில் இன்று உருவாகும் பலராகம்
உனைப் பாடவேண்டும் என் திருவேந்தனே
மலரோடு மணமாக அகலோடு சுடராக
உன்னோடு நான் வாழ வரவேண்டுமே - 2

1. மனுவாகி நீ தந்த மகிழ்வான செய்தியை
தினம் இந்த இகம் தன்னில் நான் பாடுவேன்
இரவோடு துயரோடு போராடும் பலரோடு
உதயங்கள் வரவேண்டிப் பலரோடு
அருளே ஒளியே உதயம் தருவாய் - 2
திருவே தினமே புனிதம் பொழிவாய்

2. கண்ணீரில் தினம் காணும் எளியோரின் கனவுகள்
என்னன்புப் பணியாலே நனவாகிடும்
நிழல் தேடித் தொடர்கின்ற பலர் வாழ்வுப் பயணங்கள்
திருப்பாத நிழல் தன்னில் சுகம் கண்டிடும் - அருளே
498. மாறாத நேசரே மறவாத இயேசுவே
மாறாத நேசரே மறவாத இயேசுவே
கருவாகு முன்னரே கண்டுகொண்ட பாசமே - 2
உயிரே உறவே உனை மறவேனே இன்றும் என்றுமே - 2

1. குயவன் நீ களிமண் நான் உந்தன் கையாலே வனைந்திடுமே
ஆயன் நீ ஆடு நான் உந்தன் அருளாலே நடத்திடுமே
செடியாக நீயும் கிளையாக நானும் - 2
இருந்தாலும் போதும் வேறென்ன வேண்டும் - உயிரே

2. இருளில் நான் விழும் போது உந்தன் ஒளியாலே நிரப்பிடுமே
தனிமையிலே தவிக்கையிலே
உந்தன் அன்பாலே அணைத்திடுமே
உயிராக நீயும் உடலாக நானும் - 2
இருந்தாலும் போதும் வேறென்ன வேண்டும் - உயிரே
499. யார் உன்னைக் கைவிட்டபோதும்
யார் உன்னைக் கைவிட்டபோதும்
நான் உன்னைக் கைவிட மாட்டேன் - அஞ்சாதே -8

1. நோயினால் உள்ளம் சோர்ந்திடும்போது
மகளே பதறாதே மகனே பதறாதே - 2
கடன் தொல்லை உன்னைச் சூழ்ந்திடும்போது
மகளே கலங்காதே மகனே கலங்காதே - 2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்

2. உழைத்தும் உயர்வு இல்லாதிருந்தால்
மகளே பதறாதே மகனே பதறாதே -2
உலகமே உன்னை ஒதுக்கிடும்போது
மகளே கலங்காதே மகனே கலங்காதே -2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்
500. வரவேண்டும் வரவேண்டும் இறை இயேசுவே - உன்
வரவேண்டும் வரவேண்டும் இறை இயேசுவே - உன்
வரம் வேண்டும் வரம் வேண்டும் என் இயேசுவே
என் விழி மீது நீதானே ஒளியாகவே
என் வழி மீது நீதானே திசையாகவே
என் மொழி மீது நீதானே இசையாகவே - 2
இறைவா இறைவா இறைவா இறைவா - 2

1. பாறை என்றொரு சீடத்தின் மேலே
உன் திருப்பீடத்தை அமைத்தாயே
தண்டின் மீதொரு தீபத்தைப் போலே
எம்மை வெளிச்சத்தில் அணைத்தாயே
உன் அன்பான வேதம் என் இதயத்தின் தாகம்
உன் அன்பான வார்த்தை என் வாழ்விலே - இறைவா

2. கறைகள் சுமக்கும் மனிதனின் மேலே
உயர் மன்னிப்பை அளித்தாயே
விதைகள் சுமக்கும் நிலத்தின் மேலே
நல்ல விடியலைத் தெளித்தாயே - உன் அன்பான
501. வாழ்வளிக்கும் வார்த்தையே எம்மை
வாழ்வளிக்கும் வார்த்தையே எம்மை
வளப்படுத்தும் வார்த்தையே
தந்தையின் வார்த்தையே இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே - 2

1. உருவில்லாத உலகுக்கு உருக்கொடுத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே
உலகில் வாழும் யாவுமே உருவாக்கிய இறைவார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே வாழ்வில் வந்து பேசுமே

உருக்குலைந்த மனித மாண்பை மீட்டுத்தந்த வார்த்தையே
அருள்கூர்ந்து பேசுமே நான் என்றும் வாழுவேன்

2. அடங்கிடாப் பெரும் காற்றையே அடக்கி வைத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே
விளங்கிடாக் கை கால்களை விளங்க வைத்த வார்த்தையே
வார்த்தையே எம் இயேசுவே
கலங்கிடாதே என்று சொல்லி கண்திறந்த வார்த்தையே
நலன் காக்கப் பேசுவீர் நான் என்றும் வாழுவேன்
502. வாழ்வு தருவது இறை வார்த்தை - 5
வாழ்வு தருவது இறை வார்த்தை - 5

1. எளிய மனத்தோர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்கள் வசம் - 2
2. துயர்ப்பட்டோர் பேறுபெற்றோர் ஆறுதலை அடைவார்கள் - 2
3. சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர் மண்ணுலகு அவர் உரிமை - 2
4. நீதியில்நிலைப்போர் பேறுபெற்றோர்நிறைவினையேபெறுவார்கள்-2
5. இரக்கம் உள்ளோர் பேறுபெற்றோர்இரக்கத்தையே பெறுவார்கள் - 2
6. தூயஉள்ளத்தோர் பேறுபெற்றோர்இறைவனையேகாண்பார்கள்- 2
7. சமாதானம்செய்வோர்பேறுபெற்றோர்இறைமக்களாய்த்திகழ்வார்கள்-2
8. துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர் விண்ணரசு அவர்களதே - 2